புதன், 7 மார்ச், 2012

குண்டு வெடித்து பலியான ராணுவ வீரரின் மிகப் பயங்கர சதித்திட்டம்!

போலீசார் வெளியிடும் அதிர்ச்சி தகவல்?

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தரங்கரை திருவண்ணாமலை மெயின்ரோட்டில் உள்ளது காந்த லெட்சுமி டீக்கடை. இந்த டீக்கடையில் கடந்த 05.03.2012 அன்று நடந்த வெடிகுண்டு விபத்தில் ராணுவ வீரர் சீனிவாசன் உடல் சிதறி அந்த இடத்திலேயே பலியானார்.
இதன் பின்னணியை விசாரித்த டிஎஸ்பி காசிநாதனுக்கு பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது. படத்தானூரைச் சேர்ந்த சீனிவாசன், தனது நண்பர்களான ராமமூர்த்தி, சத்திவேல், விஜயன் ஆகியோருடன் சேர்ந்து, சம்பவத்தன்று ஊத்தங்கரை இந்தியன் வங்கியில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தில் பணம் வைக்க வங்கி ஊழியர்கள் முயற்சிக்கும்போது, குண்டு வைத்து கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளனர்.
முன்னதாக தனது நண்பர்களுடன் சீனிவாசன், ஏடிஎம் இயந்திரம் உள்ள இடத்தை டீக்கடையில் இருந்துக்கொண்டு நோட்டமிடுவதற்காக அங்கு சென்றுள்ளார். அப்போது நண்பர்களுடன் டீக்குடித்துக் கொண்டிருக்கும்போது எதிர்பாராத விதமாக தான் வைத்திருந்த குண்டு வெடித்துள்ளது.
இதனால் அதிர்ச்சிடையந்த சீனிவாசன் நண்பர்கள் அந்த இடத்தை விட்டு தப்பிவிட்டனர்.
இதையடுத்து சீனிவாசன் வந்த இருசக்கர வாகனத்தை போலீசார் சோதனை செய்து, வாகன எண்ணை ஆய்வு செய்போது, அந்த எண் போலியானது என்பதும் தெரியவந்துள்ளது. பின்னர் வண்டி இன்ஜின் நண்பரை வைத்து இருசக்கர வாகனம் யாருக்கு சொந்தமானது என்று கண்டுபிக்கின்றனர்.
பின்னர் விசாரணையில், சீனிவாசனுடன் வந்த ராமமூர்த்தி, சக்திவேல், விஜயன் ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் மேற்படி வங்கி ஏடிஎம்மில் கொள்ளையடிக்க திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.
மேலும் அவர்களிடம் விசாரணை நடத்தியதில், சீனிவாசன் வீட்டில் 3 குண்டுகள் இருப்பது தெரிய வந்தது. குண்டு தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை சீனிவாசன் சேகரித்து வைத்துள்ளார். குண்டுகளை தயாரிக்க எலெக்ரீசியன் ராமமூர்த்தி, மெக்கானிக் சக்திவேல் ஆகியோர் உதவி உள்ளனர். வீடு கட்ட பணம் தேவை என்பதால் இந்த மூன்று பேருடன் விஜயன் என்பவர் இந்த கொள்ளையடிக்கும் திட்டத்தில் இணைந்துள்ளார்.
சீனிவாசன் உள்பட 4 பேரும், 5 நாட்களுக்கு முன்பு படத்தமானூரில் தாங்கள் தயாரித்த குண்டு எப்படி வெடிக்கிறது என்று வெடிக்க வைத்து சோதித்து பார்த்துள்ளனர். இந்த குண்டு வெடிப்பை ரிமோட் கண்ரோல் மூலம் வெடிக்க செய்துள்ளனர். அப்போது அந்த பகுதியில் இருந்த மக்கள் என்ன சத்தம் என்று கும்பல் கூடியது. அவர்களிடம் தீபாவளிக்கு வாங்கிய பட்டாசு இருந்தது. அதனைத்தான் வெடித்துப் பார்த்தோம் என்று சமாளித்துள்ளனர்.

இந்த ஏடிஎம் இயந்திரத்தில் தான் கொள்ளையடிக்க திட்டம்
திருப்பத்தூரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் (எஸ்பிஐ) உள்ள ஏடிஎம் மிஷினில் கொள்ளையடிக்க திட்டமிட்டிருந்தோம். ஆனால் அங்கு கொள்ளையடித்து தப்பிப்தற்கான வசதிகள் இல்லை என்பதால், ஊத்தரங்கரையில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளையடிக்க முடிவு செய்திருந்தோம் என்று மூன்று பேரும் போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன. ஆனால் அதிகாரப்பூர்வ தகவல்களைக் கூற போலீசார் மறுத்துவிட்டனர். இன்று (07.03.2012) செய்தியாளர்கள் சந்திப்பில் ராணுவ வீரர் குண்டுவெடித்து இறந்தது குறித்த விசாரணை தகவல்களை போலீசார் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் சீனிவாசன் கொண்டு வந்திருந்த வெடிகுண்டு மிகவும் சந்தி வாய்ந்ததாக தெரிகிறது. அப்படிப்பட்ட வெடிகுண்டை ஏடிஎம் இயந்திரத்திலோ அல்லது ஏடிஎம் உள்ள கட்டிடத்திலோ வைத்து வெடிக்க வைத்தால் அந்த இடத்தில் உள்ள அனைத்துப் பொருட்களுமே கருகியிருக்கும். அப்படி கருகும்போது பணமும் கருகிவிடும். அதுதவிர எந்த ஏடிஎம் இயந்திரமே குண்டு வைத்து பிளந்து எடுக்கும் அளவுக்கு இருப்பதில்லை. இந்த நிலையில் இவர்கள் ஏடிஎமில் குண்டு வைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்திருக்கிறார்கள் என்று போலீசார் சொல்லுவதை நம்ம முடியவில்லை என்கிறார்கள் அப்பகுதி மக்கள். மேலும் அவர்கள், இறந்த போன சீனிவாசன் வீட்டில் மேலும் 3 கையெறி குண்டுகள் இப்பதாக சொல்கிறார்கள். இது எதற்காக என்பதும் தெரியவில்லை. இந்த வழக்கு குறித்து கியூ பிரான்ஞ் போலீசார் தனியாக விசாரிக்கின்றதாக சொல்கிறார்கள். அவர்கள் விசாரணை முடிவிலேயே முடிவு தெரிய வரும் என்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக