வெள்ளி, 9 மார்ச், 2012

Red Building Where The Sun Sets ரேவதியின் குறும்படத்திற்கு தேசியவிருது



தமிழ் நடிகையாக இருந்து தற்போது இயக்குநர் அவதாரம் எடுத்துள்ள ரேவதியின் குறும்படம் 59வது தேசிய விருதுக்கு தேர்வாகியுள்ளது.ரெட் பில்டிங் வேர் தி சன் செட்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ள அந்த குறும்படம், திரைப்படம் அல்லாத பிரிவின் கீழ் சிறந்த படத்திற்கான விருதிற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது.இப்படம் குறித்து ரேவதியிடம் நேரடியாக பேசினோம். அப்போது, "இது ஒரு 17 நிமிடங்கள் ஓடும் குறும்படம். பெற்றோர், அவர்களது குழந்தைகளை எவ்வாறு வளர்க்கிறார்கள் என்பதை மையமாகக் கொண்ட இப்படம் தேசிய விருதினை வென்றுள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. நாங்கள் இப்படத்தை தயாரிக்கும் போது பெற்றோர் மத்தியில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற லட்சியத்துடன்தான் உருவாக்கினோம். எந்த விருதினையும் நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இது எதிர்பாராத மகிழ்ச்சி" என்றார் அவருக்கே உரித்தான புன்னைகையுடன்.நடிகை ரேவதி ஏற்கனவே தேவர் மகனில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதினையும், ஆங்கில குறும்படத்திற்காக மற்றொரு தேசிய விருதினையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக