வியாழன், 25 டிசம்பர், 2014

2014.இல் தமிழில் அதிக படங்கள் மொத்தம் 212 ! சிறிய படங்கள் பெரிய சாதனை! கோலிசோடா ஹிட்!

212 direct tamil films released this year . small budget films like goli soda got staggering collection. 25 films are hits. இந்த வாரம் கிறிஸ்துமஸுக்கு வெளியான 4 படங்களையும் சேர்த்து மொத்தம் 212 படங்கள் இந்த ஆண்டு வெளியாகியுள்ளன. தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை இது ஒரு சாதனை என்றுதான் சொல்லவேண்டும். இவை அனைத்துமே நேரடித் தமிழ் திரைப்படங்கள். டப்பிங் படங்களும் கணிசமாக வந்தன. அந்தக் கணக்கு தனி. இந்த 220 படங்களில் எத்தனைப் படங்கள் மெகா ஹிட்.. எத்தனைப் படங்கள் குறைந்த பட்ச லாபத்தோடு தப்பித்தன என்று பார்த்தால், பெருமைப்பட்டுக்கொள்ள பெரிதாக இல்லை என்பதுதான் உண்மை. அதே நேரம், கடந்த ஆண்டுகளோடு ஒப்பிட்டால் இந்த ஆண்டு சற்று அதிக எண்ணிக்கையிலான படங்கள் வெற்றி பெற்றுள்ளது ஆறுதலான விஷயம். இந்த ஆண்டில் முதல் பெரிய வெற்றியைப் பெற்ற படம் என்றால் அது கோலி சோடாதான். அஜீத் நடித்த வீரம், விஜய் நடித்த ஜில்லா ஆகிய படங்களுடன் வெளியானது நடுத்தர பட்ஜெட் படமான கோலி சோடா. ஆனால் வீரமும் ஜில்லாவும் பெறாத வெற்றியை இந்தப் படம் பெற்று, 2014-ம் ஆண்டின் முதல் வெற்றிப் படம் என்ற பெருமையைப் பெற்றது.
இந்த ஆண்டில் வெளியான படங்களில் 25 படங்களுக்கு மேல் வெற்றி பெற்றன மற்றும் தப்பித்துவிட்டன எனலாம். தெகிடி, நான் சிகப்பு மனிதன், வல்லினம், குக்கூ, மான் கராத்தே, யாமிருக்க பயமே, என்னமோ நடக்குது, மஞ்சப்பை, முண்டாசுப்பட்டி, அரிமா நம்பி, சதுரங்க வேட்டை, வேலையில்லா பட்டதாரி, ஜிகிர்தண்டா, கதை திரைக்கதை வசனம் இயக்கம், சலீம், அரண்மனை, ஜீவா, மெட்ராஸ், கத்தி, பூஜை, திருடன் போலீஸ், நாய்கள் ஜாக்கிரதை, லிங்கா, பிசாசு, வெள்ளக்கார துரை போன்ற படங்களை இந்தப் பட்டியலில் சேர்க்கலாம். 2014... அதிக எண்ணிக்கையில் படங்கள் தயாரித்து சாதனைப் படைத்த கோலிவுட்! இந்திய சினிமாவின் முதல் 3டி மோஷன் கேப்சரிங் தொழில்நுட்பப் படமான ரஜினியின் கோச்சடையான் மிகப் பெரிய ஆரம்ப வசூலை தமிழகத்தில் பெற்றது. முதல் வாரத்தில் நூறு கோடி ரூபாய்க்கும் மேல் அந்தப் படம் ஈட்டினாலும், தெலுங்கு, இந்தி போன்ற பிற மொழிகளில் படம் தோல்வியைத் தழுவியது. அந்தப் படத்தால் தங்களுக்கு நஷ்டம் என்பதை ரஜினியும் மேடையிலேயே அறிவித்துவிட்டார். மற்ற ஆண்டுகளைக் காட்டிலும் இந்த ஆண்டு வெளியான படங்களும் அதிகம், வெற்றி பெற்ற படங்களின் எண்ணிக்கையும் அதிகம். ஒரு வாரத்துக்கு சராசரியாக நான்கு படங்களுக்கும் மேல் வெளியானதால் வெளியிட போதிய அரங்குகள் கிடைக்காமல் பட அதிபர்களும், பார்க்க முடியாமல் ரசிகர்களும் கொஞ்சம் திண்டாடித்தான் போனார்கள். சரியாகத் திட்டமிட்டு படங்களை வெளியிட்டால் 2015-ல் இந்த வெற்றியின் விகிதாச்சாரம் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது.

//tamil.filmibeat.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக