வெள்ளி, 26 டிசம்பர், 2014

கலைஞர்: பெரியாருக்கும் அண்ணாவுக்கும் பாரதரத்னா விருது வழங்கவேண்டும்! அவிங்க திராவிடரத்னா !

பாரத ரத்னா விருது பெற்ற, முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய்க்கு திமுக தலைவர் கருணாநிதி, வாழ்த்து தெரிவித்துள்ளதுடன், பாரத ரத்னா விருதை அண்ணாவுக்கும், பெரியாருக்கும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் இது குறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், திமுக விடமும், குறிப்பாக என்னிடமும் நெருங்கிய அன்பு கொண்டவருமான, இந்தியாவின் முன்னாள் பிரதமர் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய்க்கும், சுதந்திர போராட்ட வீரர் மதன்மோகன் மாளவியாவுக்கும் “பாரத ரத்னா” விருது வழங்க மத்திய அரசு முன் வந்திருப்பதற்காக நன்றி கூறுவதோடு, விருது பெற்ற தலைவர்களுக்கு தி.மு.க. சார்பில் வாழ்த்தினை தெரிவித்துக் கொள்கிறேன்.

இதே நேரத்தில் திமுக வைத் தோற்றுவித்த அண்ணாவுக்கு “பாரத ரத்னா“ விருது வழங்க வேண்டும் என்று 24–8–2014 அன்று இந்திய குடியரசு தலைவருக்கும், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நான் கடிதம் எழுதியிருந்தேன்.
எனவே அண்ணாவுக்கும், அறவாசான் தந்தை பெரியாருக்கும் “பாரத ரத்னா“ விருது வழங்கி தமிழ்நாட்டிற்கும், திராவிட இயக்கத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று மீண்டும் ஒருமுறை பிரதமரையும், குடியரசு தலைவரையும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.tamil.webdunia.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக