புதன், 15 ஜூன், 2016

காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதரணிக்கு பிடிவாரன்ட்... ஜாமீனில் வெளிவரமுடியாது

நாகர்கோவில்: தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணிக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து நாகர்கோவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல்சந்தையில் கடந்த 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட விஜயதரணி, முதலமைச்சர் ஜெயலலிதாவை அவதூறாகப் பேசியதாக வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு மீதான விசாரணை, நாகர்கோவிலில் உள்ள கன்னியாகுமரி மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
Read more at: tamil.oneindia.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக