வியாழன், 8 மார்ச், 2012

நெப்போலியன்! சரத்குமாரிடம் ஒரே ஒரு கேள்வி கேளுங்கள்!

காமராஜர் சத்துணவு திட்டத்தை கொண்டுவந்தபோது, ஒரு சில இடங்களில்தான் கொண்டு வந்தார். முழுமையாக செயல்படுத்தவில்லை என்று ஜெயலலிதா பேசியபோது, சரத்குமார் எதுவுமே பேசாமல் இருந்தார். நாளை பிரச்சாரத்திற்கு வரும் சரத்குமாரிடம் நீங்கள் இதுதொடர்பாக அவரிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டும்.
மத்திய இணையமைச்சரான நெப்போலியன், சங்கரன்கோவில் இடைத்தேர்தலுக்கான திமுக வேட்பாளர் ஜவஹர் சூர்யகுமாரை ஆதரித்து, 07.03.2012 அன்று மாலை 4 மணி அளவில், சங்கரன்கோவில் ஒன்றியத்துக்கு உட்பட்டட கடையாலுருட்டி வேடப்ப நாடானூர், தேர்ந்த மரம், நடுவக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பிரச்சாரம் செய்தார்.
இந்த தொகுதியில் 4 முறையாக எம்எல்ஏவாக இருந்தவர் கருப்பசாமி. மறைந்த அவரின் குடுத்தார்கள் ஜெயலலிதாவை சந்திப்பதற்கு சென்னையில் பல நாட்கள் இருந்தும், சந்திக்க முடியாமல் திரும்பினார்கள்.

ஆனால் தலைவர் கலைஞர் முதல்வராக இருந்தபோதும், இப்போதும் யார் வேண்டுமானாலும் சுலபமாக சந்திக்கலாம். அப்படிப்பட்ட ஒரு தலைவர் கலைஞர்.

காமராஜர் சத்துணவு திட்டத்தை கொண்டுவந்தபோது, ஒரு சில இடங்களில்தான் கொண்டு வந்தார். முழுமையாக செயல்படுத்தவில்லை என்று ஜெயலலிதா பேசியபோது, சரத்குமார் எதுவுமே பேசாமல் இருந்தார். நாளை பிரச்சாரத்திற்கு வரும் சரத்குமாரிடம் நீங்கள் இதுதொடர்பாக அவரிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டும்.
கலைஞர் ஆட்சியின்போது, இரண்டு மணி நேரம் இருந்த மின்வெட்டை சீராகவே அமல்படுத்தினார். ஆனால், இந்த அம்மா ஆட்சிக்கு வந்த பின்பு, 8 மணி நேரம், 10 மணி நேரம் என மின்வெட்டு ஆகிவிட்டது.

ஏழைகளுக்கு தரும் மின்சாரங்களைக் கூட, இனி கட்டணம் செலுத்த நேரிடம். வரும் காலங்களில் மின்சாரத்திற்கு தட்டுப்பாடு ஆகலாம். எனவே தற்போதைய ஆட்சியையும், கலைஞர் ஆட்சியையும் சீர்தூக்கிப் பார்த்து வாக்களியுங்கள். தலைவர் கலைஞர் ஆட்சியில்தான் கிராமங்களில் கூட அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட்டன என்று திமுக அரசின் சாதனைகளைப் பேசியே வாக்குகளை சேகரித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக