Vaiko becomes devotee of patteeshwaram amman !அணை கட்டும் கர்நாடகா அரசின் திட்டத்தை எதிர்த்தும், பூரண மதுவிலக்கை
வலியுறுத்தியும், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தஞ்சை மற்றும் நாகை
மாவட்டங்களில் பிரச்சார யாத்திரை மேற்கொண்டு உள்ளார்.தஞ்சையில்
அவர் பயணம் செய்தபோது, 18ம் தேதி மாலை, பட்டீஸ்வரம் சென்றார். அங்குள்ள
துர்க்கை அம்மன் கோவில் முன் அவர், பொதுமக்களிடையே பேசினார். பின்னர்,
தோளில் கிடந்த கருப்பு துண்டை கழற்றி விட்டு, கோவிலுக்கு சென்றார். அம்மன்
முன் நின்று வணங்கினார். தீபாராதனை நடத்தப்பட்டு, அவருக்கு பரிவட்டம்
கட்டி, பூரண கும்ப மரியாதை அளித்தனர். இந்த நாடகம் அந்த மேடையில் எத்தனை நாளம்மா?அம்மா எத்தனை நாளம்மா
அதை அவர் ஏற்றுக் கொண்டார்.வைகோ, கடவுள் மறுப்பு கொள்கையை கொண்டவர். அதன் அடையாளமாக, கருப்பு துண்டை, தன் தோளில் எப்போதும், அவர் அணிந்திருப்பது வழக்கம். மத வழிபாடுகளிலும் அவர் கலந்து கொள்வதில்லை.பல ஆண்டுகளாக இதை கடைபிடித்து வரும் வைகோ, கடந்த 18ம் தேதி, பட்டீஸ்வரம் துர்க்கை அம்மன் கோவிலுக்கு சென்றபோது மட்டும், கருப்பு துண்டை தோளில் இருந்து கழற்றி உள்ளார்.வைகோவிடம் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம், அவரது கட்சியினரை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. இந்து மதத்திற்கு எதிரானவர் என்ற தோற்றத்தை அவர் களைய விரும்பியதன் அடையாளம் தான், இந்த வழிபாடு என அவரது கட்சியினர் கூறுகின்றனர்.nakkheeran.in

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக