செவ்வாய், 23 டிசம்பர், 2014

தாகபூமி தான் கத்தி ? குறும்பட இயங்குனர் வழக்கு! முருகதாஸ் விஜய் மீது வழக்கு!


விஜய்யின் கத்தி கழுத்தில் மீண்டும் கத்தி குறும்பட இயக்குநர் கண்ணீர் கத்தி திரைப்பட இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் விஜய் உள்ளிட்ட 5பேர் மீது 2கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு குறும்பட இயக்குனர் அன்பு.ராஜசேகர் வழக்கு தொடுத்திருக்கிறார். தாகபூமி என்ற குறும்படத்தை இயக்கிய அன்பு.ராஜசேகருக்கு "கத்தி"யால் என்ன பிரச்சினை?.தஞ்சை மாவட்டம், இளங்காடு பகுதியை சேர்ந்த தாகபூமி குறும்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான அன்பு.ராஜசேகர் தஞ்சையில் அளித்த பேட்டி வருமாறு:-விவசாயிகளின் அவலநிலை, விவசாயிகளின் தற்கொலை பற்றிய கதையாகத்தான் தாகபூமி என்ற குறும்படத்தை கடந்த 24.12.2012 அன்று தயாரித்து வெளியிட்டேன். 2012 மார்ச் 10ஆம் தேதி நார்வே தமிழ்பட விழாவில் தாகபூமி இந்தியா சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டு திரையிடப்பட்டது. மாநில அளவில் நடைபெற்ற குறும்பட போட்டியில் இயக்குநராக இருந்த மறைந்த பாலுமகேந்திரா-வால் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது, இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் உள்ளிட்ட பலர் முன்னிலையில் படம் திரையிடப்பட்டு பாராட்டுகளையும் பெற்றேன்
இந்நிலையில் கத்தி திரைப்பட இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது டுவிட்டரில் உதவி இயக்குநராக சேர விருப்பமுள்ளவர்கள் தனது மின்னஞ்சலுக்கு தங்களின் விபரங்களை அனுப்ப சொல்லி 30.05.2013 அன்று கேட்டிருந்தார். அதன்படி தாகபூமி குறும்படம் தொடர்பான அனைத்து விவரங்களும் நான் அனுப்பி இருந்தேன்.

 இந்த சூழலில் கடந்த 22.10.2014 அன்று வெளிவந்த கத்தி படத்தில் எனது குறும்படத்தின் பல காட்சிகள் நேரிடையாகவும், மறைமுகமாகவும் இருப்பதை பார்த்து அதிர்ச்சிக்குள்ளானேன். உடனடியாக இதுகுறித்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை பார்க்க பலமுறை முயற்சித்தும் பார்க்கவே முடியவில்லை. தொலைபேசியிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. 

என்னை நம்பி குறும்படம் தயாரிப்பாளருக்கு பொருளாதார நஷ்டத்தை ஏற்படுத்தியதுடன் எனது உழைப்பை இதன் மூலம் ஏர்.ஆர்.முருகதாஸ் சிதைந்துவிட்டார். இதுபோன்ற சம்பவம் இனி நடைபெறாமல் இருக்கவும், எனக்கு நியாயம் கிடைக்கவும் இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ், நடிகர் விஜய் உள்ளிட்ட 5பேர் மீது 2கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு தஞ்சை நீதிமன்றம் மூலம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறேன். மேலும் கத்தி படத்தின் மூலம் வருமானம் குறித்து தகவலும் கேட்டிருக்கிறேன். இனி கத்தி திரைப்படத்தை வேறுமொழியில் திரையிடக்கூடாது எனவும் நோட்டீஸ் மூலம் அனுப்பியிருக்கிறேன்" என்றார் கண்ணீர் மல்க.

அமைதியாக அநீதி இழைக்கப்படுகிறது. "கத்தி" தான் நீதி பெற வேண்டியிருக்கிறது.

- க.செல்வகுமார் nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக