புதன், 9 டிசம்பர், 2015

வெள்ள நிவாரண நிதிக்கு 10 லட்சம் ரூபாய் வழங்கிய ஸ்ரீதிவ்யா

தமிழகத்தில் பெய்த பலத்த மழையால் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ஏராளமானோர் தங்கள் உடமைகளை இழந்து தவிக்கின்றனர். இவர்களுக்கு பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள் எல்லாம் நேரடியாக சென்று உணவு, உடை உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கி வருகின்றனர். திரை நட்சத்திரங்களும் நேரடியாக மக்களை சந்தித்து அவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர். ரஜினி, சூர்யா, கார்த்தி, விஷால் உள்ளிட்ட பல நடிகர்கள், நடிகர் சங்கம் மூலம் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு பணம் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், காக்கிச்சட்டை போன்ற படங்களில் நடித்த நடிகை ஸ்ரீதிவ்யா ரூ.10 லட்சத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அளித்துள்ளார். maalaimalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக