புதன், 15 ஜூன், 2016

விமான நிலைய புகார் பெட்டியை உண்டியல் என்றெண்ணி பணம் போடும் அறிவுகொழுந்துகள்

பக்தியால் வந்த கேடு... திருச்சி விமான நிலையத்தில் உண்டியல் என நினைத்து பணம் போட்டிருக்கும் கேவலம் இது. கோவில் உண்டியலில் காலங்கலமாகப் பணத்தைப் போட்டு பழக்கப்பட்டுவிட்ட புத்திகெட்ட பக்தர்களுக்கு புகார்பெட்டிக்கும் உண்டியலுக்கும் வித்தியாசம் தெரியாத நிலை.... ஆட்டுமந்தைகள் போன்றே வாழ்ந்து பழகிவிட்டதால் குறைகளைச் சொல்லும் மன தைரியம் வளராததால் புகார்ப் பெட்டியையே உபயோகித்திருக்க மாட்டார்கள் என தெளிவாகத் தெரிகிறது. ஏதாவது நிதி உதவி கேட்டு வரும் உண்டியல்களிலும் கோவில் உண்டிகளிலும் பணம் போட்டு பழகி விட்ட முட்டாள் சமூகத்தில் தான் நாம் இன்னும் இருக்கிறோம் என்பது வெட்கக்கேடு. Feedback / Complaints / Suggestions என்று தெளிவாகப் போட்டிருந்தும் இந்த நிலை. இதுபோன்ற முட்டாள்கள் தான் வாக்குப் பெட்டியிலும் யாருக்கு வாக்களிக்கிறோம் எதற்கு வாக்களிக்கிறோம் எனத் தெரியாமலே வாக்கும் அளித்து நாட்டைக் கெடுத்துக்கொண்டிருக்கிறார்கள். கொஞ்சமாவது அறிவை உபயோகிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். இடுகையிட்டது லதாராணி(Latharani) latharaniyinsorchithirangal.blogspot.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக