துரை குணா பிணையில் விடுதலை

Sugumaran Govindarasu: தமிழகக் காவல்துறை போட்ட பொய் வழக்கில் புதுக்கோட்டை கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட துரை குணா சற்று முன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். வழக்கறிஞர் பொ.இரத்தனம் சிறை வாயிலில் இருந்து இந்தத் தகவலைக் கூறினார். துரை குணா கத்தியால் குத்தியதாக புகார் அளித்தவர் நீதிமன்றத்தில் ஆஜராகி, என்னை அவர் கத்தியால் குத்தவில்லை, எனக்கு எந்தக் காயமும் இல்லை, என்னிடம் வெள்ளைத் தாளில் கையெழுத்து வாங்கிப் போலீசார் புகார் எழுதிக் கொண்டனர் என்று கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து பிணை வழங்கப்பட்டுள்ளது. இவ்வழக்கில் பிணைப் பெற்ற பின்னர், 2015ல் துரை குணா மீது பொய்யாகப் போடப்பட்ட கொலை முயற்சி வழக்கிலும் வாரண்ட் பெற்றுள்ளனர் காவல்துறையினர். உடனே வழக்கறிஞர் இரத்தினம் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அவசர வழக்குத் தொடர்ந்து (Lunch Motion) வாதிட்டுள்ளனர்.

கடனில் மூழ்கும் மேற்கு வங்க நிர்வாகம்!

மேற்கு வங்க அரசு கடன் பிரச்னையால் திணறிவருகிறது. இந்தியாவிலேயே அதிக கடன்சுமை உள்ள மாநிலமாக மேற்கு வங்கம் மாறியிருக்கிறது. மாநில ஜி.டி.பி-யை விட அதிகமாக தன்னுடைய கடன் 'லிமிட்டை' தாண்டி அரசு கடன் பெற்றுள்ளது. 2011-ல் கடன்சுமை ரூ.1.13 லட்சம் கோடியாக இருந்தது. தற்போது ரூ.3.5 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. ஐந்தாண்டுகளில் ரூ.94,000 கோடி கடன் சேவைக்காகச் செலவிடப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு மட்டும் ரூ.28,000 கோடி கடன் சேவைக்காக செலவிடப்பட்டிருக்கிறது. மாநில நிதியமைச்சர் மித்ரா இந்த கடன்சுமையை, 'கச்சிதமான கடன் வெடிகுண்டு' என்று குறிப்பிட்டுள்ளார்.
கடன்சுமையைத் தாண்டி மாநில நிர்வாக பணியாளர்கள் சுமார் 10 லட்சம் பேருக்கு வழங்கவேண்டிய, DA allowance எனப்படும் படித்தொகை நிலுவை மட்டுமே சுமார் ரூ.16,000 கோடி மிச்சம் இருக்கிறது.

இராணுவ நடவடிக்கையிலிருந்து புலிகளை காப்பாறிய ராஜீவ் காந்தி!! : (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை – 89)

ilakkiyainfo.com : பாரதம் அனுப்பிய படகுகள் இராஜதந்திர நாடகம், ‘ஒப்பரேசன் லிபரேசன்’ இராணுவ நடவடிக்கை தொடர்ந்து கொண்டிருந்த போது, ஜுன் 7ம் திகதி இந்திய விமானங்கள் யாழ்ப்பாண வான்பரப்பில் திடீரென்று தோன்றின.
எங்கும் ஒரே பரபரப்பு. மக்கள் பதுங்கிக் கொள்ள பங்கர்களை நாடி ஓடிக்கொண்டிருந்தார்கள். இலங்கை விமானங்கள்தான் குண்டு போட வருகின்றன எங்கும் ஒரே கிலி சூழ்ந்தது.
இந்த வான் நாடகம் அரங்கேறுவதற்கு முன்னர் இலங்கை. இந்திய அரசுக்கிடையே நடைபெற்ற இராஜதந்திர நாடகங்களைப் பற்றிச் சொல்லியேயாக வேண்டும்.
பத்திரிகைகளில் வெளியாகும் செய்திகள் ஒரு விதமாக இருக்கும். திரைமறைவில் நடக்கும் சம்பவங்கள் வேறுவிதமாக இருக்கும். உண்மையில் அவைதான் சுவாரசியமானவை.
முன்கூட்டியே சில முடிவுகளை செய்துவிட்டு அதற்கேற்ப காய் நகர்த்துவதும், நாடகம் ஆடுவதும் இராஜதந்திரம் என்ற பெயருக்குள் அடக்கப்பட்டுவிடுகின்றன.
‘ஒப்பரேசன் லிபரேசன்’ இராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து இலங்கை, இந்திய அரசுகளுக்கிடையே நடைபெற்ற அராஜதந்திர நாடகத்தின் சில காட்சிகளைப் பார்ப்போம்.

உம்மன் சாண்டியின் கேவலமான முல்லை பெரியாறு அரசியல்...

உம்மன் சாண்டி, ராமதாஸ் | கோப்புப் படம். முல்லை பெரியாறு அணை விவகாரத்தை முன்வைத்து தேவையற்ற, மலிவான அரசியல் செய்வது உம்மன் சாண்டி போன்ற மூத்த தலைவர்களுக்கு அழகல்ல என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''முல்லை பெரியாற்றின் குறுக்கே புதிய அணை கட்ட தமிழக அரசு ஒத்துழைக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக - கேரள எல்லையில் வண்டிப் பெரியாறு என்ற இடத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் உண்ணாநிலை போராட்டம் நடத்தியுள்ளன.

44 ஈழ அகதிகள் இந்தோனேசியாவில் இறங்க அனுமதி.. ஐ நா தலையீட்டில் ஏற்பாடு!

ஜகர்த்தா: தமிழக முகாம்களில் இருந்து ஆஸ்திரேலியா நோக்கி செல்லும் வழியில் பழுதான படகில் தத்தளித்த 44 ஈழ அகதிளையும் தரை இறங்க இந்தோனேசியா அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழக அகதிகள் முகாம்களில் இருந்த 44 ஈழத் தமிழர்கள் தமிழ்நாட்டுப் பதிவு எண் கொண்ட படகில் ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைவதற்காகப் புறப்பட்டுச் சென்றனர். ஆனால் இந்தோனேசியா அருகே அந்த படகு இயந்திரக் கோளாறால் தரை தட்டியது. ஒரு கர்ப்பிணிப் பெண், 9 சிறுவர்களுடன் உள்ள இப்படகு இந்தோனேசியாவின் ஆச்சே மாகாண கடற்கரையில் தத்தளித்துக் கொண்டிருந்தது. இந்த படகு தொடர்பாக தகவல் கிடைத்த இந்தோனேசிய கடற்படையினர் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அதே நேரத்தில் எவரையும் படகில் இருந்து இறங்கவும் அனுமதிக்கவில்லை.

பங்களாதேஷ் இந்து பேராசிரியரை கொல்ல முயன்றவர் சுட்டு கொலை 17 வயது குற்றவாளி

வங்காளதேசம்: இந்து பேராசிரியரை கொல்ல முயன்று கைதான 17 வயது குற்றவாளி போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் பலிவங்காளதேசத்தில் இந்து பேராசிரியரை கொல்ல முயன்று கைதான 17 வயது குற்றவாளி போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டாக்கா: இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சி நடைபெறும் வங்காளதேசத்தில் இந்த மாதத்தில் மட்டும் இந்து கோயில் பூசாரி, மட நிர்வாகி, கிறிஸ்தவரான ஒரு வியாபாரி ஆகியோர் அடுத்தடுத்து கொல்லப்பட்டனர். இந்த கொலைகளுக்கு உள்ளூரை சேர்ந்த சில தீவிரவாத குழுக்களும், அங்குள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளும் பொறுப்பேற்றுள்ள நிலையில் இதுபோன்ற வன்முறை சம்பவங்கள் மேலும் நிகழாமல் தடுக்கும் வகையில் தீவிரவாதிகளுக்கு எதிரான அதிரடி வேட்டையில் ஆறாயிரத்துக்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குஜராத் ,,அத்தனை படுகொலைகளையும் 12 பேர் மட்டும்தான் செய்தார்களா?”தீர்ப்பு குறித்து ஜாக்கியா ஜஃப்ரி

2002ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதி, குஜராத்தில் இஸ்லாமியர்கள் அதிகம் வசித்த குல்பர்க் சொஸைட்டிக்குள் புகுந்த வன்முறை கும்பல், அந்தக் குடியிருப்பை தீயிட்டு பொசுக்கியது. காங்கிரஸ் எம்பி இஸான் ஜஃப்ரி உள்ளிட்ட 69 பேர் மிகக் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார்கள். கடந்த 14 ஆண்டுகளாக சிறப்பு நீதிமன்றத்தில் நடந்துவந்த இந்த வழக்கில் இந்த மாதம் தீர்ப்பு வழங்கப்பட்டது. இன்று தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட்டன.
“இந்த படுகொலைகள் திட்டமிட்டு நடத்தப்படவில்லை” என்று அறிவித்தார் நீதிபதி பி. பீ. தேசாய். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 64 பேரில் இந்தப் படுகொலையை தலைமையேற்று நடத்தியதாகச் சொல்லப்பட்ட பாஜக கவுன்சிலர் பிபின் படேல் உள்ளிட்ட 36 பேரை நீதிபதி விடுவித்தார்.

நீரா ராடியாவுக்கு முன்பே வாஜ்பாயி காலத்திலேயே விற்பனைக்கு வந்த இந்தியா? அம்பானி வகையாறக்கள்தான் எல்லாமா?

By Meetu Jain with Ushinor Majumdar in Delhi
“இந்திய குடியரசு, தற்போது விற்பனைக்கு” நீரா ராடியா தொலைபேசி உரையாடல்களை நவம்பர் 2010ல்வெளியிட்டபோது அவுட்லுக் இந்த வார்த்தைகளைத்தான் பயன்படுத்தியது. அரசியல்வாதி-கார்ப்பொரேட்டுகள் – ஊடகங்களுக்கிடையான பிணைப்பை அந்த 140 உரையாடல்கள்  வெளிக்கொண்டு வந்தன. மன்மோகன் சிங் அரசாங்கத்தின் ஜீவாதாரமான விஷயங்களையெல்லாம் இந்த விவகாரம் தின்றது.  அது நிகழ்ந்து ஆறு வருடங்களுக்குப் பின் வெளிவந்திருக்கும் ‘எஸ்ஸார் டேப்ஸ்’ பெருமுதலாளிகள் இந்திய நீதித்துறையை, நாடாளுமன்றத்தை, வங்கிகளை, போட்டியாளர்களை, நிர்வாகிகளை எப்படி கையாண்டார்கள் என்பது குறித்து பயமுறுத்தும் உண்மையைச் சொல்கின்றன. ராடியா உரையாடல்களுக்கு பத்தாண்டுகளுக்கு முன்பே அரசாங்கம் எப்படியான மோசடிகளில் ஈடுபட்டது என்பதையும் காட்டுகிறது. நீண்ட காலத்துக்கு முன்பே , அதாவது தேசிய ஜனநாயக் கூட்டணியின் முதல் ஆட்சிக்காலத்திலேயே இந்திய ஜனநாயகம் விற்பனைக்கு வந்துவிட்டது.

வெள்ளி, 17 ஜூன், 2016

நாடார்களை பார்பனர்களிடம் இருந்து காத்ததே தலித்துக்கள்தான் ! தமிழிசை வெறும் சோத்து கரகாட்டம் ஆடவேண்டாம். சம்பந்தம் செய்து காட்டுங்க

தலித் வீட்டில் உணவு: “தமிழிசையும் ஒரு காலத்தில் பட்டியல் பிரிவு இனத்தவர் என்பதை அறிவாரா?”   பா.ஜ.க. ஆட்சியின் இரண்டாம் ஆண்டு சாதனை விளக்க கூட்டம் சேலத்தில் நடைப்பெற்றது. இந்த கூட்டத்திற்கு வந்திருந்த பா.ஜ.க.,வின் மாநில தலைவர் தமிழிசை சௌந்திரராஜன், நேற்று மாலை சேலம் காக்காயன் சுடுகாடு அருகே உள்ள கோர்ட் ரோடு காலனியில் உள்ள தன் கட்சிக்காரர் ஜீவானந்தம் என்ற  வீட்டில் சாப்பிட்டார். தலித் சமூகத்திற்கு அங்கீகாரம் கொடுக்கும் ஒரே கட்சி பாரதிய ஜனதா கட்சி என்று  ஜீவானந்தம்  அப்போது தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய  பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்திரராஜன், இனி நான் 365 நாட்களிலும் ஒரு வேளை சாப்பாடு தலித் வீட்டில் தான் சாப்பிட வேண்டும் என முடிவு செய்திருக்கிறேன் என்று கூறினார்.
தமிழிசையின் இந்த பேட்டிக்கு சமூக வலைதளத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

மோடியின்.....எரிவாயு கொள்ளை திட்டத்தில் அதானி, எஸ்ஸார், டஃப் டிரில்லிங், ஜியோ குளோபல் ரிசோர்சஸ்

குஜராத் அரசு பெட்ரோலியக் கழகத்தின் கார்ப்பரேட் அலுவலகம்ரு முப்பது, நாற்பது ஆண்டுகளுக்கு முன்பெல்லாம், நகர்ப்புறத்துக் கடைவீதிகளில் மோடி வித்தை நடப்பது வழமையான ஒன்று. அந்த வித்தையை நடத்துபவர் பாம்பையும் கீரியையும் மோதவிடப் போவதாக சவுண்டுவிட்டுக் கொண்டேயிருப்பார். ஆனால், எவ்வளவு நேரமானாலும் அந்த மோதல் நடந்துவிடாது.ஆனாலும், அந்த மோதலை வேடிக்கைப் பார்ப்பதற்காகக் கூடும் அப்பாவிகளிடமிருந்து துட்டைக் கறந்துவிடுவார், அவர்.
பொது மக்களின் ‘விழிப்புணர்வு’ காரணமாகவோ அல்லது இந்தியா ‘நவீனமயமாக’ உருவாகிக் கொண்டிருப்பதன் காரணமாகவோ, இந்த மோடி வித்தை தற்காலத்தில் அழியும் நிலைக்குச் சென்றுவிட்டது. பிறகு ஏன், இந்த மலரும் நினைவுகள் எனக் கேட்கிறீர்களா? குஜராத்தில் நடந்து, தற்பொழுது அம்பலமாகியிருக்கும் எரிவாயு துரப்பணவு மோசடியைப் படிக்க நேர்ந்தபொழுது, இந்த மோடிவித்தைதான் எனக்குச் சட்டென நினைவுக்கு வந்தது. குஜராத் தலைநகர் காந்திநகரில் அமைந்துள்ள குஜராத் அரசு பெட்ரோலியக் கழகத்தின் கார்ப்பரேட் அலுவலகம்: 20,000 கோடி ஊழலின் தலைமையகம்

கபாலியை தூக்கி பிடிக்கும் பாமரத்தனம் .. வெளங்கிடும்

காக்கா முட்டை, விசாரணை போன்றவை முழுமையான சினிமா இல்லை என்றாலும், அவற்றை வெகுஜன சமூகம் கொண்டாடும்போது, நல்ல சினிமாவிற்கான எல்லா அறிகுறிகளும் தென்படுவதாக தோன்றியது. ஆனால் அந்த படங்களை கொண்டாடிய நண்பர்கள், உறியடி, கபாலி போன்ற படங்களையும் கொண்டாடும்போது அதிர்ச்சியாக இருக்கிறது. உறியடி கூட சின்ன பட்ஜெட் படம், ஏதோ ஒரு அரசியலை முன்னெடுக்கிறது என்று சொல்லி தப்பிக்கலாம். ஆனால் ரஜினியின் தோற்றம், ஸ்டைல் போன்றவற்றை மட்டுமே முன்வைத்து, தலைவன்டா, ஸ்டைல்டா, தெறிக்கும் டா, இந்த மாஸ் யாருக்கும் வரும் என்று கேட்பதை பார்த்தால் பகீர் என்று இருக்கிறது. காக்கா முட்டை போன்ற படங்களை கொண்டாடியதை பார்த்து, திரைப்பட ரசனை வளர்ந்துவிட்டது என்று தவறாக நினைத்துவிட்டோமோ என்று எண்ணத் தோன்றுகிறது. அதெப்படி காக்கா முட்டை போன்ற ஒரு படத்தை கொண்டாடிய நண்பர்களால் மீண்டும் ரஜினியின் வெற்று ஸ்டைலை ரசிக்க முடியும்? விசாரணை போன்ற ஒரு அரசியல் படத்தை கொண்டாடிவிட்டு, எவ்வித உருப்படியான் ஆரசியலும் இல்லாத ரஜினியை ரசிக்க முடியும்.சினிமா சில நேரங்களில் வெகுஜன மக்களின் ஊடகம்தான்.

ஜிஷா மீது 27 கத்திக்குத்துக்கள் ... திட்டமிட்ட பாலியல் வன்முறை, கொலை..

அஸ்ஸாம் முஸ்லிம் வாலிபரால் கற்பழித்து கொல்லப்பட்ட கேரள மாணவியின் உடலில் 27 இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்தன. தண்ணீர் கேட்டு கதறிய மாணவியின் வாயில் மதுவை ஊற்றியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள பெரும்பாவூரைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி ஷிஜா (வயது 31) கடந்த ஏப்ரல் மாதம் 28–ந்தேதி தனது வீட்டில் தனியாக இருந்தபோது கொடூரமான முறையில் கற்பழித்து படுகொலை செய்யப்பட்டார். அவரது உடலில் மர்ம உறுப்பு உள்பட 27 இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்தது. தலித் மாணவியான ஷிஜா கொலை கேரள மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் கடந்த கேரள சட்டசபை தேர்தலிலும் முக்கிய பிரச்சினையாக எதிரொலித்தது.

BBC: குஜராத் குல்பர்க் ; 69 பேரை கொலை செய்த 11 இந்துத்வா வெறியர்களுக்கு ஆயுள் தண்டனை

குஜராத் மாநிலத்தில் 2002 ஆண்டில் நடந்த படுகொலைகளில் குல்பர்க் சொசைட்டி சம்பவம் தொடர்பான வழக்கில் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டவர்களில் 11 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்துள்ளது. குல்பர்க் சொசைட்டி கலவரங்களில் ஈடுபட்டோருக்குத் தண்டனை இந்த வழக்கில் குற்றவாளிகளாகக் காணப்பட்ட வேறு 12 பேருக்கு ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

ஓமர் மதின் ஏற்கனவே ஓரின சேர்க்கையில் ஈடுபாடு?

இஸ்லாம் ஓரின சேர்க்கைக்கு எதிரான மதம். அதனால் தான் மதின் ஓரின சேர்க்கையாளர்களை படுகொலை செய்ததாகவும், அவன் தீவிரவாதி எனவும் கூறப்பட்டது.  ஓமர் மதின் ஒரின சேர்க்கைக்காக ஒருவரை அணுகியதாக மதினுடன் 2006-ஆம் ஆண்டு போலீஸ் அகாடமியில் பயின்ற ஒருவர் கூறியுள்ளார்.மதின் ஓரின சேர்க்கை செயலி மூலம் பலருக்கும் அழைப்பு விடுத்துள்ளது தெரியவந்துள்ளது. க்ரிண்ட்ர் (Grindr) என்னும் செயலி மூலம் மதின் தன்னை ஓரின சேர்க்கைக்கு அழைத்ததாக கெவின் வெஸ்ட் என்பவர் கூறியுள்ளார். மேலும் கார்ட் செடனனோ கூறும்போது மதின் அந்த செயலி மூலம் தன்னை பாலியல் உறவுக்கு அழைத்ததாகவும், மதினை பற்றி தெரியாததால் அவனை பிளாக் செய்தேன் எனவும் கூறியுள்ளார்.

ஸ்டாலின் : அம்மா அம்மா என்று அம்மா பட்டியல்..

அம்மா, அம்மா, அம்மா என்று அம்மா திட்டங்கள் பற்றி ஒரு பெரிய பட்டியல் ஆளுநர் உரையில் வெளியிடப்பட்டிருக்கிறது என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தமிழக ஆளுநர் உரை குறித்து கருத்து தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், சட்டமன்றத்தில் ஆளுநர் உரை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஆளுநர் உரையை பொறுத்த வரையில் இது அரசினுடைய உரைதான் என்பது வெளிப்படுகிறது. இந்த அரசு என்னென்ன ஆசைப்படுகிறதோ அதையெல்லாம் ஆளுநர் உரையிலே எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள். எடுத்து சொல்லி இருக்கிற அதே நேரத்தில் அதை எப்படி நிறைவேற்றுவது என்பது குறித்து எந்த விவரமும், எந்த விளக்கமும் அதில் இடம்பெறவில்லை.

சத்தியமங்கலம் ஐபிஎஸ் அதிகாரி சசிகுமார் ஆந்திராவில் கொலையா? தற்கொலையா? நேர்மையான அதிகாரி..

சத்தியமங்கலத்தை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி சசிகுமார்  ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்தார்.  திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில் அவரது மர்ம மரணம் குறித்து அறிந்ததும் குடும்பத்தினர்  விசாகப்பட்டினத்திற்கு விரைந்தனர்."
;ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை குப்புசாமி,  மைலம்மாள் தம்பதியினரின்  மகன்  சசிகுமார் . விவசாய குடும்பத்தில் பிறந்த சசிக்குமார் 2012 ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வு மூலம் ஐ.பி.எஸ். அதிகாரியாக தேர்தெடுக்கப்பட்டார்.  ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் ஆலகட்டா ஏ.எஸ்.பி. யாக 2014 ஆண்டு ஜனவரி மாதம் நியமிக்கப்பட்டார்.

இந்தியாவுக்கு ஆதரவான மசோதா அமெரிக்க செனட்டில் தோல்வி

இந்தியாவை உலகளாவிய ராணுவக் கூட்டாளியாக சேர்ப்பது தொடர்பான மசோதா அமெரிக்க நாடாளுமன்ற மேலவையான செனட்டில் தோல்வியடைந்தது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் விளக்கமளித்துள்ளார்.
தில்லியில் வியாழக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இது தொடர்பாக மேலும் கூறியதாவது:
அமெரிக்க செனட் அவையில் இந்தியாவுக்கு ஆதரவாகக் கொண்டு வரப்பட்ட தீர்மானம் தோல்வியடைந்தது என்பது ஊடகச் செய்திகள் மூலம்தான் வெளியுறவு அமைச்சகத்துக்குத் தெரியவந்துள்ளது. 2017-ஆம் ஆண்டு அமெரிக்க தேசியப் பாதுகாப்பு அதிகாரச் சட்டத்தை வடிவமைக்கும் பணி இப்போதுதான் அந்நாட்டில் நடைபெற்று வருகிறது.

BBC : பிரிட்டன் தொழிற்கட்சி எம்.பி. சுடப்பட்டு கத்தியால் குத்தி கொலை!

பிரிட்டனின் தொழிற்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான ஜோ காக்ஸ் துப்பாக்கியால் சுடப்பட்டு, பின்னர் கத்தியால் குத்தப்பட்டு படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்தார். துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் என்ன என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை.  சம்பவ இடத்தில் தடயம் சேகரிக்கும் போலீசார் இந்த சம்பவத்தை தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் தொடர்வதா வேண்டாமா என்பதற்கான கருத்தறியும் வாக்கெடுப்புக்கான பிரசாரங்களை இரு தரப்பினரும் ரத்து செய்துள்ளனர். நாடாளுமன்றத்தின் தொழிற்கட்சி உறுப்பினரான ஜோ காக்ஸ், தான் ஒரு கூட்டம் நடத்திக் கொண்டிருந்த நூலகத்தின் வெளியே, சண்டை போட்டுக் கொண்டிருந்த இருவரிடையே தலையிட்டார் என்று சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்துள்ளார். அந்த இரண்டு நபர்களில் ஒருவர் துப்பாக்கி வைத்திருந்ததாகவும், காக்ஸ் அவருடன் போராடியபோது அவர் சுடப்பட்டார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இம்முறை புத்தக கண்காட்சி மக்களை கவர தவறிவிட்டது ? வசதிகள் போதாமை, அதிக வெப்பம்...

7 லட்சம் பேர் திரண்டனர் ; ரூ. 10 கோடி வியாபாரம் என்று பபாசி அறிவித்தாலும் , உண்மையில் மூன்றை லட்சம் பேரே திரண்டு இருக்கின்றனர். ரூ. 5 கோடி அளவில் வியாபாரம் ஆகி இருக்கிறது
இரா.தெ.முத்து :ஜூன் ஒன்றாம் தேதி தொடங்கி பதிமூன்றாம் தேதி வரை நடைபெற்ற 39 ஆவது சென்னை புத்தகக் காட்சி முடிவடைந்திருக்கிறது. பொதுமக்களும் வாசகர்களும்தான் இதனை திருவிழாவாக கடந்த காலங்களில் மாற்றி இருக்கிறார்கள். திரண்டு வரும் பொதுமக்களுக்கு தேவையான வசதிகள் செய்துக் கொடுத்து பெரும் கொண்டாட்டமாக மாற்றத் தவறி இருக்கிறது தென்னிந்திய பதிப்பாளர்  விற்பனையாளர்கள் சங்கம் (BPASI)

தென்தமிழகத்தில் சாணாரை கண்டாலே தீட்டு? பொன்னர் மறந்தாரா? திராவிடர் கழக மாநாட்டில் நாடார் சமையல்...

கனாக் காரன்'s photo.சமஸ்கிருதம் தெரியாததற்காக பொன்னார் வெட்கப்படுகிறாராமே -
தென் தமிழகத்தில் சாணாரை கண்டாலே தீட்டு என்ற நிலை நிலவியது பொன்னாருக்கு தெரியாதா?
தோள்சீலை போராட்டம் அவர் பிறந்த குமரி மண்ணில் நடந்ததென்பதும் தெரியாதா?

கண்டாலே தீட்டு என்றால் அக்ரகார தெருவில் நுழையவே தடை, பார்ப்பான் குளிக்கும் முன்பே இவர்கள் நடமாடலாம், இவர்களைப் பார்த்தால் மீண்டும் குளிக்கும் நிலை ஏற்படும் நிலை இருந்ததே அதெல்லாம் பொன்னாருக்கு தெரியாதா?
இவரின் குமரி மாவட்டம் திருவிதாங்கூரில் இருந்தவரை இவர் சமூகத்தினர் திவானை (அதிகாரி) பார்க்கச் சென்றால் எத்தனை அடி தொலைவிலிருந்து பேசவேண்டும் என்பதை மறந்தாரா?
கண்டாலே தீட்டு என்ற நிலையிருந்த நாளில் திராவிடர் கழ மாநாட்டில் நாடார் சமையல் உண்டு என்ற வாசகத்தை மறந்தாரா? இத்தனை இழிவையும் இவர்கள் மீது தினித்த ஆரிய மொழியை கொண்டாட காரணம்தான் என்ன? நிச்சயம் மறக்கவில்லை -
பதவி சுகத்துக்காக இவ்வளவு தரம் இறங்கித்தான் பேசனுமா?
காவி மத்திய அரசின் பிரதிநிதியாக ஒட்டுமொத்த தமிழரையும் அவமானப்படுத்தி விட்டார்.
நன்றி:  facebook     ராஜராஜன்

வியாழன், 16 ஜூன், 2016

குஜராத் சமுக ஆர்வலர் டீஸ்டா செதல்வாட்டின் என் ஜி யோவின் உரிமம் ரத்து..


டெல்லி: குஜராத் சமூக ஆர்வலர் டீஸ்டா செதல்வாட்டின் சப்ராங் டிரஸ்ட் என்ற என்.ஜி.ஓவின் லைசென்ஸை மத்திய அரசு அதிரடியாக ரத்து செய்துள்ளது. இதன் மூலம் சப்ராங் டிரஸ்ட் வெளிநாட்டில் இருந்து நிதி உதவி பெற முடியாது.
குஜராத்தில் 2002-ம் ஆண்டு மத கலவரம் தொடர்பான ஏராளமான உண்மைகளை அம்பலப்படுத்தியவர் டீஸ்டா செதல்வாட். மத்தியில் பாஜக அரசு அமைந்தது முதல் டீஸ்டா செதல்வாட் மற்ரும் அவரது கணவர் ஜாவேத் ஆனந்த் மீது நடவடிக்கைகள் பாயத் தொடங்கின.< டீஸ்டா செதல்வாட் நடத்தி வந்த சப்ராங் டிரஸ்ட், சப்ராங் கம்யூனிகேசன்ஸ் அண்ட் பப்ளிசிங் பிரைவேட் லிமிடெட் ஆகியவற்றுக்கு வெளிநாடுகளில் இருந்து கிடைத்த நிதி குறித்த விவரங்களை கையிலெடுத்தது.

Porn Hub பார்வையற்றோருக்காக பாலியல் இணையம்!

போர்ன் ஹப்’ இணையதளம் என்பது வயதுவந்தோருக்கான தளம். ஆனால், வயதுவந்தோருக்கான தளம் என்பதில் மட்டுமே அது கவனம் செலுத்தாமல், முழுக்க முழுக்க ஒரு தொழில்முறை இணையதளத்தின் குணங்கள் அனைத்தையும் கொண்டுள்ளது. வருடந்தோறும் அது வெளியிடும் டேட்டா தொடங்கி உடற்பயிற்சி வீடியோ, உடல் அழகை தக்கவைக்க பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் என ஒரு பக்கத்திலும் மற்றொருபக்கத்தில், அமெரிக்கா கொடுக்கும் கருத்து சுதந்திரவெளியைப் பயன்படுத்தி ஜனாதிபதி வேட்பாளர் ட்ரம்ப்பின் வேடத்தில் ஒருவரை போர்ன் வீடியோவில் நடிக்கவைத்தது.
தற்போது இந்தத் தளம், பார்வையில்லாதவர்களுக்கான ஆடியோ போர்ன் வீடியோக்களை வெளியிட்டுள்ளது. அதாவது, சாதாரண ஆபாச விடியோக்கள்போல அல்லாமல் இதற்கென பிரத்யேகமான ஆட்களைக் கொண்டு ஆடியோ பதிவுமூலம் உருவாக்கியுள்ளனர்.

அமித்ஷா தாழ்த்தப்பட்ட மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பறிக்க...தலைவர் கி.வீரமணி எச்சரிக்கை

உத்தரப்பிரதேசம், அலகாபாத்தில் நடைபெற்ற பாஜக நிர்வாகக் குழுக் கூட்டத்தில் வரும் 2017ம் ஆண்டு நடக்கவிருக்கும் உத்தரப்பிரதேசம், பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க, பாஜக தலைவர் அமித்ஷா சில யோசனைகளையும், வழிகாட்டுதல்களையும் பாஜக-வினருக்கு வழங்கியுள்ளார். அவை…
‘1. தாழ்த்தப்பட்ட மக்களை மாநில, மாவட்ட, கிராம அளவிலான நிர்வாகப் பொறுப்புகளில் அதிக அளவில் நியமிக்க வேண்டும்.
2. தாழ்த்தப்பட்ட மக்களின் வீடுகளுக்குச் சென்று உணவருந்த வேண்டும்.
3. ‘முத்ரா வங்கி’ திட்டத்தின்கீழ், தாழ்த்தப்பட்ட சமூகப் பெண்கள், பயனடையாதவர்களைக் கண்டறிந்து அவர்களை இந்த வளையத்துக்குள் கொண்டு வரவேண்டும்.

சாதிய சனாதன சக்திகளோடு சமரசம் செய்து கொள்ளாத சின்னக்குத்தூசி

பத்திரிகையாளர் சின்னக்குத்தூசி பிறந்த நாளை ஒட்டி, அவர் நினைவாக நக்கீரன் கோபால் தொடங்கிய சின்னக்குத்தூசி நினைவு அறக்கட்டளையின், அச்சு ஊடகம் சார்ந்த சிறந்த கட்டுரையாளர்களுக்கான & வாழ்நாள் சாதனையாளருக்கான விருது வழங்கு விழா சென்னையில் நடைபெற்றது. வாழ்நாள் சாதனையாளருக்கான் விருதை பதிப்பாளர் வைகறைவாணன் பாராட்டு, பட்டயம், ரூபாய் ஒரு லட்சம் தொகையுடன் பெற்றுக் கொண்டார். ஜீவசுந்தரி பாலன், ஹெச்.பீர்முகமது, பேரா.என்.சீனிவாசன் ஆகியோர் சிறந்த கட்டுரைக்கான  தலா 10,000 ரூபாய் விருதைப் பெற்றுக் கொண்டனர். சின்னக்குத்தூசியின் எளிமை, கொள்கை பிடிப்பு, யாவர் மீதும் காட்டிய அவர் காட்டிய அன்பு, தகவல் களஞ்சியமாக விளங்கியமை, சனாதன, சாதிய சக்திகளுக்கு எதிராக கருத்துப் போரை நடத்தியது என நக்கீரன் கோபால், கோவி லெனின், கோபண்ணா போன்றோர் சுட்டிக் காட்டிப் பேசினர்.

ரங்கராஜ் பாண்டேக்கு உடம்பு சரியில்லையாம்? பெரியாரை அவமதித்த வழக்கில் ஆறு வாய்தா வாங்கிய பேச்சு பல்லக்கு..

சென்னியப்பன் வழக்குரைஞர் பெரியாரை அவமதிப்பு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் டிமிக்கி கொடுத்து வந்த பாண்டே,   தொடர்ந்து ஆஜராகத் தவறினால் பிடிவாரண்ட் பிறப்பிப்பேன் என்று நீதிபதி உத்தரவிட்டதைத் தொடர்ந்து, கடந்த 13.6.2016 அன்று திருப்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நேரிடையாக ஆஜரானார். பாண்டேவைப் பார்த்து நீதிபதி கேட்ட முதல் கேள்வி, “சட்டத்தை மதிக்க வேண்டும் என்று கிலோ கணக்கில் டிவியில் அறிவுரை சொல்றீங்களே நீங்கள் கடந்த ஆறு வாய்தாக்கள் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லையே ஏன்? என்பதுதான். ;இதற்கு “எனக்கு உடல்நிலை சரியில்லை” என்று பாண்டே ஒரு குண்டை தூக்கி போட்டார்.  அதைக் கேட்டு சிரித்த நீதிபதி “நான் அன்றாடம் டிவியில உங்களை பார்க்கிறேனே” என்றவுடன் அசடு வழிந்தார் பாண்டே.

கேரளா தலித் மாணவி ஜிஷா கொலைகாரன் பிடிபட்டான்.. அஸ்ஸாம் கூலி அமீர் உர் இஸ்லாம் !

கொச்சி:கேரளாவில் சட்டக் கல்லூரி மாணவி ஜிஷா கூட்டு பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் முக்கியக் குற்றவாளியான அஸ்ஸாமைச் சேர்ந்த இளைஞரை காவல்துறையினர் பொறி வைத்துப் பிடித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள அமியுல் இஸ்லாம் (24) இரண்டு நாட்களுக்கு முன்பு அஸ்ஸாமில் இருந்து கேரளாவுக்கு வந்து கொண்டிருந்த போது, தமிழக எல்லையில் கேரள காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
அமியுல் இஸ்லாம், ஜிஷாவின் வீட்டுக்கு அருகே செயல்பட்டு வந்த ஹாலோ பிளாக்ஸ் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பலாத்காரக் கொலையை செய்துவிட்டு, அவர் அஸ்ஸாம் தப்பியோடிவிட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மதிமுக மணிமாறன் 3000 தொண்டர்களுடன் திமுகவில் இணைந்தார்.... மதிமுக சுயநல கூடாரமாகிவிட்டது! அதிரடி குற்றச்சாட்டு .

மதிமுக-வில் தென் சென்னை மாவட்டச் செயலாளராக இருந்தவர் வேளச்சேரி மணிமாறன். வைகோ-வுக்கு மிகமிக நெருக்கமான இடத்தில், முக்கிய இடத்தில் இருந்தவர் மணிமாறன். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ-வுக்கு, எடைக்கு எடை வெள்ளிக் கட்டி, தங்கப் பேனா, தங்க வாள் போன்ற விலை உயர்ந்த பரிசுகளை வழங்கி, அவரது தீவிர ஆதரவு மாவட்டச் செயலாளராக வலம்வந்தவர். தனித்த செல்வாக்கானவர். செலவு செய்ய அஞ்சாதவர்.
மல்லை சத்யா, வைகோ-வின் வலதுகரம் என்றால் மணிமாறன், இடதுகரமாகத் திகழ்ந்தவர்.

விழுப்புரம் திருவிழா மின்விளக்கு விபத்து 6 பேர் மரணம் ..ஒப்பந்தகாரருக்கு 100 ஆண்டுகள் சிறை தண்டனை


விழுப்புரம்: விழுப்புரம் அருகே கடந்த 2008ம் ஆண்டு நடந்த கோவில் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி ஆறு பேர் உயிரிழந்தது தொடர்பான வழக்கில், மின்விளக்கு ஒப்பந்தக்காரருக்கு 100 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் நீதிமன்றம் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது /tamil.oneindia.com/

இளங்கோவன் ; ஜெயலலிதா தன்னை காப்பாற்றி கொள்ளவே மோடியை சந்தித்தார்

27.9.2015 அன்று கருங்கல்லில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் கலந்து கொண்டு பேசியபோது, தமிழக முதல்வர் குறித்து விமர்சனம் செய்தார். இது சம்பந்தமாக குமரி மாவட்ட அரசு வழக்கறிஞர் ஞானசேகர், நாகர்கோவில் கோர்ட்டில் இளங்கோவன் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து விசாரணைக்கு வந்த அந்த வழக்கில் இளங்கோவன் நேரில் ஆஜர் ஆகவேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

மோடியின் முன் மண்டியிட்டு உட்கார்ந்திருக்கும் குஜராத் ஐ ஏ எஸ் அதிகாரிகள்

மோடி குஜராத்தில் ஐ.எ.எஸ் அதிகாரிகளையே முட்டி போட வைத்தவர், தன்னை சந்திக்க வந்த ஐ,பி.எஸ் அதிகாரி கூலிங் கிளாஸ் போட்டதற்கே உடன் மெமோ கொடுத்து நடவடிக்கை எடுத்தவர், பிரதீப் குமார் ஐ.எ.எஸ் அவர்களின் வாக்குமூலங்களை வாசித்து பாருங்கள் அவர் எவ்வாறு கதற கதற விரட்டப்பட்டார் என்று, இப்படி நூற்றுக்கணக்கான சம்பவங்கள் இருக்கு மக்களே.... உங்கள் மறதி தான் தவறான அரசியல்வாதிகள் தொடர்ந்து ஆட்சி செய்ய மூலதனமாக திகழ்கிறது.. வாழ்த்துக்கள்.. நான் என்றால் அது அவளும் நானும் .. அவள் என்றால் அது நானும் அவளும்

புதன், 15 ஜூன், 2016

கேரளாவில் பாஜக.. கம்யுனிஸ்டுகள் வளர்த்துவிட்ட இந்துத்வா... ம்ம்ம்ம் வேதங்களோட நாடு (EMS.நம்புதிரிபாடு CP -M)

இந்துத்துவத்துடன் சமரசமாகிப் போனால்…
kerala-hindu-fnanaitics-win– கேரளா உணர்த்தும் எதிர்மறை படிப்பினை! நடந்து முடிந்த ஐந்து மாநிலச் சட்டமன்றத் தேர்தல்களில் கேரளா தவிர, இதர மாநிலங்களில் போலி கம்யூனிஸ்டுகள் படுதோல்வி அடைந்துள்ளனர். கேரளத்தில் பா.ஜ.க. கூட்டணி ஒரு இடத்திலும், போலி கம்யூனிஸ்டு ‘இடதுசாரி’ கூட்டணி 91 இடங்களிலும், காங்கிரசு கூட்டணி 47 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. கேரளத்தில் ஒரு தொகுதியில் மட்டும் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ள போதிலும், கடந்த 2011 சட்டமன்றத் தேர்தலை ஒப்பிடும்போது பல இடங்களில் இரு மடங்கு அதிக வாக்குகளைப் பெற்று அச்சுறுத்தும் அபாயமாக வளர்ந்துள்ளது.

சென்னை அரசு மருத்துவமனையின் லஞ்ச பட்டியல்…ஸ்ட்ரெச்சர் தள்ள.. பிணத்தை மார்ச்சுவரிக்கு கொண்டு செல்ல..

*வீல் சேர் / ஸ்ட்ரெச்சர் தள்ளுவதற்கு – ஐம்பது ரூபாய்
 *கர்ப்பிணி பெண்களை குளிக்க வைக்க / எனீமா அளிக்க / ஷேவ் செய்ய – நூறு ரூபாய்
*பிறந்த குழந்தையை குளிப்பாட்ட – ஐநூறு ரூபாய்
*அறுவை சிகிச்சைக்கு முன்பான ஸ்கேன்– இருநூறு ரூபாய்
*பிணத்தை வார்டிலிருந்து, மார்ச்சுவரிக்கு எடுத்து செல்ல – ஐநூறு ரூபாய் *பிணத்தை சுத்தம் செய்ய – ஆயிரம் ரூபாய்
*பிணத்தை உறவினர்களிடம் அளிக்க- முன்னூறு ரூபாய்
13_06_2016_004_043_011.jpg
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சில நாட்களுக்கு முன் கணபதி என்பவர், தனது மகன் 18 வயது மகன் ராஜேந்திர பிரசாத்தை ஆம்புலன்ஸ் மூலம் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக  அவசர சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டு வந்துள்ளார்.
300 ரூபாய் கொடுத்தால்தான் ஸ்டெரச்சரை தள்ளுவேன்  என்று அடம்பிடித்த ஊழியர், உள்நோயாளிகளுக்கான அனுமதிச் சீட்டை வாங்கி வந்தால் தான் சிகிச்சை அளிப்பேன் என்று அலட்சியம் காட்டிய மருத்துவர் உள்ளிட்டோரின் இரக்கமற்ற செயல்களால் அந்த இளைஞர் உயிரிழந்தார்.

பேராசான் சுப்பிரமணியன் சுவாமியும் திருமுருகன் காந்தி, கிளிமூக்கு அரக்கன் முகநூல் சண்டையும்

திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆதரித்து எழுதும் ஒரு முகநூல் பக்கத்தின் பெயர் கிளிமூக்கு அரக்கன். இந்தப் பக்கத்தில் பாஜக மூத்தத் தலைவர் சுப்பரமணியம் சுவாமியை பேராசான் என்றும் ஈழத்தை வைத்து சிலர் வியாபாரம் செய்வதாகவும் அதில் திருமுருகன் காந்தி முக்கியமானவர் என்றும் ஒரு பதிவு வெளியாகியுள்ளது. முதலில் கிளிமூக்கு அரக்கனின் பதிவு: “வசூல் சக்கரவர்த்தியும் பேராசானும்
சில நேரங்களில் தம் மீதான குற்றங்களை துகிலுரிக்கின்றவர்களை எப்படியாவது சமூகத்தின் முன்பு குற்றவாளிகளாக காட்டவேண்டுமே என்ற பதட்டத்தில் இன்னும் மோசமாக செயல்பட்டு தனது சுயரூபத்தை வெளிப்படுத்திவிடும் முட்டாள்கள் உண்டு. பங்குனி17 சமூகவிரோத இயக்கத்தின் திருமுருகன் காந்தி இந்த வகைதான். பேராசான் சுப்பிரமணியஸ்வாமியை எப்போதுமே நான் வெளிப்படையாக பேராசான் என அழைப்பவன்.

மலக்குழி மரணங்கள் மறைக்கப்படுகின்றன.. திவ்யபாரதி ஆவணப்பட இயக்குநர், செயற்பாட்டாளர்

சட்டங்கள் புத்தகங்களில் அடக்கப்பட்ட எழுத்துக்களாகவே இருந்துகொண்டிருக்கின்றன என்பதற்கு ஆகச் சிறந்த உதாரணமாக, மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றுவதைத் தடைச் செய்யும் சட்டத்தைச் சொல்லலாம். 1993 ஆம் ஆண்டில் கையால் மலம் அள்ளும் தொழிலாளர்களைப் பணியமர்த்துதல் மற்றும் உலர் கழிப்பறைகள் கட்டுதல் தடைச் சட்டத்தைக் கொண்டு வந்தது மத்திய அரசு. 2000ஆம் ஆண்டைக் கடந்த போதிலும் கையால் மலம் அள்ளுவது வடமாநிலங்களில் தீவிரமாகவே தொடர்ந்துகொண்டுதான் இருந்தது. தன்னார்வலர்கள், தனிநபர்களின் நீதிமன்ற வழக்குகள் காரணமாக ‘கையால் மலம் அள்ளும் தொழிலாளர்களைப் பணிக்கு அமர்த்தத் தடை செய்தல் மற்றும் மறுவாழ்வு சட்டம்’ என்கிற புதிய சட்டம் 2013-ஆம் ஆண்டும் நிறைவேற்றப்பட்டது.

அமெரிக்க துப்பாக்கிச்சூடு -உமர் மதீனின் மனைவி நூர் சல்மானுக்கு முன்கூட்டியே தெரியும்!


அமெரிக்காவின் ஃபுளொரிடா மாகாணத்தில் உள்ள ஓர்லாண்டோ நகரில் உள்ள ஓரினச் சேர்க்கை இரவு விடுதியில் ஞாயிற்றுக்கிழமை நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 49 பேர் உயிரிழந்தனர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம், துப்பாக்கிச் சூடு நடத்திய ஒமர் மதீனின் மனைவிக்கு முன்கூட்டியே தெரியும் என்பதால் அவருடைய மனைவியும் இந்த பயங்கரவாத சம்பவத்தில் சேர்க்கப்படலாம் என்று அமெரிக்க சட்ட அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
ஒமர் மதீனின் மனைவி நூர் சல்மானிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த சம்பவத்தைப் பற்றி அவருக்கு முன்கூட்டியே தெரிந்திருக்கிறது என்று அமெரிக்க உளவுத்துறை குழுவின் செனட் உறுப்பினர் அங்குஸ் கிங் தெரிவித்துள்ளார்.

15 வயது தலித் மாணவன் கொடூர கொலை.. 12.06.16 லக்ஷ்மணன் பள்ளியில் இருந்து வீடு திரும்புகையில் மதுரை SMP காலனி

மதுரை SMP காலனியை சேர்ந்த லக்ஷமணன் என்னும் பதினைந்து வயது மாணவன், 12.06.16 அன்று மாலை பள்ளியில் இருந்து வீடு திரும்புகையில் கொடூரமாக அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறான்.
மாணவனது உடலை வாங்க மறுத்து, விடுதலை கட்சியினர்  போராட்டத்தில் ஈடுபட்டதுடன், கொலையாளிகளை “எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மீது வன்கொடுமையில் ஈடுபடுவோருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை அளிக்கும் சட்டத்தின்” கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். இதனை தொடர்ந்து, கொலை தொடர்பாக ஆறு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

வயலுக்குச் சென்ற பெண்ணை வன்புணர்வு செய்து என்கவுண்டர்... மாவோயிஸ்ட்டாம்... மடிப்பு கலையாத சீருடை அணிவித்து..

The uniform is brand new and crisp. Can the uniform of a guerrilla killed in an encounter be so unblemished?
சத்தீஸ்கரின் கோம்பாட் என்ற கிராமத்தில் மத்கம் ஹித்மெ என்ற பழங்குடி பெண்ணை வன்புணர்வு செய்து, அவரை மாவோயிஸ்ட் என்று கூறி என்கவுண்டர் செய்துள்ளது போலீஸ். இந்தத் தகவலை பத்திரிகையாளர் ராகுல் பண்டிடா தனது ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.
மத்கம் வயலுக்குச் சென்றிருந்தபோது அவரை, போலீஸ் அழைத்துச் சென்றதாகவும் பிறகு அவர் என்கவுண்டர் செய்யப்பட்டது தெரியவந்ததாகவும் தெரிவித்துள்ள கிராம மக்கள் அவருடைய உடலை அடக்கம் செய்ய மறுத்து போராடி வருகின்றனர். தங்களுடைய குரல்களை பத்திரிகையாளர்களும் செயற்பாட்டாளர்களும் கேட்க வேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.< ராகுல் இன்னொரு விஷயத்தையும் சுட்டிக்காட்டுகிறார். மறைந்து திரியும் ஒரு கெரில்லாவால் இப்படி மடிப்பு களையாத, புத்தம் புது சீருடைய அணிந்திருக்க முடியுமா? என அவர் கேள்வி எழுப்புகிறார்.

கேரள தலித் மாணவி ஜிசாவின் கொலையாளிகள்....கண்டுபிடிக்க படவில்லை

ஜேஎன்யூ பல்கலைக்கழக மாணவர் சங்க நிர்வாகிக்கள் கன்னய்யா குமார், ஷெஹ்லா ரஷீத் படுகொலை செய்யப்பட்ட கேரள தலித் மாணவி ஜிசாவின் தாயாரைச் சந்தித்து ஆறுதல் கூறினர். கேரளாவில் அமைந்திருக்கும் புதிய அரசு, ஜிசாவின் கொலையை விரைந்து விசாரிக்கும் எனவும் ஜிசாவின் தயாருக்கு தேவையான உதவிகளை செய்யும் எனவும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.  thetimestamil.com

உயர்திரு கக்கன் பிறந்த தினம் இன்று.. ஒரே ஒரு கக்கன் ஒரே ஒரு பெரியார் ஒரே ஒரு காமராஜ்..

ஊரை அடித்து தன் ஏழு பரம்பரைக்கு சொத்து சேர்க்கும் மந்திரிகள் இருக்கும் நம் தமிழகத்தில்,சொத்தே இல்லாமல் நாட்டுக்கே சொத்தாகிப்போன உயர் திரு கக்கன்‬ பிறந்த_தினம்_இன்று‬ தமிழக அரசியல் வரலாற்றில் உயர் திரு கக்கன் போன்ற நேர்மை நாணயத்திற்க்கு உதாரணமான அமைச்சரை பார்ப்பது கடினம்... கக்கன் அமைச்சராகப் பொறுப்பிலிருந்த காலகட்டத்தில் மேட்டூர், வைகை அணைகள் கட்டப்பட்டன. மதுரை வேளாண்மைக் கல்லூரியைக் கொண்டு வந்தார். விவசாயிகளுக்குத் தேவைக்கேற்ப உரம் கிடைக்க வழிவகை செய்தது, கூட்டுறவ விற்பனைக் கூடங்களைத் தொடங்கி வைத்தது, தாழ்த்தப் பட்டோர் நலத்துறையின் கீழ் ஆயிரக்கணக்கான பள்ளிகளைத் திறந்தது, தாழ்த்தப் பட்டோருக்கென வீட்டு வசதி வாரியம் அமைத்துச் செயல்படுத்தியது, காவல்துறையில் காவலர்கள் எண்ணிக்கையை அதிகப் படுத்தியது, லஞ்ச ஒழிப்புத் துறையைத் தொடங்கியது என ஏராளமான அரசு பணிகள் உயர் திரு கக்கன் அவர்களே ஆரம்பிக்கபட்டது...

ரஜினியின் கபாலி.. மலாயா கணபதியின் கதை .. கலைஞர் கருணாநிதி எழுதியது?

Yuva Krishna's photo.கபாலி’யின் கதை மலாயா கணபதியின் வாழ்க்கைக் கதையை தழுவியது என்பதை போல தகவல்கள் கிடைக்கின்றன. மலாயா கணபதி, பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு எதிரான அவரது போராட்டங்களால் 1949ல் தூக்கிலிடப்பட்டவர். ஆரம்பத்தில் சுபாஷ்சந்திரபோஸின் இந்திய தேசிய ராணுவத்தில் இருந்தவர் பிற்பாடு மலேசியாவில் கம்யூனிஸ்ட் கட்சியில் தீவிரமாக பணியாற்றினார். மலாயா தொழிற்சங்கங்களின் கூட்டமைப்புக்கு தலைவராக இருந்தவர். பத்திரிகையாளரும் கூட. தூக்குத்தண்டனையில் இருந்து அவரை தப்புவிக்க இந்திய அரசு செய்த முயற்சிகள் கடைசி நேரத்தில் தோல்வியில் முடிந்தன. 37 வயதிலேயே சாவை முத்தமிட்டார் கணபதி. ரஜினி அண்ணாமலை அருணாசலம் போன்று மயிலாப்பூர் கபாலீஸ்வரர் சுவாமியின் வசூல் அருள் வேண்டி கபாலி என்ற சாமிபெயர் சூட்டி உள்ளார்

காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதரணிக்கு பிடிவாரன்ட்... ஜாமீனில் வெளிவரமுடியாது

நாகர்கோவில்: தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணிக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து நாகர்கோவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல்சந்தையில் கடந்த 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட விஜயதரணி, முதலமைச்சர் ஜெயலலிதாவை அவதூறாகப் பேசியதாக வழக்குத் தொடரப்பட்டது.

டொனால்ட் ட்ரம்ப்: முஸ்லிம்கள் அமெரிக்காவிற்கு வருவதை அனுமதிக்க கூடாது


ஓர்லாண்டோ துப்பாக்கிச் சூடு தாக்குதலையடுத்து, முஸ்லிம்கள் அமெரிக்காவிற்கு வருவதை தடுக்குமாறு டிரம்ப் தெரிவித்த யோசனை கடுமையாக விமர்சித்துள்ளார் அதிபர் ஒபாமா. ஓர்லாண்டோ துப்பாக்கிச் சூடு தாக்குதல் குறித்து, அமெரிக்கக் குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்த கருத்துகளைக் கடுமையாக விமர்சித்துள்ளார் அதிபர் ஒபாமா. வெள்ளை மாளிகையில் ஒபாமா உரையாற்றிய போது, முஸ்லிம்கள் அமெரிக்காவிற்கு வருவதை தடுக்குமாறு டிரம்ப் தெரிவித்த யோசனை, தீவிரவாதிகளின் பிரச்சாரத்தை மேலும் தூண்டும் என்றும் நாட்டின் பாதுகாப்பை அது குறைத்துவிடும் என்றும் தெரிவித்துள்ளார். அமெரிக்கா, தனது கடந்த கால வரலாற்றில் எப்போதெல்லாம் அச்சத்தால் நடவடிக்கை எடுத்து தனது சக பிரஜைகளை தவறாக நடத்தியதோ அப்போதெல்லாம் அது வரலாற்றில் மிகவும் "வெட்கபட வேண்டிய ஒரு பகுதி" யாக அமைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார். ஒபாமாவின் கருத்துக்கு பதிலளித்த டிரம்ப், அவர் தன்னை நோக்கி வெளிப்படுத்திய கோபத்தை, தாக்குதல் நடத்திய நபரை நோக்கி செலுத்தியிருக்கலாம் என தெரிவித்துள்ளார். tamil.thehindu.com

ஏ.சி.திருலோகச்சந்தர் காலமானார் ... ( வயது 87) பிரமாண்ட வெற்றிப்படங்களின் இயக்குனர்


திரைப்பட இயக்குநர் ஏ.சி.திருலோகசந்தர் ( வயது 87) சென்னையில் உடல் நலக்குறைவால் காலமானார்.>எம்.ஜி.ஆர்., சிவாஜி, சிவகுமார் என்று முந்தைய தலைமுறை நாயகர்களை வைத்து ஏராளமான வெற்றிப் படங்களைத் தந்தவர் இயக்குநர் ஏ.சி.திருலோகசந்தர். சினி பாரத் என்ற தனது சொந்த நிறுவனத்தின் மூலம் பல  படங்களைத் தயாரித்தும் இருக்கிறார்.அன்பே வா, டாக்டர் சிவா, தெய்வமகன், பாரதவிலாஸ் உள்ளிட்ட படங்களை இயக்கிய திருலோசந்தர்,  எம்.ஜி.ஆர். நடித்து 1952-ஆம் ஆண்டு வெளியான "குமாரி' படத்தில்தான் முதல் முதலாக உதவி இயக்குநராகப் பணியாற்றத் தொடங்கினார். கடைசியாக சிவாஜி, நதியாவை வைத்து ’’அன்புள்ள அப்பா’’ படத்தை இயக்கினார். படம் பாராட்டுக்களைப் பெற்றாலும், வர்த்தக ரீதியாக வெற்றி பெறவில்லை. அதன் பின்னர் நான்கைந்து தொலைக்காட்சி தொடர்களை இயக்கினார்.;வேலூர் மாவட்டம் ஆற்காட்டைச்சேர்ந்த திருலோகசந்தருக்கு  இரண்டு மகன்கள். ஒரு மகள். மூவருக்கும் திருமணமாகி விட்டது.  மனைவி 2010ம்  ஆண்டு 72-வது வயதில் காலமானார்.நக்கீரன்.in

நாகராஜ் மஞ்சுளேவின் சாய்ரத் திரைப்படம், மராத்தி வரலாறு காணாத வெற்றி


நாகராஜ் மஞ்சுளேவின் சாய்ரத் திரைப்படம், மராத்தி திரையுலகில் வரலாறு காணாத வெற்றியடைந்திருக்கிறது. 100 கோடி ரூபாய் வசூலைத் தொட்டிருக்கும் முதல் மராத்தி திரைப்படமாக புகழ் பெற்றிருக்கிறது. அவரது முந்தைய திரைப்படமான 'ஃபன்றி'-யை கண்டவர்களுக்கும், தமிழில் 'காதல்' திரைப்படத்தைக் கண்டவர்களுக்கும் இப்படம் சற்றே ஏமாற்றம் அளிக்கலாம். ஆனால் அது பிரச்சினையில்லை.
ஏனெனில், சாதி ஆணவப் படுகொலைகள் குறித்து மைய நீரோட்ட சினிமாவில் பதிவு செய்வது, அதுவும் வணிக சினிமாவின் சட்டகத்திற்குள் நின்றவாறே (பிரமிப்பூட்டும் காட்சிகள், கோணங்கள், பாடல்கள்) இயன்ற மட்டும் ஒரு காத்திரமான திரைப்படத்தை உருவாக்குவது என்பது ஒரு சாதனை. அதனை நாகராஜ் சாதித்து காட்டியுள்ளார்.

விமான நிலைய புகார் பெட்டியை உண்டியல் என்றெண்ணி பணம் போடும் அறிவுகொழுந்துகள்

பக்தியால் வந்த கேடு... திருச்சி விமான நிலையத்தில் உண்டியல் என நினைத்து பணம் போட்டிருக்கும் கேவலம் இது. கோவில் உண்டியலில் காலங்கலமாகப் பணத்தைப் போட்டு பழக்கப்பட்டுவிட்ட புத்திகெட்ட பக்தர்களுக்கு புகார்பெட்டிக்கும் உண்டியலுக்கும் வித்தியாசம் தெரியாத நிலை.... ஆட்டுமந்தைகள் போன்றே வாழ்ந்து பழகிவிட்டதால் குறைகளைச் சொல்லும் மன தைரியம் வளராததால் புகார்ப் பெட்டியையே உபயோகித்திருக்க மாட்டார்கள் என தெளிவாகத் தெரிகிறது. ஏதாவது நிதி உதவி கேட்டு வரும் உண்டியல்களிலும் கோவில் உண்டிகளிலும் பணம் போட்டு பழகி விட்ட முட்டாள் சமூகத்தில் தான் நாம் இன்னும் இருக்கிறோம் என்பது வெட்கக்கேடு. Feedback / Complaints / Suggestions என்று தெளிவாகப் போட்டிருந்தும் இந்த நிலை. இதுபோன்ற முட்டாள்கள் தான் வாக்குப் பெட்டியிலும் யாருக்கு வாக்களிக்கிறோம் எதற்கு வாக்களிக்கிறோம் எனத் தெரியாமலே வாக்கும் அளித்து நாட்டைக் கெடுத்துக்கொண்டிருக்கிறார்கள். கொஞ்சமாவது அறிவை உபயோகிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். இடுகையிட்டது லதாராணி(Latharani) latharaniyinsorchithirangal.blogspot.com

SRM பச்சமுத்து: மதன்னா யாருன்னே தெரியாது.... கட்சி விரோத செயலால் 25.02.2016 தேதியே நீக்கிவிட்டேன்...

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக பெயரை பயன்படுத்தி மாணவர்களிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக, வேந்தர் மூவிஸ் மதன் மீது அந்தக் கல்விக் குழும உரிமையாளர் பாரிவேந்தர் சார்பில் அவரது வழக்கறிஞர் பாலு, சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். கடந்த 40 வருடமாக எங்களது பல்கலைக்கழகம் எந்த புகாருக்கும் ஆட்படாமல் நற்பெயர் ஈட்டி நாட்டின் தலைசிறந்த பல்கலைக்கழகம் என்ற பெயரெடுத்துள்ளது. எங்கள் கல்லூரிகளில் பணமாக எந்த தொகையும் வசூலிக்கப்படுவதில்லை. நான் ஐஜேகே கட்சியின் நிறுவனரும் ஆவேன். என்து கட்சியில் 5 துணைப் பொதுச்செயலாளர்களில் ஒருவராக மதன் என்பவர் இருந்து வந்தார்.

செவ்வாய், 14 ஜூன், 2016

நடைபெற்றது தேர்தலே அல்ல, இது ஒரு சூது.. கண்டெயினர் சந்நிதியில் மோடி முதல் கடைகேடி வரை பஜனை

jaya-victory-caption-1நடைபெற்றது தேர்தலே அல்ல, இது ஒரு சூது” என்று நிறுவும் வகையிலான ஆதாரங்கள் அடுக்கப்படுகின்றன. இந்தச் சூதுதான் ஜனநாயகம் என்று ஒப்புக்கொண்டு சரணடைவதா, எதிர்த்து நிற்பதா என்பதுதான் கேள்வி.
கண்டெய்னர் வாழ்க! போலி வாக்காளர் வாழ்க! அழிகின்ற மை வாழ்க! அழியாத முதல்வர் வாழ்க! ஜனநாயகம் வாழ்க… வாழ்கவே!மே 21 அன்று இரவு ஜெயா டிவியில் “இருவர்” திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தது. “வி-டு-த-லை, விடுதலை” என்ற பாடல் வரிக்கு, ஜெயலலிதா பாத்திரத்தில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராய் தனது பின்புறத்தை குளோசப்பில் ரசிகப் பெருமக்களுக்கு காட்டியபடி ஆடிக்கொண்டிருந்தார்.... வளர்மதி, கோகுல இந்திரா, வைத்திலிங்கம், நத்தம் போன்ற உத்தமர்களை தனது பதவியேற்பு விழாவின் முன்வரிசையில் அமர வைத்து, குளோசப்-இல் காட்டி, அவர்களை நிராகரித்த வாக்காளர்களை அசிங்கப்படுத்தியிருக்கிறார் ஜெயலலிதா.

ஆர்லாண்டோ.. உயிரழந்தவர்களுக்கு சென்னையில் அஞ்சலி ! LGBT activists hold candlelight vigil in Chennai for Orlando victims


LGBT activists in Chennai came together on Tuesday to show solidarity with the victims of the Orlando shooting.They also condemned all forms of hatred and violence. A candlelight vigil was held at Chennai Press Club in remembrance of the victims.
“The mass shooting in Pulse, a gay nightclub in Orlando, Florida, US, on the night of June 11, resonated with those of us who have faced intolerance, hatred and violence simply for being who we are,” stated a press release. LGBT activists said their community has always been at the receiving end of bigots from all faiths. “We register our protest against initiatives by ideologues of all stripes to use this incident to advance political and personal agendas of xenophobia and Islamophobia,” the press release stated.

மாணவர்களுக்கு சூடு வைத்த வைஜயந்திமாலாவுக்கு ஜாமீன் கிடையாது.

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டைக்கு அருகே பாலி கிராமத்தில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 4ம் வகுப்பு படித்துவந்த மாணவர்கள் 13 பேர் பள்ளிக்கூடத்துக்கு ஒழுங்காக வரவில்லை என்றும் படிக்கவில்லை என்றும் அவர்களது காலில் பள்ளி ஆசிரியையான வைஜெயந்திமாலா, கடந்த 9ம் தேதி கற்பூரத்தால் சூடுவைத்தார். இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர் புகார் தெரிவித்தனர். ஆசிரியையால் சூடு வைக்கப்பட்டுப் பாதிக்கப்பட்ட 8 மாணவர்கள் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

வழக்கறிஞர்களும் பிராஸ்ட்டிட்யூட்டுகளும் : மார்க்கண்டேய கட்ஜு


அண்மையில் சென்னை உயர்நீதிமன்றம் வழக்கறிஞர்கள் சட்டவிதிகளில் திருத்தம் கொண்டு வந்ததற்கு மாநிலம் முழுவதும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த திருத்தத்தைத் திரும்பப்பெறும் வரை வழக்கறிஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபடப் போவதாகவும் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், பிரதமர், மத்திய அமைச்சர்கள், நீதிபதிகள், ஊடகங்கள் என்று அனைவரையும் தயவுதாட்சண்யம் இல்லாமல் கடுமையாக விமர்சித்து வருபவரான முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் போட்ட ஸ்டேட்டஸ் நமது சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களை உசுப்பிவிட்டிருக்கிறது. மார்க்கண்டேய கட்ஜு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ‘சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களும் விபச்சாரிகளும்’ என்ற தலைப்பில் எழுதியிருப்பதாவது:

தேமுதிக உள்ளூராட்சி தேர்தலில் போட்டியில்லை..

தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் தேமுதிக நிர்வாகிகள் கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது. முன்னாள் எம்எல்ஏ-க்கள், மாவட்டச் செயலாளர்கள் பலர் வெவ்வேறு கட்சிகளுக்கு தாவ இருப்பதாக விஜயகாந்துக்கு தகவல் கிடைத்துள்ளது. இதைக் கேட்டதும், விஜயகாந்த் மிரண்டுபோய் விட்டாராம். கட்சியின் ஆணிவேர்களாக இருக்கும் நபர்களே மாற்றுக்கட்சிகளுக்குத் தாவ இருப்பதாக தகவல் கிடைத்தவுடன்தான், கட்சி நிர்வாகிகளை அழைத்து கோயம்பேடு அலுவலகத்தில் சந்தித்துள்ளார்.
தேமுதிக-வில் சுமார் 20 மாவட்டச் செயலாளர்கள் தேர்தலில் வேட்பாளர்களாகப் போட்டியிட்டனர். இந்த மாவட்டச் செயலாளர்கள்தான் அந்தந்த மாவட்ட நிர்வாகிகள், வேட்பாளர்களை அழைத்து வரவேண்டும்.

5500 டன் அணு கழிவுகள் புதைப்பு

ஹெல்சிங்கி, ஜூன் 9:முதன் முதலாக அணு உலைகள் கட்டப்பட்ட நாளிலிருந்து இன்று வரை உலகின் அனைத்து நாடுகளுக்கும் அணு உலைகளிலிருந்து வெளியேறும் கழிவுகளை என்ன செய்வது என்பது எந்தவித தெளிவும் கிடைக்கவில்லை. உலகம் முழுவதும் அணு கழிவுகளை தற்காலிக இடங்களை அமைத்து அதில் சேகரிக்கப்பட்டு வருகிறது. ந்நிலையில் பின்லாந்து நாட்டில் உள்ள ஓன்கிலோடோ அணு உலையில் இருந்து வெளியேற்றப்பட்ட கழிவுகளை அந்நாடு வரும் 2020 ஆண்டுவாக்கில் புதைக்க உள்ளது.

ஆறு பந்தய குதிரைகள் உயிரழந்தன... உளுந்தூர் பேட்டையில் விபத்து

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே முன்சக்கரம் கழன்டு ஓடியதால் கனரக வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வாகனத்தில் ஏற்றி வரப்பட்ட 6 பந்தய குதிரைகள் பரிதாபமாகஉளுந்தூர்பேட்டை அருகே உயிரிழந்தன.கொடைக்காணலில் அண்மையில் நடந்த மலர்க்கண்காட்சியையொட்டி அங்கு குதிரைப் பந்தயமும் நடைபெற்றது. பார்வையாளர்களை கவர நடத்தப்பட்ட இந்த பந்திய போட்டிக்கு சென்னை கிண்டியில் இருந்து பந்தய குதிரைகள் கனரக வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டன. நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில் நேற்று மாலை கனரக வாகனம் மூலம் 6 குதிரைகளை ஏற்றிக்கொண்டு சென்னை கிண்டியை நோக்கி செல்லப்பட்டது.

இளங்கோவன்: ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளை மீண்டும் நீதிவிசாரணை நடத்தி.....


முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் குற்றவாளிகள் இல்லை என்றால், மீண்டும் நீதி விசாரணை நடத்தி அவர்களை விடுதலை செய்தால் ஆட்சேபனை இல்லை. மக்கள் பிரச்சினைக்காக முதல்-அமைச்சர் ஜெயலலிதா டெல்லிக்கு செல்லவில்லை. சொத்து வழக்கு, 570 கோடி ரூபாய் பறிமுதல் குறித்து பேசவே அவர் டெல்லி செல்ல உள்ளார். முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட வேண்டாம் என கேரளாவின் புதிய முதல்-மந்திரியின் அறிவிப்பை வரவேற்கிறோம்.

வன்னிய அரசு : சாதிய தமிழ் தேசியவாதிகள் இருக்கும் வரை தமிழ்தேசியம் உருப்படபோவதில்லை,

தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் அவர்கள் நேற்று புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில், ஈழத்தின் நடந்த போரை முன்வைத்து பாமக எம்.பி., எம்.எல்.ஏக்கள் பதவி விலகலாம் என்று ராமதாசிடம் அவர் சொன்னதற்கு, ‘என் மகன் அமைச்சராய் இருப்பது உனக்கு பிடிக்கவில்லையா? நாயே’ என்று தன்னை கடுமையாக ராமதாஸ் கேட்டதாக பதிவு செய்துள்ளார். தொடர்ந்து அதே பேட்டியில் புலிகளின் அரசியல்பிரிவு தலைவர் நடேசன் அவர்களிடமிருந்து போர்முனையிலிருந்து வந்த தொலைபேசி அழைப்பை ஏற்று அவருடன் பேசமாட்டேன் என்று ராமதாஸ் மறுத்ததாக குறிப்பிட்டுள்ளார்.
2011ஆம் ஆண்டு தூக்கு தேதி குறிக்கப்படிருந்த நிலையில் தமிழ் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் மறைமலைநகரில் ‘மரண தண்டனை ஒழிப்பு மாநாடு’ நடத்தப்பட்டது.

டெல்லி செல்லும் முதல்வர் ஏழுபேர் விடுதலைக்கு முயற்சி செய்வார்?

முதல்வர் ஜெயலலிதாவின் டெல்லி விஜயத்தின் பொது தமிழகத்தின் நீண்டநாள் கோரிக்கைகள் அடங்கிய பட்டியலில், ' பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலைப் பற்றிய ஃபைலும் செல்ல இருக்கிறது' என்கின்றனர் தலைமைச் செயலக வட்டாரத்தில். ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரும் சிறை சென்று 25 வருடங்களுக்கும் மேலாகிவிட்டன. இவர்களின் விடுதலையை எதிர்நோக்கிய கோரிக்கைப் பேரணியை, கடந்த சனிக்கிழமை அன்று சென்னையில் நடத்தினார் பேரறிவாளன் தாய் அற்புதம் அம்மாள். ' முதலில் வேலூரில் இருந்து சென்னை கோட்டையை நோக்கிப் பேரணி' என அறிவிப்பு வெளியிடப்பட்டது.

1937 இல் எம் எஸ் சுப்புலட்சுமி சிகரட் புகைத்தார்...பாலசரஸ்வதியும் சேர்ந்து புகைத்தார்

இது உண்மையாகவே அவர்கள் சிகரட் புகைக்கிரார்களா அல்லது அப்படி நடிக்கிறார்களோ என்பது நமக்கு தெரியாது. ஆனால் தெரிந்தவர்கள் ஒரு போதும் உண்மையை சொல்லப்போவதில்லை. ஏனெனில் அவாள் சுப்புலட்சுமி அம்மாவையும் நடன மேதை பாலசரஸ்வதி அம்மாவையும் சாட்சாத் சரஸ்வதி ரேஞ்சுக்கு கதை அளந்து வைத்துள்ளார்கள். ஆனால் ஒன்று மட்டும் நிஜம், இந்த போட்டோ உண்மயான போட்டோதான் . இது கொஞ்சகாலமாக முகநூல் பக்கங்களில் உலா வருகிறது.. இருவரும் மிகவும் நவ நாகரிக நங்கையர்களாக காட்சி அளிக்கிறார்கள். அவிங்க அந்த காலத்திலேயே ரொம்பவும் மாடர்ன் ஆக இருந்திருக்காக.      

ஆம் ஆத்மியின் 21 எம் எல் ஏக்கள் தகுதி நீக்கம்? ஆதாய பதவி சட்டம்...ஜனாதிபதி மறுப்பு!

டெல்லி: ஆதாயம் தரும் பதவியின் அடிப்படையில் 21 ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் தகுதி இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி ஆட்சி நடக்கிறது. முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளார். ஆம்ஆத்மி பொறுப்பேற்றது முதல் டெல்லி அரசுக்கும் மத்திய அரசுக்கும் தொடர்ந்து அதிகாரப் போட்டி நிலவி வருகிறது. இந்த அதிகார போட்டியில், மத்திய அரசின் பிரதிநிதியான டெல்லி ஆளுனர் நஜீப் ஜங்கிற்கு, மத்திய அரசு ஆதரவு அளித்து வருகிறது. இந்நிலையில் டெல்லியில் 21 ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் அமைச்சர்களின் சட்டபேரவை செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. மேலும் இதன் மூலம் அவர்களுக்கு கார் மற்றும் அலுவலகம் உள்ளிட்ட வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் டெல்லி சட்டபேரவை விதிகளின்படி எம்எல்ஏக்களுக்கு இது போன்ற நியமனம் அளிக்கக் கூடாது.

பாலியல் சில்மிஷ ஆசிரியரை சரமாரியாக தாக்கிய மாணவிகள் வீடியோ

மன்சூர் நகரிலுள்ள இசைப் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றுபவர் நிரஞ்சன் பட்னாகர். அங்கு பயிலும் மாணவிகளை தொடர்ந்து கிண்டல், கேலி செய்ததோடு பாலியல் தொல்லைகள் கொடுத்து வந்ததாக புகார் எழுந்தது. இதனால் ஆத்திரமடைந்த மாணவிகள் தங்களது நண்பர்களுடன் சேர்ந்து ஆசிரியர் நிரஞ்சன் பட்னாகரை தெருவுக்கு இழுத்து வந்து ஆடையை கிழித்து சரமாரியாக தாக்கினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து காவல்துறையினர் ஆசிரியரை மீட்டு விசாரணை நடத்தினர்.

திங்கள், 13 ஜூன், 2016

குஷ்பூ நூல் வெளியிடுவதில் என்ன தவறு ? கௌதம சித்தார்த்தன்

கௌதம சித்தார்த்தன் திரைப்பட ஆளுமையும் “வெகுஜன அரசியல் தளத்தில் பாப்புலரான பெண்ணியக் கருத்துக்களை முன்வைத்து ஆணாதிக்கத்தின் மீது எதிர்ப்புக் குரல் எழுப்பி வருபவருமான குஷ்பூ என் நூலை வெளியிட்டது குறித்து “ஒழுக்கியவாதிகள்” மத்தியில் பெரும் சர்ச்சை ஓடிக் கொண்டிருக்கிறது. என்னிடம் நேரில் “நாங்கள் எப்பொழுதும் எங்கள் கருத்துக்களை நேரில்தான் பேசுவோம்” என்கிற ரீதியில் தங்களது புனித பிம்பங்களை முன்வைத்து என்னைக் கிண்டல் செய்தார்கள். ஒரு சிலர் என் காது பட பின்னால் பேசினார்கள் ஆரம்ப காலத்தில் பெண்களின் உடல்மொழியை முன்வைக்கும் பெண்ணியக் கவிதைகள் வெளிவந்தபோது இதுபோன்ற கலாய்ப்புகள் கேலி கிண்டல்களை முன்வைத்தவர்களின் தொடர்சியானவர்கள்தான் இவர்கள்.

உட்தா பஞ்சாப் திரைப்படம் உயர்நீதிமன்றம் அனுமதி... தணிக்கை உத்தரவு ரத்து!

உட்தா பஞ்சாப்' படத்துக்கு 13 வெட்டுகளைப் பரிந்துரைத்த தணிக்கைக் குழுவின் உத்தரவை மும்பை உயர் நீதிமன்றம் ரத்து செய்து, படம் ஏ சான்றிதழுடன் வெளியாக அனுமதி அளித்துள்ளது. இயக்குநர் அபிஷேக் சௌபே இயக்கத்திலும், இயக்குநர் அனுராக் காஷ்யப்பின் இணைத் தயாரிப்பிலும் உருவாகியிருக்கும் படம் ‘உட்தா பஞ்சாப்'. இந்தப் படத்தின் கதைக்களமானது, பஞ்சாப் மாநிலத்தின் போதைப் பொருள்கள் பிரச்னையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்நிலையில், இப்படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் பெறுவதற்காக மத்திய திரைப்படத் தணிக்கை வாரியத்தை படக்குழு அணுகியுள்ளது. அப்போது, படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர், பஞ்சாப் மாநிலம் தொடர்புடைய சில சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குமாறு பரிந்துரைத்திருந்தனர். இதற்கு திரைப்படக் குழுவினர் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

பிரசவ கால ரத்தப்போக்கை கட்டுப்படுத்தும் உயிர் காக்கும் ஆடை வழங்குவது நிறுத்தம்

பிரசவத்துக்குப் பிறகு பெண் களுக்கு ஏற்படும் ரத்த ப்போக்கை கட்டுப்படுத்துவதற்காக அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், 108 ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு மத்திய அரசு வழங்கி வந்த உயிர் காக்கும் ஆடை திடீர் என நிறுத்தப்பட்டுள்ளதால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மகப்பேறு காலத்தின்போது பெண்களுக்கு அதிக ரத்தப் போக்கு காரணமாக 30 சதவீதம் உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது என ஆய்வின்போது கண்டறி யப்பட்டது. இதில் குறிப்பாக கிராமப்புறங்களில் உயிரிழப்பு அதிகரித்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து ரத்தப்போக்கினால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்து வமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், 108 ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு ரத்தப்போக்கை கட்டுப்படுத்தும் உயிர் காக்கும் ஆடை என்கிற பாதுகாப்பு உபகரணத்தை மத்திய அரசு வழங்கி வந்தது.

கலைஞர் சவுக்கடி :எந்த மொழி மக்களிடமும் சமஸ்கிருதத்தை திணித்தால் ஓடஓட விரட்டுவோம்

திமுக முன்னாள் அமைச்சர் பூங்கோதை அருணா - பாலாஜி தம்பதியரின் மகள் சமந்தா - ஷ்ரிநாத் ஜோடியின் திருமணம், சென்னை சாந்தோம் எம்.ஆர்.சி. சென்டர் - வள்ளியம்மை திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. திருமண விழாவை திமுக தலைவர் கருணாநிதி தலைமையேற்று நடத்தினார். பின்னர், அவர் மணமக்களை வாழ்த்திப் பேசியபோது, ‘தமிழ்நாட்டில், தமிழ்மொழிக்கு மூவேந்தர் காலந்தொட்டு இருக்கும் அதனுடைய மூப்பு, அதனுடைய மொழி ஆதிக்கம், அந்த மொழிக்கிருந்த செல்வாக்கு, அதைக் கையாண்ட மூவேந்தர்களின் பரம்பரை என ஒரு வரலாறு உண்டு. அந்தப் பரம்பரையை எல்லாம் ஒழித்துக் கட்டிவிட்டு, நாங்கள் தமிழுக்கு இடம் தரமாட்டோம், வட மொழிக்குத்தான் இடம் தருவோம் என்று சொல்வார்களானால், தமிழன் ஒவ்வொருவரும் கையில் சவுக்கை எடுத்துக்கொண்டு வடமொழி ஆதிக்கத்தை வேரறுக்கக் கிளம்பவேண்டும்.