சென்னை துரைப்பாக்கத்தில் பட்டப் பகலில் பட்டாக் கத்தியைக் காட்டி
ஆசிரியையிடம் வழிப்பறி செய்த கொள்ளையன் முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா
கொலையாளி என்று தெரியவந்துள்ளது.
துரைப்பாக்கம் எம்.சி.என். நகர் 2 ஆவது சந்து பகுதியை சேர்ந்தவர் வேலம்.
தனியார் பள்ளி ஆசிரியையான இவர் கடந்த 21ஆம் தேதி பணி முடிந்து, தனது
இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பி சென்றார். அப்போது மோட்டார்
பைக்கில் வந்த 2 பேர் ஆசிரியையின் வண்டி மீது மோதினர். இதில் நிலைதடுமாறி,
வேலம் கீழே விழுந்தார். பைக் பின்னால் அமர்ந்து வந்த இளைஞர், பட்டாக்
கத்தியை காட்டி மிரட்டி, தாலி செயின் உள்ளிட்ட 14 சவரன் நகைகளை வேலத் திடம்
இருந்து பறித்துக் கொண்டு பைக்கில் தப்பினார்.
இந்த சம்பவத்தை அந்தப் பகுதியின் மாடி வீட்டில் இருந்த ஒரு பெண், செல்போன்
மூலமாக வீடியோ எடுத்து தனது தோழிகளுக்கு அவர் வாட்ஸ் அப் மூலமாக
அனுப்பினார். ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத் தளங்களிலும் இந்த கொள்ளை வீடியோ
பரவத் தொடங்கியது.
சனி, 27 டிசம்பர், 2014
ஸ்டெம் செல்களில் இருந்து உயிரணு கரு முட்டைகள் தயாரித்தல் Scientists Produce Egg, Sperm From Stem Cells
Researchers say they have used human embryonic stem cells to create cells that develop into eggs and sperm.
லண்டன்,டிச.26 (டி.என்.எஸ்) மலட்டுத்தன்மை காரணமாக சிலர் குழந்தையின்றி தவிக்கின்றனர். அவர்களின் குறைகளை போக்க விஞ்ஞானிகள் ஸ்டெம் செல்களில் இருந்து உயிரணு மற்றும் கரு முட்டை தயாரித்து வியத்தகு சாதனை படைத்துள்ளனர்.தொடக்கத்தில் இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் மற்றும் இஸ்ரேலில் உள்ள வெய்ஷ்மான் நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் எலி, முயல் உள்ளிட்ட கூர்மையான பற்கள் கொண்ட விலங்குகளின் ஸ்டெம் செல்களில் இந்த ஆய்வு மேற்கொண்டனர்.அவற்றின் உடலில் வளர்ச்சியின் தொடக்க நிலையில் உள்ள ஸ்டெம் செல்களில் இருந்து செக்ஸ் செல்களை விஞ்ஞானிகள் சேகரித்தனர். அதை மிகவும் கவனமாக ஒரு வாரம் ஆய்வு கூடத்தில் வைத்து பாதுகாத்தனர்.
லண்டன்,டிச.26 (டி.என்.எஸ்) மலட்டுத்தன்மை காரணமாக சிலர் குழந்தையின்றி தவிக்கின்றனர். அவர்களின் குறைகளை போக்க விஞ்ஞானிகள் ஸ்டெம் செல்களில் இருந்து உயிரணு மற்றும் கரு முட்டை தயாரித்து வியத்தகு சாதனை படைத்துள்ளனர்.தொடக்கத்தில் இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் மற்றும் இஸ்ரேலில் உள்ள வெய்ஷ்மான் நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் எலி, முயல் உள்ளிட்ட கூர்மையான பற்கள் கொண்ட விலங்குகளின் ஸ்டெம் செல்களில் இந்த ஆய்வு மேற்கொண்டனர்.அவற்றின் உடலில் வளர்ச்சியின் தொடக்க நிலையில் உள்ள ஸ்டெம் செல்களில் இருந்து செக்ஸ் செல்களை விஞ்ஞானிகள் சேகரித்தனர். அதை மிகவும் கவனமாக ஒரு வாரம் ஆய்வு கூடத்தில் வைத்து பாதுகாத்தனர்.
நயன்தாரா : ஆண்டின்னு கூப்பிட்டா யாருக்குதான் கோபம் வராது?
நடிகை நயன்தாராவுக்கும் நடிகர் பிரேம்ஜி அமரனுக்கும் படப்பிடிப்பில் ‘திடீர்’ மோதல் ஏற்பட்டது.
இருவரும் ‘மாஸ்’ என்ற படத்தில் இணைந்து நடிக்கின்றனர். இதில் கதாநாயகனாக
சூர்யா நடிக்கிறார். இப்படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். இதன்
படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
பிரேம்ஜி அமரன் படப்பிடிப்பில் ஜோக் அடித்து பேசுவது வழக்கம். சக நடிகர்
நடிகைகளை தமாஷாக கேலியும் செய்வார். அது போல் நயன்தாராவையும் கேலி
செய்தார். வயதான பெண்களை அழைப்பது போல் ‘ஆண்டி’ என்று நயன்தாராவை
அழைத்தார். முதலில் இதை சாதாரணமாக நயன்தாரா எடுத்துக் கொண்டார். ஆனால்
அடிக்கடி ஆண்டி, ஆண்டி என்றே கூப்பிட்டாராம். இது நயன்தாராவை எரிச்சல்
படுத்தியது. தன்னை வேண்டும் என்று கேலி செய்வதாக நினைத்தார். ஒரு
கட்டத்தில் பொறுமை இழந்து பிரேம்ஜி அமரனை கோபமாக திட்ட துவங்கினாராம். இனி
‘ஆண்டி’ என்று கூப்பிட்டால் நடப்பதே வேறு என்றும் எச்சரித்தாராம்.
நயன்தாராவின் கோபத்தை பார்த்து படப்பிடிப்பில் பரபரப்பு ஏற்பட்டது. பிரேம்ஜி அமரனும் அமைதியாகி விட்டார். மாலைமுரசு.com
100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்த கோரி ஆர்ப்பாட்டம்
திருவாரூர்
மாவட்டம், முத்துப்பேட்டையில் தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில்
100 நாள் தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்ட பணியை நிறுத்தாமல் தொடர்ந்து
செயல்படுத்த கோரி ஆர்ப்பாட்டம் ஒன்றிய குழு அலுவலகம் முன்பு நடைபெற்றது.
ஒன்றிய தலைவர் குணசேகரன், ஒன்றிய செயலாளர் குமார் ஆகியோர் தலைமை
வகித்தனர்.nakkheeran.in
பாகிஸ்தானில் சுமார் 7000 தீவிரவாதிகள் கைது! படையினர் அதிரடி!
கடந்த வாரம் பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள
பள்ளிக்கூடத்தில் நுழைந்த தலீபான் தீவிரவாதிகள் 132 குழந்தைகளை
சுட்டுக்கொன்றனர். இந்த படுகொலை சம்பவத்துக்கு காரணமான யாரும் இதுவரை கைது
செய்யப்படவில்லை
இந்த நிலையில் நாடு
முழுவதிலும் 10–க்கும் மேற்பட்ட சிறு நகரங்களில் பாகிஸ்தான் போலீசார்
நேற்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது பெஷாவர் சம்பவத்தில் தொடர்பு
கொண்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் 7 ஆயிரம் பேரை அவர்கள் கைது
செய்தனர்.
இவர்களில் 4 ஆயிரம் பேர் கைபர் பக்துகாவா பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
109 பேர் ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள்.மேலும் பாகிஸ்தான்
முழுவதும் பதிவு செய்யப்படாமல் நடத்தப்பட்டு வந்த 10 மதபோதனை பள்ளிகளும்
‘சீல்’ வைத்து மூடப்பட்டன.
கைது செய்யப்பட்ட அனைவரும் விசாரணைக்காக ரகசிய இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.dailythanthi.com
தமிழகத்தில் பறிபோகும் வேலைவாய்ப்புகள்! Nokia Foxconn... மூடுவிழா!
சென்னை ஸ்ரீபெரும்புதுார் - பெங்களூர் சாலையில் இருமருங்கிலும்
காணப்பட்ட பெருமளவு தொழிற்சாலைகள், ஒன்றன்பின் ஒன்றாக மாயமாகி வருகின்றன.இதன்
எதிரொலியாக, தமிழகத்தில் வேலை இழந்தோரின் எண்ணிக்கை, கணிசமான அளவில்
அதிகரித்து வருகிறது.அதன்படி, இப்பகுதிகளில் செயல்பட்டு வந்த, மோட்டோரோலா,
பீ.ஒய்.டி., ஜபில் மற்றும் நோக்கியா நிறுவனங்கள் ஏற்கனவே மூடுவிழா கண்டுள்ள
நிலையில், தற்போது, பாக்ஸ்கான் நிறுவனமும் தன் செயல்பாட்டை முற்றிலுமாக
நிறுத்தியுள்ளது.இதன் காரணமாக, கடந்த ஒரு சில மாதங்களில் மட்டும், 35
ஆயிரம் பணியாளர்களுக்கு மேல் தங்களது வேலைவாய்ப்பை இழந்துள்ளனர்; நோக்கியா, மோடோரோலா போன்ற நிறுவனங்கள் Smartphone பயன்பாட்டுக்கு வந்தவுடனே
முற்றாக தங்க சந்தையை இழந்து விட்டன. மூடாமல் என்ன செய்வார்கள். சாம்சுங்
நிறுவனத்தின் போட்டிக்கு ஆப்பிள் நிறுவனமே ஈடு கொடுக்க முடியாமல்
திணறுகிறது.
வெள்ளி, 26 டிசம்பர், 2014
மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்று... லிங்கா படத்தைப் பார்த்தபடியே உயிரை விட்ட ரஜினி பைத்தியம்!
இந்த மாதிரி ரசிகர்கள் ஒரு வகையில் சமுக வியாதிகளே ! இவர்களை போன்றவர்கள் இருந்து என்ன பயன் ? சினிமாக்காரன் சம்பாதிக்க விளம்பரமாகி போன வீண் மனிதர்கள் , கோவை அருகே சிகிச்சைப் பெற்று வந்த மருத்துவமனையில் இருந்து
தப்பிச் சென்று லிங்கா படம் பார்த்த ரஜினி ரசிகர், தியேட்டரிலேயே உயிரிழந்த
சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை, பேரூரை அடுத்த செட்டிபாளையத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் ( 56).
சிறுநீரக பாதிப்பு காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த
ராஜேந்திரனுக்கு, டிரிப் மூலம் மருந்து செலுத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில், கடந்த 12ம் தேதி லிங்கா படம் ரிலீசானது. ரஜினி ரசிகரான
ராஜேந்திரன் எப்படியும் லிங்கா படத்தைப் பார்த்து விட வேண்டும் என
துடித்துள்ளார். ஆனால், மருத்துவமனை நிர்வாகம் அவரை வெளியில் அனுமதிக்க
மறுத்து விட்டது.
இதனால், மருத்துவர்களுக்குத் தெரியாமல் லிங்கா படத்தை ரகசியமாகச் சென்று
பார்ப்பது என முடிவெடுத்தார் ராஜேந்திரன். அதன்படி, நேற்றிரவு கையில்
குத்தப்பட்டிருந்த டிரிப் குழாய்களுடன் மருத்துவமனையில் இருந்து யாருக்கும்
தெரியாமல் வெளியேறினார் ராஜேந்திரன்.
அங்கிருந்து எஸ்.பி.ஐ. ரோட்டில் உள்ள லிங்கா படம் ஓடும் தியேட்டருக்கு
சென்று, 10 மணி காட்சிக்கான டிக்கட்டை எடுத்துள்ளார். பின்னர் உள்ளே சென்று
லிங்கா படத்தைப் பார்த்து ரசித்துள்ளார். படம் முடிவடைந்த நிலையில்
அனைவரும் வெளியேறி விட ராஜேந்திரன் மட்டும் சீட்டிலேயே அமர்ந்திருந்தது
தியேட்டர் ஊழியர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. பின்னர் அருகில் சென்று
சோதித்துப் பார்த்த போது ராஜேந்திரன் உயிரிழந்தது தெரிய வந்தது.
Sun டிவியின் முக்கியஸ்தர் பிரவீன் பாலியல் குற்றச்சாட்டில் கைது!
சன் நெட்வொர்க் நிறுவனத்தின் சி.ஓ.ஓ.-வாக பணியாற்றி வரும் பிரவீண்
சதங்கதோடி இன்று சென்னையில் மத்திய குற்றப் பிரிவு காவல் அதிகாரிகளால் கைது
செய்யப்பட்டார்.<
சூர்யா தொலைக்காட்சி நிர்வாகத்தையும் கவனித்து வரும் பிரவீணுக்கு வயது 52 என்பது குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சித் தயாரிப்பாளராக இருந்த பெண் ஊழியரை 5 மாதங்களுக்கு முன்பு
பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக சம்பந்தப்பட்ட ஊழியர் அளித்த புகாரின்
அடிப்படையில் பிரவீண் இன்று அவரது அண்ணா நகர் இல்லத்தில் கைது
செய்யப்பட்டார்.
பெண் நிகழ்ச்சித் தயாரிப்பாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததோடு, கொச்சிக்கு
அவரை பணியிட மாற்றம் செய்துள்ளார். இதனையடுத்து அந்தப் பெண் ஊழியர் தனது
பணியை ராஜினாமா செய்தார்.
தொடர்ந்து தன்னை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்கிறார் என்று அந்தப் பெண்,
சென்னை நகர காவல்துறையிடம் சில மாதங்களுக்கு முன்பு புகார் அளித்தார்.
மேலும், அவருக்குச் சேர வேண்டிய சம்பளம், பி.எஃப். என சுமார் ரூ.35
லட்சத்தை கொடுக்காமல் பிரவீண் நிறுத்தி வைத்ததாகவும் புகார்
எழுப்பியுள்ளார் அந்த பெண் ஊழியர்.tamil.hindu.com
காஷ்மீரில் PDP கட்சிக்கு உமர் அப்துல்லா நிபந்தனை அற்ற ஆதரவு! பாஜகவின் ஆட்சிக்கனவு???
காஷ்மீர்: காஷ்மீரில் அரசு அமைக்க பாஜக தீவிர முயற்சி மேற்கொண்டிருந்த
நிலையில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. தனது பரம எதிரி கட்சியான மக்கள்
ஜனநாயக கட்சிக்கு ஆதரவு அளிக்க உமர் அப்துல்லா கட்சி முடிவு செய்துள்ளதாக
தகவல்கள் வெளியாகியுள்ளது. பாஜக உடன் ரகசிய பேச்சு நடத்தி வந்த நிலையில்
உமர் அப்துல்லாவுக்கு திடீர் மனமாற்றம் ஏற்பட்டுள்ளது. நிபந்தனையற்ற ஆதரவு
தருவதாக மக்கள் ஜனநாயக கட்சிக்கு உமர் அப்துல்லா கடிதம் எழுதியுள்ளார்.
இதனால் காஷ்மீர் அரசியலில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. மேலும்
மதசார்பற்ற அரசை ஆதரிப்போம் என 3 சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள்
அறிவித்துள்ளனர்.dinakaran.com
கலைஞர் அதிரடி: அவசர இன்சுரன்ஸ் சட்டத்திற்கு குடியரசு தலைவர் அனுமதி அளிக்க கூடாது!
DMK chief M Karunanidhi The former
Tamil Nadu chief minister appealed President Pranab Mukherjee not
to grant approval to the ordinance. Karunanidhi recalled that BJP as an
opposition party had strongly opposed the insurance reforms and argued
that there won't be any assurance that the investing firms will (dnaindia.com -சென்னை: மத்திய அரசு கொண்டு வந்துள்ள இன்சூரன்ஸ் அவசர சட்டத்துக்கு, திமுக
தலைவர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்திருப்பதுடன், அதற்கு குடியரசு
தலைவர் பிரணாப் முகர்ஜி அனுமதி வழங்க கூடாது என
தெரிவித்துள்ளார்.இதுகுறித்து திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்ட
அறிக்கை:மத்திய பாஜக ஆட்சியில் அன்னிய முதலீட்டுக்கு அதிக வரவேற்பு
அளிக்கப்படுகிறதே என்ற ஒரு கேள்விக்கு நான் பதிலளிக்கும்போது, அந்நிய
முதலீட்டுக்கு வரவேற்பு, அரசு நிறுவனங்களின் பங்குகள் தனியாருக்கு
விற்பனை, பாதுகாப்புத் துறைக்குத் தேவையானவற்றை உற்பத்தி செய்வதற்குக் கூட
தனியார் மயம் போன்ற நடவடிக்கைகள் பிற்போக்குத்தனமானவை. நமது
பொருளாதாரத்தைப் பெரிதும் பாதித்திடக் கூடியது என்று கருத்து
தெரிவித்திருந்தேன்.இந்தக் கருத்துக்கு மாறாக, இன்சூரன்ஸ் துறையில் அன்னிய
மூலதனத்தை 26 சதவீதத்திலிருந்து 49 சதவீதமாக உயர்த்துவதற்கு பிரதமர்
நரேந்திர மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு
செய்யப்பட்டுள்ளது. கலைஞர் இந்த அவசர சட்டத்திற்கு எதிராக நாடு தழுவிய போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்
கொல்லப்பட்ட ஜெயஸ்ரீ 21வயது – நீதி கேட்டு போராட்டம்
வியாசர் பாடி – (யானைக்கவுனி) வால்டாக்ஸ் டு,
உட்வார்பு பகுதியில் வசிக்கும் திருமதி சாந்தா என்பவரின் வளர்ப்பு மகள்
ஜெயஸ்ரீ கடந்த 24.11.2014 முதல் காணாமல் போனார்.
ஜெயஸ்ரீ 21 வயதான கலகலப்பான பெண். எல்லோரிடமும் சகஜமாக பேசக்கூடிய பெண். யானை கவுனி அருகே ஒரு சிறு பட்டறையில் வேலை செய்திருக்கிறாள். ஆணுக்கு நிகராய் அத்தனை வேலைகளையும் செய்யக்கூடியவள்.
ஜெயஸ்ரீ 21 வயதான கலகலப்பான பெண். எல்லோரிடமும் சகஜமாக பேசக்கூடிய பெண். யானை கவுனி அருகே ஒரு சிறு பட்டறையில் வேலை செய்திருக்கிறாள். ஆணுக்கு நிகராய் அத்தனை வேலைகளையும் செய்யக்கூடியவள்.
அப்பார்ட்மெண்ட் பிராமணர்கள்! இவங்க கிட்ட நாடோ, அதிகாரமோ இருந்தா எப்படி இருக்கும்?
எங்க மாவட்டங்கள்ல் அரிவாளத் தூக்குறவங்க ஒரு கணம்தான் மிருகமாக
இருக்காங்க. இவங்களோ அரிவாளையும் தூக்குறதில்ல, ஆனா ஆயுசு பூரா மத்தவங்களை மிருகத்தனமா
துன்புறுத்துறாங்க.
அன்பு வினவு நண்பர்களுக்கு, வணக்கம்என்னை நினைவிருக்கிறதா? ஐந்தாண்டுகளுக்கு முன்பு நானும் ஒரு கட்டுரை அனுப்பினேன். அதில் மகளிர் தினம் பற்றி என் அனுபவங்கள் எழுதியிருந்தேன். தனிப்பட்ட விவரங்களை வெளியிடாமல் அதை மாற்றி எழுத கேட்டிருந்தீர்கள். அப்போது அதெல்லாம் எனக்குத் தெரியவில்லை. பிறகு நிறைய கற்றுக் கொண்டேன்.
இந்த ஆண்டுகளில் பெண் என்ற வரம்பைத் தாண்டி சுயமா வாழவும், போராடவும் நிறைய கற்றுக் கொண்டேன். கிடைக்கும் நேரத்தில் இணையத்தில் இருப்பேன், உங்க கட்டுரைங்களும் படிப்பேன்.
சமீபத்தில் பூர்வாசிரம பிராமணர் கடிதம் படித்தேன். அதிர்ச்சியும் மகிழ்ச்சியும் கலந்து ரசித்தேன். இந்த மாதிரி சமூகத்தில் ஒரு நண்பர் மாறி வந்து கலப்பு திருமணமெல்லாம் செய்ஞ்சாருன்னா நம்பவே முடியலை, வாழ்த்துக்கள்! அத்தோடு உங்கள மாதிரி தீவிர கொள்கைக்காரர்களோடு அவர் இணைந்திருப்பது இன்னும் மகிழ்ச்சி. சரி அதிர்ச்சி எதற்கு என்று கேக்குறீங்களா?
அதுக்குத்தான் இந்த கடிதம்.
கணவருக்கு சிறுசேரி ஐ.டி நிறுவனமொன்றில் வேலை. எனக்கு தி.நகர் தனியார் பள்ளியில் ஆசிரியர் வேலை. அப்போது எங்கள் குழந்தைக்கு வயது நான்கு. அடுத்த வருடம் அவனை ஒரு பள்ளியில் சேர்க்கணும். இதெல்லாம் யோசித்து ஒரு ஏரியாவில் வாடகை வீடு பார்த்து குடி போனோம். இதெல்லாம் மூணு வருடத்துக்கு முன்பு உள்ள நிலை.
அன்பு வினவு நண்பர்களுக்கு, வணக்கம்என்னை நினைவிருக்கிறதா? ஐந்தாண்டுகளுக்கு முன்பு நானும் ஒரு கட்டுரை அனுப்பினேன். அதில் மகளிர் தினம் பற்றி என் அனுபவங்கள் எழுதியிருந்தேன். தனிப்பட்ட விவரங்களை வெளியிடாமல் அதை மாற்றி எழுத கேட்டிருந்தீர்கள். அப்போது அதெல்லாம் எனக்குத் தெரியவில்லை. பிறகு நிறைய கற்றுக் கொண்டேன்.
இந்த ஆண்டுகளில் பெண் என்ற வரம்பைத் தாண்டி சுயமா வாழவும், போராடவும் நிறைய கற்றுக் கொண்டேன். கிடைக்கும் நேரத்தில் இணையத்தில் இருப்பேன், உங்க கட்டுரைங்களும் படிப்பேன்.
சமீபத்தில் பூர்வாசிரம பிராமணர் கடிதம் படித்தேன். அதிர்ச்சியும் மகிழ்ச்சியும் கலந்து ரசித்தேன். இந்த மாதிரி சமூகத்தில் ஒரு நண்பர் மாறி வந்து கலப்பு திருமணமெல்லாம் செய்ஞ்சாருன்னா நம்பவே முடியலை, வாழ்த்துக்கள்! அத்தோடு உங்கள மாதிரி தீவிர கொள்கைக்காரர்களோடு அவர் இணைந்திருப்பது இன்னும் மகிழ்ச்சி. சரி அதிர்ச்சி எதற்கு என்று கேக்குறீங்களா?
அதுக்குத்தான் இந்த கடிதம்.
கணவருக்கு சிறுசேரி ஐ.டி நிறுவனமொன்றில் வேலை. எனக்கு தி.நகர் தனியார் பள்ளியில் ஆசிரியர் வேலை. அப்போது எங்கள் குழந்தைக்கு வயது நான்கு. அடுத்த வருடம் அவனை ஒரு பள்ளியில் சேர்க்கணும். இதெல்லாம் யோசித்து ஒரு ஏரியாவில் வாடகை வீடு பார்த்து குடி போனோம். இதெல்லாம் மூணு வருடத்துக்கு முன்பு உள்ள நிலை.
சுபவீ : அய்யா நெடுமாறனின் வண்டவாளங்களை வெளிப்படுத்தவேண்டிய கடமை!
எப்போது
பார்த்தாலும், கலைஞரின் கடந்த காலம் பற்றி விமர்சனம் செய்து கொண்டே இருக்கும் நீங்கள்,
என்றைக்காவது உங்களின் கடந்த காலத்தைத் தூசி தட்டி எடுத்துப் பார்த்ததுண்டா? இன்று தமிழ்த் தேசியத்திற்காகவே வாழ்வதுபோல் காட்டிக்
கொள்ளும் நீங்கள், கடந்த காலத்தில் தமிழ்த்தேசியத்திற்கும், தமிழ்மொழிக்கும் எதிராக
நின்ற தருணங்களை என்றாவது எண்ணிப் பார்த்ததுண்டா?
நீங்கள்
மறந்து போயிருக்கலாம்! ஆனாலும், மறக்க முடியாத உங்களின் சில கடந்த கால நினைவுகளை இங்கே
நினைவுபடுத்த வேண்டியுள்ளது.
1965ஆம் ஆண்டு, இங்கே இந்தி எதிர்ப்புப் போராட்டம் கொழுந்து விட்டு எரிந்ததே, அப்போது நீங்கள் எங்கே இருந்தீர்கள்? தீயிலே வெந்து போன சின்னச்சாமி, குண்டுக்கு மார்பு காட்டிய இராசேந்திரன், நஞ்சருந்திச் செத்த நற்றமிழர்கள் என்று அன்றைய தியாகிகளின் பட்டியல் விரிகிறதே. அந்த நாள்களில் நீங்கள் அவர்களின் பக்கம் இருந்தீர்களா, அவர்களின் சாவுக்குக் காரணமாக இருந்த அரசின் பக்கம் நின்றீர்களா? உங்கள் மனசாட்சியை ஒரு முறை கேட்டுப் பாருங்கள்.
1970 நவம்பர் 30 அன்று, தமிழ் வழிக் கல்விச் சட்ட முன்வடிவைத் தலைவர் கலைஞர் முன்மொழிந்தார். அதனை எதிர்த்து, டிசம்பர் 10ஆம் நாள் மதுரையில் மாணவர்களைக் கூட்டி, தமிழ்வழிக் கல்விக்கு எதிராகப் போராடத் தூண்டிய ‘தமிழ்த்தேசியத் தலைவர்’ யார் என்பதை அறிய வரலாற்றின் பக்கங்களை ஒரு முறை புரட்டிப் பாருங்கள்! பெருந்தலைவர் காமராசர் எதிர்த்த நெருக்கடி நிலைக்கு ஆதரவாக, அவர் மறைவுக்குப் பின் காங்கிரஸ் கட்சியை இந்திரா காந்தியின் தலைமையின் கீழ் இணைத்தவர் யார் என்று உங்கள் இதயத்தைக் கேட்டுப்பாருங்கள். கொடுமையான நெருக்கடி நிலைக்காலத்தை எதிர்த்துப் போராடிய போராளி யார், அதற்கு உறுதுணையாக இருந்த ‘காந்தியவாதி’ யார் என்பதை ஒருமுறை கண்மூடிச் சிந்தித்துப் பாருங்கள்!
1965ஆம் ஆண்டு, இங்கே இந்தி எதிர்ப்புப் போராட்டம் கொழுந்து விட்டு எரிந்ததே, அப்போது நீங்கள் எங்கே இருந்தீர்கள்? தீயிலே வெந்து போன சின்னச்சாமி, குண்டுக்கு மார்பு காட்டிய இராசேந்திரன், நஞ்சருந்திச் செத்த நற்றமிழர்கள் என்று அன்றைய தியாகிகளின் பட்டியல் விரிகிறதே. அந்த நாள்களில் நீங்கள் அவர்களின் பக்கம் இருந்தீர்களா, அவர்களின் சாவுக்குக் காரணமாக இருந்த அரசின் பக்கம் நின்றீர்களா? உங்கள் மனசாட்சியை ஒரு முறை கேட்டுப் பாருங்கள்.
1970 நவம்பர் 30 அன்று, தமிழ் வழிக் கல்விச் சட்ட முன்வடிவைத் தலைவர் கலைஞர் முன்மொழிந்தார். அதனை எதிர்த்து, டிசம்பர் 10ஆம் நாள் மதுரையில் மாணவர்களைக் கூட்டி, தமிழ்வழிக் கல்விக்கு எதிராகப் போராடத் தூண்டிய ‘தமிழ்த்தேசியத் தலைவர்’ யார் என்பதை அறிய வரலாற்றின் பக்கங்களை ஒரு முறை புரட்டிப் பாருங்கள்! பெருந்தலைவர் காமராசர் எதிர்த்த நெருக்கடி நிலைக்கு ஆதரவாக, அவர் மறைவுக்குப் பின் காங்கிரஸ் கட்சியை இந்திரா காந்தியின் தலைமையின் கீழ் இணைத்தவர் யார் என்று உங்கள் இதயத்தைக் கேட்டுப்பாருங்கள். கொடுமையான நெருக்கடி நிலைக்காலத்தை எதிர்த்துப் போராடிய போராளி யார், அதற்கு உறுதுணையாக இருந்த ‘காந்தியவாதி’ யார் என்பதை ஒருமுறை கண்மூடிச் சிந்தித்துப் பாருங்கள்!
சவுதியில் வாகனம் ஓட்டிய பெண்கள் தீவிரவாத நீதிமன்றத்தில்
சவுதி அரேபியாவில் அந்நாட்டின்
சட்டத்தை மீறி வாகனம் ஓட்டியதற்காக தடுத்து வைக்கப்பட்டுள்ள இரண்டு பெண்கள்
மீதான வழக்கு தீவிரவாத வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்துக்கு
மாற்றப்பட்டுள்ளது.
ஆனால் இந்த முடிவுக்கு எதிராக அந்தப் பெண்களுக்கான வழக்கறிஞர்கள் மேல் முறையீடு செய்துள்ளனர்.அந்த இரண்டு பெண்களில் ஒருவரான லுஜையின் ஹத்லௌல், அண்டைநாடான ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வாகனத்தை ஓட்டிச் செல்ல முயன்றபோது கைது செய்யப்பட்டார்.
மைஸ்ஸா அலமௌதி என்னும் மற்ற பெண்ணோ, ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கும் சவுதி ஊடகவியலாளர். அவர் ஹத்லௌல் கைது செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்க எல்லைப்பகுதிக்கு வந்தபோது கைது செய்யப்பட்டார்.
கலைஞர்: பெரியாருக்கும் அண்ணாவுக்கும் பாரதரத்னா விருது வழங்கவேண்டும்! அவிங்க திராவிடரத்னா !
பாரத ரத்னா விருது பெற்ற, முன்னாள் பிரதமர் அடல் பிகாரி
வாஜ்பாய்க்கு திமுக தலைவர் கருணாநிதி, வாழ்த்து தெரிவித்துள்ளதுடன், பாரத
ரத்னா விருதை அண்ணாவுக்கும், பெரியாருக்கும் வழங்க வேண்டும் என்று
வலியுறுத்தியுள்ளார்
இது குறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், திமுக விடமும்,
குறிப்பாக என்னிடமும் நெருங்கிய அன்பு கொண்டவருமான, இந்தியாவின் முன்னாள்
பிரதமர் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய்க்கும், சுதந்திர போராட்ட
வீரர் மதன்மோகன் மாளவியாவுக்கும் “பாரத ரத்னா” விருது வழங்க மத்திய அரசு
முன் வந்திருப்பதற்காக நன்றி கூறுவதோடு, விருது பெற்ற தலைவர்களுக்கு
தி.மு.க. சார்பில் வாழ்த்தினை தெரிவித்துக் கொள்கிறேன்.
வியாழன், 25 டிசம்பர், 2014
வளர்ச்சி... வளர்ச்சி என்று பேசிக்கொண்டேகாவிப்பாதையில் பயணிக்கும் மோடி!
வ.மணிகண்டன் (எழுத்தாளர்) :
மதமாற்ற கோஷம் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்து விட்டது. இந்தியாவில். மதச்சார்பற்ற நாடு என்று உருவாக்கப்பட்டிருந்த பிம்பம் அடித்து நொறுக்கப்படுகிறது. இது இந்துக்களின் தேசம் என்று பெருமையாக அறிவிக்கிறார்கள். பி.ஜே.பி.யின் எம்.பி.க்கள் பலரும் வெறியெடுத்துப் பேசுகிறார்கள். ஒரு பக்கம், அவர்களைக் கட்டுப்படுத்த லட்சுமண ரேகை வரைவதாகக் காட்டிக் கொள்கிறார் மோடி. மறுபக்கம், நடப்பதையெல்லாம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறார் புன்னகையோடு! எதிர்கேள்வி கேட்பவர்களிடம், இதுவரை மதச்சார்பற்ற நாடு என்ற பெயரில், பிற மதத்தினர்தான் சலுகைகளை அனுபவித்தார்களே தவிர, இந்துக்கள் எந்தப் பலனையும் அனுபவிக்கவில்லை என்று சண்டைக்கு வருகிறார்கள்.
மதமாற்ற கோஷம் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்து விட்டது. இந்தியாவில். மதச்சார்பற்ற நாடு என்று உருவாக்கப்பட்டிருந்த பிம்பம் அடித்து நொறுக்கப்படுகிறது. இது இந்துக்களின் தேசம் என்று பெருமையாக அறிவிக்கிறார்கள். பி.ஜே.பி.யின் எம்.பி.க்கள் பலரும் வெறியெடுத்துப் பேசுகிறார்கள். ஒரு பக்கம், அவர்களைக் கட்டுப்படுத்த லட்சுமண ரேகை வரைவதாகக் காட்டிக் கொள்கிறார் மோடி. மறுபக்கம், நடப்பதையெல்லாம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறார் புன்னகையோடு! எதிர்கேள்வி கேட்பவர்களிடம், இதுவரை மதச்சார்பற்ற நாடு என்ற பெயரில், பிற மதத்தினர்தான் சலுகைகளை அனுபவித்தார்களே தவிர, இந்துக்கள் எந்தப் பலனையும் அனுபவிக்கவில்லை என்று சண்டைக்கு வருகிறார்கள்.
சாமியார் ஆசாராம் பாபுவின் மீது பாலியல் குற்றம்சாட்டிய பெண் மாயம்! கொல்லப்பட்டாரா ?
சாமியார் அசரம் பாபு மீது பாலியல் வன்கொடுமை புகார் செய்த 33 வயது மதிக்கத்தக்க பெண்மணி கடந்த ஒரு வாரமாகக் காணவில்லை. தன்னுடைய கணவர் மற்றும் மகனுடன் மாயமாகியுள்ள அந்தப் பெண்ணை காவல்துறையினர் தேடி வருகின்றனர். அகமதாபாத்தில் அசரம் பாபுவின் ஆஸ்ரமத்தில் இருந்தபோது 1997 முதல் 2006ம் ஆண்டு வரை தன்னை தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி வந்ததாக அசரம் பாபு மீது பெண்மணி ஒருவர் கடந்த ஆண்டு புகார் செய்திருந்தார். அதைத் தொடர்ந்து இந்த ஆண்டு ஜனவரி மாதம் அசரம் பாபுவை போலீஸார் கைது செய்தனர். தற்போது அவர் ராஜஸ்தானில் உள்ள சிறை ஒன்றில் இருக்கிறார் இந்நிலையில், புகார் செய்த அந்தப் பெண்மணி கடந்த ஒரு வாரமாகக் காணவில்லை என்பது தெரியவந்துள்ளது. அவரின் பாதுகாப்புக்கு நான்கு போலீஸ் கான்ஸ்டபிள்கள் பணியமர்த்தப்பட்டனர்.
2ஜி Spectrum: பார்ப்பனக் கும்பலின் இரட்டை நாக்கு! முரளி மனோகர் ஜோஷி போன்ற பார்பனர்கள் .......
கருப்புப் பண விவகாரத்தில் மோடி அரசு அடித்த
பல்டியை முட்டுக் கொடுக்க முன்வந்த துக்ளக் சோ, “இவ்விவகாரத்தில் முந்தைய
காங்கிரசு அரசு கூறியதையெல்லாம் நம்பாமல், அக்கட்சிக்கு நாம் அநீதி
இழைத்துவிட்டதாக”த் தனது ஏட்டில் தலையங்கமே எழுதி முதலைக் கண்ணீர்
வடித்திருக்கிறார். இதேபோல நரேந்திர மோடியின் ஊதுகுழல்களுள் ஒன்றான இந்தியா
டுடே இதழ், 2ஜி, நிலக்கரி ஊழல்களையும், கருப்புப் பண விவகாரத்தையும்
ஆர்வக்கோளாறின் காரணமாக ஊடகங்கள் ஊதிப்பெருக்கிவிட்டதாகக் குறிப்பிட்டு
கட்டுரையொன்றை வெளியிட்டிருக்கிறது. பார்ப்பன-பாசிச கும்பல் தனது
சுயநலனுக்காக எப்படி வேண்டுமானாலும் புரட்டிப் பேசும் தன்மையும் வரலாறும்
கொண்டது என்பதற்கு இவை மற்றுமொரு ஆதாரமாக அமைந்துவிட்டன.
2014.இல் தமிழில் அதிக படங்கள் மொத்தம் 212 ! சிறிய படங்கள் பெரிய சாதனை! கோலிசோடா ஹிட்!
212 direct tamil films released this year . small budget films like goli soda got staggering collection. 25 films are hits.
இந்த வாரம் கிறிஸ்துமஸுக்கு வெளியான 4 படங்களையும் சேர்த்து மொத்தம்
212 படங்கள் இந்த ஆண்டு வெளியாகியுள்ளன. தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை இது
ஒரு சாதனை என்றுதான் சொல்லவேண்டும். இவை அனைத்துமே நேரடித் தமிழ்
திரைப்படங்கள்.
டப்பிங் படங்களும் கணிசமாக வந்தன. அந்தக் கணக்கு தனி.
இந்த 220 படங்களில் எத்தனைப் படங்கள் மெகா ஹிட்.. எத்தனைப் படங்கள் குறைந்த
பட்ச லாபத்தோடு தப்பித்தன என்று பார்த்தால், பெருமைப்பட்டுக்கொள்ள பெரிதாக
இல்லை என்பதுதான் உண்மை.
அதே நேரம், கடந்த ஆண்டுகளோடு ஒப்பிட்டால் இந்த ஆண்டு சற்று அதிக
எண்ணிக்கையிலான படங்கள் வெற்றி பெற்றுள்ளது ஆறுதலான விஷயம்.
இந்த ஆண்டில் முதல் பெரிய வெற்றியைப் பெற்ற படம் என்றால் அது கோலி
சோடாதான்.
அஜீத் நடித்த வீரம், விஜய் நடித்த ஜில்லா ஆகிய படங்களுடன் வெளியானது
நடுத்தர பட்ஜெட் படமான கோலி சோடா. ஆனால் வீரமும் ஜில்லாவும் பெறாத வெற்றியை
இந்தப் படம் பெற்று, 2014-ம் ஆண்டின் முதல் வெற்றிப் படம் என்ற பெருமையைப்
பெற்றது.
காஷ்மீரில் கூட்டணி மந்திரிசபை: பா.ஜனதா ஆட்சி அமைக்க உமர் அப்துல்லா ஆதரவு?
காஷ்மீர் மாநில சட்ட சபைக்கு நடந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் தனித்து
ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை வெற்றி கிடைக்க வில்லை. மொத்த உள்ள
87 தொகுதிகளில் மக்கள் ஜன நாயக கட்சி–28, பா.ஜ.க.–25, தேசிய மாநாட்டு
கட்சி–15, காங்கிரஸ்–12 இடங்களில் வெற்றி பெற்றன.
காஷ்மீரில் ஆட்சி அமைக்க 44 இடங்கள் தேவையாகும். தேர்தலை சந்தித்த நான்கு முதன்மை கட்சிகளும் எதிரும், புதிருமான கொள்கைகளைக் கொண்டவை. இதனால் புதிய ஆட்சி அமைவதில் தெளிவற்ற நிலை காணப்படுகிறது.
காஷ்மீரில் ஆட்சி அமைக்க 44 இடங்கள் தேவையாகும். தேர்தலை சந்தித்த நான்கு முதன்மை கட்சிகளும் எதிரும், புதிருமான கொள்கைகளைக் கொண்டவை. இதனால் புதிய ஆட்சி அமைவதில் தெளிவற்ற நிலை காணப்படுகிறது.
ஐந்து லட்சம் லஞ்சம் வாங்கிய கர்நாடக நீதிபதி கைது! லஞ்ச ஒழிப்பு துறை கையும் களவுமாக...
கர்நாடக மாநிலம் பீதர் மாவட்ட சிவில் நீதிமன்ற நீதிபதி சரவணப்பா சஜ்ஜன்,
வழக்கொன்றில் ஒரு வருக்கு சாதகமாக நடந்துகொள் வதற்காக ரூ.5 லட்சம் லஞ்சம்
வாங்கியதால் கைது செய்யப்பட் டுள்ளார்.
இது தொடர்பாக கர்நாடக உயர் நீதிமன்ற நீதித்துறை பதிவாளர் பி.ஏ.பாட்டில் நேற்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பீதர் மாவட்டத்தில் உள்ள பசவகல்யாண் சிவில் நீதிமன்றத் தில் சரவணப்பா
சஜ்ஜன் மூத்த நீதிபதியாக பொறுப்பு வகிக்கிறார். இவர் கடந்த செவ்வாய்க்கிழமை
வழக்கு தொடர்பாக சம்பந்தப்பட்ட வரிடம் ரூ.5 லட்சம் பெற்றுள்ளார்.
லஞ்சம்பெறும்போது கர்நாடக உயர் நீதிமன்ற லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள்
அவரை கையும் களவுமாக பிடித்துள்ளனர். தனது குற்றத்தை நீதிபதி சரவணப்பா
சஜ்ஜன் ஒப்புக்கொண்டுள்ளார். அவர் காவல்துறையிடம் ஒப்படைக் கப்பட்டார்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
K.Balachandar தமிழ் சினிமாவின் ஹீரோ வேர்ஷிப் கலாசாரத்தின் கன்னத்தில் அறைந்தார்!
எம்ஜியார் சிவாஜி போன்ற சினிமா கடவுள்கள் தமிழ்நாட்டு ரசிகனை படு முட்டாள்களாக்கி கொண்டிருந்து ஒரு இருண்ட யுகத்தின் கருப்பு வெள்ளை விடிவெள்ளியாக பாலச்சந்தர் உருவானார். அபூர்வ ராகங்கள் வெளியான அன்றைய தேதியில் சிவாஜி எம்ஜியாரை விட நடிகை ஸ்ரீவித்தியா தமிழ் ரசிகரின் உள்ளத்தை கொள்ளை கொண்டிருந்தார் . இது பாலச்சந்தரின் சாதனை.ஒரு ஆணாதிக்க சமுகத்தில் இது உண்மையில் பெரும் மாறுதல்தான் .மாற்று சினிமாவை பலரும் ஆங்காங்கு பரீட்சார்த்தமாக உருவாக்கி கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில் அதை வியாபார ரீதியாகவும் வெற்றியாக்கி காட்டியவர் பாலச்சந்தர்தான். சிவாஜியும் எம்ஜியாரும் தமிழ் ரசிகனின் ஆரோக்கியமான ரசனையை சுனாமி போன்று அழித்து கல்லா கட்டிய காலத்தில் அதை உடைத்தவர் . இதே புரட்சியை இவருக்கு முன்பாக புரட்சி டைரெக்டர் ஸ்ரீதரும் செய்தவர்தான். ஆனால் அவர் பிற்காலத்தில் அதே நாயக வழிபாட்டு கோஷ்டிகளிடம் சிக்கவேண்டிய நிதி நெருக்கடிக்கு ஆளாகிவிட்டது தமிழ் சினிமாவின் துரதிஷ்டம் .ஒரு அற்புத படைப்பாளி எம்ஜியாரின் நாலாந்தர மாசாலாவினால் ஒக்சிஜன் பெறவேண்டி ஏற்பட்டது.
பாலச்சந்தரும் கிட்டதட்ட அதே நிலைக்கு வந்து விட்டார் .ஆனாலும் சின்னத்திரை என்ற கட்டுமரம் கரை சேர்க்க ஏதோ நாயகவழிபாட்டு குற்ற சாட்டில் இருந்து கொஞ்சம் விடுபட்டுவிட்டார். ஆனாலும் இவரே உருவாக்கிய கதாபாத்திரங்கள் மூலம் புதிதாக ரஜனி கமல் என்ற நாயக வழிபாடுகள் ஆரம்பித்து விட்டன.திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. இங்கே நான் திருடன் என்று குறிப்பிட்டது ஹீரோ வேர்ஷிப்பை தண்ணீர் ஊத்தி ஊத்தி வளர்த்து காசு பார்க்கும் ரஜினி கமல் விஜய் அஜித் சூர்யா தனுஷ் சிம்பு வம்பு ............
பாலச்சந்தரும் கிட்டதட்ட அதே நிலைக்கு வந்து விட்டார் .ஆனாலும் சின்னத்திரை என்ற கட்டுமரம் கரை சேர்க்க ஏதோ நாயகவழிபாட்டு குற்ற சாட்டில் இருந்து கொஞ்சம் விடுபட்டுவிட்டார். ஆனாலும் இவரே உருவாக்கிய கதாபாத்திரங்கள் மூலம் புதிதாக ரஜனி கமல் என்ற நாயக வழிபாடுகள் ஆரம்பித்து விட்டன.திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. இங்கே நான் திருடன் என்று குறிப்பிட்டது ஹீரோ வேர்ஷிப்பை தண்ணீர் ஊத்தி ஊத்தி வளர்த்து காசு பார்க்கும் ரஜினி கமல் விஜய் அஜித் சூர்யா தனுஷ் சிம்பு வம்பு ............
ராம் விலாஸ் வேதாந்தி BJP MP: அயோத்தியில் 4 ஆயிரம் இஸ்லாமியர்கள் இந்து மதத்துடன் இணைப்பு ?
AYODHYA: The VHP will hold a 'ghar wapsi' programme for 4,000 Muslims in Ayodhya next month, saffron outfit functionary Ram Vilas Vedanti ...அயோத்தியில் அடுத்த மாதம் ஜனவரி 4 ஆயிரம் இஸ்லாமியர்கள் மதம் மாற்றும் நிகழ்ச்சி நடைபெறும் என முன்னாள் பாஜக
நாடாளுமன்ற உறுப்பினர் ராம் விலாஸ் வேதாந்தி தெரிவித்து உள்ளார். இஸ்லாமியர்கள் அவர்களாவே விருப்பமுடன் இந்த மதமாற்றத்திற்கு வருகின்றனர் என வேதாந்தி கூறியுள்ளார். ஆனால், அவர்கள் குடும்பம் குறித்த அடையாளததை வெளியிட வேதாந்தி மறுத்து விட்டார். பிறகு அவர்கள் இந்து மதத்தை தழுவ அனுமதிக்கபட மாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதன் விளைவாக இந்த பகுதியில் மதக்கலவரத்தை உருவாக்க முயற்சி செய்பவர்களுக்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுக்கபடும் என பைசாபாத் மாநகர இணை காவல் ஆணையர் சஞ்சய் காக்கர் தெரிவித்து உள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ராம் விலாஸ் வேதாந்தி தெரிவித்து உள்ளார். இஸ்லாமியர்கள் அவர்களாவே விருப்பமுடன் இந்த மதமாற்றத்திற்கு வருகின்றனர் என வேதாந்தி கூறியுள்ளார். ஆனால், அவர்கள் குடும்பம் குறித்த அடையாளததை வெளியிட வேதாந்தி மறுத்து விட்டார். பிறகு அவர்கள் இந்து மதத்தை தழுவ அனுமதிக்கபட மாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதன் விளைவாக இந்த பகுதியில் மதக்கலவரத்தை உருவாக்க முயற்சி செய்பவர்களுக்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுக்கபடும் என பைசாபாத் மாநகர இணை காவல் ஆணையர் சஞ்சய் காக்கர் தெரிவித்து உள்ளார்.
பொள்ளாச்சி சிறுமியர் பலாத்காரம் இரட்டை ஆயுள் தண்டனை!
கோவை : பொள்ளாச்சியில், விடுதி சிறுமியர் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில்,
குற்றம் சாட்டப்பட்ட வீராசாமிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து, கோவை
மகளிர் கோர்ட் தீர்ப்பளித்தது.பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்ட் அருகில்,
டி.இ.எல்.சி., சர்ச் வளாகத்தில் கிறிஸ்தவ அமைப்பினர் நடத்தி வந்த
விடுதியில், ஏழை மாணவியர் தங்கி படித்து வந்தனர். 2014, ஜூன், 11
நள்ளிரவில், குடிபோதையில் விடுதிக்குள் புகுந்த ஆசாமி, 11 மற்றும் 12 வயது
மதிக்கத்தக்க இரு மாணவிகளை, மறைவான இடத்திற்கு இழுத்துச்சென்று, பாலியல்
பலாத்காரம் செய்தான்.விசாரித்த போலீசார், சிறுமியரை பலாத்காரம் செய்த,
வால்பாறையை சேர்ந்த வீராசாமி, 23, என்பவனை கைது செய்தனர். பிடிபட்ட
வீராசாமி மீது,திருட்டு, வழிப்பறி தொடர்பாக வழக்குகள் நிலுவையில்
இருந்ததால், குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டான்.
காந்தியை ஏன் சுட்டுக் கொன்றேன்: கோட்சே எழுதிய புத்தகம் மறுபதிப்பாகிறது
புதுடில்லி: மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் விநாயக் கோட்சேவின்
சகோதரர் கோபால் கோட்சேயால் எழுதப்பட்ட, 'காந்தியை ஏன் சுட்டு கொன்றேன்?'
என்ற புத்தகத்தை மறுபதிப்பு செய்ய உள்ளதாக, டில்லியைச் சேர்ந்த பார்சைட்
பதிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இப்புத்தகம், நாதுராம் அளித்த
வாக்குமூலத்தின் அடிப்படையில் உருவானதாகும்.காந்தியை பற்றிய பல்வேறு
புத்தகங்கள் வெளிவந்துள்ள போதிலும், அவற்றிற்கு எதிர்மறையான கருத்துக்களை
இப்புத்தகம் கொண்டுள்ளதால், அதை மறுபதிப்பு செய்ய முடிவு செய்துள்ளதாக அந்த
பதிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தர்மம் மறுபடியும் வெல்லும் என்பார்கள். இதில் எது தர்மம் எது சூது என்பதை எப்பொழுது தெரிந்து கொள்ள முடியும் என்று தான் தெரியவில்லை.
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தர்மம் மறுபடியும் வெல்லும் என்பார்கள். இதில் எது தர்மம் எது சூது என்பதை எப்பொழுது தெரிந்து கொள்ள முடியும் என்று தான் தெரியவில்லை.
ஆசிட் வீச்சுக்கு தூக்குதண்டனை ! சட்ட திருத்தம் கொண்டு வர மத்திய அரசு முடிவு,
புதுடில்லி: 'ஆசிட்' வீச்சு போன்ற குற்றங்களை, கொடூரமான குற்றமாக
கருதும் வகையில், சட்டத்தில் திருத்தம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது.
இதன்படி, ஆசிட் வீசுவோருக்கு அதிகபட்சமாக தூக்கு தண்டனை வழங்கப்படுவதற்கு
வாய்ப்பு உள்ளது.சமீபகாலமாக ஆசிட் வீச்சு சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
அதிலும், பெண்கள் மீது, ஆசிட் வீசும் சம்பவங்கள் அதிகம் நடக்கின்றன.
சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி, குற்றவாளிகள் வழக்குகளில் இருந்து
எளிதில் தப்பி விடுவதாக புகார் எழுந்து உள்ளது.
நல்ல முடிவு...பெண்களின் முகத்தில் ஆசிட் ஊற்றுவது ஆதாரத்துடன் நிரூபிக்க பட்டால் தூக்கு நிச்சயம்...இந்த தண்டனை வரவேற்க தக்கது...பெண் வன் கொடுமை என்பது எக்காலத்திலும் சகித்து கொள்ள முடியாதது...அவன் ரோட்டுல எவளையாவது பாத்துட்டு இவள நான் உருகி உருகி காதலிக்கிறேன் என்ன கண்டுக்கவே மாட்டேங்கிறா, எனக்கு கிடைக்காத இவ இனி யாருக்குமே கிடைக்க கூடாதுன்னு தப்புன்னு ஆசிட்ட ஊத்திட்டு போயிடறாங்க...இதுல அந்த பொண்ணு மேல ஏதாவது தப்பு இருக்கா..இல்ல...ஒரு பெண்ணை காதலிக்கிறது எப்படி உன் தனிப்பட்ட உரிமையோ அப்படி தான் அந்த பெண்ணும் யாரை காதலிக்கனும்கிரது அவளோட தனிப்பட்ட உரிமை. இதில் வன்கொடுமை என்பது ஏற்று கொள்ள முடியாதது...இத மாதிரி ஆசிட் வீசுகிறவனை எல்லாம் தூக்குல போடணும்..
நல்ல முடிவு...பெண்களின் முகத்தில் ஆசிட் ஊற்றுவது ஆதாரத்துடன் நிரூபிக்க பட்டால் தூக்கு நிச்சயம்...இந்த தண்டனை வரவேற்க தக்கது...பெண் வன் கொடுமை என்பது எக்காலத்திலும் சகித்து கொள்ள முடியாதது...அவன் ரோட்டுல எவளையாவது பாத்துட்டு இவள நான் உருகி உருகி காதலிக்கிறேன் என்ன கண்டுக்கவே மாட்டேங்கிறா, எனக்கு கிடைக்காத இவ இனி யாருக்குமே கிடைக்க கூடாதுன்னு தப்புன்னு ஆசிட்ட ஊத்திட்டு போயிடறாங்க...இதுல அந்த பொண்ணு மேல ஏதாவது தப்பு இருக்கா..இல்ல...ஒரு பெண்ணை காதலிக்கிறது எப்படி உன் தனிப்பட்ட உரிமையோ அப்படி தான் அந்த பெண்ணும் யாரை காதலிக்கனும்கிரது அவளோட தனிப்பட்ட உரிமை. இதில் வன்கொடுமை என்பது ஏற்று கொள்ள முடியாதது...இத மாதிரி ஆசிட் வீசுகிறவனை எல்லாம் தூக்குல போடணும்..
புதன், 24 டிசம்பர், 2014
காஷ்மீரில் மெஹபூபா ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு! குலாம் நபி ஆசாத் அறிவிப்பு
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் அடுத்து ஆட்சியை அமைக்கப் போவது யார் என்ற
கேள்வி எழுந்துள்ளது. பாஜ, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பிடிபிக்கு ஆதரவு
அளிக்க தயாராக இருப்பதால் மெகபூபா முப்தி தலைமையில் ஆட்சி அமையுமா என்ற
கேள்வியும் எழுந்துள்ளது. ஜார்கண்டில் பாஜ தலைவர் ரகுபர்தாஸ் முதல்வர்
ரேசில் முந்துகிறார்.ஜம்மு- காஷ்மீரில் மொத்தமுள்ள 87 சட்ட மன்ற
தொகுதிகளுக்கான தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் எந்த
கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்த தேர்தலில் பிடிபி கட்சிக்கு
28, பாஜவுக்கு 25, ஆளும் தேசிய மாநாட்டு கட்சிக்கு 15, காங்கிரசுக்கு 12
மற்றவர்கள் 7 இடங்களையும் கைப்பற்றியுள்ளனர். காஷ்மீரில் பிடிபி ஆட்சி
அமைக்க விரும்பினால் ஆதரவு அளிக்க தயாராக இருக்கிறோம் என காங்கிரஸ் தலைவர்
குலாம் நபி ஆசாத் தெரிவித்தார். காஷ்மீரில் பாஜ ஆட்சி அமைக்கும் என
ராஜ்நாத்சிங்கும், அமித்ஷாவும் நம்பிக்கை தெரிவித்திருந்தனர். இதன் மூலம்
பிடிபி கட்சிக்கு பாஜ ஆதரவு அளிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Punjab சாமியாரின் 400 சீடர்களுக்கு ஆண்மை நீக்கம் ! சிபிஐ விசாரணை?
சாமியாருக்கு எதிரான மனுவில் சிபிஐ விசாரணைக்கு ஐகோர்ட் உத்தரவு பஞ்சாப்
மாநிலத்தில் ஆசிரமம் ஒன்றில் 400 சீடர்களுக்கு ஆண்மை நீக்கம்
செய்யப்பட்டதாக புகார் கூறப்பட்டது. இதையடுத்து அந்த ஆசிரம சாமியார் மீது
சிபிஐ விசாரணை நடத்த பஞ்சாப் அரியானா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.அரியானா
மாநிலம் திரிசாவில் தேரா சச்சா சவுதா என்ற ஆன்மீக அமைப்பு மற்றும்
ஆசிரமத்தை நடத்தி வருபவர் குருமேத் ராம் ரகீம். இவர் மீது இவரது முன்னாள்
சீடர் சவுகான், பஞ்சாப் அரியானா உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுத்தாக்கல்
செய்துள்ளார். அந்த மனுவில், சாமியார் குருமேத் ராம் ரகீம், தனது 400
சீடர்களுக்கு ஆண்மை நீக்கம் செய்துள்ளதாகவும், இந்த ஆண்மை நீக்கம்
ஆசிரமத்திற்கு உள்ளேயே நடைபெற்றதாகவும் தெரிவித்துள்ளார்.ஆண்மை
நீக்கம் செய்தால்தான் கடவுளை சந்திக்க முடியும் என்று உறுதி அளித்து இதனை
சாமியார் செய்ததாகவும், தனது மனு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்
சவுகான் கூறியுள்ளார்.இந்த
மனுவை விசாரித்த நீதிபதி கண்ணன், ஆண்மை நீக்கம் செய்ய சம்மந்தப்பட்டவர்கள்
சம்மதம் கொடுத்திருந்தாலும், இது மனிதாபிமானமற்ற செயல் என்றார். இந்த மனு
தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளார் இந்த நீதிபதிக்கு சட்டம் ? அனுமதி கொடுத்தாலும் amputation செய்ய சட்டத்தில் இடமில்லை nakkheeran.in
பாகிஸ்தானில் கிறிஸ்தவ தம்பதியர் எரித்துக் கொலை: 2 மத குருக்கள் உள்ளிட்ட 59 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
பாகிஸ்தானின் லாகூர் நகரின் அருகே கடந்த அக்டோபர் மாதம் கிறிஸ்தவ தம்பதியர்
உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பாகிஸ்தானின் லாகூர் நகரில் இருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள
கசூர் மாவட்டம், சக் என்ற கிராமத்தில் இருக்கும் செங்கல் சூளையில் சஹ்ஜாத்
மசி(35) மற்றும் அவரது மனைவி ஷமா(31) ஆகியோர் கூலித் தொழிலாளிகளாக
பணியாற்றி வந்தனர்.
அந்த கிறிஸ்தவ தம்பதியர் இஸ்லாமியர்களின் வேதமான குர்ஆனின் பக்கங்களை
தீயிட்டு கொளுத்தி, அந்த புனித நூலை அவமதித்து விட்டதாக சக் கிராமத்தில்
உள்ள இரண்டு மசூதிகளின் மூலம் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கடந்த
மாதம் 4-ம் தேதி தகவல் பரவியது.
இதைக் கேட்டு கொதித்தெழுந்த ஏராளமானவர்கள் உள்ளூர் மதத் தலைவரின் தலைமையில்
முஹம்மத் யூசுப் குஜ்ஜாரின் செங்கல் சூளைக்கு விரைந்தனர். சஹ்ஜாத் மசியின்
வீட்டுக் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்த அந்த கும்பல், அந்த
தம்பதியரை குடிசையை விட்டு வெளியே இழுத்து, அடித்தும் உதைத்தும் சித்ரவதை
செய்தது.இதிலும் ஆவேசம் தணியாத சிலர் சஹ்ஜாத் மசி மற்றும் அவரது மனைவி ஷமாவை தூக்கி
கொழுந்து விட்டு எரிந்த செங்கல் சூளை தீக்குள் வீசினர். இதில் உடல் கருகி
அந்த தம்பதியர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
வினவு: எம்.ஜி.ஆர்: கவர்ச்சி மோகம் – பொறுக்கி அரசியலில் தமிழகத்தைத் தள்ளிய பாசிசக் கோமாளி!
ஐயா, தருமவானே, நீங்களாகப் பார்த்து ஏதாவது தான தர்மம் கொடுங்கள்” என்று
கையேந்தி நிற்பவர்களுக்கு பரோபகாரியாகவும், “இது எங்கள் உரிமை” என்று
போராடுபவர்களுக்குப் பரம எதிரியான பாசிஸ்டாகவும் விளங்கியவரே எம்.ஜி.ஆர்.!
இன்று ஜெயலலிதா நடத்திவரும் அடிமைக் கட்சிக்கும், அதன் இலஞ்ச ஊழல் முறைகேடுகளுக்கும், அடக்குமுறைக் காட்டாட்சிக்கும், பாசிச வக்கிரங்களுக்கும் வழிகாட்டி எம்.ஜி.ஆர். என்பதே உண்மை.
தமிழ்ச் சமுதாயத்தைச் சீரழிக்கும் சதிகாரி’ என்ற தலைப்பில் ஜெயலலிதாவைப் பற்றிய அட்டைப்படக் கட்டுரையை சென்ற இதழில் வெளியிட்டிருந்தோம். தமிழ்ச் சமுதாயத்தை சுயமரியாதையற்ற கையேந்திகளாக, அரசியலற்ற மூடர்களாக, சாராய போதையில் மூழ்கிக் கிடக்கும் அடிமைப் பிண்டங்களாக மாற்றி வருகிறார், ஜெயலலிதா என்று அக்கட்டுரையில் குற்றம் சாட்டியிருந்தோம்.
இன்று ஜெயலலிதா நடத்திவரும் அடிமைக் கட்சிக்கும், அதன் இலஞ்ச ஊழல் முறைகேடுகளுக்கும், அடக்குமுறைக் காட்டாட்சிக்கும், பாசிச வக்கிரங்களுக்கும் வழிகாட்டி எம்.ஜி.ஆர். என்பதே உண்மை.
தமிழ்ச் சமுதாயத்தைச் சீரழிக்கும் சதிகாரி’ என்ற தலைப்பில் ஜெயலலிதாவைப் பற்றிய அட்டைப்படக் கட்டுரையை சென்ற இதழில் வெளியிட்டிருந்தோம். தமிழ்ச் சமுதாயத்தை சுயமரியாதையற்ற கையேந்திகளாக, அரசியலற்ற மூடர்களாக, சாராய போதையில் மூழ்கிக் கிடக்கும் அடிமைப் பிண்டங்களாக மாற்றி வருகிறார், ஜெயலலிதா என்று அக்கட்டுரையில் குற்றம் சாட்டியிருந்தோம்.
காதலியின் நிர்வாண படத்தை அப்லோடு செய்த பெங்களூரு ஐடி ஊழியர்!
பெங்களூரு: ஜாதியை காரணம் காண்பித்து காதலை புறக்கணித்த கல்லூரி
மாணவியை பழிவாங்க அவரின் நிர்வாண படங்களை இணையதளத்தில் பரப்பிய சாப்ட்வேர்
இன்ஜினியர் பெங்களூருவில் கைது செய்யப்பட்டார்.
பெங்களூரு பன்னேருகட்டா ரோடு பகுதியை சேர்ந்தவர் 20 வயது பெண் கவிதா (பெயர்
மாற்றப்பட்டுள்ளது). ஜெயநகரிலுள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார்.
சமூக வலைத்தளங்களில் அதிக நேரத்தை செலவிடுவது கவிதாவின் வாடிக்கையாகும்.
பேஸ்புக்கில் இவர் பிசியாக இருந்தபோது, பழக்கமானவர் எல்.ஹர்ஷா. 24 வயது
வாலிபரான இவர், தன்னை ஒரு சாப்ட்வேர் இன்ஜினியர் என்று அறிமுகம் செய்து
கொண்டு கவிதாவுடன் பழக ஆரம்பித்துள்ளார்.
படிப்படியாக கவிதாவின் வீட்டுக்கு வருமளவுக்கு பழக்கம் அதிகரித்தது. கவிதா
உயர்ஜாதி என்று கருதப்படும் ஜாதியை சேர்ந்தவராம். எனவே, கவிதாவிடமும்,
அவரது பெற்றோரிடமும் தன்னையும் அதே ஜாதியை சேர்ந்தவன் என்று ஹர்ஷா அறிமுகம்
செய்து ஏமாற்றியுள்ளார்.
பெருமாள் கோயில் உண்டசோறு! இது படத்தின் பெயர்!
பாய்ஸ் படத்தில் ஊர் முழுவதும் எந்த கோயிலில் என்ன பிரசாதம் தருவார்கள்
என்று பட்டியலிட்டு வைத்திருக்கும் செந்தில் அதை வாங்கி சாப்பிட்டே பொழுதை
கழிப்பார். இந்த காமெடிக் காட்சியின் பாதிப்பாக புதுமுகங்கள் நடிக்கும்
படத்துக்கு ‘பெருமாள் கோயில் உண்டசோறு‘ என்று பெயரிடப்பட்டுள்ளது.இதுபற்றி
இப்பட இயக்குனர் வி.டி.ராஜா கூறும்போது,‘மூன்று சகோதரிகளுடன் பிறந்த ஒருவன்
எந்த வேலைக்கும் போகாமல் பெருமாள் கோயிலில் தரும் உண்டச் சோறு வாங்கி
சாப்பிட்டே காலத்தை கடத்துகிறான். அவனது சகோதரிகளுக்கு தடபுடலாக திருமணம்
நடக்கிறது.
முந்திரி, இரும்பு, அரிசி, அலுமினியம்... திருடியே கோடீஸ்வரர் ஆன தேமுதிக பிரமுகர்!
சென்னை: முந்திரிப் பருப்பைத் திருடியே பெரும் கோடீஸ்வரராக
மாறியுள்ளார் ஒரு அரசியல் பிரமுகர் பெரும் பமக்காரராகியுள்ளார். அது
மட்டுமா இவர் திருடாத பொருளே இல்லை. எதையும் விடாமல் தொடர்ந்து திருடி
பெரும் கோடீஸ்வரராக மாறியுள்ள அந்த பிரமுகர் காவல்துறையினரையே அதிசயிக்க
வைத்துள்ளார்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்தவர் எழிலரசன் (31). இவர் கடந்த நவம்பர்
மாதம் உயர்ரக முந்திரி அடங்கிய 750 பெட்டிகளை கத்தார் நாட்டிற்கு கப்பல்
மூலம் ஏற்றுமதி செய்வதற்காக கண்டெய்னர் லாரியில் அனுப்பினார். ஆனால் லாரி
டிரைவர் புழல் ஜெபஜெனில் (28) என்பவர் துறைமுகத்திற்கு கொண்டு செல்லாமல்
செங்குன்றத்தை அடுத்த தீத்தங்கரைப்பட்டு இரும்பு வியாபாரி முருகன்
குடோனுக்கு கொண்டு சென்றார்.
அங்கு சீலை உடைத்து கண்டெய்னரில் இருந்த ரூ.15 லட்சம் மதிப்பிலான 2,440
கிலோ கொண்ட 122 முந்திரி பெட்டிகளை திருடி மீண்டும் சீல் வைத்து கப்பலில்
அனுப்பி வைத்துவிட்டார்.
தமிழகத்தில் மதசார்பற்ற சமூகநீதி கூட்டணி? திராவிடர் கழகம முயற்சி!
சென்னை, டிச.23- சென்னை மாவட்ட ஆட்சியர்
அலுவலகம் அருகில், சமூக நல்லிணக்கத்திற்கு அச் சுறுத்தலாக உள்ள
ஆர்.எஸ்.எஸ்.-பாஜக இந்துத்துவ மதவெறி ஃபாசிசப் போக்குகளைக் கண்டித்து
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம்
விடுதலைச்சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமா வளவன் தலைமையில் இன்று
(23.12.2014) நடைபெற்றது.
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, இந்திய
கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் ஆர்.நல்லகண்ணு, தமிழ் மய்யம்
நிறுவனர் ஜெகத் கஸ்பார், தமுமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில்
உஸ்மான் அலி, பேராசிரியர்கள் அருணன், அ.மார்க்ஸ், திராவிட இயக்கத் தமிழர்
பேரவை மாறன், எஸ்டிபிஅய் தெகலான் பாகவி, விடுதலை சிறுத்தைகள் கட்சி
வன்னியரசு உள்பட ஏராள மானவர்கள் பல்வேறு அமைப்புகளிலிருந்தும் ஆர்ப்பாட்
டத்தில் பங்கேற்றனர்.
ஜெர்மனி: இஸ்லாத்துக்கு எதிரான பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
ஜெர்மனிய நகரான ட்ரெஸ்டனில்,
இஸ்லாமுக்கு எதிராக நடந்த பேரணியில் சுமார் 17,500 பேர் கலந்துக்கொண்டதாக
உள்ளூர் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
ட்ரஸ்டெனில் நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்டவர்கள்
பேரணியில் கலந்துக்கொண்ட
போராட்டக்காரர்கள் கிறிஸ்துமஸ் பாடல்களைப் பாடுவதிலும், குடிவரவு மற்றும்
புகலிடம் கோருவோர் பற்றிய உரைகளை கேட்பதிலும் ஈடுப்பட்டனர்.
‘ஐரோப்பா இஸ்லாமிய மயமாக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தேசப்பற்று மிக்க ஐரோப்பியர்கள்’ அல்லது பெகிடா என்றழைக்கப்படும் இந்த அமைப்பினை சேர்ந்தவர்கள், கடந்த அக்டோபர் மாதம் முதல் வாரந்தோரும் இஸ்லாம் மதத்திற்கு எதிரான போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
‘ஐரோப்பா இஸ்லாமிய மயமாக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தேசப்பற்று மிக்க ஐரோப்பியர்கள்’ அல்லது பெகிடா என்றழைக்கப்படும் இந்த அமைப்பினை சேர்ந்தவர்கள், கடந்த அக்டோபர் மாதம் முதல் வாரந்தோரும் இஸ்லாம் மதத்திற்கு எதிரான போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜம்மு காஷ்மீர் தேர்தலில் 32 முஸ்லிம்களை நிறுத்திய பாஜக! ஒருவர் மட்டுமே வெற்றி!!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 32
முஸ்லிம் வேட்பாளர்களை களத்தில் நிறுத்தியிருந்தது. இதில் ஒருவர் மட்டுமே
வெற்றி பெற்றுள்ளார்.
87 தொகுதிகளைக் கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள்
நேற்று எண்ணப்பட்டன. மக்கள் ஜனநாயகக் கட்சி 28 இடங்களையும் பாஜக 25
இடங்களையும் கைப்பற்றியுள்ளது.
இத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 40% முஸ்லிம்களுக்கு போட்டியிட வாய்ப்பு
அளித்தது. அதாவது 32 முஸ்லிம் வேட்பாளர்களை களத்தில் நிறுத்தியது. இதில்
முஸ்லிம்கள் அதிகம் வாழும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் 25 பேர் பாஜக
வேட்பாளர்களாக போட்டியிட்டனர்.
இவர்களில் அபுல் கனி கோஹ்லி என்பவர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார்.
பயங்கரவாதிகளுக்கு பயந்து யாஸிடி பெண்கள் கூட்டாக தற்கொலை
பெய்ரூட்: ஈராக்கில், ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள் வசம் சிக்கிய, யாஸிடி
சிறுபான்மையின பெண்களை, அந்த பயங்கரவாதிகள், செக்ஸ் அடிமைகளாக பயன்படுத்திய
கொடுமையும், அதற்கு அஞ்சி, ஏராளமான சிறுமியரும், பெண்களும் தற்கொலை செய்து
கொண்ட தகவலும் தெரிய வந்துள்ளது.மேற்காசிய நாடுகளான சிரியா
மற்றும் ஈராக்கின் பல பகுதிகளை கைப்பற்றியுள்ள, ஐ.எஸ்.ஐ.எஸ்.,
பயங்கரவாதிகள், கிறிஸ்தவர்கள், ஷியா பிரிவு முஸ்லிம்கள், யாஸிடி இனத்தவர்
போன்ற சிறுபான்மையினத்தவருக்கு சொல்லொணா துயரங்களை கொடுத்து
வருகின்றனர்.குறிப்பாக, ஈராக்கின் வடக்கு பகுதியில் வாழும் யாஸிடி இனத்து
ஆண்களை கொன்று குவித்த பயங்கரவாதிகள், அந்த இனத்தைச் சேர்ந்த பெண்கள்
மற்றும் சிறுமியரை பிடித்துச் சென்று, சண்டையில் ஈடுபடும் பயங்கரவாதிகளின்
செக்ஸ் தேவைகளை பூர்த்தி செய்யும் செக்ஸ் அடிமைகளாக மாற்றினர்.இத்தகைய
கொடுமைகளை செய்வது, ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் சன்னி பிரிவினர்
தான். அதுவும், வயது முதிர்ந்த பயங்கரவாதிகள் கூட, இளம் பெண்களையும்,
சிறுமியரையும் பலாத்காரம் செய்த கொடுமையும் நடந்துள்ளது. இதுதான் இந்த மதவெறியர்கள் உலகிற்கு கூறும் ஒழுக்க நெறி. இன்று நேற்றல்ல
பலநூறு ஆண்டுகளாக இந்த மத வெறியர்கள் பெண்களைப போகப் பொருளாகவே
பார்த்துவருவதன் வெளிப்பாடுதான் யாசிடிப் பெண்களின் தற்கொலை.
போடோ தீவிரவாதிகள் சுட்டதில் அசாமில் 37 பேர் பலி
கவுகாத்தி: அசாமில் பல்வேறு இடங்களில் போடோ தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக
நடத்திய பயங்கர துப்பாக்கி சூட்டில் 37 பழங்குடியின மக்கள் பலியாயினர்.
அசாமில் பூர்வீக குடிமக்களுடன் போடோ இன மக்களும் வசித்து வருகிறார்கள். போடோ மக்களுக்கு தனி ‘போடோ லேண்ட்‘ மாநிலம் கேட்டு தேசிய ஜன நாயக முன்னணி அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் போராடி வருகிறார்கள். இவர்கள் அவ்வப்போது கிராமமக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த 21ம் தேதி பூடான் எல்லையை ஒட்டியுள்ள சிராங் மாவட்டத்தில் 2 போடோ தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். இதற்கு பதிலடி தரும் வகையில், போடோ தீவிரவாதிகள் நேற்று மாலை பயங்கர தாக்குதலை அரங்கேற்றி உள்ளனர்.
அசாமில் பூர்வீக குடிமக்களுடன் போடோ இன மக்களும் வசித்து வருகிறார்கள். போடோ மக்களுக்கு தனி ‘போடோ லேண்ட்‘ மாநிலம் கேட்டு தேசிய ஜன நாயக முன்னணி அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் போராடி வருகிறார்கள். இவர்கள் அவ்வப்போது கிராமமக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த 21ம் தேதி பூடான் எல்லையை ஒட்டியுள்ள சிராங் மாவட்டத்தில் 2 போடோ தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். இதற்கு பதிலடி தரும் வகையில், போடோ தீவிரவாதிகள் நேற்று மாலை பயங்கர தாக்குதலை அரங்கேற்றி உள்ளனர்.
ஓசூர் பஸ்நிலைய போலீஸ் கட்டுபாட்டு அறையில் 3 வடநாட்டு பெண்களை போலீசே பாலியல் ........
Two women and two children from a migrant Rajasthani community were
allegedly sexually abused by a Grade-I police constable at the Hosur
police outpost late on Wednesday.ஓசூர் பஸ் நிலையத்தில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்குள் ராஜஸ்தான்
பெண்களை பிடித்துச்சென்று பாலியல் கொடுமை செய்ததாக போலீஸ்காரருக்கு எதிரான
குற்றச்சாட்டை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு, சென்னை ஐகோர்ட்டு
உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஐகோர்ட்டில், அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தேசிய தலைவி
உ.வாசுகி, தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:–
பாலியல் கொடுமை
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பஸ் நிலையத்தில் கடந்த அக்டோபர் 8–ந்தேதி
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 4 பெண்கள் 2 சிறுமிகளுடன் காத்திருந்தனர்.
அப்போது, ஓசூர் போலீஸ் நிலைய ஏட்டு வடிவேலு, அந்த பெண்களில் சிலரை புறநகர்
போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்து சென்று பணத்தை பறித்து, அவர்களை
பாலியல் கொடுமையும் செய்துள்ளார். இதுகுறித்து பத்திரிகைகளில் செய்தி
வெளியானதும், ஏட்டு வடிவேலுவை போலீசார் பணி இடைநீக்கம் செய்துள்ளனர்.
பெண்கள் எங்கே?
செவ்வாய், 23 டிசம்பர், 2014
அடிபட்ட குரங்கை போராடி மீட்ட ஹீரோ குரங்கு (வீடியோ இணைப்பு)
மின்சாரக் கம்பியில் அடிபட்டு தண்டவாளத்தில் விழுந்த தனது நண்பனை தூக்கி
ஆசுவாசப்படுத்தி 20 நிமிடங்கள் விடாமல் போராடி சுயநினைவைக் கொண்டு வந்து
காப்பாற்றிய ஹீரோ குரங்கு பற்றியது தான் இந்த செய்தி.
கான்பூர் ரயில் நிலையத்தில் ஓடித் திரிந்து கொண்டிருந்த குரங்கு ஒன்று உயர் அழுத்த மின்சாரக் கம்பியில் அடிபட்டு மயக்கமடைந்து தண்டவாளத்தில் விழுந்தது.
கான்பூர் ரயில் நிலையத்தில் ஓடித் திரிந்து கொண்டிருந்த குரங்கு ஒன்று உயர் அழுத்த மின்சாரக் கம்பியில் அடிபட்டு மயக்கமடைந்து தண்டவாளத்தில் விழுந்தது.
காவிக் கொடி? ஒவ்வொன்றாக வெளிவரும் அசிங்கங்கள்?
ஆக்ராவிலும் அலிகாரிலும் பிற மதத்தினரை இந்துக்களாக மாற்றம் செய்யத்
தொடங்கியபோது ‘இது இந்துத்துவத்தின் ஆட்டம்’ என்று எதிர்கட்சிகள்
குற்றம்சாட்டின. பாராளுமன்றம் முடங்கிய போதும் கூட பெரும்பாலானவர்களுக்கு
இந்த மதமாற்றத்தின் பின்னணி தெரியவில்லை. வெளிநாடுகளுக்கு பறந்து
கொண்டிருந்த நரேந்திரமோடியும் பட்டும்படாமலும் பதில் சொன்னாரே தவிர
அழுத்தமான விளக்கம் எதையும் கொடுக்கவில்லை. பிரதமர் ஏன் பாராளுமன்றத்தில்
பேசுவதேயில்லை எதிர்கட்சிகள் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய போது
காவியணிந்த எம்.பிக்கள் மிகக் காட்டமாக பதில் சொன்னார்கள். மோடிக்கு
ட்விட்டரில் பதில் சொல்லத்தான் நேரமிருக்கிறது என்ற கிண்டல்களும் எழுந்தன.
எதற்காக இப்படிச் செய்கிறார்கள்? குஜராத், டெல்லி என பெரும்பாலான இடங்களில்
காவிக் கொடியைப் பறக்கவிடுகிறார்கள். இதுவரை மதச்சார்பற்ற நாடு என்று
உருவாக்கப்பட்டிருந்த பிம்பம் அடித்து நொறுக்கப்படுகிறது. இது இந்துக்களின்
தேசம் என்று பெருமையாக அறிவிக்கிறார்கள். எம்பிக்கள் வெறியெடுத்துப்
பேசுகிறார்கள். திட்டம் திட்டம் போட்டு திருடுற கூட்டம் இது திருடிக்கொண்டே இருக்கும்
Kashmir மெகபூபா கட்சி ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநில சட்டசபை தேர்தலில் தொங்கு சட்டசபைதான்
உருவாகியிருக்கிறது. மெஹ்பூபா முப்தியின் மக்கள் ஜனநாயகக் கட்சி 28
இடங்களைக் கைப்பற்றியுள்ளது. பா.ஜ.க 25 இடங்களில் வென்றுள்ளது. இப்படி எந்த
கட்சி ஆட்சி அமைக்கும் என்ற குழப்பமான நிலை ஏற்பட்டுள்ளதால் ஜம்மு
காஷ்மீர் அரசியல் களம் பரபரப்பாக இருக்கிறது.
87 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டசபைக்கான தேர்தல் 5
கட்டங்களாக நடைபெற்றது. இன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் கட்சிகள்
வென்ற இடங்கள் விவரம்:
காஷ்மீர்: மெஹ்பூபா கட்சி தலைமையில் கூட்டணி ஆட்சி? ஆதரவு தரப் போவது யார்?
குழப்பம் ஆரம்பம்!
மெஹ்பூபா முப்தியின் மக்கள் ஜனநாயகக் கட்சி (பி.டி.பி) - 28
பாரதிய ஜனதா கட்சி - 25
தேசிய மாநாட்டு கட்சி (என்.சி) - 15
காங்கிரஸ் -12
மக்கள் மாநாட்டு கட்சி -2
சி.பி.எம்- 1
சுயேட்சைகள் - 3
ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக முன்னணி - 1
பி.டி.பி.ஆட்சி? 'கமிட்' பண்ணாத கட்சிகள்
ஜம்மு காஷ்மீரில் ஆட்சி 44 இடங்களைப் பெற்ற கட்சிதான் ஆட்சி அமைக்க
முடியும். தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் எந்த ஒரு கட்சியுமே தனித்து
ஆட்சி அமைக்கவே முடியாத 'தொங்கு சட்டசபை' நிலை ஏற்பட்டுள்ளது.Kashmir
இயக்குநர் கே.பாலச்சந்தர் காலமானார்.
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில்
உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்ட
அவர், சிகிச்சை பலனின்றி 23.12.2014 செவ்வாய்க்கிழமை காலமானார். அவருக்கு
வயது 84.மேடை
நாடகத் துறையில் இருந்து சினிமாவுக்கு வந்த கே.பாலச்சந்தர் 1965-ல்
வெளியான நீர்க்குமிழி மூலம் இயக்குநராக அறிமுகமானார். ரஜினிகாந்த்,
கமல்ஹாசன் உள்ளிட்ட முக்கிய நடிகர்களை அறிமுகம் செய்தவர்.மனித
உறவுச் சிக்கல்களுடன் சமூகப் பார்வை கொண்ட எதிர் நீச்சல், சிந்து பைரவி,
அபூர்வ ராகங்கள், தண்ணீர் தண்ணீர், அச்சமில்லை அச்சமில்லை, வறுமையின் நிறம்
சிகப்பு, புதுப்புது அர்த்தங்கள், வானமே எல்லை உள்ளிட்ட படைப்புகளைத்
தந்தவர்.திரைப்படத்
துறைக்கு ஆற்றிய பங்களிப்புக்காக, கே.பாலச்சந்தருக்கு 1987-ல் மத்திய
அரசின் பத்மஸ்ரீ விருதும், 2010-ல் தாதா சாகேப் பால்கே விருதும்
வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தாகபூமி தான் கத்தி ? குறும்பட இயங்குனர் வழக்கு! முருகதாஸ் விஜய் மீது வழக்கு!
விஜய்யின் கத்தி கழுத்தில் மீண்டும் கத்தி குறும்பட இயக்குநர் கண்ணீர் கத்தி
திரைப்பட இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் விஜய் உள்ளிட்ட 5பேர் மீது
2கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு குறும்பட இயக்குனர் அன்பு.ராஜசேகர் வழக்கு
தொடுத்திருக்கிறார். தாகபூமி என்ற குறும்படத்தை இயக்கிய அன்பு.ராஜசேகருக்கு
"கத்தி"யால் என்ன பிரச்சினை?.தஞ்சை
மாவட்டம், இளங்காடு பகுதியை சேர்ந்த தாகபூமி குறும்பட இயக்குனர் மற்றும்
தயாரிப்பாளரான அன்பு.ராஜசேகர் தஞ்சையில் அளித்த பேட்டி வருமாறு:-விவசாயிகளின்
அவலநிலை, விவசாயிகளின் தற்கொலை பற்றிய கதையாகத்தான் தாகபூமி என்ற
குறும்படத்தை கடந்த 24.12.2012 அன்று தயாரித்து வெளியிட்டேன். 2012 மார்ச்
10ஆம் தேதி நார்வே தமிழ்பட விழாவில் தாகபூமி இந்தியா சார்பாக
தேர்ந்தெடுக்கப்பட்டு திரையிடப்பட்டது. மாநில அளவில் நடைபெற்ற குறும்பட
போட்டியில் இயக்குநராக இருந்த மறைந்த பாலுமகேந்திரா-வால் விருதுக்கு
தேர்ந்தெடுக்கப்பட்டது, இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் உள்ளிட்ட பலர்
முன்னிலையில் படம் திரையிடப்பட்டு பாராட்டுகளையும் பெற்றேன்
PK; இந்தி சினிமாவைத் தாண்டிய இந்திய சினிமா ! தமிழில் இப்படியொரு படத்தை எடுப்பார்களா?’
வே.மதிமாறன்
மதமற்றவனாகக் காட்டுவதற்கும் மதங்களைக்
கேலி செய்து கிழிப்பதற்கும் ‘வேற்றுக்கிரகத்திலிருந்து வந்தவன்’ என்ற
நாயகனின் அடையாளம் ரொம்பப் புத்திசாலித்தனம்.
‘அறிவாளியாக’ மதங்களை அம்பலப்படுத்தும்போது
எழுகிற எதிர்ப்பு, ‘அப்பாவியாக’ கேட்கிற கேள்விகளில் மதங்கள் கிழிந்துத்
தொங்குவதை மதவாதிகளே கை தட்டி வரவேற்கிற முறையாக மாறிவிடுகிறது.
நாயகனின் ‘வெகுளி’த்தனம்; இயக்குநர் ராஜ்குமார் ஹிராணி அறிவாளி, மாமேதை என்பதை அடையாளப்படுத்துகிறது.
இவரின் முந்தைய படங்களான Munna Bhai M.B.B.S. – 3 Idiots படங்களை விட ‘PK’ மிகச் சிறப்பான படம் மட்டுமல்ல, மிகத் தைரியமான படம்.
இவரின் முந்தைய படங்களான Munna Bhai M.B.B.S. – 3 Idiots படங்களை விட ‘PK’ மிகச் சிறப்பான படம் மட்டுமல்ல, மிகத் தைரியமான படம்.
தேர்தல் முடிவுகள் : ஜார்கண்டில் பாஜ வெற்றி; ஜம்மு காஷ்மீரில் தொங்கு சட்டசபை
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மற்றும் ஜார்கண்டில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில்
பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. ஜார்கண்டில் பெரும்பான்மையான
இடங்களில் பாஜ முன்னணியில் உள்ளது. இங்கு பாஜ ஆட்சி அமைப்பது உறுதியாகி
விட்டது. ஜம்முகாஷ்மீரில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல்
இழுபறி நிலை காணப்பட்டு வருகிறது. ஜம்மு காஷ்மீர் மற்றும் ஜார்கண்டில்
கடந்த நவம்பர் மாதம் 25ம் தேதி தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை 5
கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. 5 கட்டங்களிலும் பதிவான வாக்குகளின்
எண்ணிக்கை இன்று மொத்தமாக எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. ஜம்மு
காஷ்மீரில் மொத்தமுள்ள 87 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 821 வேட்பாளர்கள்
களத்தில் இருந்தனர். முதல்வர் உமர் அப்துல்லா தலைமையிலான ஆளும் தேசிய
மாநாட்டு கட்சி, முக்கிய எதிர்கட்சியான முப்தி முகமது சயீதின் மக்கள்
ஜனநாயக கட்சி, மற்றும் காங்கிரஸ், பாஜ ஆகியவற்றிற்கு இடையே கடும் போட்டி
நிலவியது. ஜம்மு காஷ்மீரில் கடந்த 27 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இம்முறை
வாக்குபதிவு சதவீதம் அதிகரித்தது.
2005ஆம் ஆண்டுக்கு முன் அச்சிடப்பட்ட 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான கெடு ஜனவரி 1–ந் தேதி.
நாட்டில் கள்ள நோட்டுகளை ஒழிப்பதற்காக இந்திய ரிசர்வ் வங்கி ஒரு அதிரடி
திட்டத்தை அறிவித்தது. இத்ன்படி, 2005ஆம் ஆண்டுக்கு முன் அச்சிடப்பட்ட
ரூபாய் நோட்டுகள்தான் குறைவான பாதுகாப்பு அம்சங்களை கொண்டவை என்பதால்,
2005ஆம் ஆண்டுக்கு முன் அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகளை வங்கியில் கொடுத்து
பொதுமக்கள் மாற்றிக்கொள்ள வேண்டும் என கடந்த ஜனவரி மாதம் 22ஆம் தேதி
ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது இந்த உத்தரவின்படி பொதுமக்கள் தங்களிடமுள்ள, 2005–ம் ஆண்டுக்கு முன்பாக
அச்சிடப்பட்ட 500 ரூபாய், 1,000 ரூபாய் உள்ளிட்ட அனைத்து மதிப்பிலுமான
ரூபாய் நோட்டுகளையும் வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என ரிசர்வ்
வங்கி அறிவித்தது.
ஜம்மு காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சி முன்னணியில் ! மெஹபூபா சையத் முதல்வர் ஆவாரா ? பாஜக கடும் போட்டி!
ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தல் வாக்கு
எண்ணிக்கையில் பாரதீய ஜனதா மற்றும் மக்கள் ஜனநாயக கட்சி இடையே கடும் போட்டி
நிலவி வருகிறது.
ஜம்மு காஷ்மீரில் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு 5 கட்டமாக நடந்தது.
காஷ்மீரில் கடந்த 27 ஆண்டுகளில் இல்லாத அளவாக 65 சதவீத வாக்குகள்
பதிவாகியது. இது கடந்த 2008–ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பதிவானதை விட 4
சதவீதம் அதிகம் ஆகும். தேர்தலை புறக்கணிக்குமாறு தீவிரவாதிகள் அழைப்பு
விடுத்திருந்த போதும், வாக்காளர்கள் அதை பொருட்படுத்தாமல் திரளாக
வாக்குச்சாவடிகளுக்கு வந்து தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினார்கள்.
காஷ்மீரில் தற்போது முதல்–மந்திரி உமர் அப்துல்லா தலைமையில் தேசிய மாநாடு–காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநிலத்தில் தேசிய மாநாடு–காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்த போதிலும், சட்டசபை தேர்தலில் இரு கட்சிகளும் தனித்தே போட்டியிட்டன.
காஷ்மீரில் தற்போது முதல்–மந்திரி உமர் அப்துல்லா தலைமையில் தேசிய மாநாடு–காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநிலத்தில் தேசிய மாநாடு–காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்த போதிலும், சட்டசபை தேர்தலில் இரு கட்சிகளும் தனித்தே போட்டியிட்டன.
சுங்க கட்டணம் செலுத்துவதில் தனியார் வாகனங்களுக்கு விலக்கு: இழப்பை ஈடு செய்ய பெட்ரோல் டீசல் விலையில் ஏற்றம்!
புதுடில்லி: பஸ், கார், ஜீப் உள்ளிட்ட, வர்த்தக பயன்பாடு அல்லாத
தனியார் வாகனங்களுக்கு, சுங்க கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு
அளிக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் ஏற்படும் இழப்பை ஈடு செய்ய,
பெட்ரோல், டீசல் விற்பனையில் கூடுதல் வரி விதிக்கவும் முடிவு
செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள நெடுஞ்சாலைகளில், அனைத்து
வாகனங்களுக்கும் சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சாலை பராமரிப்பு
பணிகளுக்காக இந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்காக, முக்கிய
நெடுஞ்சாலைகளில் சுங்கச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மகாராஷ்டிரா உள்ளிட்ட
மாநிலங்களில், சுங்க கட்டணம் வசூலிப்பதற்கு, அரசியல் கட்சிகள் கடும்
எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தமிழகத்தில் கூட, சென்னை - பெங்களூரு
நெடுஞ்சாலையில் உள்ள குறைபாடுகளை சரி செய்யாவிட்டால் சுங்க கட்டணம்
வசூலிப்பதை தடை செய்ய வேண்டி வரும் என, சென்னை உயர்நீதி மன்றம் கடந்த வாரம்
எச்சரித்திருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக, சுங்கச் சாவடிகளில் அடிக்கடி
தகராறு ஏற்படுகிறது. அட பாவிகளா.... கார்ல போறவனுக்கு சலுகை கொடுத்து... அத பைக்ல போறவன் தலைல
கட்டப்போறீங்க.... அதாவது பணக்கார குடும்பத்துக்கு சலுகை.... நடுத்தர
குடும்பத்துக்கு சுமை. நல்லா நடத்துறீங்க ஆட்சி..... எல்லாம் ஓட்டு போட்ட
எங்களை சொல்லனும்.....
EVKS.இளங்கோவன் : கிரிமினல் பின்னணி கொண்ட அமித்ஷா பாஜகவின் தேசியத்தலைவர்!
தமிழக
காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’சென்னைக்கு
வருகை புரிந்த பா.ஜ.க. தேசியத்தலைவர் அமித்ஷா மறைமலை நகரில் நடந்த
பொதுக்கூட்டம் ஒன்றில் உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுக்களை காங்கிரஸ்
கட்சிக்கு எதிராக சுமத்தியிருக்கிறார் ஒரு
தேசிய கட்சியின் தலைவராக இருப்பதற்கு தகுதியே இல்லாதவர் அமித்ஷா. 2005–ல்
குஜராத்தில் நடந்த சொராபுதீன் ஷேக் எண்கவுண்டர் வழக்கில் அன்றைய குஜராத்
மாநில உள்துறை அமைச்சராக இருந்த அமித்ஷா கைது செய்யப்பட்டு சபர்மதி
சிறையில் அடைக்கப்பட்டதை எவரும் மறந்திருக்க முடியாத மூன்று
மாத சிறை வாசத்திற்கு பிறகு குஜராத்தில் நுழையக்கூடாது. மும்பை
மாநகரத்தில் தான் தங்கியிருக்க வேண்டுமென்று நிபந்தனை ஜாமீன் பெற்று வெளியே
வந்தவர் தான் இன்றைய பா.ஜ.க.வின் தேசியத்தலைவர் அமித்ஷா. இத்தகைய
கிரிமினல் பின்னணி கொண்டவரை வைத்துக்கொண்டுதான் தமிழ்நாட்டில் காலூன்ற கனவு
காண்கிறார்கள்.
பன்னீரின் உறவினர்கள் செயல்படுகிறார்கள்? அமைச்சர்கள் பூஜை வேண்டுதல் யாகம் அர்ச்சனை?
எல்லாத் துறைகளிலும் முதல்வர் பன்னீர்செல்வம் பெயரைச் சொல்லி, பலரும்
தலையிடுவதால், தாங்கள் முழுமையாக செயல்படாத நிலை ஏற்பட்டுள்ளதாக,
அமைச்சர்கள் பலரும் புலம்ப ஆரம்பித்திருக்கும் விஷயம், தலைமை செயலக
வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறத
ஆட்சி பொறுப்பு:கடந்த,
2011ல் நடந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று தமிழகத்தில், அ.தி.மு.க.,
பெரும்பான்மையுடன் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தது. ஜெயலலிதா முதல்வராக
பொறுப்பேற்றார். சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை அடைந்ததால், ஜெயலலிதா,
முதல்வர் பதவியையும், எம்.எல்.ஏ., பொறுப்பையும் இழந்தார். புதிய முதல்வராக,
நிதியமைச்சர் பன்னீர் செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டு, முதல்வராக
பொறுப்பேற்றுக் கொண்டார். ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சர்களாக
இருந்தவர்களே, மீண்டும் அமைச்சர்களாயினர்.
தனுஷ்கோடி புயல் தாக்கி 50 ஆண்டுகள் நிறைவு: உயிர்தப்பிய ரெயில் டிரைவர் உருக்கமான பேட்டி
இந்தியாவின் தென் பகுதியில் உள்ள தனுஷ்கோடி நகரத்தை கடந்த 1964-ம் ஆண்டு
டிசம்பர் 22ம் தேதி கடுமையான புயல் தாக்கியது. புயல் கரையை கடந்தபோது,
எழுந்த ராட்சத அலை அந்த நகரத்தை மூழ்கடித்தது. இதில், ஏராளமானோர்
பலியாகினர். சென்னையில் இருந்து சென்ற போட் மெயில் என்ற ரெயிலும் அலையில்
இழுத்துச் செல்லப்பட்டு பலர் உயிரிழந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் தொழில் வாணிப நகரமாக இருந்த தனுஷ்கோடி இந்த புயலில் முற்றிலுமாக அழிந்து விட்டது. புயலில் இருந்து தப்பித்த மானாமதுரை ரெயில்வே காலனியில் இருக்கும் ஓய்வு பெற்ற ரெயில் என்ஜின் டிரைவரான ராமமூர்த்தி (வயது 85) சோகத்துடன் கூறியதாவது:–
தனுஷ்கோடி ரெயில் போக்குவரத்து நடந்து கொண்டிருந்தபோது நான் உதவி டிரைவராக இருந்தேன். தினமும் சென்னையில் இருந்து இரவில் வரும் ரெயிலில் பணிபுரிந்து வந்தேன். அந்த ரெயிலை ‘போட் மெயில்’ என்று அழைப்பார்கள்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் தொழில் வாணிப நகரமாக இருந்த தனுஷ்கோடி இந்த புயலில் முற்றிலுமாக அழிந்து விட்டது. புயலில் இருந்து தப்பித்த மானாமதுரை ரெயில்வே காலனியில் இருக்கும் ஓய்வு பெற்ற ரெயில் என்ஜின் டிரைவரான ராமமூர்த்தி (வயது 85) சோகத்துடன் கூறியதாவது:–
தனுஷ்கோடி ரெயில் போக்குவரத்து நடந்து கொண்டிருந்தபோது நான் உதவி டிரைவராக இருந்தேன். தினமும் சென்னையில் இருந்து இரவில் வரும் ரெயிலில் பணிபுரிந்து வந்தேன். அந்த ரெயிலை ‘போட் மெயில்’ என்று அழைப்பார்கள்.
Sony இணையதளத்தை வடகொரியா முடக்கியது! அமேரிக்கா கடும் கோபம்?
சோனி பிக்சர்ஸ் நிறுவனத்தின் இணையதளத்தை வடகொரியா முடக்கியது காட்டுமிராண்டித்தனமான செயல் என்று
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
வடகொரிய அதிபர் கிம் ஜோங் யுன் பற்றி அமெரிக்காவின் சோனி பிக்சர்ஸ் பட நிறுவனம் ‘தி இன்டர்வியூ’ என்னும்
திரைப்படத்தை தயாரித்து இருக்கிறது.
இந்த படத்தில் வடகொரியா அதிபரை கொலை செய்வதற்காக அமெரிக்காவின் சி.ஐ.ஏ. உளவு நிறுவனம் 2
செய்தியாளர்களை வாடகைக்கு நியமிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த படம் வருகிற 25-ந் தேதி
உலகமெங்கும் திரையிடப்பட முடிவு செய்யப்பட்டு இருந்தது.
இதனிடையே தங்கள் நாட்டு தலைவரை கேலி செய்து படமாக எடுத்திருப்பதை விரும்பாத வட கொரியாவின்
‘அமைதியின் பாதுகாவலர்கள்’ என்ற அமைப்பினர், சோனி பிக்சர்ஸ் நிறுவனத்தின் இணையதளத்தை முடக்கினர்.
திங்கள், 22 டிசம்பர், 2014
மீண்டும் இந்தி / சம்ஸ்கிருத திணிப்பு? Email SMS ATM Slips All should be in which language? Braille?
இந்தி மொழி திணிப்பு மற்றும் கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் ஆகியவற்றைக் கண்டித்து திமுக தலைவர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில்,
மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஆட்சி மொழிப்பிரிவு பொதுத் துறை வங்கிகளுக்கு
அனுப்பியுள்ள கடிதத்தில், பணப் பரிவர்த்தனைகளுக்காக வாடிக்கையாளர்களுக்கு
அனுப்பப்படும் மின்னஞ்சல்கள், செல்போன் குறுந்தகவல்கள் இந்தி மொழியில்
இருப்பதை உறுதி செய்யுமாறு அந்தக் கடிதத்தில் அறிவுறுத்தப்பட்டிருப்பதாக
ஏடுகளில் செய்தி வந்துள்ளன.
இது போலவே ஏ.டி.எம். இயந்திரங்களில் வழங்கப்படும் “ஸ்லிப்”களிலும் இந்தி
மொழியைப் பயன்படுத்த வேண்டுமென்று வங்கிகளுக்கு மத்திய அரசு பரிந்துரை
செய்திருக்கிறது. மேலும் வங்கிகளின் இணைய தளங்கள், மற்றும் மொபைல்
விண்ணப்பங்களிலும் இந்தி மொழியைப் பயன்படுத்த மத்திய அரசு நடவடிக்கை
எடுத்து வருவதாகச் செய்தி வந்துள்ளது. நாம் எத்தனை முறை கண்டனம் தெரிவித்த
போதிலும், சமஸ்கிருதத்தையும், இந்தியையும் திணிப்பதில் பா.ஜ.க. அரசு
தொடர்ந்து இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டு தான் இருக்கிறது. இப்படியே பாஜக இந்துத்வா போக்கில் போனால் திமுக இழந்த செல்வாக்கைஎல்லாம் மீண்டும் பெற்றுவிடும்,நல்லது பார்பனீயம் வாழ்க! காவி வாழ்க! வி ஹெச் பி வாழ்க!அசோக் சிங்கால் வால்க வால்க வால்க!
சென்னை ஆசிரியரிடம் பட்டபகலில் கத்தியை காட்டி வழிப்பறி !
Daylight robbery in chennai street . A man threaten a teacher with knife ,she gave all her jewels and money to save herself. சென்னையில் பெண்களிடம் செயின் பறிக்கும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.
தனியாக செல்லும் பெண்களை பின் தொடர்ந்து மோட்டார்சைக்கிளில் செல்லும் கொள்ளையர்கள் கத்தியை காட்டி மிரட்டியும் மிகவும் துணிச்சலுடன் செயின் பறிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
சென்னையில் துரைப்பாக்கம் பகுதியில் மொபட்டில் சென்ற ஆசிரியை ஒருவரை டிப்–டாப் ஆசாமி ஒருவன், கத்தியை காட்டி மிரட்டி நகைகளை பறித்துச் செல்கிறான். அந்த காட்சிகளை தனது வீட்டு மாடியில் இருந்தபடியே கல்லூரி மாணவி ஒருவர் செல்போனில் படம் பிடித்துள்ளார்.
அந்த காட்சிகளின் விவரம் வருமாறு:–
சென்னை துரைப்பாக்கம் ஒக்கியம் பேட்டை 10–வது தெருவில் வசித்து வருபவர் வேலம் (39) அதே பகுதியில் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வரும் இவர் தனது மொபட்டில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்.
தனியாக செல்லும் பெண்களை பின் தொடர்ந்து மோட்டார்சைக்கிளில் செல்லும் கொள்ளையர்கள் கத்தியை காட்டி மிரட்டியும் மிகவும் துணிச்சலுடன் செயின் பறிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
சென்னையில் துரைப்பாக்கம் பகுதியில் மொபட்டில் சென்ற ஆசிரியை ஒருவரை டிப்–டாப் ஆசாமி ஒருவன், கத்தியை காட்டி மிரட்டி நகைகளை பறித்துச் செல்கிறான். அந்த காட்சிகளை தனது வீட்டு மாடியில் இருந்தபடியே கல்லூரி மாணவி ஒருவர் செல்போனில் படம் பிடித்துள்ளார்.
அந்த காட்சிகளின் விவரம் வருமாறு:–
சென்னை துரைப்பாக்கம் ஒக்கியம் பேட்டை 10–வது தெருவில் வசித்து வருபவர் வேலம் (39) அதே பகுதியில் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வரும் இவர் தனது மொபட்டில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்.
அரவிந்தர் ஆஸ்ரம பெண் பலாத்காரம்! குற்றவாளிகள் ஒப்புதல் வாக்குமூலம்!
புதுவை அரவிந்தர்
ஆசிரம பெண் லதா (வயது 39) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் தனது சகோதரிகள்
மற்றும் பெற்றோருடன் கடலில் குதித்து தற்கொலை செய்து கொள்ள காலாப்பட்டு
கடற்கரைக்கு சென்றபோது தன்னை 2 பேர் கற்பழித்ததாக காலாப்பட்டு போலீசில்
புகார் செய்திருந்தார். மேலும் தனது கையில் அணிந்திருந்த பஞ்சலோக மோதிரம்
மற்றும் வெள்ளி மோதிரம் உள்பட 5 மோதிரங்களை காணவில்லை என்றும் புகாரில்
கூறி இருந்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
மேற்கொண்டனர்.
சம்பவம் நடந்த அன்று அதிகாலை அப்பகுதியில் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் யார்? யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் அங்குள்ள தங்கும் விடுதிகள் மற்றும் வீடுகளில் பொறுத்தப்பட்டுள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவாகி உள்ள நபர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
சம்பவம் நடந்த அன்று அதிகாலை அப்பகுதியில் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் யார்? யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் அங்குள்ள தங்கும் விடுதிகள் மற்றும் வீடுகளில் பொறுத்தப்பட்டுள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவாகி உள்ள நபர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
குஷ்பூ ராஜ்யசபா எம் பி ? அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்?
Kushboo for Rajya Sabha plus congress spokesperson? டெல்லி: சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த நடிகை குஷ்புவை
ராஜ்யசபா எம்.பியாக்க கட்சி மேலிடம் திட்டமிட்டுள்ளதாக ஒரு தகவல் உலா
வருகிறது.
ஆரம்பத்தில் ஜெயா டிவியின் முக்கியப் புள்ளியாக திகழ்ந்தவர் குஷ்பு.
பின்னர் கற்பு குறித்த கருத்தால் ஏற்பட்ட விவகாரத்தில் சர்ச்சையில்
சிக்கினார். அதன் பின்னர் அவர் மீது சரமாரியாக வழக்குகள் தொடரப்பட்டன.
ஆனால் இந்த வழக்குகள் எல்லாம் உச்சநீதிமன்றத்தால் ஒரே உத்தரவின் மூலம்
தள்ளுபடி செய்யப்பட்டன. அந்த உத்தரவைப் பிறப்பித்தது அப்போது தலைமை
நீதிபதியாக இருந்த கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச். அதன் பின்னர்
அவர் காங்கிரஸில் சேரப் போவதாக அப்போதே பேச்சுக்கள் அடிபட்டன. ஆனால் யாரும்
எதிர்பாராத வகையில் திமுகவுக்கு வந்து சேர்ந்தார் குஷ்பு.
அசோக் சிங்கால் :இந்து மத நெறிகள் மீண்டும் நிலைநாட்டப்படும்! அப்படியே ஜாதி நெறி முறைகளும்???
800
ஆண்டுகளுக்குப் பின்னர் இந்துத்துவத்தை பாதுகாக்கக் கூடிய அரசு
அமைந்துள்ளதாகவும், நாட்டில் இந்து மத நெறிகள் மீண்டும் நிலைநாட்டப்படும்
என்றும் விஸ்வ இந்து பரிசத் தெரிவித்துள்ளது.
டெல்லியில் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய விஸ்வ இந்து பரிசத் தலைவர் அசோக் சிங்கால்,
துள்ளது என்று கூறக்கூடிய நாள் தற்போது
வந்துள்ளது. 800 ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியில் இருந்து அகற்றப்பட்ட
இந்துக்களின் சாம்ராஜியத்தை மீண்டும் அமைப்பதற்காக கடந்த 50 ஆண்டுகளாக
போராட்டம் நடத்தப்பட்டது.
அமித் ஷா :முதல்வர் வேட்பாளரை (நிர்மலா சீதாராமன்?)அறிவித்து விட்டு சட்டபேரவை தேர்தலை சந்திப்போம்
தமிழகத்தில் முதல்வர் வேட்பாளரை அறிவித்து விட்டு
2016 சட்டப்பேரவைத் தேர்தலை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி
எதிர்கொள்ளும் என பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தெரிவித்தார்.
2 நாள் பயணமாக சென்னை வந்துள்ள அவர், தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை பேசியது:
நாடு முழுவதும் தற்போது பாஜக உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்திய அளவில் 10 கோடி உறுப்பினர்களையும், தமிழகத்தில் 60 லட்சம் உறுப்பினர்களையும் புதிதாகச் சேர்க்க இலக்கு நிர்ணயித்துள்ளோம்.
2 நாள் பயணமாக சென்னை வந்துள்ள அவர், தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை பேசியது:
நாடு முழுவதும் தற்போது பாஜக உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்திய அளவில் 10 கோடி உறுப்பினர்களையும், தமிழகத்தில் 60 லட்சம் உறுப்பினர்களையும் புதிதாகச் சேர்க்க இலக்கு நிர்ணயித்துள்ளோம்.
போலீசாரின் மாமுலுக்கு வழிசெய்யும் திருட்டு சிடி வேட்டை! போலிஸ் மீது மனு தாக்கல்!
சென்னை ஐகோர்ட்டில் மூவிலேண்ட் நிறுவனத்தின் உரிமையாளர் கே.பி.ரவிச்சந்திரன் தாக்கல் செய்த மனுவில்
கூறப்பட்டு இருப்பதாவது:-
>
எங்கள் நிறுவனத்தின் சார்பில் ஆயிரத்து 891 சினிமாக்களின் வீடியோ, டி.வி.டி., எம்.பி.3 போன்றவற்றுக்கான
காப்புரிமை பெறப்பட்டுள்ளது. இவற்றில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்கள் வி.சி.டி., டி.வி.டி. வடிவில் எங்களின்
ஏஜெண்டுகள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மூலமாக விற்கப்படுகின்றன.
ஆனால் முகவர்களை திருட்டு வீடியோ ஒழிப்பு போலீசார் தேவையில்லாமல் துன்புறுத்துகின்றனர். அவர்கள் மீது
வழக்கு பதிவு செய்கின்றனர். இதுதொடர்பாக போலீஸ் அதிகாரிகளுக்கு மனு கொடுத்தேன். அதில் எந்தவித
நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே எங்கள் நிறுவனத்தின் சார்பில் டி.வி.டி., சி.டி. விற்பனை செய்கிறவர்கள்
மீது நடவடிக்கை எடுப்பதை தடுத்து உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கை நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் விசாரிக்கிறார். இந்த நிலையில் மனுவுக்கான பதில்மனுவை திருட்டு
வீடியோ தடுப்புப் பிரிவு போலீஸ் சூப்பிரண்டு ஜெயலட்சுமி சார்பில் கூடுதல் அரசுப் பிளீடர் சஞ்சய்காந்தி தாக்கல்
செய்தார். முதல்ல திருட்டுதனமா அதிக விலைக்கு டிக்கெட்டுக்கள் விற்பதை தடை செய்யவேண்டும் அப்புறமா திருட்டு சிடியை தேடுங்க. நடிகருங்க படங்களை பில்டப் பண்ணி ஜனங்களை முட்டாளாக்கி அதிகவிலைக்கு டிக்கெட்டுக்களை விக்கிறத யாரும் கண்டுக்கிறதில்லை ஏன்?
வதேரா கைது செய்யப்படலாம்? பிரியங்காவின் மோசடி கணவன் மீது சட்டம் பாய்கிறது?
சண்டிகர்: காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மருமகன், ராபர்ட் வாத்ரா,
அரியானா மாநிலத்தில் செய்த நில முறைகேடுகளால், அவருக்கு இரண்டாண்டு சிறை
தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது. அந்த மாநில நில உச்சவரம்பு சட்டத்தை மீறி,
146 ஏக்கர் நிலத்திற்கு சொந்தக்காரராக விளங்கும் ராபர்ட் வாத்ரா மீதான
விசாரணையின் பிடி இறுகி வருவதால், அவர் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என,
கூறப்படுகிறது.
டில்லிக்கு அருகே உள்ள அரியானா மாநிலத்தில், சில
மாதங்களுக்கு முன் நடைபெற்ற சட்டசபை தேர்தலில், ஆட்சியிலிருந்த, முதல்வர்
பூபிந்தர் சிங் ஹூடா தலைமையிலான காங்கிரஸ் அரசு தோல்வி அடைந்து,
எம்.எல்.கட்டார் தலைமையிலான பா.ஜ., அரசு பொறுப்பேற்றது.பா.ஜ., அரசு
பொறுப்பேற்கும் முன், ராபர்ட் வாத்ராவின் நில முறைகேடுகளை
அம்பலப்படுத்தினார், அசோக் கெம்கா என்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி. அதனால்,
அப்போதைய காங்கிரஸ் அரசின் கோபத்திற்கு ஆளான அவர், மூன்றாண்டுகளில், பல
முறை பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
திருமணத்தின் போது, சில லட்சம் ரூபாய் சொத்துகள் மட்டுமே வைத்திருந்த
வாத்ராவுக்கு இப்போது, 300 கோடி ரூபாய்க்கு மேல் சொத்துகள் உள்ளன. அதானி ஒரு 10 வருஷத்திற்கு முன்பு எப்படி இருந்தார் இப்போது எப்படி
இருக்கிறார், ஒரு வேளை ஆட்சி மாறினால் சுவாமியே இந்த விஷயத்தை கிளப்புவார்
ஸ்டாலினிடம் மோதிய அன்பழகன்! ரங்கநாதனுக்கு மா.செ., பதவி ? ஸ்டாலின் எதிர்ப்பு?
தி.மு.க.,வில் தற்போது மாவட்டச் செயலர்கள் தேர்தல் நடந்து
வருகிறது.சென்னையில் நான்கு மாவட்டங்களிலும், சுமுகமாக பேசி முடித்து,
மா.செ.,க்களை அறிவிக்க தலைமை முடிவெடுத்து, அதற்கான பேச்சு வார்த்தை
நடந்தது.சென்னை கிழக்கு மாவட்டத்திற்கு சேகர் பாபுவை, மா.செ.,வாக்க
வேண்டும் என, கட்சியின் பொருளாளர் ஸ்டாலின் விரும்புகிறார்.
இந்த மாவட்டத்துக்கு செயலராக முன்னாள் எம்.எல்.ஏ., ரங்கநாதனை நியமிக்க வேண்டும் என, கட்சியின் பொதுச்செயலர் அன்பழகன் கொடிபிடித்தார். இதையடுத்து, கோபால புரத்தில் உள்ள கருணாநிதியின் வீட்டில் நேற்று காலை, பேச்சு நடந்துள்ளது. இதுகுறித்து, கட்சி வட்டாரங்களில் கூறியதாவது:சென்னையின் நான்கு மாவட்டங்களில், கிழக்கு மாவட்டத்தில் மட்டும் தன் ஆதரவாளர் ரங்கநாதனை நியமிக்க வேண்டும் என, கருணாநிதியிடம் வலியுறுத்தினார் அன்பழகன்.
இந்த மாவட்டத்துக்கு செயலராக முன்னாள் எம்.எல்.ஏ., ரங்கநாதனை நியமிக்க வேண்டும் என, கட்சியின் பொதுச்செயலர் அன்பழகன் கொடிபிடித்தார். இதையடுத்து, கோபால புரத்தில் உள்ள கருணாநிதியின் வீட்டில் நேற்று காலை, பேச்சு நடந்துள்ளது. இதுகுறித்து, கட்சி வட்டாரங்களில் கூறியதாவது:சென்னையின் நான்கு மாவட்டங்களில், கிழக்கு மாவட்டத்தில் மட்டும் தன் ஆதரவாளர் ரங்கநாதனை நியமிக்க வேண்டும் என, கருணாநிதியிடம் வலியுறுத்தினார் அன்பழகன்.
நெப்போலியன்:திமுகவில் ஒவ்வொரு தொண்டனும் கொதித்து போயுள்ளான்!
திமுகவில் ஜனநாயகமே இல்லை. அங்கு ஒவ்வொரு தொண்டனும் கொதித்துப்
போயுள்ளான். பூனைக்கு மணி கட்டும் வகையில் முதல் ஆளாய் நான்
வந்திருக்கிறேன் என்று கூறியுள்ளார் நடிகரும், முன்னாள் மத்திய அமைச்சருமான
நெப்போலியன்.
திமுகவில் கிட்டத்தட்ட 35 ஆண்டு காலம் இருந்தவர் நெப்போலியன். இந்த
நிலையில் அவர் திடீரென திமுகவை விட்டு விலகி நேற்று பாஜகவில் இணைந்தார்.
சென்னை வந்த பாஜக தலைவர் அமீத் ஷாவை சென்னையில் உள்ள பாஜக தலைமையகத்தில்
சந்தித்து பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார் நெப்போலியன்.
பின்னர் செய்தியாளர்களிடம் தான் திமுகவிலிருந்து விலகியது ஏன், பாஜகவில்
சேர்ந்தது ஏன் என்பது குறித்து அவர் விளக்கினார்.
ஞாயிறு, 21 டிசம்பர், 2014
சுசீந்திரம் ஆஞ்சநேயருக்கு 25 ஆயிரம் லிட்டர் பால் அபிஷேகம்!
25 thousand liter milk abhishekam to suseenthram hanuman நாகர்கோவில்: ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவையொட்டி, சுசீந்திரம் தாணுமாலயசுவாமி
கோயிலில் இன்று காலை ஆஞ்சநேயருக்கு பல்வேறு வகையிலான அபிஷேகங்கள் நடந்தன.
ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பெருமாள்
கோயில்களில் இன்று அதிகாலையில் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடந்தன.
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற குமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி
கோயில் உட்பிரகாரத்தில் 18 அடி உயரமுள்ள ஆஞ்சநேயர் சிலை உள்ளது. ஜெயந்தி
விழாவையொட்டி ஆஞ்சநேயருக்கு இன்று காலை பல்வேறு வகையிலான அபிஷேங்கள்
நடந்தன. முன்னதாக அதிகாலை 4 மணிக்கு ஸ்ரீராமருக்கு அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் ஆஞ்சநேயர் சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம்,
குங்குமம், திருநீர், எலுமிச்சை சாறு, மாதுளை சாறு உள்ளிட்ட 16 வகையான
பொருட்களால் ஷோடச அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் 25 ஆயிரம் லிட்டர் பால்
அபிஷேகம் நடந்தது.
லிங்கா விநியோகஸ்தர்கள் போலீசில் புகார் ! நஷ்டமாம் ! பில்டப்பை பார்த்து அதிக விலை கொடுத்து .....
Lingaa lost ? distributors upset ? லிங்கா’ திரைப்படம் சரியாக வசூலா காததைத் தொடர்ந்து
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் திரைப்பட விநியோகஸ்தர்கள் நேற்று மாலை
ஒரு மனுவைக் கொடுத்தனர்.
இதையடுத்து ரஜினியை நேரில் சந்தித்து முறையிட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விநியோகஸ்தர்கள் தரப்பில் கூறியதாவது:- ‘லிங்கா’ திரைப்படத்தை கோடிக்கணக்கில் பணம் கொடுத்து வாங்கி வெளியிட்டுள்ளோம்.
ஆனால் சரியாக வசூலாகவில்லை. குறிப்பாக திருநெல்வேலி, கன்னியாகுமரி பகுதிகளில் 4.20 கோடி ரூபாய் கொடுத்து படத்தை வாங்கினோம். ஆனால் இதுவரை ரூ.1.50 கோடி மட்டுமே வசூலாகியுள்ளது.
இதையடுத்து ரஜினியை நேரில் சந்தித்து முறையிட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விநியோகஸ்தர்கள் தரப்பில் கூறியதாவது:- ‘லிங்கா’ திரைப்படத்தை கோடிக்கணக்கில் பணம் கொடுத்து வாங்கி வெளியிட்டுள்ளோம்.
ஆனால் சரியாக வசூலாகவில்லை. குறிப்பாக திருநெல்வேலி, கன்னியாகுமரி பகுதிகளில் 4.20 கோடி ரூபாய் கொடுத்து படத்தை வாங்கினோம். ஆனால் இதுவரை ரூ.1.50 கோடி மட்டுமே வசூலாகியுள்ளது.
வைகோ பயபக்தியுடன் அம்மனை வழிபட்டார் ! கருப்புத்துண்டை கழற்றினார்! சு சுவாமியோடு கூட்டணி மட்டுமே பாக்கி?
Vaiko becomes devotee of patteeshwaram amman !அணை கட்டும் கர்நாடகா அரசின் திட்டத்தை எதிர்த்தும், பூரண மதுவிலக்கை
வலியுறுத்தியும், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தஞ்சை மற்றும் நாகை
மாவட்டங்களில் பிரச்சார யாத்திரை மேற்கொண்டு உள்ளார்.தஞ்சையில்
அவர் பயணம் செய்தபோது, 18ம் தேதி மாலை, பட்டீஸ்வரம் சென்றார். அங்குள்ள
துர்க்கை அம்மன் கோவில் முன் அவர், பொதுமக்களிடையே பேசினார். பின்னர்,
தோளில் கிடந்த கருப்பு துண்டை கழற்றி விட்டு, கோவிலுக்கு சென்றார். அம்மன்
முன் நின்று வணங்கினார். தீபாராதனை நடத்தப்பட்டு, அவருக்கு பரிவட்டம்
கட்டி, பூரண கும்ப மரியாதை அளித்தனர். இந்த நாடகம் அந்த மேடையில் எத்தனை நாளம்மா?அம்மா எத்தனை நாளம்மா
நடிகை பாமா நல்ல கதைகள் உள்ள படங்களில் மட்டும்தான்
எல்லாம்
அவன் செயல், ராமானுஜம் படங்களில் நடித்தவர் பாமா. கைவசம் நிறைய படம்
இல்லாமல் மல்லுவுட்டில் கவனம் செலுத்துகிறார். அங்கும் ஒன்றிரண்டில்
மட்டுமே நடித்து வருகிறார். சமீபத்தில் ‘கிராந்தி' மலையாள படத்தில்
ஹீரோயினாக பாமா நடிக்கிறார் என மல்லுவுட் இயக்குனர் லெனின் கூறினார். இதை
கேட்டு ஷாக் ஆனார் பாமா. அந்த படத்தில் நான் நடிக்கவில்லையே என்று கூறியவர்
மேலும் தொடர்ந்தார். ‘கிராந்தி படத்தின் ஸ்கிரிப்ட்டை எனக்கு இயக்குனர்
கூறினார். ஆனால் அதில் நடிப்பதாக கூறவில்லை. படத்தில் நடிப்பதை நான் உறுதி
செய்யாத நிலையில் இயக்குனரே தன் இஷ்டத்துக்கு நான் நடிப்பதாக கூறி
இருக்கிறார். ஸ்கிரிப்ட் பிடிக்காததால் அப்படத்தில் நான் நடிக்க
மறுத்துவிட்டேன்‘ என்றார்.
நெப்போலியன் திமுகவுக்கு எழுதிய கடிதம்!
Actor Napoliyan resign from dmk! நெப்போலியன் அழகிரியின் ஆள்தானே போனால் போகட்டும் என்று அசால்ட்டாக இருக்கிறார்கள் .அழகிரியும் திமுக தான் என்பது ஏனோ இவர்களுக்கு புரியவில்லை. திமுக ஆட்சியை பிடிக்காவிட்டாலும் பரவாயில்லை ஆனால் திமுகவில் எனது ஆட்சி அல்ல அல்ல நம்ம ஆட்சிதான் இருக்கவேண்டும் என்று நினைப்பதை என்ன சொல்வது? கலைஞர் மீண்டும் மீண்டும் திமுக ஒரு சமுதாய சீர்திருத்த இயக்கம் சுயமரியாதை பகுத்தறிவு இயக்கம் என்று கூறுவதை எங்கே கேட்கிறார்கள்? மக்களை வசீகரிக்க கூடிய மக்கள் விரும்பும் தூண்கள் எல்லாம் விலகி போவது யாருக்கு நல்லது? நிச்சயமாக தமிழ் சமுகத்திற்கு அல்ல!
தமிழகத்தின் கவுரவம் காக்க பா.ஜ., ஆட்சி !அமித் ஷா சூளுரை !
அமித்ஷா இவ்வளவு முட்டாள்தனமான கருத்தையா சொல்லுவார் .....கச்சா எண்ணெய்
விலையை மோடி குறைத்தாரம் .....அது உலக சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு உட்பட்டது
என்பதை இப்போதுள்ள அனைவரும் அறிவர் .....அறிவுகொழுந்தாக இருக்கிறார்
.....இவர் பேச்சு இங்கு எடுபடாது.... ஓட்டுக்காக என்னவேண்டுமானாலும்
பேசுவார் போல தெரிகிறது .....மற்ற மாநிலங்களில் பிரித்தாளும்
சூழ்ச்சியாலும் , பொய்யான வாக்குறுதிகளாலும் ஆட்சியை பிடித்தனர்....அந்த
ஒவ்வொருவருக்கும் பதினைந்து லட்ச ரூபாய் மேட்டரை பற்றி பேசினார் என்றால்
நல்லா இருக்கும்
Amith Shaw : Bjp will save pride of tamilnadu !தமிழகத்தின் மரியாதையை காப்பாற்ற, தமிழின் கவுரவத்தை காக்க, பா.ஜ., வலிமை பெற்று, ஆட்சிக்கு வர வேண்டும்,'' என, பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா வேண்டுகோள் விடுத்து பேசினார்.
சென்னை, மறைமலை நகரில் நடந்த பா.ஜ., பிரமாண்ட பொதுக்கூட்டத்தில், அமித் ஷா பேசியதாவது: தமிழ் கற்க துவங்கி விட்டேன்; விரைவில் உங்களிடம் தமிழில் பேசுவேன். இந்தியாவில், 30 ஆண்டுகளுக்கு பிறகு, பெரும்பான்மையுடன் ஆட்சி அமைந்துள்ளது. மோடி நாட்டின் பிரதமராகி இருக்கிறார். ஆனால், காங்கிரஸ் கட்சிக்கு 44 இடங்களே கிடைத்துள்ளன; காங்கிரஸ் சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது.
Amith Shaw : Bjp will save pride of tamilnadu !தமிழகத்தின் மரியாதையை காப்பாற்ற, தமிழின் கவுரவத்தை காக்க, பா.ஜ., வலிமை பெற்று, ஆட்சிக்கு வர வேண்டும்,'' என, பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா வேண்டுகோள் விடுத்து பேசினார்.
சென்னை, மறைமலை நகரில் நடந்த பா.ஜ., பிரமாண்ட பொதுக்கூட்டத்தில், அமித் ஷா பேசியதாவது: தமிழ் கற்க துவங்கி விட்டேன்; விரைவில் உங்களிடம் தமிழில் பேசுவேன். இந்தியாவில், 30 ஆண்டுகளுக்கு பிறகு, பெரும்பான்மையுடன் ஆட்சி அமைந்துள்ளது. மோடி நாட்டின் பிரதமராகி இருக்கிறார். ஆனால், காங்கிரஸ் கட்சிக்கு 44 இடங்களே கிடைத்துள்ளன; காங்கிரஸ் சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது.
இன்சுரன்ஸ் துறையில் 49 வீதம் அந்நிய முதலீட்டுக்கு அவசர சட்டம் இயற்ற மோடி அவசரம்! எதிர்கட்சிகள் போர்க்கொடி!
FDI for insurance sector?புதுடில்லி: பார்லிமென்டில் எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு இல்லாததால்,
இன்சூரன்ஸ், நிலக்கரி சட்ட திருத்த மசோதாக்களை அவசர சட்டம் மூலம்
நிறைவேற்ற, பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துள்ளதாக தகவல்
வெளியாகியுள்ளது.நரேந்திர மோடி, மே மாதம் பிரதமராக பதவியேற்றபோது,
நாட்டின் பொருளாதாரத்தை சீரமைத்து, வேலை வாய்ப்பை அதிகரிப்பதற்கு
முன்னுரிமை அளிக்கப் போவதாக அறிவித்தார்.இதன்
அடிப்படையில், இன்சூரன்ஸ் துறையில் தற்போதுள்ள, 26 சதவீத அன்னிய முதலீட்டு
வரம்பை, 49 சதவீதமாக அதிகரிப்பதற்கும், நிலக்கரி துறையில், தனியாருக்கு
அனுமதி அளிப்பதற்கும், சட்ட திருத்த மசோதாக்களை நிறைவேற்ற முடிவு
செய்யப்பட்டது. கடந்த மழைக்கால கூட்டத் தொடரில், இந்த மசோதாக்களை நிறைவேற்ற
முடியவில்லை.
ஜனநாயக முறையில் இவர்களால் ஆட்சி செய்ய முடியாது என்பதைத்தான் இது காட்டுகிறது. அனைத்து மக்களையும் அரவணைத்து செல்லும் பக்குவம் இல்லாதவர்களிடம் தங்களை ஆளும் பொறுப்பை கொடுத்தால் இவர்களை ஆதரிப்பவர்களுக்கும் கூட இவர்களால் நல்லது செய்ய முடியாது. இன்று எதிர்த்தரப்பினருக்கு தொல்லை கொடுப்பவர்கள் அங்கெ இங்கே கை வைத்து கடைசியில் தன்தரப்பினர் தலையிலேயே கை வைக்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்.
ஜனநாயக முறையில் இவர்களால் ஆட்சி செய்ய முடியாது என்பதைத்தான் இது காட்டுகிறது. அனைத்து மக்களையும் அரவணைத்து செல்லும் பக்குவம் இல்லாதவர்களிடம் தங்களை ஆளும் பொறுப்பை கொடுத்தால் இவர்களை ஆதரிப்பவர்களுக்கும் கூட இவர்களால் நல்லது செய்ய முடியாது. இன்று எதிர்த்தரப்பினருக்கு தொல்லை கொடுப்பவர்கள் அங்கெ இங்கே கை வைத்து கடைசியில் தன்தரப்பினர் தலையிலேயே கை வைக்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்.