வெள்ளி, 11 டிசம்பர், 2015

எல்லாமே அவுக உத்தரவுப்படிதான் நடக்கணும். உத்தரவு வரும்னு காத்து கிடந்தாய்ங்க...முக்கியமான 32 துறைகளுக்கு அமைச்சர்களும்

குடிசை வீடுகளை இழந்தவர்களுக்கு 10ஆயிரம் ரூபாய், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மற்றவங்களுக்கு 5ஆயிரம் ரூபாய்னு நிவாரணத் தொகையை ஜெ. அறிவிச்சிருப்பதை கவனிச்சிருப்பீங்க.
அதுபோக 10கிலோ இலவச அரிசி, வேட்டி, சேலை, மாடு இறந்தால் 30ஆயிரம், ஆடு-பன்றிக்கு 3ஆயிரம், கோழிக்கு 100 ரூபாய், 10 ஆயிரம், நிரந்தர வீடு 1, ஹெக்டேர் பயிருக்கு 13ஆயிரத்து 500 ரூபாய்னும் அறிவிச்சிருக்காரே!'' தலைவரே.. மீட்புப்பணிகளிலும் நிவாரண உதவிகளிலும் ஜெ. அரசின் இயந்திரம் முடங்கிப் போயிடிச்சின்னு கோட்டையில் உள்ள அதிகாரிகளே சொல்றாங்க. முக்கியமான 32 துறைகளுக்கு அமைச்சர்களும் அதிகாரிகளும் இருந்தாலும் எல்லாமே ஜெ. உத்தரவுப்படிதான் நடக்கணும். அந்த உத்தரவு எப்ப வரும்னு தெரியாது. அதனாலதான் வெள்ள மீட்பு பணிகளில் மற்ற கட்சிகளும் சமூகநல அமைப்புகளும் தன்னார்வலர்களும் முழுவீச்சா செயல்பட்டப்ப அரசாங்க இயந்திரம் முடங்கிக் கிடந்துச்சுன்னு அதிகாரிகள் சொல்றாங்க.'


அதற்காக நிவாரணத் தொகையை அறிவிப்பதில் கூடவா லேட்?'' ""மழை எப்போது விடும்னு தெரியாத நிலை, பாதிப்புகள் எக்கச்சக்கமா இருப்பதால எவ்வளவு நிவாரணம் கொடுப்பதுங்கிற குழப்பம், எப்ப கொடுத்தா அதை ஓட்டாக மாற்றலாம்ங்கிற அரசியல் கணக்கு எல்லாமும் இதன் பின்னணியில் இருக்குதுங்க தலைவரே.. முதல்கட்டமா 500 கோடி ரூபாயை நிவாரணமா ஜெ. அறிவிச்சாரே ஞாபகமிருக்குதா? ஒவ்வொரு வருசமும் பேரிடர் நிதியாக மத்திய அரசு 500 கோடி ரூபாய் கொடுக்குது. அதன்படி பார்த்தால் இந்த 4 வருசத்தில் 2000 கோடி அரசின் கையில் இருக்கணும். அதோடு மத்திய அரசு முதல்கட்டமா அறிவிச்ச 940 கோடியும், மோடி அறிவிச்ச 1000 கோடி ரூபாயும் வந்து சேர்ந்திருச்சி.

அதற்கப்புறமும் நிவாரண வியூகம் வகுப் பதில் என்ன தாமதம்?'' ""சென்னை, கடலூர், காஞ்சி, திருவள்ளூர், தூத்துக்குடின்னு அதிக மழை பெய்த மாவட் டங்களில் பாதிக்கப்பட்டு பரிதவிக்கும் மக்கள் ஒன்றரை கோடி பேர்.
இதில் 70லட்சம் பேர் குடிசை வாசிகள். 60 லட்சம் பேர் நடுத்தர வர்க்கத்தினர். 20 லட்சம் பேர் அதுக்கும் மேலே.. இதில் ஒவ்வொருவருக் கும் ஒவ்வொரு விதத்தில் நிவாரண நிதி ஒதுக்கி னால் பிரச்சினைகள் வரும். ஒரே மாதிரியா கொடுத்தாலும் போது மானதாக இருக்காது. அதனால என்ன செய் வதுன்னு யோசிச்சிக் கிட்டிருந்த நேரத்தில், தமிழ்நாட்டில் இன்னும் நிவாரண நிதி வழங் கப்படலைன்னு மத்திய உளவுத்துறை டெல்லிக்கு ரிப்போர்ட் பண்ணிடிச்சி. இதுபற்றி பிரதமர் அலுவலகத்திலிருந்து கவர்னர் ரோசய்யாவைத் தொடர்பு கொண்டு கேட்கப்பட்டிருக்குது.nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக