திங்கள், 7 டிசம்பர், 2015

சென்னை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட உடல்கள் இலங்கை கடற்பகுதியில் மிதக்கின்றன.

திருகோணமலை கடற்பகுதியில் கண்டெடுக்கப்பட்டவரின் அடையாள அட்டை. திருகோணமலை கடற்பகுதியில் கண்டெடுக்கப்பட்டவரின் அடையாள அட்டை.
இலங்கை திருகோணமலை கடற்பரப்பில் சென்னையில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட உடல்கள் மிதப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இலங்கை கிழக்குப் பகுதியில் உள்ள திருகோணமலை கடற்பரப்பில் இரண்டு பெண் சடலம் உள்பட ஐந்து சடலங்கள் மிதப்பதாக அப்பகுதி மீனவர்கள் திருகோணமலை காவல்துறையினரிடம் தகவல் அளித்தனர்.
இதனை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை மாலை இலங்கை கடற்படையினர் ரோந்துப் படகுகளில் தேடுதல் பணியில் ஈடுபட்டபோது திருகோணமலை நிலாவெளி எனும் கடற்பகுதியில் ஒரு ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டு பின்னர் பிரதேசப் பரிசோதனைக்காக திருகோணமலை தலைமை மருத்துவமனையில் அனுப்பப்பட்டது.

இந்த சடலத்தில் இருந்து மீட்கப்பட்ட அடையாள அட்டையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய கால் டாக்சி ஓட்டுநரான பூமிதுரையின் அடையாள அட்டை எனத் தெரிய வந்தது. மேலும் சடலங்கள் மிதக்கின்றனவா என இரண்டாவது நாளாக அந்நாட்டு கடற்படையினர் தேடும் பணியில் இரண்டாவது நாளாக திங்கட்கிழமையும் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கை கடற்பகுதியில் வெள்ளப் பாதிப்பிற்குள்ளான உடல் ஒதுங்கிய சம்பவம் சென்னை வாசிகளை மட்டுமின்றி இலங்கை தமிழர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.   tamil.thehindu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக