சனி, 12 டிசம்பர், 2015

பிப்ரவரிக்குள் மோடியின் விசா ஆவணங்களை சமர்பிக்க வேண்டும் - Obama அரசுக்கு நியூயார்க் கோர்ட் உத்தரவு

பிரதமர் நரேந்திர மோடியின் விசா தொடர்பான ஆவணங்களை பிப்ரவரி மாதத்திற்குள் சமர்பிக்க வேண்டும் என்று அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2002ம் ஆண்டு நடைபெற்ற குஜராத் கலவரத்தை தொடர்ந்து அம்மாநில முதல் அமைச்சராக இருந்த நரேந்திர மோடியின் விசாவை, மத சுதந்திர சட்டத்தின் அடிப்படையில் அமெரிக்கா ரத்து செய்தது. 2014ம் ஆண்டு நரேந்திர மோடி பிரதமரான பின்னர் அவருக்கு மீண்டும் விசா வழங்கப்பட்டது. இந்த நிலையில் மோடிக்கு புஷ் அரசு விசா மறுத்ததற்கும், ஒபாமா அரசு விசா வழங்கியதற்குமான காரணங்களைக் கேட்டு அமெரிக்காவில் உள்ள சீக்கிய அமைப்பு நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து இதுகுறித்த தகவல்களை தர மாநில அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இதுவரை தகவல்கள் வழங்கப்படாததால் சீக்கிய அமைப்பு கடந்த செப்டம்பரில் மீண்டும் ஒரு வழக்கை பதிவு செய்தது. இந்த வழக்கை விசாரித்த நீயூயார்க் நீதிமன்றம், மோடியின் விசா தொடர்பான ஆவணங்களை பிப்ரவரி மாதத்திற்குள் சமர்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக