செவ்வாய், 8 டிசம்பர், 2015

பாஜக யஷ்வந்த் சின்ஹா : பாகிஸ்தான் உடன் திடீர் பேச்சுவார்த்தை ஏன்?

மத்திய வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் பாகிஸ்தான் செல்ல உள்ள நிலையில், இருநாடுகளிடையேயான பேச்சுவார்த்தையில் பா.ஜ.க., அரசின் நிலைப்பாடு என்ன என்று அக்கட்சியின் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா கேள்வி எழுப்பியுள்ளார். பாகிஸ்தான் உடன் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளதற்காக காரணம் என்ன என்பது குறித்து பா.ஜ.க., அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், “எல்லைப் பகுதியில் கடந்த சில மாதங்களாக  தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தி வந்த நிலையில், தாக்குதல்களுக்கு பின்னால் பாகிஸ்தான் அரசு உள்ளது என்று மத்திய அரசு கூறிவந்தது. இந்நிலையில் திடீரென பேச்சுவார்த்தை நடைபெற காரணம் என்ன என்று மக்கள் மத்தியில் கேள்வி எழும்பியுள்ளது.” என்றார்.


பா.ஜ.க.,வின் கூட்டணி கட்சியான சிவசேனாவும் பாங்காக்கில் கடந்த வாரம் தொடங்கியுள்ள பேச்சுவார்த்தை குறித்து விமர்சித்துள்ளது. காங்கிரஸ் கட்சியும் யஷ்வந்த் சின்ஹாவின் கருத்தினையே தெரிவித்துள்ளது.

வாஜ்பாய் பிரதமராக இருந்த போது 2002-ம் ஆண்டு முதல் யஷ்வந்த் சின்ஹா வெளியுறவுத் துறை மந்திரியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  மாலைமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக