சனி, 10 மார்ச், 2012

மின் வெட்டுக்கு ஜெ.தான் காரணம்: வாசன்


தமிழகத்தில் கடும் மின் வெட்டு நிலவுவதற்கு ஜெயலலிதா தான் காரணம்,'' என, மத்திய அமைச்சர் வாசன் குற்றம் சாட்டினார்.
சங்கரன்கோவிலில் தி.மு.க., வேட்பாளரை ஆதரித்து நடந்த பொதுக் கூட்டத்தில் வாசன் பேசியதாவது: கூடங்குளம் அணு மின் நிலையம் உற்பத்தியைத் தடுக்கும் கும்பலை இரும்புக்கரம் கொண்டு தடுக்க வேண்டும் என, மக்கள் விரும்புகின்றனர்.

கூடங்குளம் அணு மின் நிலைய உற்பத்தியைத் துவக்க ஜெ., முயற்சிக்கவில்லை. தமிழகத்தில் நிலவும் 11 மணி நேர மின் வெட்டுக்கு அவர் தான் காரணம். விரைவில் கூடங்குளத்தில் மின் உற்பத்தி துவக்கப்படும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக