சென்னை ஐகோர்ட்டில் மூவிலேண்ட் நிறுவனத்தின் உரிமையாளர் கே.பி.ரவிச்சந்திரன் தாக்கல் செய்த மனுவில்
கூறப்பட்டு இருப்பதாவது:-
>
எங்கள் நிறுவனத்தின் சார்பில் ஆயிரத்து 891 சினிமாக்களின் வீடியோ, டி.வி.டி., எம்.பி.3 போன்றவற்றுக்கான
காப்புரிமை பெறப்பட்டுள்ளது. இவற்றில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்கள் வி.சி.டி., டி.வி.டி. வடிவில் எங்களின்
ஏஜெண்டுகள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மூலமாக விற்கப்படுகின்றன.
ஆனால் முகவர்களை திருட்டு வீடியோ ஒழிப்பு போலீசார் தேவையில்லாமல் துன்புறுத்துகின்றனர். அவர்கள் மீது
வழக்கு பதிவு செய்கின்றனர். இதுதொடர்பாக போலீஸ் அதிகாரிகளுக்கு மனு கொடுத்தேன். அதில் எந்தவித
நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே எங்கள் நிறுவனத்தின் சார்பில் டி.வி.டி., சி.டி. விற்பனை செய்கிறவர்கள்
மீது நடவடிக்கை எடுப்பதை தடுத்து உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கை நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் விசாரிக்கிறார். இந்த நிலையில் மனுவுக்கான பதில்மனுவை திருட்டு
வீடியோ தடுப்புப் பிரிவு போலீஸ் சூப்பிரண்டு ஜெயலட்சுமி சார்பில் கூடுதல் அரசுப் பிளீடர் சஞ்சய்காந்தி தாக்கல்
செய்தார். முதல்ல திருட்டுதனமா அதிக விலைக்கு டிக்கெட்டுக்கள் விற்பதை தடை செய்யவேண்டும் அப்புறமா திருட்டு சிடியை தேடுங்க. நடிகருங்க படங்களை பில்டப் பண்ணி ஜனங்களை முட்டாளாக்கி அதிகவிலைக்கு டிக்கெட்டுக்களை விக்கிறத யாரும் கண்டுக்கிறதில்லை ஏன்?
அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- காப்புரிமை தொடர்பான ஆவணங்களை அந்த நிறுவனமோ அல்லது விற்பனையாளர்களோ காட்டவில்லை. விற்பனையாளர்கள் யார் என்பதற்கான பட்டியலையும் அவர்கள் தரவில்லை. ஆனால் அவர்கள் பல்வேறு படங்களை விற்பனை செய்கின்றனர். சட்டத்துக்கு உட்பட்டு விற்பனை செய்கிறவர்களை நாங்கள் துன்புறுத்துவதில்லை. சட்டத்தின்படிதான் சோதனை நடத்துகிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. நாளை (செவ்வாய்க்கிழமை) இந்த மனு விசாரணைக்கு வருகிறது. maalaimalar.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக