புதன், 7 மார்ச், 2012

மந்திரவாதி புறா எடுப்பதுபோல நடராஜன் மீது 3-வது வழக்கு

நடராஜன் கைது விவகாரம்: தஞ்சை போலீஸ் தொப்பிக்குள் வந்த புறா!
Viruvirupu.com
 நடராஜன் மீது 3-வது வழக்கு போடப்பட்டுள்ளது. இதுவும் ஒரு நில அபகரிப்பு வழக்குதான். நடராஜனை கைது செய்வதற்காக போடப்பட்ட முதலாவது நில அபகரிப்பு வழக்கு ஊற்றிக் கொள்ளப் போகின்றது என ஊகித்துக் கொண்டு, போடப்பட்ட 2-வது வழக்கு, கொலை மிரட்டல் வழக்கு. அந்த வழக்கு போடப்பட்ட மறு தினமே, 1-வது வழக்கில் ஜாமீன் கொடுக்கப்பட்டு விட்டது. 2-வது வழக்கு கைவசம் இருந்ததால், அந்த ஜாமீனில் நடராஜன் வெளியேற முடியாதபடி, சிறைக்குள்ளேயே வைத்திருந்தார்கள். 2-வது வழக்கு தொடர்பாகவும் ஜாமீன் மனு செய்திருக்கிறார் நடராஜன். அந்த வழக்கும் அவ்வளவு ஸ்ட்ராங்காக இல்லை போலிருக்கிறது. இதோ, 3-வது வழக்கு போடப்பட்டு விட்டது. இந்த வழக்கு தஞ்சை நில அபகரிப்பு தடுப்பு போலீசில் அளிக்கப்பட்ட புகார் ஒன்றின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆல்பர்ட் என்பவர் தனது 1.5 ஏக்கர் நிலத்தை நடராஜன் குழுவினர் அபகரித்து விட்டதாக இந்தப் புகாரை அளித்துள்ளார். இந்த ஆல்பர்ட் எந்தளவுக்கு ஸ்ட்ராங் எவிடென்ஸ் வைத்திருக்கிறாரோ தெரியவில்லை. ஒருவேளை அல்பர்ட் சறுக்கினால், மற்றொரு ராபர்ட்டை தஞ்சாவூர் போலீஸ் தமது தொப்பிக்குள் வைத்திருக்காமலா இருப்பார்கள்? மந்திரவாதி புறா எடுப்பதுபோல, எடுத்து நீதிபதி முன் போடுவார்கள்!
இப்படி போலீஸ்தான் நடராஜனை வைத்து ஒரு பக்கமாக காமெடி பண்ணுகிறது என்றால், நடராஜனும் தன் பங்குக்கு சும்மா இருக்கவில்லை. அவர் இலங்கை பிரச்னையை வைத்து காமடி பண்ணிக்கொண்டு இருக்கிறார். இலங்கை அரசு மீதும், ராஜபக்சே மீதும் போர்க்குற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், அமெரிக்கா கொண்டு வரும் மனித உரிமை மீறல் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க கோரியும் திருச்சி சிறைக்குள் உண்ணாவிரதத்தை தொடங்கி, ஒரே நாளில் முடித்து விட்டார் அவர்! (இலங்கை பிரச்னையை முடிவுக்கு கொண்டுவரவில்லை. உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டுவந்து விட்டார்) இலங்கை தமிழர்களுக்காக நேற்று காலை 6 மணி முதல் உண்ணாவிரதம் இருப்பதாக கூறி அறைக்குள்ளேயே அமர்ந்து கொண்டார். மாலை 6 மணிக்கு இளநீரை குடித்து முடித்துக் கொண்டார். சாப்டர் க்ளோஸ்ட். அடுத்து என்ன? சிரியாவா? வட கொரியாவா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக