செவ்வாய், 6 மார்ச், 2012

பின்னால் வந்த நடிகைகள் எல்லாம் இப்போது முன்னணி

தனக்கு பின்னால் வந்த நடிகைகள் எல்லாம் இப்போது முன்னணி நடிகையாகிவிட்ட நிலையில், தானும் அந்தமாதிரி முன்னணி நடிகையாக மாறுவேன் என்று நடிகை மோனிகா நம்பிக்கை தெரிவித்துள்ளார். குழந்தை பருவத்தில் இருந்தே சினிமாவில் நடித்து வருபவர் நடிகை மோனிகா. தொடர்ந்து பல படங்களில் கதாநாயகியாக நடித்து விட்ட மோனிகாவுக்கு சினிமாவில் இன்னும் முன்னணி நடிகை என்ற அந்தஸ்து கிடைக்கவில்லை.

இதுகுறித்து பதிலளித்து இருக்கும் மோனிகா, தமிழ் சினிமாவில் ஒரு சிறிய இடைவெளி விழுந்துவிட்டது. நல்ல கதையை தேடிப்பிடித்து நடித்து வருகிறேன். விரைவில் நான் நடித்த அகராதி படம் தமிழ் மற்றும் தெலுங்கு என 2 மொழியிலும் வெளியாக இருக்கிறது.
அதனைத்தொடர்ந்து கூத்துக்காரப் பசங்க மற்றும் கன்னிகாபுரம் ஆகிய இரு படங்களில் நடித்து வருகிறேன். இந்த 2 படத்திலும் எனக்கு நல்ல ரோல் தான் கிடைத்து இருக்கிறது. எனக்கு பிறகு நடிக்க வந்தவர்கள் எல்லாம் இப்போது முன்னணி நடிகையாகிவிட்டனர் என்று பலரும் கேட்கின்றனர். நானும் ஒரு நாள் அதுபோன்று முன்னணி நடிகையாவேன். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக