செவ்வாய், 6 மார்ச், 2012

நடராஜன் வார்னிங் சிக்னல் கொடுத்திருக்கிறார்

திருச்சி சிறையில் நடராஜன் வழங்கும் “ஈழத் தமிழர் லேட் எபிசோட்!”

நடராஜன் கைது செய்யப்படலாம் என்ற வதந்தி அடிபட்டுக் கொண்டிருந்தபோதே ‘இப்படி நடக்கலாம்’ என நாம் ஊகித்து எழுதியிருந்த எபிசோட், லேட்டாக அரங்கேறுகிறது.
திருச்சி சிறையில் ஈழத் தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்திருக்கிறார் (சசிகலா) நடராஜன். நடராஜன் கைதாவதற்கு முன், இப்படியொரு நடவடிக்கையில் ஈடுபடுவார் எனவும், அதன் மூலம் அவரது கைது திசை திருப்பப்படும் எனவும் நாம் எழுதியிருந்தோம்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கொண்டு வரப்பட்ட நடராஜன், “இலங்கையில் தமிழர்கள் அனுபவிக்கும் கொடுமைகளைக் கண்டித்து சிறையில் கைதியாக இருந்தபடியே உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன்” என்று கூறியுள்ளார்.

இலங்கையில் யுத்தம் முடிவடைந்தது 2009-ம் ஆண்டு மே மாதத்தில். அப்போது பலர் கொல்லப்பட்டிருந்தனர். அதிலிருந்து 2010-ம் ஆண்டு நடுப் பகுதிவரை யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் முகாம்களில் தங்கியிருந்தார்கள். அவர்களை தத்தமது சொந்த இடங்களில் வாழ வழிசெய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்திருந்தன. ஈழத் தமிழர் பிரச்னை ஐ.நா. சபைக்கு எடுத்துச் செல்லப்பட்டு சர்ச்சைக்கு உள்ளாகியது, கடந்த வாரம்.
இந்த டைம்லைன் எல்லாவற்றையும் விட்டுவிட்டு, 2012 மார்ச் 5-ம் தேதி, ‘இலங்கையில் தமிழர்கள் அனுபவிக்கும் கொடுமைகளைக் கண்டித்து’ நடராஜன் உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்திருப்பதை, எந்தக் கணக்கில் பதிவது என்றுதான் புரியவில்லை!
நாம் விசாரித்தவரை, இந்த அறிவிப்பின் மூலம் இரு பார்ட்டிகளுக்கு லேசான வார்னிங் சிக்னல் கொடுத்திருக்கிறார் என்றே தெரிகிறது.
முதலாவது, நடராஜன் கைதானால் குரல் கொடுப்பதாக ஏற்பாடு செய்யப்பட்ட சில இன உணர்வு அமைப்புகள் கடைசி நேரத்தில் காலை வாரிவிட்டன. காவல்துறை அவர்கள் அசைய முடியாதபடி சில ஏற்பாடுகளை செய்ததாக தகவல் உண்டு. இந்த அறிவிப்பின் மூலம், நானே நேரடியாக இலங்கைத் தமிழர் விவகாரத்தில் இறங்கப் போகிறேன் என்று நடராஜன் வார்னிங் கொடுத்திருக்கிறார்.
குறிப்பிட்ட அமைப்புகளுக்கான லோக்கல் பைனான்ஸிங் இதனால் வெட்டுப்படும். தவிர, ‘ஏகபோக உரிமை’ அடிபட்டுப் போகும் (புரியக்கூடியவர்கள், புரிந்து கொள்ளுங்கள்)
இரண்டாவது, நடராஜனை குண்டாஸில் கைது செய்யக்கூடிய விதத்திலான கேஸ் ஒன்று காவல்துறையிடம் தயாராக இருப்பதாக ஒரு பட்சி சொல்கிறது. “நீங்கள் சும்மா கைது செய்தால், நானும் உள்ளே தொல்லை கொடுக்காமல் இருந்துவிட்டு போவேன். குண்டாஸில் கைது செய்யப் போனால், உள்ளேயிருந்து தொல்லை கொடுப்பேன்” என்ற கன்செப்ட் இது.
காரணம், நடராஜன் உள்ளே இருந்து ஈழத் தமிழருக்காக உண்ணாவிரதத்தை தொடங்கினால், செஞ்சோற்றுக் கடனுக்காவது சில அமைப்புகள் குடைச்சல் கொடுப்பார்கள் என்ற பயம் காவல்துறைக்கு இருந்தாலே போதும், குண்டாஸை கொண்டுவருவதற்கு முன் ஒரு தடவைக்கு பல தடவைகள் யோசிப்பார்கள்!
மேலே குறிப்பிட்ட கேம்-பிளான் புரியாவிட்டால், கீழே, ‘தொடர்புடையவை’ பகுதியில் உள்ள நியூஸ் ஸ்டோரிகளை ஒருமுறை படித்துப் பாருங்கள், எல்லாமே புரியும்! www.viruviruppu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக