செவ்வாய், 6 மார்ச், 2012

பகுஜன் சமாஜ் கட்சியின் வீழ்ச்சியால் லாபம் பார்த்த காங்., பாஜக

உ.பியில் பகுஜன் சமாஜ் கட்சி அடைந்துள்ள பெரும் தோல்வியால், காங்கிரஸும், பாஜகவும்தான் பெரும் லாபம் சம்பாதித்துள்ளன என்பது தெரிய வந்துள்ளது.
உ.பி. சட்டசபைத் தேர்தலில் அனைவரும் எதிர்பார்த்தது போல சமாஜ்வாடி கட்சியின் ஆட்சியைக் கொண்டு வந்துள்ளது. அந்தக் கட்சி தொடர்ந்து அசைக்க முடியாத முன்னிலையில் இருந்து வருகிறது.
அதேசமயம், ஆளும் பகுஜன் சமாஜ் கட்சி ஆரம்பத்தில் 3வது இடத்தில் இருந்தது. இதனால் மோசமான தோல்வியை அக்கட்சி தழுவும் நிலை இருந்தது. இருப்பினும் தற்போது அந்தக் கட்சி 2வது இடத்திற்கு வந்து விட்டது.
பகுஜன் சமாஜ் கட்சியின் பெரும் தோல்வியால் காங்கிரஸும், பாஜகவும்தான் பெரும் லாபத்தைப் பார்த்துள்ளன.
கடந்த 2007 தேர்தலில் இங்கு காங்கிரஸ் கட்சிக்கு 32 இடங்களில் வெற்றி கிடைத்தது. தற்போது காங்கிரஸ் அதை விடக் கூடுதலாக 46 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
அதேபோல கடந்த சட்டசபைத் தேர்தலில் பாஜகவுக்கு 51 இடங்கள் கிடைத்தது. தற்போது அக்கட்சி 59 இடங்களில் முன்னிலை கிடைத்துள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சி கடந்த தேர்தலில் 206 இடங்களைக் கைப்பற்றியிருந்தது. ஆனால் இந்தத் தேர்தலில் இதுவரை 92 இடங்களில் மட்டுமே அது முன்னிலை பெற்றுள்ளது.
சமாஜ்வாடிக் கட்சிக்கு கடந்த தேர்தலில் 97 இடங்கள் மட்டுமே கிடைத்தது. ஆனால் தற்போது அக்கட்சி 170 இடங்களைத் தாண்டி ஓடிக் கொண்டிருக்கிறது.
சமாஜ்வாடிக் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்றாலும், பாஜகவும், காங்கிரஸும் உ.பி. தேர்தலில் நல்ல லாபம் பார்த்துள்ளன என்றே சொல்ல வேண்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக