புதன், 24 டிசம்பர், 2014

பெருமாள் கோயில் உண்டசோறு! இது படத்தின் பெயர்!

பாய்ஸ் படத்தில் ஊர் முழுவதும் எந்த கோயிலில் என்ன பிரசாதம் தருவார்கள் என்று பட்டியலிட்டு வைத்திருக்கும் செந்தில் அதை வாங்கி சாப்பிட்டே பொழுதை கழிப்பார். இந்த காமெடிக் காட்சியின் பாதிப்பாக புதுமுகங்கள் நடிக்கும் படத்துக்கு ‘பெருமாள் கோயில் உண்டசோறு‘ என்று பெயரிடப்பட்டுள்ளது.இதுபற்றி இப்பட இயக்குனர் வி.டி.ராஜா கூறும்போது,‘மூன்று சகோதரிகளுடன் பிறந்த ஒருவன் எந்த வேலைக்கும் போகாமல் பெருமாள் கோயிலில் தரும் உண்டச் சோறு வாங்கி சாப்பிட்டே காலத்தை கடத்துகிறான். அவனது சகோதரிகளுக்கு தடபுடலாக திருமணம் நடக்கிறது.
அதிசயமாக நடக்கும் இந்த நிகழ்வுகள் எப்படி நடக்கிறது என்பதை காமெடியுடன் விளக்குகிறது படம். சந்தோஷ்குமார், பாபுஜி, ராஜா, கீர்த்தி, சுமோசிவா, அகிலா உள்பட பலர் நடித்துள்ளனர். கார்த்திக்-பாலபாரதி இசை. சந்தோஷ்குமார், பாபுஜி, கிங்ஸ்டன் தயாரிக்கின்றனர் tamilmurasu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக