ஞாயிறு, 6 டிசம்பர், 2015

ஜனங்க மதிக்கமாட்டாய்ங்க...அதாய்ன் அம்மா ஸ்டிக்கர் ஓட்டுறோம்...அதிமுகவினர் சொல்றாய்ங்க

சென்னை:'எங்கிருந்தோ வரும் தனி நபர்கள், எங்கள் வார்டுக்கு வந்து, நிவாரணப் பொருட்களை வழங்கும்போது, மக்கள் எங்களை மதிப்பதில்லை. அதனால், அரசு வழங்கும் நிவாரணப் பொருட்களை அதிகாரிகளிடம் இருந்து பெற்று நாங்கள் வழங்குகிறோம்' என, மாநகராட்சி மண்டல கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசினர்.
அனாதையாய் வீதிக்கு வந்துள்ள மக்களை பேணிக் காக்க வேண்டிய இவர்கள் இப்படி பேசியது, இவர்களின் கீழ்த்தர அரசியல் நோக்கத்தை வெட்ட வெளிச்சமாக்கி உள்ளது.
சென்னை மாநகராட்சியின் திரு.வி.க., நகர் மண்டல அலுவலகத்தில், அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், செல்லுார் ராஜு ஆகியோர் தலைமையில், மழை வெள்ள நிவாரணப் பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம், நேற்று நடந்தது. இதில், மண்டல அதிகாரிகள், பொறியாளர்கள், கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.  அடடே இத்தாய்ன் மாட்டர்ன்னு  வெளிப்படையாகவே சொல்ல தொடங்கியாச்சா  நல்ல டெவலப்மெண்டு வெளங்கிடும் ... 


கூட்டத்தில், அதிகாரிகள் பேசியதாவது:நாங்கள் நிவாரணப் பொருட்களை கொடுக்க, ஆளுங்
கட்சியினர் விடுவதில்லை; அவர்கள் பறித்துக் கொள்கின்றனர். அந்த பொருட்கள், உரியவர்களுக்கு போய் சேருவதில்லை. ஒரு சில கவுன்சிலர்கள் மட்டும், பாதிக்கப்பட்டவர்களுக்கு பொருட்களை வழங்கி, அதை புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர். அரசியல் தலையீடு இல்லையென்றால், நிவாரணப் பொருட்கள் மக்களை எளிதில் சென்றடையும்.இவ்வாறு அதிகாரிகள் பேசினர்.

அ.தி.மு.க., கவுன்சிலர்கள் பேசியதாவது:எங்கிருந்தோ வரும் தனி நபர்கள், எங்கள் வார்டுக்கு வந்து, நிவாரணப் பொருட்களை வழங்கும்போது, மக்கள் எங்களை மதிப்பதில்லை.அதனால், அரசு வழங்கும் நிவாரணப் பொருட்களை அதிகாரிகளிடம் இருந்து பெற்று நாங்கள் வழங்குகிறோம். அதோடு, அதிகாரிகளின் பணி வேகம் போதாது. அதனால், நாங்கள் தான் நிவாரணம் வழங்குவோம். இவ்வாறு கவுன்சிலர்கள் பேசினர்.

அமைச்சர்கள் பேசியதாவது:அதிகாரிகள், நிவாரணப் பொருட்களை வழங்கும்போது, கவுன்சிலர்கள் தலையிடக் கூடாது. ஒவ்வொரு தெருவிலும், முக்கிய நபர்கள், ஐந்து பேரை கட்சி பாகுபாடின்றி தேர்வு செய்ய வேண்டும். அவர்களிடம், நிவாரணப் பொருட்களை அளித்து, அனைவருக்கும் சென்று சேரும்படி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்; அரசுக்கு கெட்ட பெயர் வரக்கூடாது.இவ்வாறு அமைச்சர்கள் பேசினர்.

வேகம் போதாது!
சென்னை மாநகராட்சியில், வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள, வார்டுக்கு ஒரு குழு, மண்டலத்திற்கு ஒரு 'நோடல்' அதிகாரி, சிறப்பு மேற்பார்வை அதிகாரி என, அரசு நியமித்துள்ளது. ஆனால், அவர்களில் பலர் விரைந்து செயல்படாததால், நிவாரணப் பணிகளில் தொய்வு இருப்பதாக, பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கவுன்சிலர்களை காணோம்!
சென்னையில், ஒரு சில வார்டுகளைத் தவிர, 90 சதவீத வார்டுகளின் கவுன்சிலர்கள், பகுதிவாசிகளுக்கு பயந்து, தலைமறைவாகி விட்டனர்.சென்னையின், 103வது வார்டு பெண் கவுன்சிலர் ரமணியை, அவர் வார்டில் உள்ள திடீர் நகர் உள்ளிட்ட சில குடிசை பகுதி மக்கள், நேற்று முன்தினம் அடிக்க பாய்ந்தனர். போலீசார் தலையிட்டு, கவுன்சிலரை காப்பாற்றினர். வெள்ளப் பாதிப்புக்குள்ளான தங்களை, கவுன்சிலர்கள் எட்டிப் பார்க்கவில்லை என்ற கோபம் தான், இதற்கெல்லாம் காரணம்.தினமலர்.com 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக