ஞாயிறு, 21 டிசம்பர், 2014

நடிகை பாமா நல்ல கதைகள் உள்ள படங்களில் மட்டும்தான்

எல்லாம் அவன் செயல், ராமானுஜம் படங்களில் நடித்தவர் பாமா. கைவசம் நிறைய படம் இல்லாமல் மல்லுவுட்டில் கவனம் செலுத்துகிறார். அங்கும் ஒன்றிரண்டில் மட்டுமே நடித்து வருகிறார். சமீபத்தில் ‘கிராந்தி' மலையாள படத்தில் ஹீரோயினாக பாமா நடிக்கிறார் என மல்லுவுட் இயக்குனர் லெனின் கூறினார். இதை கேட்டு ஷாக் ஆனார் பாமா. அந்த படத்தில் நான் நடிக்கவில்லையே என்று கூறியவர் மேலும் தொடர்ந்தார். ‘கிராந்தி படத்தின் ஸ்கிரிப்ட்டை எனக்கு இயக்குனர் கூறினார். ஆனால் அதில் நடிப்பதாக கூறவில்லை. படத்தில் நடிப்பதை நான் உறுதி செய்யாத நிலையில் இயக்குனரே தன் இஷ்டத்துக்கு நான் நடிப்பதாக கூறி இருக்கிறார். ஸ்கிரிப்ட் பிடிக்காததால் அப்படத்தில் நான் நடிக்க மறுத்துவிட்டேன்‘ என்றார்.
‘பாமாவிடம் கால்ஷீட் வாங்காமலேயே அவர் நடிப்பதாக கூறியது ஏன்?‘ என்று இயக்குனரிடம் கேட்டபோது, ‘கால்ஷீட் பிரச்னையால் அவரால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது' என்று சமாளித்தார். அதைக்கேட்டு கடுப்பான பாமா, ‘நான் நல்ல கதைகளுக்காகவே காத்திருக்கிறேன். அதுபோன்ற படங்களுக்கு மட்டுமே டேட்ஸ் தருவேன். என்னிடம்  நிறைய கால்ஷீட் இருக்கிறது' என்றார். - .tamilmurasu.org/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக