திங்கள், 22 டிசம்பர், 2014

அசோக் சிங்கால் :இந்து மத நெறிகள் மீண்டும் நிலைநாட்டப்படும்! அப்படியே ஜாதி நெறி முறைகளும்???

800 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்துத்துவத்தை பாதுகாக்கக் கூடிய அரசு அமைந்துள்ளதாகவும், நாட்டில் இந்து மத நெறிகள் மீண்டும் நிலைநாட்டப்படும் என்றும் விஸ்வ இந்து பரிசத் தெரிவித்துள்ளது. டெல்லியில் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய விஸ்வ இந்து பரிசத் தலைவர் அசோக் சிங்கால், துள்ளது என்று கூறக்கூடிய நாள் தற்போது வந்துள்ளது. 800 ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியில் இருந்து அகற்றப்பட்ட இந்துக்களின் சாம்ராஜியத்தை மீண்டும் அமைப்பதற்காக கடந்த 50 ஆண்டுகளாக போராட்டம் நடத்தப்பட்டது.
டெல்லியில் 12வது நூற்றாண்டில் பிரிதிவி ராஜ்சவுகான் தலைமையிலான ராஜபுத்திர அரசு ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டது. அதற்கு பிறகு தற்போது இந்துக்கள் ஆட்சி வந்துள்ளது. இந்து மத நெறிகள் மீண்டும் படிப்படியாக நிலைநாட்டப்படும். உலக நலனுக்காக பாடுபடக்கூடிய வெல்ல முடியாத இந்து சமூகம் தேவைப்படுகிறது என்றார்.இதேபோல் போபாலில் செய்தியாளர்களிடம் பேசிய விஸ்வ இந்து பரிசத் மூத்த தலைவர் பிரவீன் தொகாடியா, இந்துக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். இந்துக்களின் தேசத்தில் அவர்கள் சிறுபான்மையினராக ஆவலை அனுமதிக்க முடியாது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக