செவ்வாய், 6 மார்ச், 2012

ஆலுக்காஸ் கடையில் கொள்ளையடித்த 3 பேர் ஜார்க்கண்ட்டில் கைது

ராஞ்சி: திருப்பூர் ஆலுக்காஸ் ஜுவல்லர்ஸில் கடந்த 21ம் தேதி ரூ. 12 கோடி மதிப்புள்ள நகைகளைக் கொள்ளையடித்தவர்களில் 3 பேர் ஜார்க்கண்ட்-மேற்கு வங்க எல்லையில் சிக்கினர்.
திருப்பூரில் உள்ள ஆலுக்காஸ் ஜுவல்லர்ஸ் கடையில் ஓட்டைப்போட்டு கடந்த 21ம் தேதி ரூ. 12 கோடி மதிப்புள்ள தங்க, வைர நகைகளை கொள்ளை கும்பல் கொள்ளையடித்துச் சென்றது. இதையடுத்து அவர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. கொள்ளையர்கள் ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு தப்பியோடியது குறித்து அறிந்த தனிப்படையினர் அங்கு சென்றனர்.
இந்நிலையில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களில் ஜியா உல் ஷேக் உள்பட 3 பேர் ஜார்க்கண்ட்-மேற்கு வங்க எல்லையில் தமிழக போலீசாரிடம் சிக்கினர். 10 நாட்கள் தேடுதல் வேட்டைக்குப் பின் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்களையும் பிடிக்க திருப்பூர் டிஎஸ்பி ராஜாராம் தலைமையில் 50 போலீசார் ஜார்கண்டில் முகாமிட்டுள்ளனர். மேலும் மொழிப் பிரச்சனையை தவிரிக்க தருமபுரி எஸ்.பி. அஜீத்குமார் சிங்கும் அவர்களுடன் தங்கியுள்ளார்.

கொள்ளையர்கள் கோவை, திருப்பூரில் உள்ள நகைக்கடைகளில் வேலை பார்த்துக் கொண்டே கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டியது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மற்றவர்களையும் பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக