சனி, 10 மார்ச், 2012

தயாநிதி மாறனை விசாரணைக்கு அழைக்கும் சி.பி.ஐ.

Dayanidhi Maran
 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழல் தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனை விசாரணைக்கு அழைக்க சி.பி.ஐ. முடிவு செய்துள்ளது.
மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தபோது ஏர்செல் நிறுவனத்துக்கு 2ஜி அலைக்கற்றையை ஒதுக்குவதில் வேண்டுமென்றே தாமதம் செய்தார் என்றும் மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்திடம் ஏர்செல் நிறுவனத்தை விற்க வற்புறுத்தினார் என்பதும் குற்றச்சாட்டு.
2ஜி ஊழலில் பலரும் அகப்பட்டு சிறைக்குப் போய் திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில் தயாநிதி மட்டும் எஸ்கேப் ஆகிக் கொண்டே வருகிறார்.
இந்த வழக்கில் தயாநிதி, கலாநிதி ஆகியோர் மீது எப்.ஐ.ஆர். போடப்பட்ட பிறகும் விசாரணையில் எந்தவித முன்னேற்ரமும் ஏற்படாமல் இருந்தது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு வழக்கின் முக்கிய சாட்சியான ஏர்செல் சிவசங்கரனிடம் வாக்குமூலத்தைப் பெற்ற சி.பி.ஐ அதை குற்றவியல் நடைமுறைச்சட்டம் 161ன் படி இந்த வாக்குமூலத்தை பதிவு செய்தது.

இதையடுத்து எந்த நேரத்திலும் தயாநிதி மாறனை சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணைக்கு அழைக்கக் கூடும் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கிறன.

2ஜி ஸ்பெக்ட்ரம்-மத்திய அமைச்சரவை ஆலோசனை:

இந் நிலையில் 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமைகளை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததைத் தொடர்ந்து, இனி 2ஜி ஸ்பெக்ட்ரத்தை எந்த முறையில் ஒதுக்கீடு செய்வது என்பது குறித்து இன்று கூடும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படவுள்ளது.

முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் வழங்கப்பட்ட உரிமத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. ஏல முறையில் உரிமை வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக