செவ்வாய், 6 மார்ச், 2012

முலாயம் சிங் 196 தொகுதியில் முன்னிலை 4வது முறையாக பதவியேற்கிறார்


4வது முறையாக முதல் அமைச்சர் ஆகிறார் முலாயம் சிங் யாதவ்

உத்திரப்பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான முடிவுகள் வெளியானதையடுத்து, அந்த மாநில முதல் அமைச்சராக 4வது முறையாக பதவியேற்கிறார் முலாயம் சிங் யாதவ்.
1989ஆம் ஆண்டு உத்திரப்பிரதேச முதல் அமைச்சராக முதன் முறையாக பதவி ஏற்றார் முலாயம் சிங். காங்கிரஸ் கட்சி அளித்து வந்த ஆதரவை திருப்பப் பெற்றதால் 1991ல் முலாயம் சிங் ஆட்சி கவிழ்ந்தது.
1992ஆம் ஆண்டு ஜனதா தளத்திலிருந்து விலகி சமாஜ்வாதி கட்சியை முலாயம் சிங் யாதவ் தொடங்கினார். 1993ஆம் ஆண்டு பகுஜன் சமாஜ்த்துடன் அணி சேர்ந்து முலாயம் சிங் யாதவ் 2வது முறையாக உத்திரப்பிரதேச முதல் அமைச்சரானார்.
1996ஆம் ஆண்டு உத்திரப்பிரதேசத்தின் மெயின்புரி தொகுதியில் இருந்து மக்களவைக்கு முலாயம் சிங் யாதவ் தேர்வானார். ஐக்கிய முன்னணி அரசில் 1996 முதல் 1998 வரை பாதுகாப்பு அமைச்சராக பதவி வகித்தார்.
2003ஆம் ஆண்டு மாயாவதி ஆட்சி கவிந்ததையடுத்து மீண்டும் உத்திரப்பிரதேச முதல் அமைச்சர் ஆனார் முலாயம். தற்போது 196 தொகுதியில் முன்னிலை பெற்று 4வது முறையாக முதல் அமைச்சராக ஆகியார் முலாயம் சிங் யாதவ். 73 வயதாகும் முலாயம் சிங் யாதவ் தற்போது மக்களவை உறுப்பினராக இருந்து வருகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக