ஞாயிறு, 21 டிசம்பர், 2014

லிங்கா விநியோகஸ்தர்கள் போலீசில் புகார் ! நஷ்டமாம் ! பில்டப்பை பார்த்து அதிக விலை கொடுத்து .....

Lingaa lost ? distributors upset ? லிங்கா’ திரைப்படம் சரியாக வசூலா காததைத் தொடர்ந்து சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் திரைப்பட விநியோகஸ்தர்கள் நேற்று மாலை ஒரு மனுவைக் கொடுத்தனர்.
இதையடுத்து ரஜினியை நேரில் சந்தித்து முறையிட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விநியோகஸ்தர்கள் தரப்பில் கூறியதாவது:- ‘லிங்கா’ திரைப்படத்தை கோடிக்கணக்கில் பணம் கொடுத்து வாங்கி வெளியிட்டுள்ளோம்.
ஆனால் சரியாக வசூலாகவில்லை. குறிப்பாக திருநெல்வேலி, கன்னியாகுமரி பகுதிகளில் 4.20 கோடி ரூபாய் கொடுத்து படத்தை வாங்கினோம். ஆனால் இதுவரை ரூ.1.50 கோடி மட்டுமே வசூலாகியுள்ளது.

இதே நிலைமைதான் பெரும்பாலான பகுதிகளில்  நிலவுகிறது. இதனால் திரையரங்க உரிமையாளர்கள் எங்களை நெருக்குகின்றனர். இதுதொடர்பாக நாளை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினிகாந்தை சந்தித்து கோரிக்கை மனு கொடுக்கவுள்ளோம் என்று தெரிவித்துள்ளனர் dinamani.com  .திருட்டு டிவிடி வியாபாரிகளுக்கும் நஷ்டமா ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக