ஞாயிறு, 21 டிசம்பர், 2014

இன்சுரன்ஸ் துறையில் 49 வீதம் அந்நிய முதலீட்டுக்கு அவசர சட்டம் இயற்ற மோடி அவசரம்! எதிர்கட்சிகள் போர்க்கொடி!

FDI for insurance sector?புதுடில்லி: பார்லிமென்டில் எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு இல்லாததால், இன்சூரன்ஸ், நிலக்கரி சட்ட திருத்த மசோதாக்களை அவசர சட்டம் மூலம் நிறைவேற்ற, பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.நரேந்திர மோடி, மே மாதம் பிரதமராக பதவியேற்றபோது, நாட்டின் பொருளாதாரத்தை சீரமைத்து, வேலை வாய்ப்பை அதிகரிப்பதற்கு முன்னுரிமை அளிக்கப் போவதாக அறிவித்தார்.இதன் அடிப்படையில், இன்சூரன்ஸ் துறையில் தற்போதுள்ள, 26 சதவீத அன்னிய முதலீட்டு வரம்பை, 49 சதவீதமாக அதிகரிப்பதற்கும், நிலக்கரி துறையில், தனியாருக்கு அனுமதி அளிப்பதற்கும், சட்ட திருத்த மசோதாக்களை நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டது. கடந்த மழைக்கால கூட்டத் தொடரில், இந்த மசோதாக்களை நிறைவேற்ற முடியவில்லை.
ஜனநாயக முறையில் இவர்களால் ஆட்சி செய்ய முடியாது என்பதைத்தான் இது காட்டுகிறது. அனைத்து மக்களையும் அரவணைத்து செல்லும் பக்குவம் இல்லாதவர்களிடம் தங்களை ஆளும் பொறுப்பை கொடுத்தால் இவர்களை ஆதரிப்பவர்களுக்கும் கூட இவர்களால் நல்லது செய்ய முடியாது. இன்று எதிர்த்தரப்பினருக்கு தொல்லை கொடுப்பவர்கள் அங்கெ இங்கே கை வைத்து கடைசியில் தன்தரப்பினர் தலையிலேயே கை வைக்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்.
இதையடுத்து, நடப்பு குளிர்கால கூட்டத் தொடரில் இந்த மசோதாக்களை நிறைவேற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் மத மாற்ற நடவடிக்கைகள், மத்திய அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துக்கள், கோட்சேவுக்கு சிலை வைக்கப் போவதாக பா.ஜ., எம்.பி., ஒருவர் கூறியது போன்ற பிரச்னைகளால், பார்லிமென்டின் இரு சபைகளிலும், எதிர்க்கட்சிகள் கடும் அமளியை ஏற்படுத்தி வருகின்றன.




பலனில்லை:

'ராஜ்யசபாவில் பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க வேண்டும்' என்றும், எதிர்க்கட்சிகள் பிடிவாதமாக உள்ளன. அவர்களை சமாதானப்படுத்த ஆளும் கட்சி தரப்பில் மேற்கொண்ட முயற்சி பலன் அளிக்கவில்லை. பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடர், வரும், 23ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. கூட்டத் தொடர் முடிய, இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், இந்த மசோதாக்களை நிறைவேற்ற எதிர்க்கட்சிகளிடம் ஒத்துழைப்பு கிடைக்காது என, அரசு தரப்பில் உறுதியாக நம்பப்படுகிறது. மசோதாக்களை நிறைவேற்றாவிட்டால், தொழில் துறை வட்டாரத்தில், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக, எதிர்மறையான கருத்துக்கள் உருவாகும். பொருளாதார வளர்ச்சி குறித்து, அளித்த வாக்குறுதிகளை பிரதமர் நிறைவேற்றவில்லை என்ற அதிருப்தி ஏற்படும் என, அரசு தரப்பு கருதுகிறது. இந்த நெருக்கடியை சமாளிப்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி, அவசர சட்டம் மூலம் மசோதாக்களை நிறைவேற்றும் அதிரடி முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.



இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:

இந்த இரண்டு நாட்களுக்குள், மசோதாக்களை நிறைவேற்ற முடியவில்லை எனில், அவசர சட்டம் மூலம் நிறைவேற்றுவது என, பிரதமர் மோடி உறுதியாக உள்ளார். இதுகுறித்து அரசு தரப்பில் தீவிரமாக ஆலோசிக்கப்படுகிறது. ஆனால், பார்லிமென்ட் கூட்டத் தொடர் முடிந்தால் தான், இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக முடிவு எடுக்கப்படும். இவ்வாறு, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

முந்தைய அரசும் முயற்சி

* இன்சூரன்ஸ் துறையில், 26 சதவீதமாக உள்ள அன்னிய முதலீட்டை, 49 சதவீதமாக அதிகரிக்க, முந்தைய காங்., அரசும், கடும் முயற்சி செய்தது.

* தற்போது, பா.ஜ., அரசு, அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.

* ராஜ்யசபாவில், பா.ஜ., அரசுக்கு பெரும்பான்மை இல்லை. இதனால், இரு சபைகளின் கூட்டு கூட்டத்தை கூட்டி, இந்த மசோதாவை நிறைவேற்ற, மத்திய அரசு திட்டமிட்டது. கடைசி நேரத்தில் இந்த திட்டம் கைவிடப்பட்டது.

* இன்சூரன்ஸ் சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டால், இந்தியாவுக்கு, 12 ஆயிரம் கோடி ரூபாய் அன்னிய முதலீடு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

* அவசர சட்டம் நிறைவேற்றப்பட்டாலும், அடுத்த கூட்டத் தொடர் துவங்கிய, ஆறு வாரங்களுக்குள், பார்லிமென்டில் அதற்கு ஒப்புதல் வாங்க வேண்டும்.

* இதன்பின், ஜனாதிபதி இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். இல்லையெனில், அவசர சட்டம் காலாவதியாகி விடும்.



மசோதாவை தடுக்க முடியாது:

இன்சூரன்ஸ் மசோதா, மிகுந்த கவனத்துடன், தேச நலன் மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகள் இதற்கு முட்டுக்கட்டை போடுகின்றன. இருப்பினும், இந்த மசோதாவை, அரசியல் கட்சிகள் தடுக்கவோ அல்லது தாமதப்படுத்தவோ முயற்சிப்பதை, மத்திய அரசு ஒரு போதும் அனுமதிக்காது.

அருண்ஜெட்லி, மத்திய நிதி அமைச்சர் தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக