புதன், 7 மார்ச், 2012

37 வயது ஆசிரியை 17 வயது மாணவருடன் அபூர்வ ராகங்கள்

சென்னை: +1 படித்து வந்த 17 வயது மாணவனும், 37 வயது அறிவியல் ஆசிரியையும் ஒரே நாளில் காணாமல் போயுள்ளனர் இருவரும் காதலித்து ஓடி போனார்களா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சென்னை சவுகார்பேட்டையைச் சேர்ந்தவர் சரவணக்குமார். தச்சுத் தொழிலாளர். இவரது 17 வயது மகன் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் +1 படித்து வந்தார். அந்த பள்ளியில் 37 வயதுள்ள அறிவியல் ஆசிரியை ஒருவரும் பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் கடந்த 3.3.2012 அன்று முதல் தனது மகனைக் காணவில்லை என்றும், அவரைக் கண்டுபிடித்து தருமாறும் கோரி யானைக்கவுனி போலீஸ் நிலையத்தில் சரவணக்குமார் புகார் கொடுத்தார். இது குறித்து இன்ஸ்பெக்டர் ராஜசேகர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தார்.
விசாரணையில் சரவணக்குமாரின் மகன் அறிவியல் ஆசிரியையுடன் அதிக நெருக்கமாக பழகி வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அறிவியல் ஆசிரியை குறித்து போலீசார் விசாரித்தனர். இதில் அவருக்கு திருமணமாகி 8 வயதில் ஒரு குழந்தை உள்ளதும், கடந்த 4ம் தேதி முதல் அவரையும் காணவில்லை என்பதும் தெரிய வந்தது.
மேலும் அறிவியல் ஆசிரியை பள்ளியில் பல மாணவர்களுக்கு ஆபாச எஸ்.எம்.எஸ்களை அனுப்பி வந்துள்ளார். இதில் கடந்த மாதம் சரவணக்குமாரின் மகனின் செல்போனுக்கு வந்த ஆபாச எஸ்.எம்.எஸ். குறித்து யானைக்கவுனி போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. அதன் பிறகு இருவரது எதிர்காலம் கருதி புகார் வாபஸ் பெற்றதாக கூறப்படுகின்றது.

இதனால் 37 வயது ஆசிரியையும், 17 வயது மாணவனும் காதலில் விழுந்து, வீட்டை விட்டு ஓடிப் போயிருக்கலாம் என்ற போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால் இருவரும் காதலித்தது குறித்து எந்த புகாரும் கொடுக்கப்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.

இது குறித்து காணாமல் போன ஆசிரியையின் தந்தையிடம் விசாரித்ததில், இருவரும் காதலித்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டை கடுமையாக மறுத்தார்.

எனவே பள்ளி மாணவன் காணவில்லை என்று வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றது. பள்ளி மாணவனை ஆசிரியை கடத்தியது உண்மை என்று தெரிய வந்தால், மைனர் மாணவனை கடத்தியதாக ஆசிரியை மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக