புதன், 24 டிசம்பர், 2014

தமிழகத்தில் மதசார்பற்ற சமூகநீதி கூட்டணி? திராவிடர் கழகம முயற்சி!

சென்னை, டிச.23- சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், சமூக நல்லிணக்கத்திற்கு அச் சுறுத்தலாக உள்ள ஆர்.எஸ்.எஸ்.-பாஜக இந்துத்துவ மதவெறி ஃபாசிசப் போக்குகளைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் விடுதலைச்சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமா வளவன்  தலைமையில் இன்று (23.12.2014) நடைபெற்றது.
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் ஆர்.நல்லகண்ணு, தமிழ் மய்யம் நிறுவனர் ஜெகத் கஸ்பார், தமுமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் உஸ்மான் அலி, பேராசிரியர்கள் அருணன், அ.மார்க்ஸ், திராவிட இயக்கத் தமிழர் பேரவை மாறன், எஸ்டிபிஅய் தெகலான் பாகவி, விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்னியரசு உள்பட ஏராள மானவர்கள் பல்வேறு அமைப்புகளிலிருந்தும் ஆர்ப்பாட் டத்தில் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பேசும்போது குறிப்பிட்டதாவது:
சரியான நேரத்தில்
சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முயற்சி. ஏதோ விடுதலை சிறுத்தைகள் மட்டும் இயங்குகிறார்கள் என்று யாரும் கருத வேண்டாம்.  இந்த மேடையிலே உயர்த்தப் பட்ட கைகள் எப்போதும் தாழாது, எப்போதும் ஓயாது. எப் போதும் வீழாது. இந்தக்கைகள் பதவிக்காக உயர்த்தப்பட்ட கைகள் அல்ல. மாறாக கொள்கைக்காக, இலட்சியத்துக்காக, இந்த நாட்டின் மனிதநேயத்துக்காக, நல்லிணக்கத்துக்காக, ஒரு புது உலகத்தை உருவாக்குவதற்காக, அதோடு பாய்ந்து வரக்கூடிய கொடுமைகளை எல்லாம் தடுத்து நிறுத்துவ தற்காக இந்தக் கைகள் எந்த நேரத்திலும் எந்தக் கருவி களை வேண்டுமானாலும் ஏந்தக்கூடிய கைகளாகவும் ஆகும் என்பதுதான் மிக முக்கியம்.
தமிழகத்திலே அமைதிப்பூங்காவாக இருக்கிற இந்த இடத்திலே இருந்து கிளம்ப வேண்டும். தமிழகம்தான் இந்தியாவுக்கு வழிகாட்ட வேண்டும். தமிழகத்தையே  பெரியார் மண்ணாக இருக்கக்கூடிய இந்த மண்ணை பாபா சாகிப் அம்பேத்கர் அவர்களுடைய கொள்கைக்கு இதுதான் தலைசிறந்த விளைநிலம் என்று சொல்லக் கூடிய இந்த மண்ணை, அதுபோலவே புரட்சியாளர்களுக்கெல்லாம் இதுதான் தலைசிறந்த மண் என்று சொல்லக்கூடிய இந்த மண்ணை காவி மண்ணாக்க வேண்டும்  என்ற முயற்சிகள் ஒருபக்கத்திலே தீவிரமாக பல வடநாட்டுத்தலைவர்களைக் கொண்டுவந்து, இறக்குமதி செய்து, இங்கே யாராவது கிடைப்பார்களா என்று தேடித்தேடிப்பார்த்து, யார் கிடைப்பார்கள் என்று ஓடிப்பார்த்து அவர்கள் தேடிக்கொண்டிருக்கிறார்கள். மத்தியிலே அவர்கள் ஆட்சியிலே அமர்த்தப் பட்டிருக்கிறார்கள். நாம் இங்கிருக்கக்கூடிய அணியினர் அன்றைக்கே எச்சரித்தோம். ஆனாலும் ஏமாந்தார்கள். ஏமாந்த காலத்தில் ஏற்றம் கொண்டோன் புலி வேஷம் போட்டு ஆடுகிறான்; புல் அளவேனும் பொதுமக்களுக்கு மதிப்பேனும் தருகின் க்ஷறானா?  என்று புரட்சிக் கவிஞர் கேட்டார். 6 மாதத்தில் அவர்களின் மறைமுகத் திட்டங்களை வெளிப்படையாகச் செய்வதற்குத் திட்டமிட்டு செய்கிறார்கள்.
மத சார்பற்ற புதிய அணி
திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள் போன்ற அமைப்புகள், இடது சாரிகள், முற்போக்கு சிந்தனையாளர்களாக இருக்கின்ற மற்ற சிறு பான்மை மக்கள் அத்தனைப்பேரையும் ஒருங்கிணைத்து மதசார்புக்கு அப்பாற்பட்ட மதசார்பற்ற ஒரு அணி, மத வெறியை மாய்த்து மனித நேயத்தைக் காக்கக்கூடியவகையிலே ஒரு சிறப்பான Secular, Social Justice, Caste and Untouchability Eradication Front
என்று சொல்லக் கூடிய  மதச்சார்பற்ற,  சமூகநீதியைக் காப்பாற்றுகின்ற ஜாதியை தீண்டாமையை ஒழிக்கின்ற ஒரு மகத்தான அணி ஒன்றை விரைவில் ஏற்படுத்துவதற்கு நாங்கள் திட்டமிட்டிருக்கிறோம். அதைக் கூட்டு வதற்குத் தயாராக இருக்கிறோம். அதற்காக அச்சாரமாகத்தான் இங்கே நம்முடைய தலைவர்கள் கைகளை உயர்த்தி இருக்கிறார்கள்.
உயர்த்தப்பட்ட இந்தக் கைகள் உரிமைகள் கோரும் கைகளாக மாறும் என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை. கோரிக்கைகள் ஒன்று தான். கோடி கைகள் பலவாக இருந்தாலும்!
இந்தக்கூட்டம் ஓர் எச்சரிக்கை மணி அடிக்கும் கூட்டம். - இவ்வாறு தமிழர் தலைவர் தம் பேச்சில் குறிப்பிட்டார்.

.viduthalai.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக