திங்கள், 7 டிசம்பர், 2015

கடலூரில் 93 பேர் பலி....7 மாவட்டங்களின் வடிகால் கடலூர்

கடலுார்:பூகோளரீதியாக, கடலுார் மாவட்டம், மேற்கே உள்ள, ஏழு மாவட்டங்களின் வடிகாலாக அமைந்துள்ளது. இதனால், கடலுார் மாவட்டத்தில் மழை பெய்யாவிட்டாலும், மேற்கே அமைந்துள்ள மாவட்டங்களில் மழை பெய்தால், கடலுார் வெள்ளக்காடாக மாறி விடுவது வழக்கம். >இந்நிலையில், கடலுார் மாவட்டத்தில் தொடர்ந்து மழை கொட்டி தீர்ப்பதால், நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. மாவட்டத்தில் உள்ள, 228 ஏரிகளில், 199 ஏரிகள் நிரம்பி வழிந்தோடுகின்றன.நேற்று முன்தினம் கொட்டிய கனமழையால், அனைத்து நீர் நிலைகளில் இருந்தும், ஒரு லட்சத்து, 83 ஆயிரத்து, 436 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால், மாவட்டமே வெள்ளக்காடாகியுள்ளது. கரையோர பகுதிகளில் வசிக்கும்மக்களுக்கு, வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுஉள்ளது
கடலுாரில் கனமழை: மீட்பு பணிக்கு ராணுவம் கடலுார் மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையால், மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களை மீட்கவும், நிவாரண பொருட்களை வழங்கவும், ராணுவத்தினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.கடலுார் மாவட்டத்தில், டிசம்பரில், சராசரி மழையளவு, 158.7 மி.மீ., ஆகும். ஆனால், கடந்த, 1 முதல், 6ம் தேதி வரை, 634 மி.மீ., மழை பெய்துள்ளது. நேற்று இரவு மட்டும், சராசரியாக 104 மி.மீ., மழை பெய்துள்ளது; அதிகபட்சமாக, கீழ்ச்செருவாயில், 160 மி.மீ., பதிவாகி உள்ளது.>கிராமங்களில் தண்ணீர்:
கன மழை காரணமாக, மாவட்டத்திலுள்ள பொதுப்பணித்துறை ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. மழை தொடர்வதால், ஆங்காங்கே ஏரிகளிலும், வாய்க்காலிலும் உடைப்புகள் ஏற்பட துவங்கி உள்ளன; பல கிராமங்களில் தண்ணீர் புகுந்துள்ளது.கடலுார் வழியாக சென்று கடலில் கலக்கும், கெடிலம் ஆற்றில், 40 ஆயிரம் கன அடி தண்ணீரும், பெண்ணையாற்றில், 45 ஆயிரம் கன அடி தண்ணீரும், இரு கரைகளை தொட்டு ஓடுகிறது. பழைய கொள்ளிடத்தில், 25 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.கனமழை தொடர்ந்து பெய்வதால், மேலும் பல ஏரிகள் உடைப்பெடுக்கும் அபாயம் உள்ளது. இதனால், கிராமங்கள் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மீட்பு மற்றும் நிவாரண பணிக்கு, பேரிடர் மீட்புக் குழுவினர், 250 பேர், நெய்வேலியில் முகாமிட்டுள்ளனர். ராணுவத்தினரும் கடலுாருக்கு அழைக்கப்பட்டுள்ளனர்; 180 வீரர்கள் கடலுாருக்கு வந்துள்ளனர். 93 பேர் பலி :< கடலுார் மாவட்டத்தில் தொடரும் கன மழை காரணமாக, பலியானவர்கள் எண்ணிக்கை, 93 ஆக உயர்ந்துள்ளது; 40 பேர் காயமடைந்துள்ளனர். மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள், பத்திரமாக வெளியேற்றப்பட்டு, 80 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.>கடலுார், நாகையில் மின் வினியோகம் துண்டிப்பு:>
கடலுார் மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் அங்கு, மீண்டும் மின் வினியோகம் பாதிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு மின் வாரியம், கடலுார், நாகை மாவட்டங்களில், மின் கம்பம் மூலம் மின் வினியோகம் செய்கிறது.வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை, நவ., 9ல், கடலுாரில் கரையை கடந்தது. இதனால், அந்த மாவட்டத்தில் இருந்த, 2,900 மின் கம்பங்கள்; 220 டிரான்ஸ்பார்மர்கள்; 300 கி.மீ., நீள மின்கம்பி சேதமடைந்ததால், 905 கிராமங்களில், மின் வினியோகம் பாதிக்கப்பட்டது; என்.எல்.சி., அனல்மின் நிலையத்திலும் உற்பத்தி நிறுத்தப்பட்டது.கரூர், திருச்சி, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, 2,350 மின் ஊழியர்கள் கடலுார் சென்று, மின் பழுதை சரி செய்தனர். நவ., 15 முதல் அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம் வழங்கப்பட்டது. இந்நிலையில் சில தினங்களாக, கடலுார், நாகை மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், அந்த மாவட்டங்களில் மின் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. >இதுகுறித்து, எரிசக்தி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: மின் கம்பங்கள் சேதமடைந்து மின் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இடைவிடாமல் மழை பெய்வதால் மின் பழுதுகளை சரி செய்ய முடியவில்லை; மழை நின்றதும், மின்சாரம் வழங்க துரிதகதியில் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.< 'சுனாமி'யை சந்தித்த நாகை வெள்ளத்தால் தடுமாற்றம்<'சுனாமி' தாக்குதலையே எதிர்கொண்ட நாகை மாவட்டம், தற்போது பெய்து வரும் மழையால் நிலை குலைந்து போயுள்ளது. நாகை மாவட்டம், >கடந்த 1952, 1972ல் பெரும் புயலை சந்தித்த போது, அரசின் துரிதமான செயல்பாடும், உதவியும், கொட்டும் மழையிலும் உடனுக்குடன் மக்களுக்கு கிடைத்தது. அதுபோல, 2004ல், ஏற்பட்ட சுனாமியின்போது, கடுமையாக பாதிக்கப்பட்ட போதும், மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் செயலாற்றி, சுனாமிக்கான சுவடே தெரியாமல் போகச் செய்தது.தற்போது, நாகையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழையால், மாவட்டமே வெள்ளத்தில் சிக்கி சீரழிந்து, இயல்பு வாழ்க்கை முற்றிலும் ஸ்தம்பித்து போயுள்ளது. இதற்கு முன் மிகப் பெரிய இயற்கை சீற்றங்களை எதிர்கொண்ட நாகை, தற்போதைய மழையால் நிலைகுலைந்து போயுள்ளது.< சுவர் இடிந்தது : >நாகை மாவட்டம், தரங்கம்பாடி கடற்கரையில் உள்ள, டச்சுக்காரர்களின் கோட்டையான, 'டேனிஷ்' கோட்டையின் சுவர் இடிந்தது.கி.பி., 1620ல், டச்சு நாட்டு கடற்படை கேப்டன் ரோலாண்டுகிராப் என்பவர், தரங்கம்பாடி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை, தஞ்சை மன்னரிடம் விலைக்கு வாங்கி, கோட்டையை கட்டி, 15 அடி உயரம், 3 அடி அகலத்தில் மதில் சுவரையும் அமைத்தார்.இந்த டேனிஷ் கோட்டை, தமிழக அரசின் சுற்றுலா துறை சார்பில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக பெய்த கன மழையால், கோட்டையின் மேற்கு பகுதியில் உள்ள நடைபாதை உட்புற சுவர், 50 மீட்டர் இடிந்து விழுந்தது.இதையடுத்து, கோட்டையை சுற்றிப் பார்க்க, சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.< ஒரு லட்சம் ஏக்கர்சம்பா பயிர் 'நாசம்':


காவிரியின் கடை மடையான நாகை மாவட்டத்தில், தொடர்ந்து பெய்து வரும் கன மழையால், 1 லட்சம் ஏக்கருக்கும் மேற்பட்ட விளை நிலங்களில் தண்ணீர் வடியாமல் தேங்கி, நெற் பயிர்கள் அழுகி, விளைச்சல் பாதித்துள்ளது.



விவசாயிகள் கூறும் போது, 'பபட்லா என்ற, சன்ன ரக நெல்லையே பயிரிடுள்ளோம். இந்த நெற் பயிர், 24 மணி நேரம் நீரில் மூழ்கினாலே பாதிக்கப்படும். தற்போது, 30 நாட்களுக்கும் மேலாக, 100 நாட்கள் ஆன பயிர்கள், தண்ணீரில் நிற்கின்றன. இதனால் விளைச்சல் பாதிக்கும்' என்றனர்.தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக