சனி, 12 டிசம்பர், 2015

2 ஆண்டுகளில் 268 சதுர கி.மீ காடுகளை உத்தராகண்ட் இழந்துள்ளது.

இயற்கை அழகிற்கு பெயர் போன உத்தராகண்ட் இமயமலையை ஒட்டி அமைந்துள்ள வட இந்திய மாநிலமாகும். மொத்தம் 24,240 சதுர கி.மீ வனப்பகுதியை பரப்பளவாக கொண்ட இம்மாநிலம் வளர்ச்சிப்பணிகளுக்காக கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 268 சதுர கி.மீ காடுகளை இழந்துள்ளது. 1952, 1988-ம் ஆண்டு தேசிய வனக்கொள்கை அடிப்படையில், ஒரு நாட்டின் மொத்த பரப்பளவில் மூன்றில் ஒருபகுதி மரங்கள் சூழப்பட்ட வனப்பகுதியாக இருக்க வேண்டும். முதல்முறையாக, ஜி.பி.எஸ் தொழில்நுட்பம் வாயிலாக காடுகளுக்கு உள்ளேயும், வெளியேயும் உள்ள மரங்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டது. 12 மாநிலங்கள் எடுக்கப்பட்ட இந்த கணக்கெடுப்பு விரைவில் நாடு முழுவதும் எடுக்கப்பட உள்ளது. கடந்த 1910-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு இரண்டு ஆண்டுக்கு ஒருமுறையும் காடுகளின் பரப்பளவு குறித்த தகவல்களை 'பாரஸ்ட் சர்வே ஆப் இந்தியா' வெளியிட்டு வருகிறது. dailythanthi.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக