வியாழன், 16 ஜூன், 2016

இளங்கோவன் ; ஜெயலலிதா தன்னை காப்பாற்றி கொள்ளவே மோடியை சந்தித்தார்

27.9.2015 அன்று கருங்கல்லில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் கலந்து கொண்டு பேசியபோது, தமிழக முதல்வர் குறித்து விமர்சனம் செய்தார். இது சம்பந்தமாக குமரி மாவட்ட அரசு வழக்கறிஞர் ஞானசேகர், நாகர்கோவில் கோர்ட்டில் இளங்கோவன் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து விசாரணைக்கு வந்த அந்த வழக்கில் இளங்கோவன் நேரில் ஆஜர் ஆகவேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இதனையடுத்து முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய வழக்கில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இளங்கோவன், ‘’ஜெயலலிதா, நரேந்திரமோடியை சந்தித்ததன் நோக்கம் தமிழக மக்களின் நலனுக்காக அல்ல. அவர் மீதுள்ள வழக்குகளில் இருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ளவே சந்தித்தார். மேலும், பொன்.ராதாகிருஷ்ணன் அந்த கட்சியில் இருந்து விலகினாலேதான் அந்த கட்சிக்கு தேர்தலில் டெபாசிட்டாவது கிடைக்கும்’’என்றார். - மணிகண்டன் நக்கீரன்.இன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக