புதன், 15 ஜூன், 2016

டொனால்ட் ட்ரம்ப்: முஸ்லிம்கள் அமெரிக்காவிற்கு வருவதை அனுமதிக்க கூடாது


ஓர்லாண்டோ துப்பாக்கிச் சூடு தாக்குதலையடுத்து, முஸ்லிம்கள் அமெரிக்காவிற்கு வருவதை தடுக்குமாறு டிரம்ப் தெரிவித்த யோசனை கடுமையாக விமர்சித்துள்ளார் அதிபர் ஒபாமா. ஓர்லாண்டோ துப்பாக்கிச் சூடு தாக்குதல் குறித்து, அமெரிக்கக் குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்த கருத்துகளைக் கடுமையாக விமர்சித்துள்ளார் அதிபர் ஒபாமா. வெள்ளை மாளிகையில் ஒபாமா உரையாற்றிய போது, முஸ்லிம்கள் அமெரிக்காவிற்கு வருவதை தடுக்குமாறு டிரம்ப் தெரிவித்த யோசனை, தீவிரவாதிகளின் பிரச்சாரத்தை மேலும் தூண்டும் என்றும் நாட்டின் பாதுகாப்பை அது குறைத்துவிடும் என்றும் தெரிவித்துள்ளார். அமெரிக்கா, தனது கடந்த கால வரலாற்றில் எப்போதெல்லாம் அச்சத்தால் நடவடிக்கை எடுத்து தனது சக பிரஜைகளை தவறாக நடத்தியதோ அப்போதெல்லாம் அது வரலாற்றில் மிகவும் "வெட்கபட வேண்டிய ஒரு பகுதி" யாக அமைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார். ஒபாமாவின் கருத்துக்கு பதிலளித்த டிரம்ப், அவர் தன்னை நோக்கி வெளிப்படுத்திய கோபத்தை, தாக்குதல் நடத்திய நபரை நோக்கி செலுத்தியிருக்கலாம் என தெரிவித்துள்ளார். tamil.thehindu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக