செவ்வாய், 23 டிசம்பர், 2014

அடிபட்ட குரங்கை போராடி மீட்ட ஹீரோ குரங்கு (வீடியோ இணைப்பு)

மின்சாரக் கம்பியில் அடிபட்டு தண்டவாளத்தில் விழுந்த தனது நண்பனை தூக்கி ஆசுவாசப்படுத்தி 20 நிமிடங்கள் விடாமல் போராடி சுயநினைவைக் கொண்டு வந்து காப்பாற்றிய ஹீரோ குரங்கு பற்றியது தான் இந்த செய்தி.
கான்பூர் ரயில் நிலையத்தில் ஓடித் திரிந்து கொண்டிருந்த குரங்கு ஒன்று உயர் அழுத்த மின்சாரக் கம்பியில் அடிபட்டு மயக்கமடைந்து தண்டவாளத்தில் விழுந்தது.

இதனைப் பார்த்த பயணிகள், அந்த குரங்கு இறந்துவிட்டதாக நினைத்தனர். ஆனால், அதனுடன் இருந்த மற்றொரு குரங்கு, அடிபட்ட குரங்கை இழுத்துக் கொண்டு பாதுகாப்பான இடத்தில் படுக்க வைத்தது. அதனைத் தட்டிக் கொடுத்து உலுக்கி எடுத்தது. அப்போதும் நினைவு திரும்பாததால், குரங்கின் கழுத்துப் பகுதியை ஹீரோ குரங்கு கடித்தது.
அப்போதும் அது சுயநினைவை அடையாததால், ஓரமாக தேங்கியிருந்த தண்ணீரில் அடிபட்ட குரங்கைப் போட்டு முக்கியது. மீண்டும் மீண்டும் தண்ணீரில் போட்டு எடுத்தது.
இவ்வளவு முயற்சிகளுக்கும் பிறகு, அடிபட்ட குரங்கு மெல்ல கண்விழித்துப் பார்த்தது.
பிறகு அதனை ஆசுவாசப்படுத்திய ஹீரோ குரங்கு, தனது நண்பன் கண் விழித்ததால் உற்சாகமடைந்தது. இதனை அங்கிருந்த ஆயிரக்கணக்கான பயணிகள் தங்களது செல்போன்களில் பதிவு செய்தனர்.
மனிதனுக்கு மனிதன் இதுபோன்ற உதவிகளைச் செய்ய யோசிக்கும் இந்த காலத்தில், குரங்கு ஒன்று கைதேர்ந்த மருத்துவரைப் போல ஒரு உயிரைக் காப்பாற்றியது காண்பவரை கண்கலங்க வைத்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக