தி.மு.க.,வில் தற்போது மாவட்டச் செயலர்கள் தேர்தல் நடந்து
வருகிறது.சென்னையில் நான்கு மாவட்டங்களிலும், சுமுகமாக பேசி முடித்து,
மா.செ.,க்களை அறிவிக்க தலைமை முடிவெடுத்து, அதற்கான பேச்சு வார்த்தை
நடந்தது.சென்னை கிழக்கு மாவட்டத்திற்கு சேகர் பாபுவை, மா.செ.,வாக்க
வேண்டும் என, கட்சியின் பொருளாளர் ஸ்டாலின் விரும்புகிறார்.
இந்த மாவட்டத்துக்கு செயலராக முன்னாள் எம்.எல்.ஏ., ரங்கநாதனை நியமிக்க வேண்டும் என, கட்சியின் பொதுச்செயலர் அன்பழகன் கொடிபிடித்தார். இதையடுத்து, கோபால புரத்தில் உள்ள கருணாநிதியின் வீட்டில் நேற்று காலை, பேச்சு நடந்துள்ளது. இதுகுறித்து, கட்சி வட்டாரங்களில் கூறியதாவது:சென்னையின் நான்கு மாவட்டங்களில், கிழக்கு மாவட்டத்தில் மட்டும் தன் ஆதரவாளர் ரங்கநாதனை நியமிக்க வேண்டும் என, கருணாநிதியிடம் வலியுறுத்தினார் அன்பழகன்.
இருந்தும், அந்த பதவிக்கு சேகர் பாபுவை கொண்டு வர, ஸ்டாலின் முயற்சிக்க, இது தொடர்பாக பேசி முடிப்பதற்காக, நேற்று காலை, கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டிற்கு அன்பழகன் வந்தார்; பேச்சு நடந்தது.'சேகர் பாபுவைத் தான் நியமிக்க வேண்டும்' என, ஸ்டாலின் உறுதியாக இருக்க, கோபமடைந்த அன்பழகன், பேச்சு வார்த்தையின் போதே கிளம்பிச் சென்று விட்டார்.இவ்வாறு, தி.மு.க., வட்டாரங்கள் தெரிவித்தன.
- நமது நிருபர் dinamalar.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக