செவ்வாய், 14 ஜூன், 2016

இளங்கோவன்: ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளை மீண்டும் நீதிவிசாரணை நடத்தி.....


முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் குற்றவாளிகள் இல்லை என்றால், மீண்டும் நீதி விசாரணை நடத்தி அவர்களை விடுதலை செய்தால் ஆட்சேபனை இல்லை. மக்கள் பிரச்சினைக்காக முதல்-அமைச்சர் ஜெயலலிதா டெல்லிக்கு செல்லவில்லை. சொத்து வழக்கு, 570 கோடி ரூபாய் பறிமுதல் குறித்து பேசவே அவர் டெல்லி செல்ல உள்ளார். முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட வேண்டாம் என கேரளாவின் புதிய முதல்-மந்திரியின் அறிவிப்பை வரவேற்கிறோம்.
த.மா.கா.வில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைபவர்களை வரவேற்கிறோம். ஆனால், பா.ஜ.க.வுடன் கூட்டணி பேசிய ஜி.கே.வாசனை சேர்த்துக்கொள்ள மாட்டோம். என்னை தலைவர் பொறுப்பில் இருந்து மாற்ற வேண்டும் என தேசிய தலைமையிடம் சிலர் முறையிடுவதாக கூறுகிறீர்கள். இதுபோன்ற புகார்கள் வந்தால் தான் காங்கிரஸ். தமிழக சட்டமன்ற தேர்தலில் 3-வது பெரிய கட்சியாக காங்கிரஸ் வந்ததே மிகப்பெரிய வெற்றி. இவ்வாறு அவர் கூறினார்.மாலைமலர். காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக