சனி, 10 மார்ச், 2012

நடிகை ரீமா சென் திருமணம்

தனது நீண்ட நாள் காதலர் ஓட்டல் அதிபர் ஸிவ் கரன்சிங்கை நாளை மணக்கிறார் பிரபல நடிகை ரீமா சென்.


மின்னலே படம் மூலம் தமிழில் அறிமுகமாக முன்னணி நடிகையாகத் திகழ்ந்தவர் ரீமா சென். கொல்கத்தாவை சேர்ந்த இவர், தெலுங்கு, வங்காளம் மற்றும் இந்தி படங்களிலும் நடித்துள்ளார்.
தமிழில் செல்வராகவன் இயக்கத்தில் இவர் நடித்த ஆயிரத்தில் ஒருவன்தான் கடைசிப் படம். ராஜபாட்டையில் ஒரு பாட்டுக்கு ஆடிவிட்டுபப் போனார்.
வாய்ப்புகள் பெரிதாக இல்லாத நிலையில், ரீமாசென்னுக்கும், ஷிவ் கரன்சிங்குக்கும் இடையே காதல் மலர்ந்தது. ஷிவ்கரன்சிங் டெல்லியில் ஓட்டல்கள் மற்றும் 'பார்' நடத்தி வருகிறார். கடந்த 2 வருடங்களாக இருவரும் காதலித்து வந்தனர்.

சங்கரன்கோவில்: “டாக்டரை சென்னையில் ‘பிக்ஸ்’ பண்ணியாச்சு!”

Viruvirupu
சங்கரன்கோவிலில் போட்டியிடும் கட்சிகள் அனைத்துமே (ஆம். அனைத்துமே) ஏதோ ஒரு வகையில் ஜாதி வாக்குக் கணக்கு போட்டுத்தான் அரசியல் செய்கின்றன. அந்த வகையில் தொகுதிக்குள் உள்ள தலித் வாக்குக்களை கவர, எல்லோருமே ஏதோ ஒரு வியூகம் வைத்திருக்கிறார்கள். இதில் அ.தி.மு.க.-வின் வியூகம்தான் வித்தியாசமானது.
பிரசாரத்துக்கு போய் இறங்கியுள்ள அமைச்சர்களிடம் சீனியர் அமைச்சர் ஒருவர், “தலித் வாக்ககளைப் பற்றி நாம கவலைப்பட வேண்டாம்” என்று சொல்லி திகைக்க வைத்திருக்கிறார்.
இது என்ன புதிய புரளி? ஒருவேளை ஆதரவு எக்கச்சக்கமாக இருப்பதால், தலித் வாக்குகள் இல்லாமலே ஜெயித்து விடுவோம் என்ற இறுமாப்பா?
“சேச்சே, அதல்ல விஷயம். அமைச்சர் கூறியதற்கு அர்த்தம் வேறு” என்றார் எமக்கு நெருக்கமான ஒரு அ.தி.மு.க. பிரபலம். “மற்றைய அமைச்சர்களை தலித் வாக்காளர்கள் தொடர்பாக எதுவும் செய்ய வேண்டாம் என்று சீனியர் அமைச்சர் சொன்னது உண்மைதான்.

அமெரிக்காவில் 34 லட்சம் இந்தியர் - பெருமளவு தெலுங்கர், தமிழர்

அமெரிக்காவில் இந்தியர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துவிட்டது. சமீபத்திய கணக்கெடுப்பின்படி அங்கு 34 லட்சம் இந்தியர்கள் வசிப்பதாகவும், இவர்களில் 10 லட்சம் பேர் வாக்குரிமை பெற்றவர்கள் என்றும் கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.
இதன் மூலம் அமெரிக்காவில் மூன்றாவது பெரிய இனமாக ஆசிய - அமெரிக்கர்கள் உயர்ந்துள்ளனர். பத்தாண்டுகளில் 68 சதவீத வளர்ச்சி கண்டுள்ளனர் இந்தியர்கள், எண்ணிக்கையில்.
அமெரிக்காவில் அதிகளவில் உள்ள பிற இனத்தவர்களில் அமெரிக்க சீனர்கள் முதலிடம் வகிக்கின்றனர். எண்ணிக்கையில் அவர்கள் கிட்டத்தட்ட 40 லட்சம் பேர். இவர்களுக்கு அடுத்து பிலிப்பினோ - அமெரிக்கர்கர்கள். அவர்களின் எண்ணிக்கை 34.2 லட்சம். அடுத்து இந்தியர்கள் 34 லட்சம் பேர் (இவர்களில் பெருமளவு தெலுங்கு மற்றும் தமிழர்கள்).

தயாநிதி மாறனை விசாரணைக்கு அழைக்கும் சி.பி.ஐ.

Dayanidhi Maran
 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழல் தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனை விசாரணைக்கு அழைக்க சி.பி.ஐ. முடிவு செய்துள்ளது.
மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தபோது ஏர்செல் நிறுவனத்துக்கு 2ஜி அலைக்கற்றையை ஒதுக்குவதில் வேண்டுமென்றே தாமதம் செய்தார் என்றும் மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்திடம் ஏர்செல் நிறுவனத்தை விற்க வற்புறுத்தினார் என்பதும் குற்றச்சாட்டு.
2ஜி ஊழலில் பலரும் அகப்பட்டு சிறைக்குப் போய் திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில் தயாநிதி மட்டும் எஸ்கேப் ஆகிக் கொண்டே வருகிறார்.

புதிய NGO அமைப்பு தொடங்குகிறார் அஜீத்?

ரசிகர் மன்றங்களைக் கலைத்துவிட்ட பிறகு மங்காத்தாவை ரிலீஸ் செய்து ஹிட் செய்தும் காட்டிய தெம்பிலிருந்த அஜீத், விரைவில் புதிய இயக்கம் தொடங்குவார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
அஜீத் ரசிகர் மன்றம் தொடங்கிய ஆரம்ப வருடங்களில் எல்லாமே அமைதியாகத்தான் போயின.
ஆனால் சமீப காலமாக நிறைய பிரச்சினைகள். நிர்வாகிகளின் நடவடிக்கைகள் அஜீத்தை பெரும் அதிருப்திக்கு உள்ளாக்கின. அவர்களை கட்டுக்குள் வைக்க பல்வேறு நிபந்தனைகளை அவர் உருவாக்கினார்.

சங்கரன்கோவில் யாருக்கு?- களநிலவரம் Opinion

திருநெல்வேலி: தமிழக அரசியல் கட்சிகளின் "திராணியை" தீர்மானிக்கக் கூடியதாக சங்கரன்கோவில் தொகுதியில் விசைத்தறியாளர்கள் அதிகம் இருப்பதால் மின்வெட்டு விவகாரம்தான் முதன்மையான பிரச்சனையாக உருவெடுத்திருக்கிறது.
சங்கரன்கோவில் தொகுதி
விவசாயத் தொழிலாளர்கள் நிறைந்த சங்கரன்கோவில் தொகுதி முதன் முதலாக இடைத்தேர்தலை சந்திக்கிறது. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு 1957ல் நடந்த முதல் பேரவைத் தேர்தலில் தொடங்கி கடந்த 2011 தேர்தல் வரை 13 பேரவைத் தேர்தல்களை சங்கரன்கோவில் தொகுதி சந்தித்துள்ளது.
காங்கிரஸ்

பலுசிஸ்தான் உருவாக்கம் இந்தியா, அமெரிக்காவுக்கு எச்சரிக்கை

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானிலிருந்து பலுசிஸ்தானத்தை பிரித்து தனிநாட்டை உருவாக்கினால் மிக மோசமான விளைவுகளை இந்தியாவும் அமெரிக்காவும் சந்திக்க நேரிடும் என்று பாகிஸ்தானிலிருந்து செயல்படும் தீவிரவாத அமைப்பான ஜமாத்-உத்-தவா எச்சரிக்கை விடுத்துள்ளது.
2008-ம் ஆண்டு மும்பையில் தாக்குதலை நடத்திய அமைப்பு ஜமாத்-உத்-தவா.
பாகிஸ்தானில் இருந்து செயல்படும் 40க்கும் மேற்பட்ட தீவிரவாத இயக்கங்களின் கூட்டுக் கூட்டத்தில் ஜமாத்-உத்-தவாவின் தலைவர் ஹபீஸ் சையத் பேசியதாவது:
ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவுக்கு இன்னும் என்ன வேலை? பலுசிஸ்தானை பாகிஸ்தானிலிருந்து பிர்க்க முயற்சிக்கிறீர்களா?
எங்கள் நாட்டு விவகாரங்களில் நீங்கள் தலையிட முடியாது.. இந்தியாவுக்கும் அமெரிக்காவும் நாங்கள் கடுமையாக எச்சரிக்கை விடுக்கிறோம். பலுசிஸ்தான் தனிநாட்டை உருவாக்கும் முயற்சிகளை உடனே கைவிடுங்கள். இல்லையெனில் மோசமான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றார் அவர்.
லஸ்கர்-இ- தொய்பா தீவிரவாத இயக்கத்தின் நிறுவனறும் சயீத்தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஹபீஸ் சயீத்தை ஒப்படைக்குமாறு பாகிஸ்தானை இந்தியா நீண்டகாலமாக வலியுறுத்தி வருகிறது

UP 38 வயதில் நாட்டின் மிக இளம் முதல்வராகிறார் அகிலேஷ் யாதவ்!

Akilesh Yadhav
லக்னெள: சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் குடும்பத்தின் அரசியல் சண்டை ஒருவழியாக தற்காலிக சமாதானத்துக்கு வந்துள்ளது.
உத்தரப் பிரதேச முதல்வராக முலாயம் சிங் யாதவின் மகன் அகிலேஷ் யாதவ் தேர்வு செய்யப்படுகிறார். இன்று நடந்த கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
உத்தரப் பிரதேச சட்டசபைத் தேர்தலில் சமாஜ்வாடி கட்சி தனி மெஜாரிட்டியுடன் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. மொத்தம் உள்ள 403 தொகுதியில் 224 இடங்களில் சமாஜ்வாடி வெற்றி பெற்றது.
இதைத் தொடர்ந்து முலாயம் சிங்கை விட அவரது அகிலேஷ் யாதவ் மீதே மக்கள் அதிக நம்பிக்கை வைத்து சமாஜ்வாடிக் கட்சியை ஆட்சியில் அமர்த்தியுள்ளதாக பேச்சு எழுந்தது.
இந் நிலையில் அகிலேஷ் யாதவையே முதல்வராக்க முலாயம் சிங்கும் விரும்பினார். இதற்கு எப்போதோ தயாராகிவிட்டார் அகிலேஷ்.
ஆனால், கட்சியின் மூத்த தலைவரான ஆஸம் கான், முலாயமின் தம்பி ஷிவ்பால் சிங் யாதவ் ஆகியோர் இதை எதிர்த்தனர். தங்களை விட வயதில் மிகவும் குறைந்த அகிலேஷ் யாதவிடம் பணிந்து செல்ல முடியாது என்று இவர்கள் வாதிட்டனர்.

மின் வெட்டுக்கு ஜெ.தான் காரணம்: வாசன்


தமிழகத்தில் கடும் மின் வெட்டு நிலவுவதற்கு ஜெயலலிதா தான் காரணம்,'' என, மத்திய அமைச்சர் வாசன் குற்றம் சாட்டினார்.
சங்கரன்கோவிலில் தி.மு.க., வேட்பாளரை ஆதரித்து நடந்த பொதுக் கூட்டத்தில் வாசன் பேசியதாவது: கூடங்குளம் அணு மின் நிலையம் உற்பத்தியைத் தடுக்கும் கும்பலை இரும்புக்கரம் கொண்டு தடுக்க வேண்டும் என, மக்கள் விரும்புகின்றனர்.

கூடங்குளம் அணு மின் நிலைய உற்பத்தியைத் துவக்க ஜெ., முயற்சிக்கவில்லை. தமிழகத்தில் நிலவும் 11 மணி நேர மின் வெட்டுக்கு அவர் தான் காரணம். விரைவில் கூடங்குளத்தில் மின் உற்பத்தி துவக்கப்படும் என்றார்.

முலாயம் சிங் இனி தேசிய அரசியலுக்கும் King


ராகுல் காந்தி வாழ்த்துகிறார். மன்மோகன் சிங் பாராட்டுகிறார். ஜெயலலிதா மகிழ்ச்சி தெரிவிக்கிறார். கருணாநிதி கடிதம் எழுது குதூகலிக்கிறார். இன்னும் இன்னும் நாட்டில் இருக்கும் அத்தனை முக்கியத் தலைவர்களும் முலாயம் சிங்கின் பெயரைத்தான் உச்சரித்துக் கொண்டிருக்கிறார்கள். இதுவரை இல்லாத அளவுக்கு முலாயம் சிங் யாதவின் பெயர் தேசிய முக்கியத்துவம் பெற்றுள்ளது. அனைத்து பத்திரிகைகளும் அவரைப் பற்றித்தான் எழுதித் தீர்க்கின்றன. ஒரே காரணம்தான். இந்தியாவின் ஆகப்பெரிய மாநிலத்தில் அவர் பெற்ற அசாத்திய வெற்றி.
மொத்தமுள்ள நானுற்றியிரண்டு இடங்களில் 224 இடங்களைக் கைப்பற்றி விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது அவருடைய சமாஜ்வாதி கட்சி. இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் மூன்றில் இரண்டு பங்கு இடங்களைக் கூடப் பெற்றிருக்கமுடியும்

அ.தி.மு.க., பணம் தி.மு.க.,வுக்கு ஓட்டு: அழகிரி வேண்டுகோள்

சங்கரன்கோவில் :""அ.தி.மு.க.,வினர் பணம் கொடுத்தாலும், தி.மு.க.,விற்கு ஓட்டளிக்க வேண்டும்'' என, வாக்காளர்களுக்கு மத்திய அமைச்சர் அழகிரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சங்கரன்கோவிலில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:சங்கரன்கோவிலில், கடந்த முறை, 10 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தி.மு.க., தோல்வியுற்றது. இந்த தேர்தலில், 10 ஆயிரம் ஓட்டுகள் கூடுதலாக பெற்று, தி.மு.க., வெற்றி பெறும்.தேர்தல் பணியில் நிர்வாகிகள் தீவிரமாக உள்ளனர். பொருளாளர் ஸ்டாலின் மார்ச், 12, 13, 14 ஆகிய நாட்களில் பிரசாரம் செய்கிறார். மார்ச் 15ல், தி.மு.க., தலைவர் கருணாநிதி பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். அ.தி.மு.க.,வினர் பணம் கொடுத்தாலும், தி.மு.க.,விற்கு வாக்காளர்கள் ஓட்டளிக்க வேண்டும். இவ்வாறு அழகிரி கூறினார்.

வெள்ளி, 9 மார்ச், 2012

கடிதம் மூலம் தலாக்! Talaq by letterஆணாதிக்கத்தின் வக்கிரம்!!

இஸ்லாம் பெண்ணுக்கு உரிமைகளை வாரி வழங்கி இருப்பதாக கூறுபவர்கள் கடிதம் மூலம் விவாகாரத்து செய்து இருப்பதற்கு நேர்மையாக பதில் கூறவேண்டும்.
தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் அமைப்பை சேர்ந்த மணமேல்குடி பாசித் மரைக்காயர் என்பவர்  பெண்களிடம் தவறாக நடந்ததையும்; மனைவி மற்றும் அவருடைய பெண் குழந்தையும் அனாதையாக விட்டு விட்டு, மற்றொருucmd ஏழைப் பெண்ணை இரண்டாம் திருமணம் செய்ததையும்: ஆணாதிக்க திமிருடன் “இஸ்லாமிய முறைப்படி சரி” என்று கூறி ஜமாத்தில் தனக்கு சாதகமாக தீர்ப்பும் பெற்றதையும் வினவின் வாசகர்கள் தழிழ்நாடு தவ்ஹித் ஜமாத்தின் பொறுக்கி தளபதி பாசித்மரைக்காயர் என்ற தலைப்பில் வெளியான கட்டுரை மூலம் அறிந்திருப்பீர்கள்.
இந்த இஸ்லாமிய தீர்ப்பால் பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது ஏழை குடும்பத்தினர் இப்பகுதியில் செயல்படும் புரட்சிகர அமைப்புகளின் தோழர்களிடம் புகார் செய்யவே தோழர்களுடைய உதவியால் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதால், பாசித் சிறையிலடைக்கப்பட்டு இப்பொழுது பிணையில் வெளியில் உள்ளார்.

நடிகர் ஜான் ஆபிரகாமுக்கு 15 நாள் சிறை

நடிகர் ஜான் ஆபிரகாம், அபாயகரமாக வண்டியை ஓட்டிய வழக்கில் 15 நாள் சிறைத் தண்டனை பெற்றார்.
கடந்த 2006ல் அதிவேகமாகவும் அபாயகரமாகவும் தன்னுடைய மோட்டர்பைக் வண்டியை ஓட்டி இரண்டு இளைஞர்கள் மீது மோதி காயம் ஏற்படுத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கில், நடிகர் ஜான் அபிரகாமுக்கு 15 நாள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.
அந்த விபத்து ஏற்பட்டவுடன், ஜான் ஆபிரகாம் உடனடி யாக இளைஞர்கள் இருவரையும் மருத்து வமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்கு சேர்த்திருந்தார்.

கிட்னியை விற்று சாப்பிடும் அவலம்!கம்யுனிஸ்டுகளின் ஆண்ட பூமியில் மம்தாவின் மாநிலத்தில்


Mamata Banerjee
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பசி, பட்டினியைப் போக்க கிரமாத்தினர் தங்கள் சிறுநீரகத்தை விற்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள பல கிராமங்களில் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இதனால் மக்கள் சாப்பாட்டுக்கு வழியின்றி பசியால் வாடுகின்றனர். சிலர் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சி விற்பனை செய்கின்றனர். பலர் தங்கள் சிறுநீரகத்தை விற்று பசியாறுகின்றனர். இதனால் சில கிராமங்களுக்கு கிட்னி கிராமம் என்ற பெயர் கிடைத்துள்ளது.
கிட்னி கிராமங்களில் வசிப்பவர்களில் பலர் ஒரு சிறுநீரகத்தை விற்றுவிட்டு ஒரு சிறுநீரகத்துடன் தான் வாழ்ந்து வருகின்றனர். வடக்கு டியாஞ்ச்பூர் மாவட்டத்தில் உள்ள பிந்தால் கிராமம் கிட்னி விற்பனைக்கு பெயர் போனது ஆகும்.

நான்கு சின்ன பட்ஜெட் படங்கள் இன்று ரிலீஸ்!

இந்த வெள்ளிக்கிழமை நான்கு புதிய படங்கள் வெளியாகின்றன. நான்குமே சின்ன பட்ஜெட் படங்கள்.
திரையுலகில் இப்போது சிறு முதலீட்டுப் படங்கள் அதிகமாக வெளியாகி வருகின்றன. மாதக்கணக்கில் பெட்டிக்குள் முடங்கிக் கிடந்த படங்களுக்கும் இப்போது ஓரளவு திரையரங்குகள் கிடைப்பதுதான் காரணம்,.
அந்த வகையில், இந்த வாரம் செல்வா இயக்கியுள்ள நாங்க, அர்ஜுன் நடித்த மாசி, சேவற்கொடி மற்றும் பத்திரமா பாத்துக்கங்க ஆகிய நான்கு படங்கள் வெளியாகின்றன.

ஒசாமாவுக்கு மொத்தம் 6 மனைவிகள்.முதல் மனைவி தான் காட்டிக் கொடுத்ததார்

osama Bin Laden
இஸ்லாமாபாத்: அல்-கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடனை அவரது முதல் மனைவி தான் அமெரிக்கப் படைகளிடம் காட்டிக் கொடுத்ததாக பாகிஸ்தான் ராணுவம் நடத்தியுள்ள விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டு மே மாதம் 2ம் தேதி பாகிஸ்தானின் அபோடாபாத் நகரில் ஒரு வீட்டை அமெரிக்கப் படைகள் தாக்கி, ஒசாமா பின் லேடனைக் கொன்றன. அந்த வீட்டில் ஒசாமாவின் 3 மனைவிகள், குழந்தைகள், பேரக் குழந்தைகள், பாதுகாவலர்கள் உள்பட 27 பேர் இருந்தனர்.
இதில் ஒரு பெண், பாதுகாவலர்கள், ஒசாமாவின் ஒரு மகன் அந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டுவிட, மீதியிருந்தவர்களை பாகிஸ்தானிடம் ஒப்படைத்தது அமெரிக்கா.

Red Building Where The Sun Sets ரேவதியின் குறும்படத்திற்கு தேசியவிருது



தமிழ் நடிகையாக இருந்து தற்போது இயக்குநர் அவதாரம் எடுத்துள்ள ரேவதியின் குறும்படம் 59வது தேசிய விருதுக்கு தேர்வாகியுள்ளது.ரெட் பில்டிங் வேர் தி சன் செட்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ள அந்த குறும்படம், திரைப்படம் அல்லாத பிரிவின் கீழ் சிறந்த படத்திற்கான விருதிற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது.இப்படம் குறித்து ரேவதியிடம் நேரடியாக பேசினோம். அப்போது, "இது ஒரு 17 நிமிடங்கள் ஓடும் குறும்படம். பெற்றோர், அவர்களது குழந்தைகளை எவ்வாறு வளர்க்கிறார்கள் என்பதை மையமாகக் கொண்ட இப்படம் தேசிய விருதினை வென்றுள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. நாங்கள் இப்படத்தை தயாரிக்கும் போது பெற்றோர் மத்தியில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற லட்சியத்துடன்தான் உருவாக்கினோம். எந்த விருதினையும் நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இது எதிர்பாராத மகிழ்ச்சி" என்றார் அவருக்கே உரித்தான புன்னைகையுடன்.நடிகை ரேவதி ஏற்கனவே தேவர் மகனில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதினையும், ஆங்கில குறும்படத்திற்காக மற்றொரு தேசிய விருதினையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பகவத் கீதை பெண்களை பாவயோனிகள் என்று கொச்சைப் படுத்துகிறது!

மகளிர் முழு உரிமை பெற வேண்டுமானால் திராவிடர் இயக்கச் சிந்தனைகளை வரித்துக் கொள்ள வேண்டும் என்று - உலக மகளிர் நாளில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
இன்று உலக மகளிர் நாள் என்கிறபோது, நம் நாட்டில் நமது மகளிர் எப்படிப்பட்ட நிலையில் வாழ்ந்தனர்; வாழுகின்றனர் என்பதையும், இவர்களது அடிமைத் தன்மை நீங்கி, இன்று அதிகார உரிமை பெற்றவர்களாகத் திகழ்வதற்கு யார் முக்கிய காரணம் என்பதையும் இன்று சிந்திக்க வேண்டிய நாள் ஆகும்.
பஞ்சமர்களுக்கும் கீழே பெண்கள்
1. பிறப்பினால் உயர்வு, தாழ்வு கூறும் நம் நாட்டுச் சமூக அமைப்பில், ஜாதி என்பதுபோலவே, மற்றொரு பேதம் வளர்க்கும் அமைப்பு ஆண் - பெண் பிரிவுகளுக்கும், அதாவது பிறவி பேதம் காரணமாக எப்படி உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி என்பது உருவாக்கப்பட்டு, பிராமணர்  - சூத்திரர் - பஞ்சமர் என்ற வர்ணாசிரமப் பிரிவுகளை நிலைநாட்டினார்களோ, அதே வரிசையில், அந்த அய்ந்து பிரிவுகளுக்கும் கீழே வைக்கப்பட்டுள்ளவர்கள்தான் பெண்கள் - அவர்கள் எந்த ஜாதியானாலும் அடுக்கின் கீழே ஆறாவதாக - அமர்த்தப்பட்டவரே மகளிர்!
மனுவின் பார்வையில்...

புதை சேற்றில் சிக்கியது ஐரோப்பிய ஒன்றியம்!

ஐரோப்பாமக்களின் போராட்டங்களால் ஐரோப்பா கண்டத்திலுள்ள கிரீஸ் நாடு மீண்டும் கொந்தளிக்கத் தொடங்கியுள்ளது. கிரேக்க நாட்டில் கடந்த பிப்ரவரி 12 அன்று நாடாளுமன்றத்தின் முன் நடந்த போராட்டத்தில் ஏறத்தாழ ஒரு லட்சம் பேர் பங்கேற்று அரசின் சமூகச் செலவினக் குறைப்புத் திட்டத்துக்கு எதிராக மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்தியுள்ளனர்.
தீராத நிதி நெருக்கடியில் சிக்கி திவாலாகும் நிலையில் இருந்த  கிரீஸ் நாட்டின் நெருக்கடிக்கு,  நலத்திட்டங்கள்  மானிய வெட்டு முதலான பொருளாதாரத் தாக்குதல்களையே  ஐரோப்பிய ஆணைக்குழு, ஐரோப்பிய மத்திய வங்கி, சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எஃப்) ஆகிய மும்மூர்த்திகள் தீர்வாக முன்வைக்கின்றனர். இதனைச் செயல்படுத்தாவிட்டால் நாடு திவாலாகி பொருளாதாரப் பேரழிவு ஏற்படும் என்று நிர்ப்பந்தமாக இதனைத் திணித்து வருகின்றனர்.

கூடங்குளம் போராட்டத்தில் வெளிநாட்டினர் பங்கேற்க தடை

கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்டத்தில், வெளிநாட்டினர் பங்கேற்க, மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதனால், வரும் 11ம் தேதி, உதயகுமார் நடத்தும் போராட்டத்தில், ஜப்பானை சேர்ந்த பெண் கலந்து கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அதிகாரிகளுக்கு உத்தரவு: கூடங்குளம் போராட்டத்தில் தொடர்புள்ளவர்களுடனோ அல்லது அவர்களது போராட்டம் மற்றும் நிகழ்ச்சிகளிலோ, இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டவர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்திய குடியுரிமை அலுவலகம் மூலம், மத்திய உள்துறை இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதன்படி, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து, இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டினர், யாரெல்லாம் தமிழகத்திற்கு வருகின்றனர். அவர்களது பயணத் திட்டத்தை முன்கூட்டியே அறிந்த பிறகே, "விசா' தர வேண்டும் என, வெளிநாட்டுப் பிரிவை கண்காணிக்கும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அண்ணா நூலக இட மாற்றம் கோர்ட் ஆய்வுக்குட்பட்டதல்ல??????

"சென்னை கோட்டூர்புரத்தில் இயங்கும் அண்ணா நூலகத்தை இடம் மாற்றும் முடிவானது, அரசின் கொள்கை முடிவு. இது, கோர்ட் ஆய்வுக்கு உட்படுத்தக் கூடியதல்ல' என, சென்னை ஐகோர்ட்டில், தமிழக அரசு பதிலளித்து உள்ளது.
கடந்த தி.மு.க., ஆட்சியில், கட்டப்பட்ட அண்ணா நூலகத்தை மாற்ற அ.தி.மு.க., அரசு முடிவெடுத்தது. இது சம்பந்தமாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய, "முதல் பெஞ்ச்', நூலகத்தை இடம் மாற்றும் முடிவுக்கு தடை விதித்தது.

வியாழன், 8 மார்ச், 2012

நம்ம கட்சி தோத்தா, மவனே தொலைஞ்சிங்க!சங்கரன்கோவில்

சங். கோவில் அமைச்சர்கள்: வௌக்கு வெச்ச நேரத்திலே தந்தானதானா

Viruvirupu  அரசின் தலைமைச் செயலகம் தற்காலிகமாக சங்கரன்கோவிலுக்கு இடமாற்றம் செய்யப்பட்டதை அடுத்து, அங்கு திரும்பிய இடமெல்லாம் ஏதாவது ஒரு துறையின் அமைச்சரைப் பார்க்கும் வாய்ப்பு, பொதுமக்களுக்கு கிட்டியுள்ளது.
முன்பு தலைமைச் செயலகம் சென்னையில் இயங்கிய நாட்களில், அமைச்சர்களை நேரில் பார்ப்பது இவ்வளவு எளிதாக இருந்ததில்லை.
மொத்தம் 32 அமைச்சர்கள் அடங்கிய மாநில நிர்வாகம், சங்கரன்கோவிலில் இருந்து நடைபெறுகிறது. ரோட்டுப் போடும் துறையின் அமைச்சரில் இருந்து, ரோபோ தயாரிக்கும் தொழில்நுட்பத்தை கவனிக்கும் துறைக்கான அமைச்சர் வரை, சகல அமைச்சர்களும் சங்கரன்கோவிலின் குறுகிய சந்துகளில், வேட்டியை மடித்துக் கட்டியபடி மக்கள் சேவை செய்யும் முன்னுதாரண அரசு தலைநகர் சங்கரன்கோவிலில் இயங்குகிறது.

குற்றம் செய்யாவிட்டால், ஜெயலலிதா ஏன் பயப்பட வேண்டும்?நடராஜன்,

ஜெயலலிதா பற்றி நடராஜன் வார்த்தைகளில் விளையாடுகிறார்!

Viruvirupu,
“என்னை வாட்டுவது என்பதில் போலீஸாரும், அரசும் உறுதியாக உள்ளனர்” என்று கூறியுள்ள நடராஜன் (சசிகலா), ஜெயலலிதாவுக்காக தமது குடும்பம் என்ன செய்தது என்பதை ‘ஒரு மார்க்கமாக’ தெரிவித்துள்ளார்.
அவரது கூற்றில், “ஜெயலலிதாவை நாம் காப்பாற்றினோம்” என்ற சாயல் அடிக்கிறதே தவிர, “ஜெயலலிதா குற்றமற்றவர்” என்று இல்லை.
“பெங்களூரு வழக்கில் எங்கள் குடும்பமே, ‘நாங்கள் தான் பொறுப்பு’ என, ஒப்புக் கொண்டு விட்டோம். ஹனுமான் போல என் மனைவி சசிகலா நெஞ்சை பிளந்து காட்டிவிட்டார். எங்களை பற்றி இனியும் முதல்வருக்கு சந்தேகமிருந்தால், எங்களை குடும்பத்துடன் விஷம் வைத்து கொன்று விடட்டும்” என்றார் நடராஜன்.

அப்புக்குட்டி... அன்றே சொன்னார் இளையராஜா!


Appukutty
அழகர்சாமியின் குதிரை பேசப்படும், அதை விட அதன் நாயகன் அப்புக்குட்டி வெகுவாக பேசப்படுவார் என்று அன்றே சொல்லியிருந்தார் இசைஞானி இளையராஜா. இன்று ஊரெல்லாம் பேசும் முகமாக மாறியுள்ளார் அப்புக்குட்டி.
அழகர்சாமியின் குதிரை படம் வந்தபோதே அனைவராலும் வியப்புடன் பார்க்கப்பட்டவர் அப்புக்குட்டி. காரணம், அப்படத்தில் அப்புக்குட்டியின் எதார்த்தமான நடிப்பு. அத்தனை பேரையும் அப்புக்குட்டியும், அந்த குட்டிக் குதிரையும் மனதை கவ்விக் கொண்டு போய் விட்டார்கள்.

உலகிலேயே மகா கோடீஸ்வர இந்தியர் முகேஷ் அம்பானி!

டெல்லி: உலகப் பெரும் பணக்காரர்கள் வரிசையில் 19வது இடத்தைப் பிடித்துள்ளார் ரிலையன்ஸ் இந்தியா அதிபர் முகேஷ் அம்பானி. உலகப் பெரும் பணக்கார இந்தியர்களில் அவர்தான் நம்பர் ஒன்.
உலகப் பெரும் பணக்காரர்கள் பட்டியலை போர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. அந்தப் பட்டியலில் மொத்தம் 48 இந்தியர்களும் இடம் பெற்றுள்ளனர். அதில் முதலிடத்தில் இருக்கிறார் முகேஷ்.
இவரது சொத்து மதிப்பு 22.3 பில்லியன் டாலராகும். உலக அளவில் 80வது இடத்தைப் பிடித்தவரான சாவித்ரி ஜின்டால் மற்றும் குடும்பத்தினர், 113வது இடத்தில் இருக்கும் சுனில் மிட்டல் மறறும் குடும்பத்தினர், 116வது இடத்தில் இருக்கும் குமார் பிர்லா, 118வது இடத்தில் இருக்கும் அனில் அம்பானி, 124வது இடத்தில் இருக்கும் திலிப் சங்க்வி, 133வது இடத்தில் இருக்கும் சசி, ரவி ரூயா, 153வது இடத்தில் இருக்கும் குஷால் பால் சிங் ஆகியோரும் இந்தப் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.

Customsஅதிகாரியை கையும், களவுமாக பிடித்த போலீஸ்

After ensuring Rajan had got the money from his driver and left for his home, the CBI team went there and nabbed Murugesan and Rajan. CBI Officials conducted chemical tests on Rajan and Murugesan and it proved positive. The officials then seized Rs two lakh and the i-pod from Rajan and arrested him and his driver.சென்னை : அடுத்தடுத்து கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்து பரபரப்பை ஏற்படுத்தி வந்த, மத்திய வருவாய் புலனாய்வுத் துறை கூடுதல் இயக்குனர் ராஜன், லஞ்ச வழக்கில், சி.பி.ஐ., அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்; அவரது டிரைவரும் சிக்கியுள்ளார். சென்னையைச் சேர்ந்தவர் ஜோசப்; வர்த்தகர். வருவாய் புலனாய்வுத் துறை வழக்கு தொடர்பாக, இவரது வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. முடக்கியுள்ளதை நீக்க உதவுமாறு, சென்னை, புதுப்பேட்டையைச் சேர்ந்த தன் நண்பர் உபயதுல்லா உதவியை நாடினார்.வங்கிக் கணக்குகள் முடங்கியுள்ளதை விடுவிக்க வேண்டிய பொறுப்பு, வருவாய் புலனாய்வுத் துறை கூடுதல் இயக்குனர் ராஜன் கட்டுப்பாட்டில் உள்ளது.இதையடுத்து, உபயதுல்லா, ராஜன் உதவியை நாடினார். இதை சரிசெய்ய, 10 லட்ச ரூபாய் லஞ்சமாகக் கேட்டார் ராஜன். பலத்த பேரத்துக்குப் பின், எட்டு லட்ச ரூபாய் பணமும், ஒரு, "ஐ பேடும்' கேட்டுள்ளார். நேற்று முன்தினம் இரவு, மயிலாப்பூரில் உள்ள சர்ச் ஒன்றின் அருகே வந்து தருமாறு, ராஜனின் டிரைவர் முருகேசன், உபயதுல்லாவிடம் கூறினார்.அதிகாரியை
இதுகுறித்து, உபயதுல்லா, சி.பி.ஐ.,க்கு தகவல் கொடுத்தார்.

நடராஜன்: சந்தேகமிருந்தால்அண்ணாநகர் ரமேஷ் போல குடும்பத்துடன் விஷம் வைத்து கொன்று விடட்டும்.

பெங்களூரு வழக்கில் எங்கள் குடும்பமே, "நாங்கள் தான் பொறுப்பு' என, ஒப்புக்கொண்டு விட்டோம். ஹனுமான் போல என் மனைவி சசிகலா நெஞ்சை பிளந்து காட்டிவிட்டார். எங்களை பற்றி இனியும் முதல்வருக்கு சந்தேகமிருந்தால், எங்களை குடும்பத்துடன் விஷம் வைத்து கொன்று விடட்டும்,'' என்று நடராஜன் உருக்கமாக கூறினார்.

தஞ்சையில் விளாரில் புதிய நில அபகரிப்பு புகாரில் சிக்கிய சசிகலா கணவர் நடராஜன் நேற்று மாலை தஞ்சை ஜே.எம்., 2 நீதிமன்ற மாஜிஸ்திரேட் முருகன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது மாஜிஸ்திரேடிடம் நடராஜன் கூறியதாவது:போலீஸார் தொடர்ந்து என்னை சிறையில் வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

மாயாவதி முஸ்லிம்கள் மீது இனவெறி தூண்டும் விதமான பேச்சு

சுகாதாரத்துறையில் நடந்த ஊழலால் நாங்கள் தோல்வியடையவில்லை. 70 சதவீத ஓட்டுகள் சமாஜ்வாடி கட்சிக்கு சென்று விட்டன'' என உத்தரபிரதேச முதல்வர் மாயாவதி தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் முலாயம்சிங் தலைமையிலான சமாஜ்வாடி கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து தனது ராஜினாமா கடிதத்தை முதல்வர் மாயாவதி, கவர்னர் பி.எல்.ஜோஷியிடம் நேற்று சமர்ப்பித்தார். ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்ட கவர்னர், புதிய அரசு பதவி ஏற்கும் வரை அவரை முதல்வர் பதவியில் தொடரும் படி கேட்டுக்கொண்டார். பின்னர் நிருபர்களுக்கு மாயாவதி பேட்டியளித்தார்.

நெப்போலியன்! சரத்குமாரிடம் ஒரே ஒரு கேள்வி கேளுங்கள்!

காமராஜர் சத்துணவு திட்டத்தை கொண்டுவந்தபோது, ஒரு சில இடங்களில்தான் கொண்டு வந்தார். முழுமையாக செயல்படுத்தவில்லை என்று ஜெயலலிதா பேசியபோது, சரத்குமார் எதுவுமே பேசாமல் இருந்தார். நாளை பிரச்சாரத்திற்கு வரும் சரத்குமாரிடம் நீங்கள் இதுதொடர்பாக அவரிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டும்.
மத்திய இணையமைச்சரான நெப்போலியன், சங்கரன்கோவில் இடைத்தேர்தலுக்கான திமுக வேட்பாளர் ஜவஹர் சூர்யகுமாரை ஆதரித்து, 07.03.2012 அன்று மாலை 4 மணி அளவில், சங்கரன்கோவில் ஒன்றியத்துக்கு உட்பட்டட கடையாலுருட்டி வேடப்ப நாடானூர், தேர்ந்த மரம், நடுவக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பிரச்சாரம் செய்தார்.
இந்த தொகுதியில் 4 முறையாக எம்எல்ஏவாக இருந்தவர் கருப்பசாமி. மறைந்த அவரின் குடுத்தார்கள் ஜெயலலிதாவை சந்திப்பதற்கு சென்னையில் பல நாட்கள் இருந்தும், சந்திக்க முடியாமல் திரும்பினார்கள்.

ஆனால் தலைவர் கலைஞர் முதல்வராக இருந்தபோதும், இப்போதும் யார் வேண்டுமானாலும் சுலபமாக சந்திக்கலாம். அப்படிப்பட்ட ஒரு தலைவர் கலைஞர்.

புதன், 7 மார்ச், 2012

மந்திரவாதி புறா எடுப்பதுபோல நடராஜன் மீது 3-வது வழக்கு

நடராஜன் கைது விவகாரம்: தஞ்சை போலீஸ் தொப்பிக்குள் வந்த புறா!
Viruvirupu.com
 நடராஜன் மீது 3-வது வழக்கு போடப்பட்டுள்ளது. இதுவும் ஒரு நில அபகரிப்பு வழக்குதான். நடராஜனை கைது செய்வதற்காக போடப்பட்ட முதலாவது நில அபகரிப்பு வழக்கு ஊற்றிக் கொள்ளப் போகின்றது என ஊகித்துக் கொண்டு, போடப்பட்ட 2-வது வழக்கு, கொலை மிரட்டல் வழக்கு. அந்த வழக்கு போடப்பட்ட மறு தினமே, 1-வது வழக்கில் ஜாமீன் கொடுக்கப்பட்டு விட்டது. 2-வது வழக்கு கைவசம் இருந்ததால், அந்த ஜாமீனில் நடராஜன் வெளியேற முடியாதபடி, சிறைக்குள்ளேயே வைத்திருந்தார்கள். 2-வது வழக்கு தொடர்பாகவும் ஜாமீன் மனு செய்திருக்கிறார் நடராஜன். அந்த வழக்கும் அவ்வளவு ஸ்ட்ராங்காக இல்லை போலிருக்கிறது. இதோ, 3-வது வழக்கு போடப்பட்டு விட்டது. இந்த வழக்கு தஞ்சை நில அபகரிப்பு தடுப்பு போலீசில் அளிக்கப்பட்ட புகார் ஒன்றின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆல்பர்ட் என்பவர் தனது 1.5 ஏக்கர் நிலத்தை நடராஜன் குழுவினர் அபகரித்து விட்டதாக இந்தப் புகாரை அளித்துள்ளார். இந்த ஆல்பர்ட் எந்தளவுக்கு ஸ்ட்ராங் எவிடென்ஸ் வைத்திருக்கிறாரோ தெரியவில்லை. ஒருவேளை அல்பர்ட் சறுக்கினால், மற்றொரு ராபர்ட்டை தஞ்சாவூர் போலீஸ் தமது தொப்பிக்குள் வைத்திருக்காமலா இருப்பார்கள்? மந்திரவாதி புறா எடுப்பதுபோல, எடுத்து நீதிபதி முன் போடுவார்கள்!

காங்கிரஸை கைவிட்ட முஸ்லீம்கள்.. மாயாவதியை கைவிட்ட தலித்கள்!


Sonia Gandhi
லக்னெள: உத்தரப் பிரதேசத்தில் வெறும் 3.3 சதவீத வாக்கு வித்தியாசத்தில் தான் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியை முலாயம் சிங் யாதவ் தோற்கடித்துள்ளார். இந்த 3.3 சதவீத வாக்கு வித்தியாசம் முலாயம் சிங் யாதவுக்கு கூடுதலாக 127 இடங்களைத் தந்துள்ளன.
இந்தத் தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்குகள் சதவீத விவரம்:
சமாஜ்வாடி கட்சி - 29.2%. இது கடந்த தேர்தலைவிட 3.3% அதிகம்
பகுஜன் சமாஜ் கட்சி - 25.9%. இது கடந்த தேர்தலைவிட 3.3% குறைவு
பாஜக - 15%
காங்கிரஸ் - 11.6%. இது கடந்த தேர்தலைவிட 3% அதிகம்
ராஷ்ட்ரீய லோக் தள் - 3.7%
சுயேச்சைகள்-மற்றவர்கள் - 16%
இதன் மூலம் சமாஜ்வாடி கட்சிக்கு 127 இடங்கள் கூடுதலாகக் கிடைத்துள்ளன. பகுஜன் சமாஜ் கட்சிக்கு 126 இடங்கள் குறைந்துவிட்டன.

37 வயது ஆசிரியை 17 வயது மாணவருடன் அபூர்வ ராகங்கள்

சென்னை: +1 படித்து வந்த 17 வயது மாணவனும், 37 வயது அறிவியல் ஆசிரியையும் ஒரே நாளில் காணாமல் போயுள்ளனர் இருவரும் காதலித்து ஓடி போனார்களா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சென்னை சவுகார்பேட்டையைச் சேர்ந்தவர் சரவணக்குமார். தச்சுத் தொழிலாளர். இவரது 17 வயது மகன் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் +1 படித்து வந்தார். அந்த பள்ளியில் 37 வயதுள்ள அறிவியல் ஆசிரியை ஒருவரும் பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் கடந்த 3.3.2012 அன்று முதல் தனது மகனைக் காணவில்லை என்றும், அவரைக் கண்டுபிடித்து தருமாறும் கோரி யானைக்கவுனி போலீஸ் நிலையத்தில் சரவணக்குமார் புகார் கொடுத்தார். இது குறித்து இன்ஸ்பெக்டர் ராஜசேகர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தார்.
விசாரணையில் சரவணக்குமாரின் மகன் அறிவியல் ஆசிரியையுடன் அதிக நெருக்கமாக பழகி வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அறிவியல் ஆசிரியை குறித்து போலீசார் விசாரித்தனர். இதில் அவருக்கு திருமணமாகி 8 வயதில் ஒரு குழந்தை உள்ளதும், கடந்த 4ம் தேதி முதல் அவரையும் காணவில்லை என்பதும் தெரிய வந்தது.

தேசிய விருதுகள் வித்யாபாலனுக்கு சிறந்த நடிகை

தமிழ் படங்களுக்கு தேசிய விருதுகள்
59வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்ட்டு உள்ளன மிழில் வாகை சூட வா படத்திற்கு சிறந்த பிராந்திய மொழி படத்திற்கான விருதும், ஆரண்யகாண்டம் படத்திற்கு சிறந்த படத்தொகுப்புக்கான விருதும், சிறந்த துணை நடிகருக்கான விருது அழகர்சாமியின் குதிரை படத்தில் நடித்த அப்புக்குட்டிக்கும், சிறந்த பொழுதுபோக்கு படத்திற்கான விருது அழகர்சாமியின் குதிரை படத்திற்கும் கிடைத்திருக்கிறது. மேலும் தி டர்ட்டி பிக்சர்ஸ் படத்தில் நடித்த வித்யாபாலனுக்கு சிறந்த நடிகைக்கான விருதும் கி‌டைத்திருக்கிறது.

குண்டு வெடித்து பலியான ராணுவ வீரரின் மிகப் பயங்கர சதித்திட்டம்!

போலீசார் வெளியிடும் அதிர்ச்சி தகவல்?

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தரங்கரை திருவண்ணாமலை மெயின்ரோட்டில் உள்ளது காந்த லெட்சுமி டீக்கடை. இந்த டீக்கடையில் கடந்த 05.03.2012 அன்று நடந்த வெடிகுண்டு விபத்தில் ராணுவ வீரர் சீனிவாசன் உடல் சிதறி அந்த இடத்திலேயே பலியானார்.
இதன் பின்னணியை விசாரித்த டிஎஸ்பி காசிநாதனுக்கு பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது. படத்தானூரைச் சேர்ந்த சீனிவாசன், தனது நண்பர்களான ராமமூர்த்தி, சத்திவேல், விஜயன் ஆகியோருடன் சேர்ந்து, சம்பவத்தன்று ஊத்தங்கரை இந்தியன் வங்கியில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தில் பணம் வைக்க வங்கி ஊழியர்கள் முயற்சிக்கும்போது, குண்டு வைத்து கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளனர்.
முன்னதாக தனது நண்பர்களுடன் சீனிவாசன், ஏடிஎம் இயந்திரம் உள்ள இடத்தை டீக்கடையில் இருந்துக்கொண்டு நோட்டமிடுவதற்காக அங்கு சென்றுள்ளார். அப்போது நண்பர்களுடன் டீக்குடித்துக் கொண்டிருக்கும்போது எதிர்பாராத விதமாக தான் வைத்திருந்த குண்டு வெடித்துள்ளது.
இதனால் அதிர்ச்சிடையந்த சீனிவாசன் நண்பர்கள் அந்த இடத்தை விட்டு தப்பிவிட்டனர்.

காரில் LPG சிலிண்டர் பொருத்துவது ஆபத்தா?-சிறப்பு பார்வை

Car LPG Kit
புரோப்பேன் மற்றும் பியூட்டேன் ஆகியவற்றின் சேர்மானம்தான் எல்பிஜி அல்லது லிக்யூடு பெட்ரோலியம் கேஸ் என்று கூறப்படுகிறது. தற்போது கார்களை இயக்குவதற்கான முக்கிய எரிபொருளாக எல்பிஜி மாறி வருகிறது.
பெட்ரோல் விலை அதிகரிப்பே இதற்கு முக்கிய காரணம். ஆம், ஒரு லிட்டர் பெட்ரோல் 75 ரூபாயில் விற்கப்படும் விலையில், எல்பிஜி ஒரு கிலோ 43 ரூபாயில் கிடைக்கிறது. இதனால், எல்பிஜி கிட்டுடன் வரும் கார்களுக்கு வாடிக்கையாளர் மத்தியில் வரவேற்பு கூடி வருகிறது.

சமாஜ்வாடிக்கு ரூ. 66,000 கோடி நிதி தேவை தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற


Mulayam Singh Yadav
லக்னோ: உ.பி தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளையெல்லாம் நிறைவேற்ற சமாஜ்வாடி கட்சிக்கு ரூ. 66,000 கோடி நிதி தேவைப்படுமாம். அந்த அளவுக்கு வாக்குறுதிகளை அக்கட்சி வாரி இறைத்துள்ளது.
உ.பியில் அடுத்த ஆட்சியை அறுதிப் பெரும்பான்மை பலத்துடன் அமைக்கிறது சமாஜ்வாடி. முலாயம் சிங் யாதவ் 4வது முறையாக முதல்வர் பதவியில் அமர்கிறார். பெரும் ஆதரவுடன் மக்கள் தங்களை ஆட்சியில் அமர்த்தியுள்ளதால் கொடுத்த வாக்குறுதிகளையெல்லாம் நிறைவேற்றியாக வேண்டிய கட்டாயத்தில் சமாஜ்வாடி உள்ளது.
ஆனால் அவர்கள் சொன்ன வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டுமானால் ரூ. 66,000 கோடி நிதி தேவைப்படுமாம்.

'ஹரிதாஸ் சினேகாவின் கடைசி படமா?

பிரசன்னா, சினேகா காதல் ஜோடி விரைவில் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர். இதற்கிடையில் புதிய படங்களை ஒப்புக்கொள்ளாமல் இருந்த சினேகா தற்போது 'ஹரிதாஸ்' என்ற படத்தில் நடிக்கிறார்.  குமாரவேலன் இப்படத்தை இயக்க உள்ளார். ஹீரோவாக, வில்லன் நடிகர் கிஷோர் நடிக்கிறார். இவர்களுடன் 8 வயது சிறுவன் ஒருவன் நடிக்க உள்ளான். ஏற்கனவே 'கோச்சடையான்' படத்தில் ரஜினியின் தங்கை வேடத்தில் நடிக்க இருந்த சினேகா அப்படத்திலிருந்து திடீரென்று விலகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 'ஹரிதாஸ்'தான் சினேகாவின் கடைசி படமாக இருக்கும் என¢றும் திருமணத்துக்கு பின் அவர் நடிப்புக்கு முழுக்கு போடு வார் என்றும் கூறப்படுகிறது

கொடூர ஆசிரியர்களின் பிரம்படி, மின்சார ஷாக் மட்டுமின்றி, பாலியல் தொல்லை

புதுடில்லி, மார்ச் 6- பள்ளிகளில் மாணவர்களை ஆசிரியர்கள் அடிப்பதாக கருத்துக் கணிப்பில் தெரிய வந்திருப்பதால், பிரம்படி தண்டனைக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு சிறப்பு கண்காணிப்பு குழுக்களை அமைக்க மத்திய அரசு அமைப்பு யோசனை தெரிவித்துள்ளது.
மத்திய அரசு அமைப்பான தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், பள்ளிகளில் மாணவர்களுக்கு பிரம்படி தண்டனை அளிக்கப்படுவது குறித்து நாடு தழுவிய அளவில் கருத்துக் கணிப்பு நடத்தியது. 7 மாநிலங்களில் 6 ஆயிரத்து 632 மாணவர்களிடம் கருத்து கேட்டது. இதில், 9 மாணவர்களைத் தவிர மற்ற மாணவர்கள், தாங்கள் ஏதாவது ஒரு வகையில் தண்டனையை அனுபவித்துள்ளதாக தெரிவித்தனர்.

வங்கதேத்தில் சவூதி தூதர் சுட்டுக்கொலை

டாக்கா: வங்கதேசத்தில், சவூதி அரேபியா நாட்டின் தூதர் , நடந்து சென்ற போது மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். வங்கதேச நாட்டிற்கு சவூதி அரேபியா பலவழிகளில் பெருமளவு நிதி அளித்து வழங்கிவருகிறது.இந்நிலையில் சவூதி அரேபியா தூதர் காலிஃப் அல்-அலி, 43 என்பவர் நேற்று தனது வீட்டிலிருந்து மாலை நடைபயிற்சிக்காக சென்றார்.
வீட்டிலிருந்து சில அடி தூரம் சென்ற போது எதிரே காரில் வந்த ஒருவன் துப்பாக்கியால் தூதரை சுட்டுவிட்டு தப்பியோடிவி்ட்டதாக போலீசார் தெரிவித்தனர். நெஞ்சில் குண்டுகாயமடைந்த தூதரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் முன்பே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவி்த்தனர்.

இளங்கோவன்:ஜெயலலிதா ஹிலாரியுடன் ஒப்பந்தம்; ரஷ்யாவிடம் கமிஷன் எதிர்பார்ப்பு

ஈரோடு: ""ஹிலாரியுடன் ரகசிய ஒப்பந்தம் செய்து, ரஷ்யாவிடம் கமிஷன் எதிர்பார்ப்பதால் தான், கூடங்குளம் அணுமின் நிலையம் விஷயத்தில் முதல்வர் ஜெயலலிதா அமைதி காக்கிறார்,'' என, இளங்கோவன் பேசினார்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தை செயல்படுத்த கோரி, காங்கிரஸ் கட்சி சார்பில், ஈரோடு, சம்பத் நகரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன் பேசியதாவது:மின்வெட்டு என்பது, 1967க்கு பின்தான் நடக்கிறது. ஊரெல்லாம் குடும்பம் வைத்திருப்பவருக்கு ஆட்சியைக் கொடுத்தோம். அப்போது, இரண்டு முதல் நான்கு மணி நேரம் வரை மின்தடை ஏற்பட்டது. குடும்பமே இல்லாதவருக்கு ஆதரவளித்தோம். எட்டு மணி நேரம், 10 மணி நேரம் மின்தடையாகிவிட்டது. அவர்களுக்கும், இவர்களுக்கும் மாறி மாறி ஜால்ரா தட்டியதால் தான் நமக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது. நமக்கு, அவர்கள் ஜால்ரா தட்டும் காலம் விரைவில் ஏற்படும்.சென்னையில் போயஸ் கார்டன் தவிர மற்ற இடங்களிலெல்லாம் மின்தடை ஏற்படுகிறது. படிக்கவே மின்சாரமில்லை; தேர்வு எழுத எதற்கு ஜெனரேட்டர்? மிக்ஸியும், கிரைண்டரும் கொடுத்து என்ன பயன்?

செவ்வாய், 6 மார்ச், 2012

ஓரினச்சேர்க்கை இறக்குமதி அல்ல. நம் புராணங்களில், கோயில் சிற்பங்களில்


முரண்பாடுகளை ஏற்பதுதான் கலாசாரம். நாகரிகமும்கூட. குடும்ப முறை வளர்ந்த பிறகுதான், முதல் பாலியல் தொழிலாளி உருவாகியிருக்கவேண்டும். அன்றிலிருந்து இன்று வரை பாலியல் தொழிலாளர்கள் கெட்டவர்களாகவே  பார்க்கப்படுகிறார்கள். குடும்ப முறை வளர்ந்த பிறகு, திருநங்கைகள் மனிதர்களாகப் பார்க்கப்படுவதில்லை. இவர்களை அருவருக்கத்தக்க மனிதர்களாக மாற்றிய பெருமை கலாசாரத்தையே சாரும்.
என்னைப் பொறுத்தவரை, ஓரினச்சேர்க்கை என்பது இயற்கைக்கு முரணானதோ, வெறுத்து ஒதுக்கப்பட வேண்டியதோ அல்ல. ஒத்த எண்ணம் கொண்ட இரு ஆணோ அல்லது பெண்ணோ தங்களுக்குள் ஏற்பட்ட விருப்ப உணர்வுகளை, சிற்றின்பத்தை மற்றவர்களுக்கு தெரியாத வகையில் அந்தரங்கமாக செய்கிற ஒரு விஷயம். அப்படி இருக்கும்வரையில் இதில் எந்த தவறும் இல்லை. ‘ஈசாவாஸ்யம் இதம் சர்வம்’ என்று உபநிஷதம் சொல்வதன்படி, எல்லாமே  இறைத் தன்மையின் வெளிப்பாடுகதான்!
பலரும் நினைப்பது போல் ஓரினச்சேர்க்கை என்பது வெளிநாட்டு இறக்குமதி அல்ல. நம் புராணங்களில், கோயில் சிற்பங்களில் பார்த்த நிகழ்வுகளை, கேட்டறியாத பல கதைகளை நாம் அறிந்திருந்தால், நம் எண்ணங்களை சற்று பரந்த மனதுடன் வரவேற்றிருப்போம். குறுகிய எண்ணத்தை விட்டொழித்தாலே பல தவறான சிந்தனைப் போக்குகள் நம்மைவிட்டு விலகியோடும்.

FACEBOOK நிறுவனத்தில் பாதி சொத்து பெற்றுதர, புதிதாக 5 வக்கீல்கள்!

Viruvirupu
மெகா சமூக வலைத்தளம் பேஸ்புக்கின் பில்லியன்கள் பெறுமதியான சொத்தில் பாதி தன்னுடையது என வழக்கு தொடுத்துள்ள நபர், தனது தரப்பில் வாதாடும் வக்கீல் டீமில் புதிதாக 5 பிரபல வக்கீல்களை இணைத்திருப்பதாக அறிவித்துள்ளார்.
இந்த மூவரும் நியூயார்க்கின் பிரபல சட்ட நிறுவனங்களில் தமது வேலைகளை ராஜினாமா செய்து விட்டு, இந்த டீமில் வந்து இணைந்துள்ளனர்.
845 மில்லியன் உறுப்பினர்களை கொண்ட பேஸ்புக்கின் கடந்த ஆண்டு வருமானம், 3.7 பில்லியன் டாலர். இந்தளவுக்கு வருமானம் கொழிக்கும் நிறுவனத்தில் பாதி தம்முடையது என்று பால் சிக்லியா வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு பஃபலோவில் உள்ள நீதிமன்றத்தில் பதிவாகியுள்ளது.
பேஸ்புக் நிறுவனர் மார்க் சுக்கர்பர்க்,  2003-ம் ஆண்டு ஹவார்ட் பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியே வந்த நாட்களில், தமது நண்பருடன் ஒரு ஒப்பந்தம் செய்திருந்தார்.

மாயாவதி . ஆடம்பரம் ஊழல் பந்தா அரசியல் மொத்தத்தில் இவர் ஒரு ஜெயா

லக்னோ : ஆடம்பர செலவில் சிலைகள் அமைத்தல், சட்டம் ஒழுங்கை பாதுகாத்திட தவறியது, தேசிய சுகாதார திட்டத்தில் ஊழல் , பந்தா அரசியல் என பல்வேறு பிரச்னைகளுடன் தேர்தலை சந்தித்த மாயாவதி கட்சிக்கு மக்கள் தக்க பாடம் புகட்டியுள்ளனர், இளம் தலைமுறை அரசியலுக்கு மக்கள் வரவேற்பு அளித்திருக்கின்றனர் என்றாலும் தேசிய கட்சியான காங்கிரசின் இளவரசர் என்றழைக்கப்படும் ராகுலின் பிரசாரம் எடுபடாமல் போனது. இம்மாநிலத்தில் இவரது பிரசாரம் காரணமாக காங்கிரசுக்கு பெரும் அளவில் ஆதாயம் கிட்டவில்லை என்று சொன்னாலும் கடந்த 2007 தேர்தலை விட 22 தொகுதிகள் தற்போது 37 தொகுதிகளாக கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மற்றபடி ஆளும் கட்சியாகவோ , எதிர்கட்சியாகவோ வர முடியாமல் போனது. நடந்து முடிந்திருக்கும் 5 மாநில தேர்தலில் ஏற்கனவே ஆட்சியில் இருந்த கோவாவையும் காங்., இழக்கிறது. மணிப்பூரை மட்டும் தக்க வைத்து கொள்ளும் . மாயாவதியின் சறுக்கலுக்கு என்ன காரணம் ? : இன்றைய தேர்தல் முடிவின் படி உ .பி., மாநிலத்தில் ஆளும் பகுஜன்சமாஜ் கட்சிக்கு ( மாயாவதி ) சம்மட்டி அடி விழுந்துள்ளது.

இந்தப் பெருமையும் கட்காரிக்குத் தானா நிர்மலா சீதாராமன்''?!


Nirmala Seetharaman
டெல்லி: உ.பி. தேர்தல் முன்ணனி நிலவரம் முழுமையாக வெளியாகும் முன்பே, தங்களது கட்சிக்கு கிடைத்துள்ள இந்த பெரும் வெற்றிக்கு கட்சித் தலைவர் நிதின் கத்காரியே காரணம், அவருக்கே இந்த புகழ் போய்ச் சேரும் என்றெல்லாம் அவசரக் குடுக்கையாக கருத்து தெரிவித்தார் பாஜக செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீதாராமன்.
உ.பி. தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் இன்றுகாலை தொடங்கின. அப்போது வெளியான ஆரம்ப முன்னிலை நிலவரப்படி பாஜக 2வது இடத்தைப் பிடிப்பது போல தெரிந்தது. இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீதாராமன், இது மிகப் பெரிய விஷயம், மிகவும் உணர்ச்சிகரமான ஒன்று. உ.பி. வாக்காளர்கள் ஒட்டுமொத்தமாக காங்கிரஸை நிராகரித்து விட்டனர்.

UP சமாஜ்வாடி 224,பகுஜன் சமாஜ் கட்சி 77,பாஜக 49,காங்கிரஸ் 39

டெல்லி: நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களில் உத்தரப் பிரதேசத்தில் காங்கிரசும் பாஜகவும் படுதோல்வி அடைந்துள்ளன.
உத்தர்கண்ட் மாநிலத்தில் பாஜகவும் காங்கிரசும் கிட்டத்தட்ட சம பலத்தில் உள்ளன. பஞ்சாபில் ஆளும் அகாலிதளம்-பாஜக கூட்டணியே மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது.
கோவாவில் காங்கிரஸிடமிருந்து பாஜக ஆட்சியைப் பறித்துள்ள. மணிப்பூரில் ஆளும் காங்கிரஸே மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது.
முலாயம் மாபெரும் வெற்றி:
உத்தரப் பிரதேசத்தில் முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சி மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தை ஆளும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும், 3வது இடத்தை பாஜகவும் பிடித்துள்ளன. காங்கிரஸ் 4வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.இந்த மாநிலத்தில் மொத்தமுள்ள 403 இடங்களில் சமாஜ்வாடி கட்சி 224 இடங்களிலும் (ஆட்சியமைக்க குறைந்தது 202 இடங்கள் தேவை), ஆளும் பகுஜன் சமாஜ் கட்சி 77 இடங்களிலும், பாஜக 49 இடங்களிலும், காங்கிரஸ் 39 இடங்களிலும் மட்டுமே முன்னணியில் உள்ளன. மற்ற கட்சிகள், சுயேச்சைகள் 14 இடங்களைப் பிடித்துள்ளனர்.

மீண்டும் மீண்டும் மண்ணைக் கவ்வும் ராகுல்- அமேதியைக் கூட காக்க முடியாத


சென்னை: காங்கிரஸ் கட்சியின் வருங்காலத் தலைவர், நாளைக்கே பிரதமர் பதவி கிடைத்தாலும் ஏற்றுக் கொண்டு சிறப்பாக செயல்படக் கூடியவர், அலெக்சாண்டர் போல் பிரமாதமான தலைவர் என்றெல்லாம காங்கிரஸாரால் கோஷ்டி கானம் பாடப்பட்டு வரும் ராகுல் காந்திக்கு ஐந்து மாநிலத் தேர்தலில் மீண்டும் ஒரு பெரும் தோல்வி கிடைத்துள்ளது. அவரது உத்திகளுக்குக் கிடைத்த பெரும் அடியாக இது கருதப்படுகிறது.
பெரிய சோகம் என்னவென்றால், தான் எம்.பியாக உள்ள அமேதி தொகுதிக்குட்பட்ட அத்தனை சட்டசபைத் தொகுதிகளையும் அவரது கட்சி சமாஜ்வாடியிடம் பறி கொடுத்திருப்பதுதான். இதுதான் காங்கிரஸை நடுநடுங்க வைத்துள்ளது.

சங்கரன்கோவில்: அதிமுகவினர் அவசரம், அவசரமாக கிளம்பினர்

சங்கரன்கோவிலில் வாக்கு சேகரிக்க செல்லும் அதிமுகவினரிடம் மக்கள் மின்வெட்டு உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து மக்கள் புகார் கொடுக்கின்றனர். இதனால் ஆளுங்கட்சியினர் நடவடிக்கை எடுப்பதாகக் கூறிவிட்டு இடத்தை காலி செய்கின்றனர்.
சங்கரன்கோவில் தொகுதியில் பாரதி நகர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் மாநில அதிமுக அமைப்பு செயலாளர் பி.எச் பாண்டியன் தலைமையிலான அதிமுகவினர் தீவிர பிரச்சாரம் செய்தனர். அவர்களுடன் மாநகர அதிமுக செயலாளர் சுதா பரமசிவம், முன்னாள் எம்.பி முருகேசன் உட்பட பலரும் சென்றனர்.

அன்னா குழுவால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை

டெல்லி: சமூக ஆர்வலர் அன்னா குழுவினர் காங்கிரஸுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்தும் அக்கட்சி 5 மாநிலங்களிலும் கடந்த சட்டசபை தேர்தலைவிட அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
உத்தர பிரதேசம், உத்தரகண்ட், மணிப்பூர், பஞ்சாப் மற்றும் கோவா ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தலின்போது பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.
இதில் மணிப்பூரில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியமைப்பது உறுதியாகிவிட்டது. காங்கிரஸ் ஆளும் கோவா பாஜகவுக்கு கிடைத்துள்ளது. உத்தர பிரதேசம், பஞ்சாப் மற்றும் உத்தரகண்டில் கடந்த சட்டசபை தேர்தலைவிட இந்த தேர்தலில் காங்கிரஸ் கணிசமான இடங்களைப் பிடித்துள்ளது.

முலாயம் சிங் 196 தொகுதியில் முன்னிலை 4வது முறையாக பதவியேற்கிறார்


4வது முறையாக முதல் அமைச்சர் ஆகிறார் முலாயம் சிங் யாதவ்

உத்திரப்பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான முடிவுகள் வெளியானதையடுத்து, அந்த மாநில முதல் அமைச்சராக 4வது முறையாக பதவியேற்கிறார் முலாயம் சிங் யாதவ்.
1989ஆம் ஆண்டு உத்திரப்பிரதேச முதல் அமைச்சராக முதன் முறையாக பதவி ஏற்றார் முலாயம் சிங். காங்கிரஸ் கட்சி அளித்து வந்த ஆதரவை திருப்பப் பெற்றதால் 1991ல் முலாயம் சிங் ஆட்சி கவிழ்ந்தது.
1992ஆம் ஆண்டு ஜனதா தளத்திலிருந்து விலகி சமாஜ்வாதி கட்சியை முலாயம் சிங் யாதவ் தொடங்கினார். 1993ஆம் ஆண்டு பகுஜன் சமாஜ்த்துடன் அணி சேர்ந்து முலாயம் சிங் யாதவ் 2வது முறையாக உத்திரப்பிரதேச முதல் அமைச்சரானார்.
1996ஆம் ஆண்டு உத்திரப்பிரதேசத்தின் மெயின்புரி தொகுதியில் இருந்து மக்களவைக்கு முலாயம் சிங் யாதவ் தேர்வானார். ஐக்கிய முன்னணி அரசில் 1996 முதல் 1998 வரை பாதுகாப்பு அமைச்சராக பதவி வகித்தார்.
2003ஆம் ஆண்டு மாயாவதி ஆட்சி கவிந்ததையடுத்து மீண்டும் உத்திரப்பிரதேச முதல் அமைச்சர் ஆனார் முலாயம். தற்போது 196 தொகுதியில் முன்னிலை பெற்று 4வது முறையாக முதல் அமைச்சராக ஆகியார் முலாயம் சிங் யாதவ். 73 வயதாகும் முலாயம் சிங் யாதவ் தற்போது மக்களவை உறுப்பினராக இருந்து வருகிறார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் வீழ்ச்சியால் லாபம் பார்த்த காங்., பாஜக

உ.பியில் பகுஜன் சமாஜ் கட்சி அடைந்துள்ள பெரும் தோல்வியால், காங்கிரஸும், பாஜகவும்தான் பெரும் லாபம் சம்பாதித்துள்ளன என்பது தெரிய வந்துள்ளது.
உ.பி. சட்டசபைத் தேர்தலில் அனைவரும் எதிர்பார்த்தது போல சமாஜ்வாடி கட்சியின் ஆட்சியைக் கொண்டு வந்துள்ளது. அந்தக் கட்சி தொடர்ந்து அசைக்க முடியாத முன்னிலையில் இருந்து வருகிறது.
அதேசமயம், ஆளும் பகுஜன் சமாஜ் கட்சி ஆரம்பத்தில் 3வது இடத்தில் இருந்தது. இதனால் மோசமான தோல்வியை அக்கட்சி தழுவும் நிலை இருந்தது. இருப்பினும் தற்போது அந்தக் கட்சி 2வது இடத்திற்கு வந்து விட்டது.
பகுஜன் சமாஜ் கட்சியின் பெரும் தோல்வியால் காங்கிரஸும், பாஜகவும்தான் பெரும் லாபத்தைப் பார்த்துள்ளன.
கடந்த 2007 தேர்தலில் இங்கு காங்கிரஸ் கட்சிக்கு 32 இடங்களில் வெற்றி கிடைத்தது. தற்போது காங்கிரஸ் அதை விடக் கூடுதலாக 46 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
அதேபோல கடந்த சட்டசபைத் தேர்தலில் பாஜகவுக்கு 51 இடங்கள் கிடைத்தது. தற்போது அக்கட்சி 59 இடங்களில் முன்னிலை கிடைத்துள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சி கடந்த தேர்தலில் 206 இடங்களைக் கைப்பற்றியிருந்தது. ஆனால் இந்தத் தேர்தலில் இதுவரை 92 இடங்களில் மட்டுமே அது முன்னிலை பெற்றுள்ளது.
சமாஜ்வாடிக் கட்சிக்கு கடந்த தேர்தலில் 97 இடங்கள் மட்டுமே கிடைத்தது. ஆனால் தற்போது அக்கட்சி 170 இடங்களைத் தாண்டி ஓடிக் கொண்டிருக்கிறது.
சமாஜ்வாடிக் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்றாலும், பாஜகவும், காங்கிரஸும் உ.பி. தேர்தலில் நல்ல லாபம் பார்த்துள்ளன என்றே சொல்ல வேண்டும்

காங்கிரஸ் ஆதரவு இல்லாமல் முலாயம் சிங்கால் ஆட்சியமைக்க முடியாது!!


Mulayam Akilesh
டெல்லி: ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களில் பதிவான வாக்கு எண்ணிக்கை நடந்து வரும் நிலையில், உத்தரப் பிரதேசத்தில் காங்கிரசும் பாஜகவும் படுதோல்வி அடைந்துள்ளன.
உத்தர்கண்ட் மாநிலத்தை பாஜகவிடமிருந்து காங்கிரஸ் பறிக்கவுள்ளது. பஞ்சாபில் ஆளும் அகாலிதளம்-பாஜக கூட்டணியே மீண்டும் ஆட்சிக்கு வரவுள்ளது.
கோவாவில் காங்கிரஸிடமிருந்து பாஜக ஆட்சியைப் பறிக்கவுள்ளது. மணிப்பூரில் ஆளும் காங்கிரஸே மீண்டும் ஆட்சிக்கு வரவுள்ளது.
முலாயம் ஆட்சியமைக்க காங். ஆதரவு தேவை:
குறிப்பாக உத்தரப் பிரதேசத்தில் அந்தக் கட்சிக்கு படுதோல்வி கிடைத்துள்ளது. இங்கு முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சி ஆட்சியைப் பிடிக்கவுள்ளது. இரண்டாவது இடத்தை மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும், 3வது இடத்தில் பாஜகவும் உள்ளன. காங்கிரஸ் நான்காவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் விழாவில் 5 விருதுகளை அள்ளிய மங்காத்தா


சிங்கப்பூரில் நடந்த சர்வதேச தமிழ் திரைப்பட விருதுகள் விழாவில் அஜீத்தின் மங்காத்தா 5 விருதுகளை அள்ளியுள்ளது.
ஐஎம்என் பத்திரிக்கை ஏற்பாடு செய்திருந்த சர்வதேச தமிழ் திரைப்பட விருதுகள் வழங்கும் விழா கடந்த 3ம் தேதி சிங்கப்பூரில் நடந்தது. அந்த விழாவில் சிறந்த படம் உள்பட அதிகபட்சமாக 5 விருதுகளை அள்ளிக் குவித்தது அஜீத் குமாரின் 50வது படமான மங்காத்தா சாதனை படைத்துள்ளது.

சிறந்த படம், சிறந்த இயக்குனர் வெங்கட் பிரவு, சிறந்த ஒளிப்பதிவாளர்(சக்தி சரவணன்), சிறந்த பாடகி(சுசித்ரா) மற்றும் சிறந்த துணை நடிகர்(பிரேம்ஜி அமரன்) ஆகிய 5 பிரிவுகளில் மங்காத்தாவுக்கு விருதுகள் கிடைத்துள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் முலாயம் ஆட்சி: சிஎன்என்-ஐபிஎன் கணிப்பு

புது தில்லி, மார்ச் 5: உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் முன்னாள் முதல்வர் முலாயம் சிங் தலைமையிலான சமாஜவாதி கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்று சிஎன்என் ஐபிஎன் - தி வீக் - சிஎஸ்டிஎஸ் நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய வாக்குக் கணிப்பில் தெரியவந்திருக்கிறது.  403 உறுப்பினர்களைக் கொண்ட உத்தரப் பிரதேச சட்டப் பேரவையில், 232 முதல் 250 இடங்களை சமாஜவாதி கட்சி கைப்பற்றும்.  இப்போது ஆட்சியில் இருக்கும் முதல்வர் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சிக்கும் 65 முதல் 70 இடங்கள் வரையே கிடைக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. காங்கிரஸ் கட்சிக்கு 36 முதல் 44 இடங்களும் பாஜகவுக்கு 28 முதல் 38 இடங்களும் கிடைக்கும் என்று வாக்குக் கணிப்பில் முடிவில் கூறப்பட்டிருக்கிறது.  கடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 22 இடங்களும் பாஜகவுக்கு 51 இடங்களும் கிடைத்தன. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு சற்று அதிகமான இடங்கள் கிடைக்கும் நிலையில், பாஜகவுக்கு பெரும் தோல்வி ஏற்படும் என்று தெரிகிறது.  பதிவான மொத்த வாக்குகளில் சமாஜவாதிக்கு 34 சதவீதமும், பகுஜன் சமாஜ் கட்சிக்கு 24 சதவீதமும் பாஜகவுக்கு 14 சதவீதமும் காங்கிரஸ் கட்சிக்கு 12 சதவீதமும் கிடைக்கும் என்று வாக்குக் கணிப்பில் தெரியவந்திருக்கிறது.  இந்தத் தேர்தலில் மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் சமாஜவாதிக் கட்சிக்கு செல்வாக்கு அதிகரித்திருப்பதாகவும் கணிக்கப்பட்டிருக்கிறது.

சி.பி.ஐ.-யின் பார்வை.. அன்புமணி ராமதாஸின் பக்கம்!

Viruvirupu
தேசிய அளவிலான ஊழல் புகார் ஒன்றில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸின் மகனும், மத்திய சுகாதாரத்துறை முன்னாள் அமைச்சருமான அன்புமணி ராமதாசின் பெயரும் குற்றப் பத்திரிகையில் சேர்க்கப்பட உள்ளதாக சி.பி.ஐ. வட்டாரங்களில் கூறப்படுகிறது.
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், “திராவிடக் கட்சிகளால் நாடே குட்டிச் சுவராகி விட்டது. இவர்கள் அனைவரது பெயர்களிலும் நடைபெறும் ஊழல் வழக்குகளே இவர்கள் ஊழல் பெருச்சாளிகள் என்பதற்கு சாட்சி” என சமீப காலமாக முழங்கி வருகிறார்.

உபி.யில் சமாஜ்வாதி 172 இடங்களில் முன்னிலை


403 தொகுதிகளை கொண்ட உத்திரப்பிரதேசத்தில் முலாயம் சிங் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி 172 இடங்களில் முன்னிலையில் உள்ளது. அமேதி தொகுதியில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் முன்னிலையில் உள்ளார்.

ஆளும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் வாதி கட்சிக்கு தற்போதைய நிலவரப்படி 3வது இடம் கிடைத்துள்ளது பாஜக இரண்டாம் இடத்தில் தற்போது உள்ளது

பின்னால் வந்த நடிகைகள் எல்லாம் இப்போது முன்னணி

தனக்கு பின்னால் வந்த நடிகைகள் எல்லாம் இப்போது முன்னணி நடிகையாகிவிட்ட நிலையில், தானும் அந்தமாதிரி முன்னணி நடிகையாக மாறுவேன் என்று நடிகை மோனிகா நம்பிக்கை தெரிவித்துள்ளார். குழந்தை பருவத்தில் இருந்தே சினிமாவில் நடித்து வருபவர் நடிகை மோனிகா. தொடர்ந்து பல படங்களில் கதாநாயகியாக நடித்து விட்ட மோனிகாவுக்கு சினிமாவில் இன்னும் முன்னணி நடிகை என்ற அந்தஸ்து கிடைக்கவில்லை.

இதுகுறித்து பதிலளித்து இருக்கும் மோனிகா, தமிழ் சினிமாவில் ஒரு சிறிய இடைவெளி விழுந்துவிட்டது. நல்ல கதையை தேடிப்பிடித்து நடித்து வருகிறேன். விரைவில் நான் நடித்த அகராதி படம் தமிழ் மற்றும் தெலுங்கு என 2 மொழியிலும் வெளியாக இருக்கிறது.

ரஷிய அதிபர் தேர்தல் புதின், மீண்டும் அதிபர் ஆகிறார்


மாஸ்கோ, மார்ச்.5- ரஷிய அதிபர் தேர்தலில் வாக்குப்பதிவு விறு விறுப்பாக நடைபெற் றது. விளாடிமிர் புதின், மீண்டும் அதிபர் ஆக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
ரஷிய அதிபர் டிமிட்ரி மெட்வடேவ் பதவிக் காலம் நிறைவடைவதால், புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்காக நேற்று அதிபர் தேர்தல் நடைபெற்றது. விளா டிமிர் புதின், அதிபர் தேர்தலில் போட்டியிட் டார். அவரை எதிர்த்து கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் ஜென்னடி யுகனோவ் உள்பட 4 பேர் போட்டியிட்டனர்.

நடராஜன் வார்னிங் சிக்னல் கொடுத்திருக்கிறார்

திருச்சி சிறையில் நடராஜன் வழங்கும் “ஈழத் தமிழர் லேட் எபிசோட்!”

நடராஜன் கைது செய்யப்படலாம் என்ற வதந்தி அடிபட்டுக் கொண்டிருந்தபோதே ‘இப்படி நடக்கலாம்’ என நாம் ஊகித்து எழுதியிருந்த எபிசோட், லேட்டாக அரங்கேறுகிறது.
திருச்சி சிறையில் ஈழத் தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்திருக்கிறார் (சசிகலா) நடராஜன். நடராஜன் கைதாவதற்கு முன், இப்படியொரு நடவடிக்கையில் ஈடுபடுவார் எனவும், அதன் மூலம் அவரது கைது திசை திருப்பப்படும் எனவும் நாம் எழுதியிருந்தோம்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கொண்டு வரப்பட்ட நடராஜன், “இலங்கையில் தமிழர்கள் அனுபவிக்கும் கொடுமைகளைக் கண்டித்து சிறையில் கைதியாக இருந்தபடியே உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன்” என்று கூறியுள்ளார்.

கலாமை 'செக்கப்' செய்யலாம், ஆனால் தலாய் லாமாவை தொடக் கூடாது- மத்திய அரசு

Abdul Kalam Dalailama
டெல்லி: வெளிநாட்டு விமான நிலையங்களில் உள்ள சோதனைச் சாவடிகளில் சோதனையின்றி அனுமதிக்கப்படும் விவிஐபிக்களின் எண்ணிக்கையை 4 முதல் 6 வரை குறைப்பது குறித்து இந்திய விமான போக்குவரத்து துறை ஆலோசித்து வருகின்றது.
இந்திய விமான நிலையங்களில் நாட்டின் முக்கிய பொறுப்புகளில் உள்ள விவிஐபிக்களை சோதனைக்கு உட்படுத்துவது இல்லை. ஆனால் வெளிநாட்டு விமான நிலையங்களில் நாட்டின் முக்கிய தலைவர்களை தவிர, அனைவரும் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

ஆலுக்காஸ் கடையில் கொள்ளையடித்த 3 பேர் ஜார்க்கண்ட்டில் கைது

ராஞ்சி: திருப்பூர் ஆலுக்காஸ் ஜுவல்லர்ஸில் கடந்த 21ம் தேதி ரூ. 12 கோடி மதிப்புள்ள நகைகளைக் கொள்ளையடித்தவர்களில் 3 பேர் ஜார்க்கண்ட்-மேற்கு வங்க எல்லையில் சிக்கினர்.
திருப்பூரில் உள்ள ஆலுக்காஸ் ஜுவல்லர்ஸ் கடையில் ஓட்டைப்போட்டு கடந்த 21ம் தேதி ரூ. 12 கோடி மதிப்புள்ள தங்க, வைர நகைகளை கொள்ளை கும்பல் கொள்ளையடித்துச் சென்றது. இதையடுத்து அவர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. கொள்ளையர்கள் ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு தப்பியோடியது குறித்து அறிந்த தனிப்படையினர் அங்கு சென்றனர்.

மதியத்திற்குள் முடிவு தெரியும் உ.பி., உட்பட 5 மாநிலங்களில் ஆட்சியை பிடிக்கப்போவது யார்

புதுடில்லி: இந்தியாவின் மினி பொதுத்தேர்தல் என்ற அளவுக்கு முக்கியத்துவம் பெற்ற உ.பி., மணிப்பூர், பஞ்சாப், உத்தர்கண்ட், கேவா மாநிலங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. யார் யார் பதவியை பறி கொடுக்கின்றனர், யார் ஆட்சியை பிடிக்கப்போகின்றனர் என்பது பற்றி இன்று மதியத்திற்குள் தெரிந்து விடும். இந்த முடிவுகளை உடனுக்குடன் நாளை காலை 8 மணி முதல் இணையதளம் மூலம் வாசகர்கள் தெரிந்து கொள்ளலாம்.

2 நாட்களுக்குத் தேவையான வெடி பொருட்கள் கூட ராணுவத்திடம் இல்லை!

இந்திய ராணுவத்திடம் போதிய அளவு வெடி பொருட்கள் (ammunition) இல்லை என்றும், போர் ஆரம்பித்தால் 2 நாட்களில் எல்லா வெடி பொருட்களும் தீர்ந்துவிடும் அபாயகரமான நிலைமை நிலவுவதாகவும் இந்திய ராணுவத் தலைமைத் தளபதி வி.கே.சிங், பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.ஆண்டனிக்கு பரபரப்புக் கடிதம் எழுதியுள்ளார்.
மேலும் பீரங்கிப் படைகளிடமும் (artillery), விமான எதிர்ப்புப் படையினரிடமும் கூட போதிய அளவு குண்டுகள் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

திங்கள், 5 மார்ச், 2012

Sonia Agarwal: பிரச்னைகளை சந்தித்த பெண்களில் நானும் ஒருவர்

ஓரு நடிகையின் வாக்குமூலம்” என்ற படத்தை அடுத்து, சோனியா அகர்வால் இயக்குநர் ராஜ் பிரபு இயக்கத்தில் அச்சம் என்ன என்ற படத்தில் நடிக்கிறார். மேலும் இப்படத்தின் கதை முழுவதும் பெண்களின் பிரச்னையை மையமாக கொண்ட கதையாகும்.இதுக குறித்து சோனியா அகர்வால் கருத்து தெரிவிக்கையில், பெண்களின் பிரச்னையை மையமாகக் கொண்ட கதைகளுக்குத் தான் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். ஏனென்றால் பெண்கள் தனது வாழ்க்கையிலும், வெளியிடங்களிலும் நாளுக்கு நாள் அதிகமான பிரச்னையை எதிர்கொள்கின்றனர். அவ்வாறு பிரச்னைகளை சந்தித்த பெண்களில் நானும் ஒருவர் என்று கூறியுள்ளார்.

UK ஆண்டுக்கு 750,000 அளவுக்கு மதநம்பிக்கை அற்றவர்களின் எண்ணிக்கை பெருகி

2030-இல் இங்கிலாந்து ஒரு கிறித்துவ நாடாக இருக்காது டெல்லி மெயில் தகவல்

லண்டன், பிப். 4 - 2030இல் இங்கிலாந்து நாடு ஒரு கிறித்துவ நாடாக இருக்காது. மதநம்பிக்கை அற்றவர்கள் கிறித்துவர்களை விட அப்போது அதிக எண்ணிக்கையினராக ஆகிவிடுவார்கள் என்று ஓர் அறிக்கை தெரிவிக்கிறது.
சரிகிறது கிறித்துவ மதம்
ஒவ்வொரு ஆண்டிலும் 5 லட்சம் நம்பிக்கையாளர் களை கிறித்துவ மதம் இழந்து வருகிறது. ஆண்டுக்கு 750,000  அளவுக்கு நாத்திகர்கள், கடவுள் பற்றிய கருத்து அற்றவர்களின் எண்ணிக்கை பெருகி வரு கிறது என்று டெய்லி மெயில் என்ற இதழ் தெரி விக்கிறது. கிறித்துவ மதத்தவரின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், மற்ற மதத்தவரின் எண் ணிக்கை அதிகரித்து வருகிறது என்று பொதுமக்கள் அவை (காமன்ஸ்) நூலக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

ADMK.பெரும் தொகை கொடுத்து, "சீட்' வாங்கியதால், போட்ட காசை எடுக்க வேண்டும்

சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததும், ரத்தத்தின் ரத்தங்கள் வெற்றிக் களிப்பில் மிதந்தனர். வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.,க்களை சந்தித்த முதல்வர் ஜெயலலிதா, அனைவருக்கும் எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டார். கடந்த தி.மு.க, ஆட்சியாளர்களின் ஆட்டத்தைக் கண்டு வெறுத்துப் போன மக்கள், நமக்கு அளித்துள்ள வாய்ப்பு இதை உணர்ந்து செயல்படுங்கள். ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறோம் என்ற தைரியத்தில் கட்டபஞ்சாயத்து, மாமூல் வசூல் போன்றவற்றில் ஈடுபடாதீர்கள் என எச்சரிக்கை விடுத்தார். இதையடுத்து, சமீபத்தில் கட்சி அலுவலகத்தில் நடந்த விழாவில் பேசிய முதல்வர், கட்சியினர் அனைவரும் ஒற்றுமையுடனும், மக்கள் மத்தியில் பாராட்டும்படி செயல்பட்டால், லோக்சபா தேர்தலில் நாற்பதும் நமக்கே கிடைக்க வாய்ப்பு இருக்கிறது, என்றார்.
ஆனால், முதல்வர் என்னதான் எச்சரித்தாலும், ஒன்றிரண்டு மாதங்கள் பொறுத்திருந்த அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள், கவுன்சிலர்கள் எல்லாம் தங்கள் அதிகாரத்தையும் அந்தஸ்தையும் வெளிக்காட்டி, பணம் சுருட்டுவதில் தீவிரமாக இறங்கி விட்டனர். தமிழகம் முழுவதும் ஆளுங்கட்சியினர் மாமூல் வாங்குவது எங்கும் இல்லாத வகையில் பரவி வருகிறது.

எந்தஒரு செயலிலும் அறிவார்ந்த தெளிவே வெற்றி அளிக்கும் அண்ணாச்சிகளுடன் கலந்துரை


தமிழகத்தின் மற்ற பகுதிகளில் தான் அண்ணாச்சி என்ற வார்த்தைப் பிரயோகத்துக்கு சமூக அடையாளம் இருக்கிறது. விருதுநகர் வட்டாரத்தில் அது ஒரு மரியாதைச் சொல். விருதுநகரைப் பொருத்தவரையில், அங்குள்ளவர்கள் எந்த சமூகத்தைச் சேர்ந்தவராயினும், வயது வித்தியாசமில்லாமல் எல்லோருமே அண்ணாச்சிகள்தாம். ஒரு தாயின் இடுப்பிலிருந்து கொண்டு கடையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கைக்குழந்தையைப் பார்த்து, கல்லாவில் உட்கார்ந்திருந்த மூத்த அண்ணாச்சி, ‘அண்ணாச்சி என்ன பாக்குறீங்க? அண்ணாச்சிக்கு என்ன வேணும்?’ என்று கேட்டபோது, வாங்க, போங்க என்பது மாதிரி, அண்ணாச்சி என்பதும் அங்கே ஒரு மரியாதைச் சொல் என்று புரிந்தது.
விருதுநகரின் தொழில் வர்த்தகச் சூழலைப் பற்றி அண்ணாச்சிகளுடன் கலந்துரையாட எம்.எல்.ஏ. திரு பாண்டியராஜன் விரும்பியதையொட்டி, எம்.எல்.ஏ. வீட்டிலே ஒரு கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்து.