செவ்வாய், 14 ஜூன், 2016

5500 டன் அணு கழிவுகள் புதைப்பு

ஹெல்சிங்கி, ஜூன் 9:முதன் முதலாக அணு உலைகள் கட்டப்பட்ட நாளிலிருந்து இன்று வரை உலகின் அனைத்து நாடுகளுக்கும் அணு உலைகளிலிருந்து வெளியேறும் கழிவுகளை என்ன செய்வது என்பது எந்தவித தெளிவும் கிடைக்கவில்லை. உலகம் முழுவதும் அணு கழிவுகளை தற்காலிக இடங்களை அமைத்து அதில் சேகரிக்கப்பட்டு வருகிறது. ந்நிலையில் பின்லாந்து நாட்டில் உள்ள ஓன்கிலோடோ அணு உலையில் இருந்து வெளியேற்றப்பட்ட கழிவுகளை அந்நாடு வரும் 2020 ஆண்டுவாக்கில் புதைக்க உள்ளது.
இதுவரை அணு உலையில் இருந்து வெளியேற்றப்பட்ட 5500 டன் கழிவுகளை பூமிக்கு கீழே 420 அடி பள்ளம் தோண்டி ‘ஆன்கலோ டன்னல்’ என்ற பகுதியில் புதைக்கப்பட உள்ளது. இந்த திட்டத்திற்கு அந்நாடு 3.5 பில்லியன் யூரோக்களை ஒதுக்கி உள்ளது.
இதற்கான முயற்சிகளில் விஞ்ஞானிகள் 2004-ம் ஆண்டு முதலே ஈடுபட்டு வந்தனர். ஆனால் கடந்த 2015-ல் பின்லாந்து அரசு இதற்கு அனுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கது. maalaisudar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக