புதன், 24 டிசம்பர், 2014

காதலியின் நிர்வாண படத்தை அப்லோடு செய்த பெங்களூரு ஐடி ஊழியர்!

பெங்களூரு: ஜாதியை காரணம் காண்பித்து காதலை புறக்கணித்த கல்லூரி மாணவியை பழிவாங்க அவரின் நிர்வாண படங்களை இணையதளத்தில் பரப்பிய சாப்ட்வேர் இன்ஜினியர் பெங்களூருவில் கைது செய்யப்பட்டார். பெங்களூரு பன்னேருகட்டா ரோடு பகுதியை சேர்ந்தவர் 20 வயது பெண் கவிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). ஜெயநகரிலுள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் அதிக நேரத்தை செலவிடுவது கவிதாவின் வாடிக்கையாகும். பேஸ்புக்கில் இவர் பிசியாக இருந்தபோது, பழக்கமானவர் எல்.ஹர்ஷா. 24 வயது வாலிபரான இவர், தன்னை ஒரு சாப்ட்வேர் இன்ஜினியர் என்று அறிமுகம் செய்து கொண்டு கவிதாவுடன் பழக ஆரம்பித்துள்ளார்.  படிப்படியாக கவிதாவின் வீட்டுக்கு வருமளவுக்கு பழக்கம் அதிகரித்தது. கவிதா உயர்ஜாதி என்று கருதப்படும் ஜாதியை சேர்ந்தவராம். எனவே, கவிதாவிடமும், அவரது பெற்றோரிடமும் தன்னையும் அதே ஜாதியை சேர்ந்தவன் என்று ஹர்ஷா அறிமுகம் செய்து ஏமாற்றியுள்ளார்.
கவிதா மற்றும் ஹர்ஷா இடையேயான பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இருப்பினும் உண்மையான ஜாதியை சொன்னால் கவிதா வீட்டில் தங்களது திருமணத்துக்கு சம்மதிக்கமாட்டார்கள் என்று நினைத்த ஹர்ஷா ஜாதியை மறைத்தபடியே பழகியுள்ளார். இந்நிலையில், ஒருநாள், கவிதா வீட்டுக்கு ஹர்ஷா வந்தபோது வீட்டில் அவரை தவிர வேறு யாரும் இல்லை என்று கூறப்படுகிறது. அப்போது வெளியே போவதற்காக கவிதாவை ஹர்ஷா அழைத்துள்ளார். எனவே கவிதா தனது அறைக்கு சென்று ஆடை மாற்றியுள்ளார். அப்போது அவருக்கே தெரியாமல் தனது செல்போனில் கவிதா ஆடை மாற்றுவதை ஹர்ஷா போட்டோ மற்றும் வீடியோ எடுத்துள்ளார். கவிதாவின் நிர்வாண படங்கள் தன்னிடம் உள்ள தைரியத்தில், தனது உண்மையான ஜாதியை ஹர்ஷா கவிதாவிடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியைடந்த கவிதா, தனது பெற்றோரிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளார். ஆனால் ஆச்சாரமான குடும்பம் என்று கூறி, வேறு ஜாதி ஆணுக்கு திருமணம் செய்விக்க மாட்டோம் என்று உறுதியாக கூறிவிட்டனர் கவிதாவின் பெற்றோர். இதை ஹர்ஷாவிடம் கடந்த செப்டம்பர் மாதத்தில் கவிதா கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த ஹர்ஷா, தன்னிடமுள்ள நிர்வாண படங்களை கவிதாவிடம் காண்பித்து திருமணம் செய்ய மிரட்டியுள்ளார். மேலும், கவிதாவின் தாயிடமும் அந்த படங்களை காண்பித்து திருமணம் செய்து வைக்காவிட்டால் இணையதளத்தில் அந்த படங்கள் அப்லோடு செய்யப்படும் என்று மிரட்டியுள்ளார். இருப்பினும் ஹர்ஷாவுடனான தொடர்பை கவிதா குடும்பம் துண்டித்துவிட்டது. இதனால் மேலும் ஆத்திரமடைந்த ஹர்ஷா அக்டோபர் மாதத்தில் 5 ஆபாச வெப்சைட்டுகளில், கவிதாவின், நிர்வாண படங்கள், வீடியோக்களை அப்லோடு செய்துள்ளார். மேலும் கவிதாவின் போன் எண், முகவரி போன்றவற்றையும் அதில் குறிப்பிட்டு, விபச்சாரத்தில் ஈடுபடும் பெண் போல சித்தரித்துள்ளார். இந்நிலையில், வெப்சைட்டை பார்த்த காமுகர்கள், கவிதாவுக்கு போன் செய்து உடலுறவு கொள்ள அழைத்துள்ளனர். முதலில், ராங் நம்பர் என்று நினைத்து கண்டுகொள்ளாமல் இருந்தார் கவிதா. ஆனால் தொடர்ந்து பல ஆண்களிடமிருந்து போன் வரவே, கவிதாவுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அப்போது உறவினர்கள் உதவியுடன் தேடிப்பார்த்தபோது தனது படங்கள் இணையதளங்களில் இருப்பதை கவிதா தெரிந்து கொண்டார். அறுவெறுப்பும், ஆத்திரமுமடைந்த கவிதா போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் ஹர்ஷாவை கைது செய்து பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைத்துள்ளனர். சைபர் கிரைம் பிரிவுகளிலும் அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

/tamil.oneindia.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக