செவ்வாய், 6 மார்ச், 2012

சங்கரன்கோவில்: அதிமுகவினர் அவசரம், அவசரமாக கிளம்பினர்

சங்கரன்கோவிலில் வாக்கு சேகரிக்க செல்லும் அதிமுகவினரிடம் மக்கள் மின்வெட்டு உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து மக்கள் புகார் கொடுக்கின்றனர். இதனால் ஆளுங்கட்சியினர் நடவடிக்கை எடுப்பதாகக் கூறிவிட்டு இடத்தை காலி செய்கின்றனர்.
சங்கரன்கோவில் தொகுதியில் பாரதி நகர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் மாநில அதிமுக அமைப்பு செயலாளர் பி.எச் பாண்டியன் தலைமையிலான அதிமுகவினர் தீவிர பிரச்சாரம் செய்தனர். அவர்களுடன் மாநகர அதிமுக செயலாளர் சுதா பரமசிவம், முன்னாள் எம்.பி முருகேசன் உட்பட பலரும் சென்றனர்.
பிரச்சாரத்தின்போது பொதுமக்கள் கூறியதாவது,
 தற்போது மின்தடை அடிக்கடி ஏற்பட்டு வருவதால் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறோம். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ரேஷன் கார்டு பிரச்சனை உட்பட அத்தியாவசியப் பிரச்னைகளை தீர்க்க வேண்டும் என்றனர்.
இக்கோரிக்கைகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறிய அதிமுகவினர் அங்கிருந்து அவசரம், அவசரமாக கிளம்பினர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக