சனி, 10 மார்ச், 2012

அ.தி.மு.க., பணம் தி.மு.க.,வுக்கு ஓட்டு: அழகிரி வேண்டுகோள்

சங்கரன்கோவில் :""அ.தி.மு.க.,வினர் பணம் கொடுத்தாலும், தி.மு.க.,விற்கு ஓட்டளிக்க வேண்டும்'' என, வாக்காளர்களுக்கு மத்திய அமைச்சர் அழகிரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சங்கரன்கோவிலில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:சங்கரன்கோவிலில், கடந்த முறை, 10 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தி.மு.க., தோல்வியுற்றது. இந்த தேர்தலில், 10 ஆயிரம் ஓட்டுகள் கூடுதலாக பெற்று, தி.மு.க., வெற்றி பெறும்.தேர்தல் பணியில் நிர்வாகிகள் தீவிரமாக உள்ளனர். பொருளாளர் ஸ்டாலின் மார்ச், 12, 13, 14 ஆகிய நாட்களில் பிரசாரம் செய்கிறார். மார்ச் 15ல், தி.மு.க., தலைவர் கருணாநிதி பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். அ.தி.மு.க.,வினர் பணம் கொடுத்தாலும், தி.மு.க.,விற்கு வாக்காளர்கள் ஓட்டளிக்க வேண்டும். இவ்வாறு அழகிரி கூறினார்.

சங்கரன்கோவிலுக்கு வந்த தி.மு.க., வேட்டிகள் பறிமுதல்:மதுரையில் இருந்து சங்கரன்கோவிலுக்கு அனுப்பப்பட்ட தி.மு.க., கரைவேட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

நேற்றுமுன்தினம் மாலை அதிகாரிகள் இளையரசனேந்தலில் நடத்திய சோதனையில் கோவில்பட்டியை சேர்ந்த முத்தையா என்பவரது பைக்கில் இருந்துஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.புளியங்குடி ரோட்டில் நடத்தப்பட்ட சோதனையில் கடலூர் சிதம்பரம், அரியகோஷ்டியை சேர்ந்த நம்பிராஜா,மற்றும் பூதனூர் ஜெயசீலன் ஆகியோர் வந்த காரில் சோதனை நடத்தப்பட்டு 53 ஆயிரத்து 900 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. சங்கரன்கோவிலில் தாசில்தார் உமாமகேஸ்வரி நடத்திய சோதனையில் இளையரசனேந்தல் தி.மு.க.,கிளைகழக செயலாளர் சிவா என்பவரிடம் 14 ஆயிரம் ரூபாய் 60 வேட்டிகள், 100 துண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன,.சங்கரன்கோவிலில் தனியார் லாரி செட் ஒன்றில் மதுரையில் இருந்து 23 பண்டல்கள் துணிபார்சல் வந்திருந்தது. விசாரணையில் அவை அனைத்தும் 3 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தி.மு.க.,கரை வேட்டிகள் என தெரியவந்தது. வேட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. மதுரையில் எந்த முகவரியில் இருந்து யாருக்கு அனுப்பப்பட்டது என்பதுகுறித்தும் விசாரணை நடக்கிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக