வியாழன், 25 டிசம்பர், 2014

காந்தியை ஏன் சுட்டுக் கொன்றேன்: கோட்சே எழுதிய புத்தகம் மறுபதிப்பாகிறது

புதுடில்லி: மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் விநாயக் கோட்சேவின் சகோதரர் கோபால் கோட்சேயால் எழுதப்பட்ட, 'காந்தியை ஏன் சுட்டு கொன்றேன்?' என்ற புத்தகத்தை மறுபதிப்பு செய்ய உள்ளதாக, டில்லியைச் சேர்ந்த பார்சைட் பதிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இப்புத்தகம், நாதுராம் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் உருவானதாகும்.காந்தியை பற்றிய பல்வேறு புத்தகங்கள் வெளிவந்துள்ள போதிலும், அவற்றிற்கு எதிர்மறையான கருத்துக்களை இப்புத்தகம் கொண்டுள்ளதால், அதை மறுபதிப்பு செய்ய முடிவு செய்துள்ளதாக அந்த பதிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. 
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தர்மம் மறுபடியும் வெல்லும் என்பார்கள். இதில் எது தர்மம் எது சூது என்பதை எப்பொழுது தெரிந்து கொள்ள முடியும் என்று தான் தெரியவில்லை.
கோபால் கோட்சே தொகுத்து எழுதிய இந்த புத்தகத்தில், காந்தி கொலை வழக்கின் முழு விவரங்கள், கோர்ட்டின் முன்வைக்கப்பட்ட வாதப் பிரதிவாதங்கள், கோட்சேவின் வாக்குமூலம், நீதிபதியின் தீர்ப்பு குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் புகைப்படங்கள் மற்றும் கோட்சே உயில் தொடர்பான விவரங்கள் அனைத்தும் அடங்கியுள்ளன. முதன்முதலில் மாராத்தி மொழியில் வெளிவந்த இந்த புத்தகம், மொழிபெயர்க்கப்பட்டு, 1970ல் இந்தியிலும், 1993ல் ஆங்கிலத்திலும் வெளியானது. பார்சைட் பதிப்பகம், இந்த ஆண்டு ஆயிரம் ஆங்கில பிரதிகளை அச்சிட்டு விற்பனைக்கு அனுப்பியது. குறுகிய காலத்தில், அனைத்து பிரதிகளும் விற்று தீர்ந்தன. இதற்கு கிடைத்த வரவேற்பை கருத்தில் கொண்டே, பதிப்பு நிறுவனம், மறுபதிப்பு செய்ய முடிவு செய்துள்ளது. தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக