வே.மதிமாறன்
மதமற்றவனாகக் காட்டுவதற்கும் மதங்களைக்
கேலி செய்து கிழிப்பதற்கும் ‘வேற்றுக்கிரகத்திலிருந்து வந்தவன்’ என்ற
நாயகனின் அடையாளம் ரொம்பப் புத்திசாலித்தனம்.
‘அறிவாளியாக’ மதங்களை அம்பலப்படுத்தும்போது
எழுகிற எதிர்ப்பு, ‘அப்பாவியாக’ கேட்கிற கேள்விகளில் மதங்கள் கிழிந்துத்
தொங்குவதை மதவாதிகளே கை தட்டி வரவேற்கிற முறையாக மாறிவிடுகிறது.
நாயகனின் ‘வெகுளி’த்தனம்; இயக்குநர் ராஜ்குமார் ஹிராணி அறிவாளி, மாமேதை என்பதை அடையாளப்படுத்துகிறது.
இவரின் முந்தைய படங்களான Munna Bhai M.B.B.S. – 3 Idiots படங்களை விட ‘PK’ மிகச் சிறப்பான படம் மட்டுமல்ல, மிகத் தைரியமான படம்.
இவரின் முந்தைய படங்களான Munna Bhai M.B.B.S. – 3 Idiots படங்களை விட ‘PK’ மிகச் சிறப்பான படம் மட்டுமல்ல, மிகத் தைரியமான படம்.
நேர்த்தியான திரைக்கதையும் பொருத்தமான
வசனங்களும் மாற்றுக் கருத்து உள்ளவர்களையும் வசப்படுத்திவிடும் என்பதற்கு,
நெற்றியில் நீட்டி பொட்டு வைத்திருந்தவர்களும் கடவுள்கள், மதங்கள் குறித்த
கேலிகளுக்குக் கை தட்டிக் கொண்டாடியதே சாட்சி.
நேற்றைய வேலை நாளிலும் கூட, ஒரு இந்திப்
படம் சென்னை தேவிபாரடைஸ் திரையரங்கில், தமிழர்களும் இந்திக் காரர்களுமாக
நிரம்பி வழிந்தது. 3 Idiots யை தாண்டிய வெற்றி. (‘ஐ’ – ‘என்னை அறிந்தால்’
முன்னோட்டக் காட்சிகளின் போது கேட்ட கை தட்டல்கள், தமிழ் ரசிகர்கள் நிறைய
வந்திருக்கிறார்கள் என்பதை அடையாளப்படுத்தியது.)
படம் புரிவதற்கு ‘இந்தி’ தெரியனும் என்கிற
அவசியம் இல்லை. எனக்கே புரிஞ்சது. ஆங்கிலச் சப் டைட்டிலுடன்
திரையிடப்படுகிறது. (அப்படியும் புரியாத சில இடங்களை என் மகன் கவின் இடம்
விளக்கம் கேட்டுப் புரிந்து கொண்டேன்.)
‘நம்ம ‘பகுத்தறிவு’ கமல்ஹாசன் போன்றவர்
தமிழில் இப்படியொரு படத்தை எடுப்பார்களா?’ என்று எதிர்ப்பார்ப்பதை விட,
இந்தப் படத்தைத் தமிழில் எடுத்தால், அதன் உண்மையை மலினப்படுத்தாமல்
எடுத்தாலே மகிழ்ச்சி.
வேற்றுக் கிரகவாசி ‘அய்யங்கார்’ அல்லது ‘வைணவ’ அடையாளம் என்று காட்டாமல் விட்டாலோ.. இன்னும் கோடானகோடி நன்றி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக