வெள்ளி, 9 மார்ச், 2012

நான்கு சின்ன பட்ஜெட் படங்கள் இன்று ரிலீஸ்!

இந்த வெள்ளிக்கிழமை நான்கு புதிய படங்கள் வெளியாகின்றன. நான்குமே சின்ன பட்ஜெட் படங்கள்.
திரையுலகில் இப்போது சிறு முதலீட்டுப் படங்கள் அதிகமாக வெளியாகி வருகின்றன. மாதக்கணக்கில் பெட்டிக்குள் முடங்கிக் கிடந்த படங்களுக்கும் இப்போது ஓரளவு திரையரங்குகள் கிடைப்பதுதான் காரணம்,.
அந்த வகையில், இந்த வாரம் செல்வா இயக்கியுள்ள நாங்க, அர்ஜுன் நடித்த மாசி, சேவற்கொடி மற்றும் பத்திரமா பாத்துக்கங்க ஆகிய நான்கு படங்கள் வெளியாகின்றன.

இவற்றில் அர்ஜுன் படம் மட்டும் கடைசி நேரத்தில் தள்ளிப் போகும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
நாங்க படம் எண்பதுகளின் பின்னணியைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. சுப்பிரமணியபுரம் மாதிரி இந்தப் படம் திடீர் வெற்றியைப் பெறும் என நம்புகிறார்கள்.
பத்திரமா பாத்துக்கங்க படத்தை விசி சோமசுந்தரம் இயக்கியுள்ளார். குடும்பத்தையும் காதலையும் பத்திரமா பாத்துக்கணும் என்பதுதான் இந்தப் படம் சொல்ல வரும் கருத்து.
ராதாமோகனின் உதவியாளர் சுப்பிரமணியன் இயக்கியுள்ள சேவற்கொடி இன்னுமொரு நம்பிக்கையூட்டும் வரவாக அமைந்துள்ளது.
இவை தவிர, வித்யா பாலன் கஹானி இந்திப் படம் வெளியாகிறது.
இந்தப் படங்களில் 25 நாளைத் தாண்டும் படம் எதுவெனப் பார்ப்போம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக