புதன், 24 டிசம்பர், 2014

பயங்கரவாதிகளுக்கு பயந்து யாஸிடி பெண்கள் கூட்டாக தற்கொலை


பெய்ரூட்: ஈராக்கில், ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள் வசம் சிக்கிய, யாஸிடி சிறுபான்மையின பெண்களை, அந்த பயங்கரவாதிகள், செக்ஸ் அடிமைகளாக பயன்படுத்திய கொடுமையும், அதற்கு அஞ்சி, ஏராளமான சிறுமியரும், பெண்களும் தற்கொலை செய்து கொண்ட தகவலும் தெரிய வந்துள்ளது.மேற்காசிய நாடுகளான சிரியா மற்றும் ஈராக்கின் பல பகுதிகளை கைப்பற்றியுள்ள, ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள், கிறிஸ்தவர்கள், ஷியா பிரிவு முஸ்லிம்கள், யாஸிடி இனத்தவர் போன்ற சிறுபான்மையினத்தவருக்கு சொல்லொணா துயரங்களை கொடுத்து வருகின்றனர்.குறிப்பாக, ஈராக்கின் வடக்கு பகுதியில் வாழும் யாஸிடி இனத்து ஆண்களை கொன்று குவித்த பயங்கரவாதிகள், அந்த இனத்தைச் சேர்ந்த பெண்கள் மற்றும் சிறுமியரை பிடித்துச் சென்று, சண்டையில் ஈடுபடும் பயங்கரவாதிகளின் செக்ஸ் தேவைகளை பூர்த்தி செய்யும் செக்ஸ் அடிமைகளாக மாற்றினர்.இத்தகைய கொடுமைகளை செய்வது, ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் சன்னி பிரிவினர் தான். அதுவும், வயது முதிர்ந்த பயங்கரவாதிகள் கூட, இளம் பெண்களையும், சிறுமியரையும் பலாத்காரம் செய்த கொடுமையும் நடந்துள்ளது.  இதுதான் இந்த மதவெறியர்கள் உலகிற்கு கூறும் ஒழுக்க நெறி. இன்று நேற்றல்ல பலநூறு ஆண்டுகளாக இந்த மத வெறியர்கள் பெண்களைப போகப் பொருளாகவே பார்த்துவருவதன் வெளிப்பாடுதான் யாசிடிப் பெண்களின் தற்கொலை.


கூட்டம் கூட்டமாக, யாஸிடி இன பெண்களை இழுத்துச் சென்ற அந்த கொடியவர்களின் கைகளில் சிக்க விரும்பாத பல பெண்கள், வினோதமான முறையில் தற்கொலை செய்து கொண்டனர். கழுத்தில் கட்டப்படும், 'ஸ்கார்ப்' துணியால், பெண்கள், ஒருவருக்கொருவர் இழுத்து, மூச்சு திணறி தற்கொலை செய்து கொண்டனர்.சிறுமியர் பலர், துாக்கில் தொங்கி உயிரை மாய்த்துக் கொண்டனர். அந்த கொடியவர்களின் பிடியில் சிக்கிய பெண்கள், பலருக்கு விருந்தாக்கப்பட்டதைப் பார்த்த பல பெண்கள், கூட்டம், கூட்டமாக தற்கொலை செய்து கொண்டனர்.உயிர் தப்பி, 'ஆம்னஸ்டி இன்டர்நேஷனல்' என்ற சர்வதேச அமைப்பிடம் சரணடைந்த சில யாஸிடி பெண்கள், இந்த தகவல்களை அவர்களிடம் தெரிவித்துள்ளனர்.

இனத்தை வேறோடு அழித்தல்:மேற்காசியாவில் சன்னி பிரிவு முஸ்லிம்கள் தவிர, பிற இனத்தவர் இருக்கக் கூடாது. அவ்வாறு இருப்பது, தங்களின் குறிக்கோளுக்கு எதிரானது என, தவறுதலாக கருதிய பயங்கரவாதிகள், பிற இனத்தவரை கூண்டோடு அழித்தனர்.சிறுபான்மை இனத்து பெண்களை கற்பழிப்பதன் மூலம், அவர்கள் மூலம் தங்கள் வாரிசுகளை பிறக்கச் செய்து, இனத்தை அதிகரிக்கவும், எதிர் இனத்தை அழிக்கவும் முயன்றுள்ளனர். dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக