வியாழன், 25 டிசம்பர், 2014

ராம் விலாஸ் வேதாந்தி BJP MP: அயோத்தியில் 4 ஆயிரம் இஸ்லாமியர்கள் இந்து மதத்துடன் இணைப்பு ?

AYODHYA: The VHP will hold a 'ghar wapsi' programme for 4,000 Muslims in Ayodhya next month, saffron outfit functionary Ram Vilas Vedanti ...அயோத்தியில் அடுத்த மாதம் ஜனவரி 4 ஆயிரம் இஸ்லாமியர்கள் மதம் மாற்றும் நிகழ்ச்சி நடைபெறும் என முன்னாள் பாஜக
நாடாளுமன்ற உறுப்பினர் ராம் விலாஸ் வேதாந்தி தெரிவித்து உள்ளார். இஸ்லாமியர்கள் அவர்களாவே விருப்பமுடன் இந்த மதமாற்றத்திற்கு வருகின்றனர் என வேதாந்தி கூறியுள்ளார். ஆனால், அவர்கள்  குடும்பம் குறித்த அடையாளததை  வெளியிட வேதாந்தி மறுத்து விட்டார். பிறகு அவர்கள் இந்து மதத்தை தழுவ அனுமதிக்கபட மாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதன் விளைவாக இந்த பகுதியில் மதக்கலவரத்தை உருவாக்க முயற்சி செய்பவர்களுக்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுக்கபடும் என பைசாபாத் மாநகர இணை காவல் ஆணையர் சஞ்சய் காக்கர் தெரிவித்து உள்ளார்.
வேதாந்தி மதகலவரத்தை தூண்டி விடும் வகையில் அறிக்கைகள் விட்டதாக பலமுறை கைது செய்யப்பட்டு உள்ளார். சமூகத்தில் இனவாத பிளவை தூண்டியதாக வேதாந்தியை கைது செய்ய வேண்டும் என முஸ்லீம் லீக் செயலாளர் நஜ்முல் ஹசன் ஹானி வலியுறுத்தி வருகிறார்.  tamil.webdunia.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக